• 100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி வகைக்கு ஒருதோலா சேர்த்து, பன்னீர்விட்டு அரைத்து குன்றி மணி அளவு மாத்திரைகளாக செய்துகொண்டு, ஒரு நாளைக்கு ஒரு வேளை ஒரு மாத்திரையாக சாப்பிட்டு வர தாது விருத்தியும் . உடல் பலமும் ஏற்படும்.
  • அருகம் புலலை வேருடன் பறித்து சுத்தம் செய்து அதனுடன் சிறிது நீர் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, அதனுடன் சம அளவு வெண்ணையையும் கலந்து காலை- மாலை என இருவேளை சாப்பிடவும். இதை போன்று நீண்ட நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் ஏறும்.
  • பனை வெல்லத்தை அரிசித் தவுட்டுடன் கலந்து, சிறு உருண்டையாக செய்து இரண்டொரு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் "நல்ல பலம் ஏறும்".
  • வேப்பம் பூவை நீரில் ஊற வைத்து காலையில் பருகி வந்தால், உடல் மெலிந்திருப்பவர்கள் உடல் மெலிவு நீங்கி பெருக்கதொடங்கும்.


Similar Threads: