சாக்லேட் சாப்பிட்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்

கர்ப்பிணிப் பெண்கள் சாக்லேட் சாப்பிடுவது குறை பிரசவத்தை தடுக்கும், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில்தெரியவந்துள்ளது. சாக்லேட் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்களே குறைபிரசவம் ஏற்படுவதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை தரக்கூடியது என்றும் 70 சதவித இதய நோயை குறைக்கும் என்றும் முந்தைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாக்லேட்கள் புற்று நோய் வராமல் தடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்ப்பிணிப்பெண்கள் அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் குறை பிரசவம் நடைபெறுவது தடுக்கப்படுகிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் 2500 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வை மேற் கொண்டனர். ஆய்வின் போது கர்பிணிகளுக்கு அளிக்கப்படும் உணவோடு காலையும், மாலையும் இளம் சூடான சாக்லேட் பானங்கள் அளிக்கப்பட்டன. மதிய உணவில் பழங்களுடன் சிறிதளவு டார்க் சாக்லேட் அளிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் சாக்லேட் தொடர் பான பானங்கள், மற்றும் பொருட்களை சாப்பிட்ட வர்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவது வெகுவாக குறைந்து காணப்பட்டது .

பொதுவாக, வலிப்பு நோய், ரத்தம் உறைதல், கல்லிரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு போன்றவற்றினால்தான் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. மேலும் தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது, அதன் மூலம் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போன்றவையும் குறைப் பிரசவம் ஏற்பட காரணமாகும். இதன் மூலம் தாய்க்கும், சேய்க்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆனால் சாக்லேட்டின் கோகோ உள்ள வேதிப்பொருட்கள் இது போன்ற கோளாறு களை நீக்க உதவுகின்றன என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே, கர்ப்பிணிகள் வாரத்துக்கு 3 நாட்களாவது டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar Threads: