Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Kai Maruthuvam - கை மருத்துவம் எளிய வழி 7!


Discussions on "Kai Maruthuvam - கை மருத்துவம் எளிய வழி 7!" in "Nature Cure" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Kai Maruthuvam - கை மருத்துவம் எளிய வழி 7!

    கை மருத்துவம்

    எளிய வழி 7!

    1. கொலஸ்ட்ரால் நீங்க...
    ஒரு கைப்பிடி அளவு உரித்த பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் மட்டுப்படும்.

    2. பசியின்மை, நாக்கு ருசியின்மையைப் போக்க...
    புதினாக் கீரையைச் சுத்தம் செய்து இலேசாக வதக்கி அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய், புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து அதை சுடுசாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்கு ருசியின்மை நீங்கும்.

    3. கொசுக்களை விரட்ட எளிய வழி!
    மாம்பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து அதை நெருப்பிலிட்டுப் புகைத்தால் கொசுத் தொல்லை நீங்கும்.

    4. ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் உண்டான நிறமாற்றத்திற்கு...
    கடுக்காயை உரைத்து இரவில் கனமாக பொட்டு போல் நெற்றியில் வைத்து வந்தால் விரைவில் சருமத்தின் கருமை நிறம் மாறும்.

    5. குழந்தை சிவப்பாக பிறக்க...
    கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் தினமும் எலுமிச்சை அல்லது மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

    6. பொடுகு போக...

    வெள்ளை மிளகைப் பால் விட்டு அரைத்து அதைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு குளித்தால் பொடுகு போகும்.

    7. உடல் பருமன் குறைய...
    இலந்தை மரத்தின் இலைகளைப் பறித்து நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து அதைப் பொடிச் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி பொடியை ஒரு தம்ளர் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை இரு வேளைகள் தேநீர் போல் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Kai Maruthuvam - கை மருத்துவம் எளிய வழி 7!

    Your effort to share this information here is appreciated


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter