தயிர்நன்கு புளித்த தயிரை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைகுளித்தால் பொடுகுத்தொல்லை தீரும். இதனால் தலைமுடி உதிர்வது குறைந்து முடியும் பளபளப்பாகவும் இருக்கும்.

சிறிது உப்பு கலந்த தயிர் சாப்பிட்டால் விக்கல் உடனடியாக நிக்கும்.

தயிர் பயன்பாட்டினால் ஈறுகளின் நலன் மேம்படுகிறது.

தயிர் எளிதாக செரிக்கக் கூடிய உணவாகும். குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப்பையும் தடுக்கின்றது.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு நல்ல ஜீரண சக்தியை தரும்.