Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree137Likes

Patti Vaithiyam in Tamil


Discussions on "Patti Vaithiyam in Tamil" in "Nature Cure" forum.


 1. #61
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: Patti Vaithiyam in Tamil

  பாட்டி வைத்தியம்..!

  1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

  2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

  3. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

  4. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
  நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  5. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

  6. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

  7. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

  8. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

  9. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

  10. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.  Sponsored Links
  jv_66, kkmathy and Dangu like this.

  KOTHAISURESH

 2. #62
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: Patti Vaithiyam in Tamil  ஜீரக தண்ணீர் செய்முறை:

  குடம் (15) லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தோராயமாக பாதி ஆறவைத்து அதில் ஒரே ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும்படியாக) முடிவைக்கவேண்டும். இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும். தினமும் புதியதாக செய்துக்கொள்ளவும்.
  ..........BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.

  சமையலில் ஜீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர் குடிக்கவேண்டுமா என்ற நியமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே. மேற்கண்ட செயல்முறை விளக்கத்தில் ஜீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுதப்படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும்போது நமக்கு தேவையான மருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும்போது ஆவியாகி வெளிப்பட்டுவிடும் என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.

  வாயு தொல்லை

  பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.

  1.ருசியின்மை 2. உடல்நடுக்கம்

  3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு

  4. வாயுவினால் வயிறு பெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

  ஜீரகத்தை லேசாக வறுத்து (5 கிராம் அளவில்) கால் லிட்டர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, வெதுவெதுப்பாக சிறிய அளவில் அடிக்கடி பருக வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் தான் வந்திரம் குளிகை, வாயுகுளிகை என்று மாத்திரைகள் விற்கப்படுகின்றன, தான்வந்திரம் குளிகையை மேல் குறிப்பிட்ட ஜீரக ஜலத்துடன் 1 மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ் அதாவது 25IL, 1 வாயு குளிகையுடன் காலை, இரவு -ஆஹாரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருந்தை நாடாமல் இருக்க வேண்டுமாயின் ஏப்பத்தை தடுக்காமல் அதிக சத்தமில்லாமல் மெதுவாக விட்டு விடுவதே நல்லது.

  நம் உடலில் புகும் தீய சக்திகளில் பெரும்பாலானாவை தண்ணீர் மூலமாகவே சேர்கின்றன. தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்தி வந்தால் நமது எண்ணங்கள் துய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் துரிதம் அடையும். தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்.


  jv_66, kkmathy and Dangu like this.

  KOTHAISURESH

 3. #63
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,167

  Re: Patti Vaithiyam in Tamil  பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்..!

  1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

  2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

  3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

  4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

  5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

  6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

  7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

  8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

  9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

  10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

  11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

  12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


  jv_66, kkmathy and Dangu like this.

  KOTHAISURESH

 4. #64
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: Patti Vaithiyam in Tamil

  எளிய பாட்டி வைத்தியம்

  1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

  1a. சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்

  1b. .குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

  2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும்.

  2a. கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

  3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

  4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

  5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

  6. சிரங்கு தொல்லையா? : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

  7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்

  .8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

  9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

  10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

  11. பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

  12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

  13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம்வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

  14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

  14 a. 50. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

  15. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

  16..தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

  17.. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

  18.. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

  19. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

  20. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

  21. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்

  22. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

  23. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

  24. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

  25. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

  26. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

  27. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

  28. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

  29. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

  30. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.


  kkmathy likes this.

 5. #65
  bhuv is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  villupuram
  Posts
  331

  Re: Patti Vaithiyam in Tamil

  very useful tips


 6. #66
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter