Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree137Likes

Patti Vaithiyam in Tamil


Discussions on "Patti Vaithiyam in Tamil" in "Nature Cure" forum.


  1. #21
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Patti Vaithiyam in Tamil

    கெட்டு போய் இருக்கும் ஈரலை குணப்படுத்த:

    கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் வியாதி குணமாகும்.

    மஞ்சள் காமாலை நோய் குணமாக:

    தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.

    பைத்தியம் குணமாக:

    கீழாநெல்லி சமூலம், கடுக்காய் தோல், வேப்பம் பிசின் பசும்பால் விட்டு அரைத்து நல்லெண்ணை கூட்டி அடுப்பில் வைத்து சூடாக்கி இறக்கி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்துவர பைத்தியம் குணமாகும்.

    பேதி குணமாக:

    மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் பேதி நிற்கும்.

    இரத்தம் உறைதல் குணமாக:

    நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

    இரத்தம் விருத்தியாக:

    செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்தம் விருத்தியாகும்.

    இரத்த சோகையை போக்க:

    தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும், பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட, ரத்தசோகை நீங்கும்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine April 2014. You Can download & Read the magazines HERE.


    Sponsored Links
    Last edited by sumathisrini; 15th Aug 2014 at 08:40 PM.
    kvsuresh, swaga2008 and jv_66 like this.

  2. #22
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Patti Vaithiyam in Tamil

    வெள்ளைப்படுதல் சரியாக:

    ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது.

    வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.

    தாமதமான மாதவிடாய்க்கு:

    சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும்.

    மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

    சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.

    கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.


    kvsuresh, swaga2008 and jv_66 like this.

  3. #23
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Patti Vaithiyam in Tamil

    மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு:

    வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

    கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

    பெரும்பாடு பிரச்சினைக்கு தும்பை இலை:


    மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா... பெரும்பாடு தீரும்.

    ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா.... மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

    கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

    அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

    தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

    இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

    நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.


    Last edited by Parasakthi; 26th May 2012 at 10:28 AM.
    kvsuresh, swaga2008, jv_66 and 1 others like this.

  4. #24
    Rudhraa's Avatar
    Rudhraa is offline Moderator & Blogger Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    The World
    Posts
    1,858

    Re: Patti Vaithiyam in Tamil

    ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

    சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

    ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

    மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

    பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

    வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

    செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

    கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

    சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

    வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

    கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

    ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

    எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

    Universal Rule Never Change!
    What you send out, comes back.
    What you sow, you reap.
    What you give, you get.



    Bagavad Gita Discussion Group| Must Read Motivational Books!


  5. #25
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,697

    Re: Patti Vaithiyam in Tamil

    வயிற்றுப் போக்குத் தீர...

    வெந்தயம், வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், வகைக்கு 10 கிராம் எடுத்து, சிவக்க வறுத்து, இடித்து, ஒரு லிட்டர் நீர் விட்டு, பாதியாக சுண்ட கஷாயமாக்கி அருந்தினால், வயிற்றுப்போக்கு தீரும்.


    kvsuresh and jv_66 like this.

  6. #26
    pavis's Avatar
    pavis is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Chennai
    Posts
    386

    Re: Patti Vaithiyam in Tamil

    Hi Parasakthi,

    Super thread'pa, Don't know how I missed this. Thanks for sharing these useful tips.

    thanks again.

    Cheers
    Pavi

    Parasakthi, jv_66 and V.KIRUTHIGA like this.
    Cheers
    Pavi

  7. #27
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Patti Vaithiyam in Tamil

    நீர்கடுப்பு குறைய

    Patti Vaithiyam in Tamil-1306869061067.jpg


    வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.


    வெங்காயத்தை பொடியாக வெட்டி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்தால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது சின்ன வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.



  8. #28
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Patti Vaithiyam in Tamil

    கால் வெடிப்பு மறைய

    Patti Vaithiyam in Tamil-1620576_233010423551633_945264080_n.jpg
    எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து அதை கால் வெடிப்புகளில் பூசினால் கால் வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாக மாறும்.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine May 2014. You Can download & Read the magazines HERE.



    Last edited by sumathisrini; 15th Aug 2014 at 10:26 PM.

  9. #29
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,370

    Re: Patti Vaithiyam in Tamil

    அதிகமான வயிற்றுப்போக்காக இருந்தால் , உடனடியாக , சிறிதளவு பச்சை வெந்தயம் எடுத்து , வாயில் போட்டு , மோர் அல்லது சுத்தமான நீர் அருந்தினாலும் , உடனடி பலன் கிட்டும் .

    Jayanthy



  10. #30
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Patti Vaithiyam in Tamil

    பாட்டிவைத்தியம் :-


    1.
    நெஞ்சுசளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து
    ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.


    2.
    தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப்போட்டால் தலைவலி குணமாகும்.



    Last edited by sumathisrini; 22nd Apr 2014 at 02:25 PM. Reason: Given space between words
    Parasakthi and V.KIRUTHIGA like this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter