Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree23Likes

Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்


Discussions on "Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்" in "Nature Cure" forum.


  1. #11
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    useful sharing mythili akka


    Sponsored Links
    datchu likes this.
    life is so beautiful....

  2. #12
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    உடல் இளைக்க வேண்டுமா? இஞ்சி சாறு சாப்பிடுங்க!

    உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.
    இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
    இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
    இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
    இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.

    இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
    காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.


    Rudhraa likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #13
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதை.

    வயிறு வலிக்கு- வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்தயத்தை வறுத்து பொடிசெய்து ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும்.

    வாயு உபாதை- சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும்.

    கடும்சளி இருமலுக்கு- அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.


    Rudhraa and vijivedachalam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #14
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    தாய்ப்பால்

    1. பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில்வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.

    2. சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.


    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine April 2015. You Can download & Read the magazines
    HERE.

    Last edited by sumathisrini; 24th May 2015 at 10:34 PM.
    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #15
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    தேன் மருத்துவம்

    1. அதிக எடை கொண்டவர்கள் எலுமிச்சை பழச்சாரில் தேன் கலந்து அடிக்கடி குடித்தால் எடை குறையவும் ஆரோக்கியம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

    2. உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டதாக இருந்தால், லேசான சுடுநீரில் தேன் கலந்து கொடுத்து தூங்க வையுங்கள். இது குழந்தைகளுக்கு நல்லது.

    3. ஒரு துண்டு இஞ்சியை இடித்து தேனில் போட்டு தினமும் பிழிந்து சாப்பிட்டால், குண்டு உடல் குறையும்.


    Last edited by datchu; 6th Dec 2013 at 01:01 PM.
    Rudhraa and vijivedachalam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #16
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    வைரஸ் காய்ச்சலுக்கு --- இயற்கை வைத்தியம்,

    • வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #17
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    குமட்டல், வாந்தி

    1. குமட்டல், வாந்தி, மயக்கம், மசக்கை, குழந்தைகள் வாந்தி இவைகளுக்கு எலுமிச்சப்பழச் சாரும் தேனும் சம அளவு கலந்து சாப்பிட்டால் குணம் காணலாம்.

    2. குழந்தைகளுக்கும் 2 கரண்டி சாறு 2 தேன் கலந்து அருந்த வாந்தி நிற்கும்.

    3. மசக்கைக்கு 15, 20 நாள் தினம் கொடுக்க மசக்கை நீங்கி உணவருந்தி கர்ப்பிணிகள் உடல் தேறலாம்.


    Rudhraa likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #18
    XXXXXX's Avatar
    XXXXXX is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    dddddd
    Posts
    155

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    Thanks datchu

    by malar

    datchu likes this.

  9. #19
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    பத்தியத்தின் பெருமை!

    ஒரு நோய் நீங்குவதற்கு, சீரான சூழ்நிலையில், உடல் நிலை இருக்க வேண்டும். மருந்தைச் சாப்பிடும்போது, அந்த நோய் வந்ததற்கான காரணங்களைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு மற்றும் செயல்களில் கொண்டுவரும் மாற்றத்தால், மருந்து தன் சக்தியைச் சரியாகக் காட்டி, நோயிலிருந்து விரைவில் நம்மைவிடுவிக்கிறது. பத்திய முறைகளைக் கையாளாமல், மருந்தை மட்டும் சாப்பிட்டால், அதை அதிக அளவில் அதிக நாட்கள் சாப்பிட வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. சில சமயம் மருந்தினால் ஏற்பட வேண்டிய நல்ல பலன்களும் கிடைக்காமற் போகக் கூடும். சுருக்கமாகச்சொன்னால் மருந்தின் முழு வீரியத் தையும் உடல் ஏற்பதற்குப் பத்தியம் உதவுகிறது. மேலும் மருந்தின் குணம் முழுவதையும் உடல் ஏற்று, நோயை அகற்ற வழி செய்கிறது.

    நம் முன்னோர் நோய் வந்துவிட்டால் உணவு, உடை, பாவனைகளில் அதற்கு எதிரான மாற்றங்களைச் செய்து, மருந்தை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட்டனர். இயற்கையை மதித்து அவர்கள் செயல்பட்டதால், மருந்துகளால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

    ஆனால் இன்றைய வாழ்க்கை முறை அப்படியில்லை. "நான் காபி, டீ சூடாகத்தான் அருந்துவேன். காரம், புளி, உப்புதான் அதிகம் சாப்பிடுவேன். என் ஆபிஸ் சூழ்நிலை அப்படி. ஆனால் என் குடல் அல்சர் நோயை நீக்கித் தாருங்கள்' என்று கூறி மருத்துவனின் கடமையைப் பெரிதாக்குகின்றனர். ஆயுர்வேதம் இந்த விஷயத்தை, நோயுற்றவன் பத்தியமிருந்தால் மருந்தால் ஆவதென்ன?நோயுற்றவன் பத்தியமில்லாதிருந்தால் மருந்தால் ஆவதென்ன? என்று கேட்கிறது. அதாவது பத்தியமிருந்தால் மருந்தின் தேவையே இல்லாமல் இயற்கையே தன்னைச் சீரமைத்துக் கொள்ளும். பத்தியம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டு, நோய்க்கான மருந்தைத் தேடினால், உடல் நோயிலிருந்து விடுபடும் சூழ்நிலை ஏற்படாது. மருந்து எத்தனை சாப்பிட்டாலும் பயன் தராததால், மருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதையே மருந்தால் ஆவதென்ன? என்று வினவுகிறது.

    நோயுற்றவன் இன்ன இன்ன உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறி அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதால் உணவுக் குழாய், உணவை ஏந்திச் செல்லும் ரசாயனங்கள், ரத்தக் குழாய்கள் முதலியவை சரியாக இயங்க உதவி அவற்றுக்குக்கேடு விளைவிக்காதவண்ணம் பாதுகாப்பதே பத்தியம் எனப்படுகிறது. அதற்கு மாறுபட்டது அபத்தியம். பத்திய உணவைச் சாப்பிடுவதால் உடல், தான் இழந்த சமநிலையை அடைந்து, அதேநிலையில் நிலைத்து, சமநிலை இழக்காது திடப்படுத்திவிடுகிறது.

    ஒரு சிறு உதாரணத்தினால் பத்தியத்தின் பெருமையை விளக்கலாம். பிசுபிசுப்புடன் நீர் வெளியேறி, எரிச்சலும் அரிப்பும் சேர்ந்து ஓர் உபாதையை தோலில் ஒருவருக்கு ஏற்படுத்தினால், அதைக் குணப்படுத்த ஆயுர்வேத க ஷாய மருந்தாகிய படோல கடு ரோஹிண்யாதி, நல்ல மருந்தாகும். ஆனால் அதே நபர், கெட்டியான புளித்த தயிர் சாதத்தை நல்லெண்ணெயில் கடுகு தாளித்துச் சாப்பிட்டால், நோய் குணமாவதில்லை. அதற்குக் காரணம் புளித்த தயிர், குடலில் பிசுபிசுப்பை அதிகரித்து, தோலின் வழியாக வெளியேற்றுவதால், கஷாயத் திற்கும் தயிருக்கும் மட்டுமே சண்டை நடக்குமே தவிர, கஷாயத்திற்கும் நோய்க்கும் நடப்பதில்லை. புளித்த தயிரின் மேலுள்ள ஆடையை அகற்றி, அதில் அரைப் பங்கு தண்ணீர் சேர்த்து, மத்து வைத்துக் கடைந்து,வெண்ணெய் அகற்றி, அந்த வறண்ட மோரை அவர் உணவாக ஏற்றால், உட்புறக் குழாய்களின் பிசுபிசுப்பை அகற்றி, வறளச்செய்கிறது. இங்கு கஷாய மருந்தின் வீர்யம் விரைவாக உட்புறக் குழாய்களின் வழியாக,தோலில் சேர்க்கப்பட்டு நோயை எளிதாகக் குணப்படுத்திவிடும்.


    Last edited by datchu; 8th Dec 2013 at 09:56 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #20
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பிணிகளுக்கு

    1. கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை நைசாக போடி செய்து அத்துடன் தேனையும் கலந்து அடி வயிற்றில் பூசி வந்தால் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுவலி குணமாகும்.

    2. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்று வழி ஏற்பட்டால் குங்குமப் பூவை குழைவாக அரைத்து அடி வயிற்றில் பூசுவதால் வயிற்று வழி நீங்கும்.

    தாய்ப்பால் சுரக்க

    3. சுத்தமான திடம் கோரோசனையைப் பாலில் கலக்கி காய்ச்சிய பின் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெரும்.

    4. முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சமைத்து உண்டு வந்தால் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.

    கண் உறுத்தல்

    5. குங்குமப் பூவை தாய்ப்பாலில் இழைத்து கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்ணில் நீர் வருவது, கண் உறுத்தல் முதலான கண் வியாதி குணமாகும்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter