Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree23Likes

Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்


Discussions on "Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்" in "Nature Cure" forum.


  1. #1
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    மண வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா?

    இலுப்பைப் பூ:

    இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.
    ஆவாரம்பூ:
    ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.
    அகத்திப்பூ:
    அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.
    நெல்லிப்பூ:
    நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
    மகிழம்பூ:
    மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.
    தாழம்பூ:
    இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.
    செம்பருத்திப்பூ:
    இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
    ரோஜாப்பூ:
    இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.
    வேப்பம்பூ:
    சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.
    முருங்கைப்பூ:
    ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.
    மல்லிகைப்பூ:
    கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
    கருஞ்செம்பைபூ:
    இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.
    குங்குமப்பூ:
    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

    Similar Threads:

    Sponsored Links
    datchu and vijivedachalam like this.
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  2. #2
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    இள நரை மறையணுமா?

    இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

    முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.
    இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
    வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்*ணீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
    வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
    சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
    சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
    சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.
    கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
    இல்லையென்றால், கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
    இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.
    கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

    datchu and vijivedachalam like this.
    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  3. #3
    bhuv is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    villupuram
    Posts
    331

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    very useful info

    vijivedachalam likes this.

  4. #4
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விடம் நீங்க

    பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விடங்களைநீக்குவது பற்றி நாம் கதைப்போம் .
    பொரும்பாலும் இந்த நச்சு விடங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விடமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

    நாய்க்கடி

    நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .

    சீத மண்டலி
    சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
    குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விடம் முறியும் .

    வண்டுகடி

    ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விடம் நீங்கும்.

    செய்யான் விடம்

    தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விடம் நீங்கும் .
    எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விடம் முறியும்.

    பூரான்

    இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
    குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விடம் நீங்கும் .சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விடம் முறியும் .

    விரியன் பாம்பு கடித்தால்

    இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விடம் நீங்கும் .

    நல்ல பாம்பு கடித்தால்

    நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும் .தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விடம் முறியும் .

    தேள் கடித்தால்

    தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விடம் முறியும் .
    நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விடம் முறியும் .

    எலிக்கடிகள்

    அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விடம் முறியும் .
    அவுரி மூலிகை பத்துகிரம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விடம் முறியும் .

    மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )

    சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
    சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
    சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .

    பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் .


    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #5
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    காய்ச்சல் சாதாரண ஜூரத்திற்கு
    இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.

    காய்ச்சல் குணமாக
    சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

    காய்ச்சல்
    காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெறி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

    குளிர்காய்ச்சல்
    நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.

    எந்த விதமான காய்ச்சலும் குணமாக
    வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.

    (குறிப்பு : குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்


    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #6
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்'ங்கறது மூத்தோர் வாக்கு. இதன்படி சாப்பிட்டு வந்தா... நோய்கள் வராமல் தடுக்கிறதோட... ஏற்கெனவே வந்த சில நோய்களையும் விரட்டி அடிக்கலாம். இதில் முதலிடத்தில் இருக்கறது இஞ்சி.

    இஞ்சியை நிதமும் சாப்பாட்டுல சேர்க்கறது ஒரு வகைனா... இஞ்சியை மட்டுமே தனியா சாப்பிடறது இன்னொரு வகை. அதாவது, 15 கிராம் இஞ்சியை தேவையான அளவு தண்ணி விட்டு சாறு எடுத்து 5 நிமிஷம் அப்படியே வைங்க. அடியில வெள்ளையா படிஞ்சுருக்கும். அதை விட்டுட்டு மேல தெளிஞ்சிருக்குற தண்ணிய மட்டும் குடிச்சீங்கனா... வாய்வுக்கோளாறு, ஜீரணக்கோளாறு, சளித்தொல்லை எல்லாம் விலகி ஓடிடும்.

    ரத்த அழுத்தம் குறைவா இருக்கறவங்க... 30 கிராம் இஞ்சியை தண்ணி விடாம அரைச்சு சாறு எடுத்து, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து குடிச்சீங்கனா... அடுத்த அஞ்சு, பத்து நிமிஷத்துல ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்துடும். இதனால வரக்கூடிய தலைவலியும் நின்னுடும்.

    பித்தத்தை தணிச்சு, அதனால் வரக்கூடிய குறைகளை போக்குறதுல இஞ்சிக்கு இணை இந்த உலகத்துல இல்லைனே சொல்லலாம்! பித்தத்தால மயக்கம் வந்து நிலைதடுமாறி விழறவங்களும் உண்டு. இவங்களுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும். 5 கிராம் அளவுள்ள ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி, அம்மி இல்லைனா மிக்ஸியில அரைச்சி எடுங்க. ஒரு டம்ளர் தண்ணி விட்டு கலக்கி, கொஞ்ச நேரம் கழிச்சி, தெளிஞ்ச நீரை எடுத்து வெச்சுக்கோங்க. அடுப்புல பாத்திரத்தை வெச்சு ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை போட்டு வறுத்தெடுங்க. அது பொன்னிறமாகி இளகுற நிலையில, தெளிஞ்ச இஞ்சித் தண்ணியை அதுல சேருங்க. கூடவே, 15 கிராம் உலர்திராட்சையையும் போட்டு வேகற வரைக்கும் கொதிக்க விடுங்க.

    சூடு ஆறினதும் அந்த நீரைக் குடிச்சுட்டு, வெந்த திராட்சையையும் சாப்பிட்டுடுங்க. இதுக்குப்பிறகு அரை மணி, இல்லைனா ஒரு மணி நேரம் கழிச்சி காலை சாப்பாட்டை சாப்பிடணும். தொடர்ந்து மூணு நாள் இப்படி சாப்பிட்டுப் பாருங்க... பலன் இல்லாட்டி எனக்கு எழுதுங்க


    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #7
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    தேள் கடி விஷம் நீங்க அரும் மருந்து.-- இய*ற்கை வைத்தியம்


    1) தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

    2) எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.

    3) நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்


    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #8
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

    சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

    இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்....


    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #9
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    வயிறு குறைய.. ஆயுர்வேத மருந்து

    சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின்சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா? போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. எதுவாக இருந்தாலும் நீங்கள் கொள்ளு மாவை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி, காலையில் குளிப்பதற்கு முன்பாக, சுமார் 15 - 20 நிமிடங்கள் கீழிருந்து மேலாகவும், வயிற்றின் வலப்புற அடிப்பகுதியிலிருந்து மேலாகவும், தொப்புளுக்கு மேலாகவும், இடப்புறம் மேலிருந்து கீழாகவும் சூடு பறக்கத் தேய்த்து ஊற வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். தேய்த்துக் கொள்ளும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் இரு பெரும் நன்மைகள், வயிற்றின் தோல் பகுதியின் அடியிலுள்ள கொழுப்பும், தேவையற்ற சதையும் குறையும். இரண்டாவது, வாயுவின் சீற்றம் குறைந்து தசைகள்வலுப்பெறும்.

    இட்லியும் ரசமும் சாப்பிடுவதால் உங்கள் தொப்பை குறைந்து விட்டது என்பது சற்று ஆச்சரியமான விஷயந்தான். ஏனென்றால் ஆயுர்வேதத்தில் அப்படி ஒரு குறிப்பு எங்கும் காணப்படவில்லை. உங்களுடைய உடற்கூறு வேண்டுமானால் அப்படி ஒரு விசேஷ அமைப்பைப் பெற்றிருக்கலாம். பொதுவாகவே காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளால் மட்டுமே ஊளைச் சதையைக் கரைக்க இயலும் என்றும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளால் உடல் தாட்டியாவதாகவும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இட்லி, ரசம் போன்றவை இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை கொண்டவை. அதனால்தான் குழப்பம்.

    நீங்கள் ஒரு ஸ்பூன் தேனை அரை கிளாஸ் சாதாரண அதாவது சூடு இல்லாத தண்ணீரில் கரைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, வயிறு குறைந்து விடும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.


    சில உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவிடலாம். பச்சிமோத்தாஸனம் எனும் பயிற்சி இது. கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டிக் கொள்ளவும். பிறகு ஆள்காட்டி விரலினால் கால்கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிது சிறிதாகத் தலையை முழங்கால்களின் நடுவே வரும் வரையில் முயற்சி செய்ய வேண்டும். முழங்கால்களை மேலே தூக்கக் கூடாது. இந்நிலையில் 2-3 நிமிடங்கள் இருக்கலாம். இதை 5-6 தடவைகள் செய்யலாம். இதைச் செய்வதால் தொடையிலிருக்கும்தசைகள் வலிவடைகின்றன. இடுப்புக்கு மேலிருக்கும் தசைகளும் வலிவடைகின்றன. முதுகெலும்பு வளைக்கப்படுவதால் அது தளர்ந்து கெட்டியாகாமலிருக்கிறது.

    வயிற்றிலிருக்கின்ற கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு நன்றாக வேலை செய்கின்றன. வயிற்றின் மேல்புற- கீழ்ப்புறத்திலிருக்கின்ற கொழுப்பு கரைந்து வயிறு குறைந்துவிடுகிறது. இதில் நிமிரும் நிலையில் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். குனிகின்ற நிலையில் மூச்சை வெளியே விட வேண்டும்.

    யோகமுத்ரா- பத்மாசனத்திலிருந்து கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு, மெதுவாகத் தலையைக் கீழே கொண்டு வந்து நெற்றியைப் பூமியில் பதிய வைக்க வேண்டும். 1- 2 நிமிடங்கள் வைத்திருந்து நிமிரவும். 5-6 தடவைகள் செய்யலாம். கழுத்து - முதுகுப் பகுதியிலுள்ள தசை நார்கள் வலுவடையும். அடி வயிற்றுக் கொழுப்புக் கரையும். சிறுநீர்ப்பையும் அதைச் சுற்றியுள்ள கிரந்திகளும் வலிவடைகின்றன.

    வாயுவையும் அடிவயிற்றுச் சதையையும் கரைக்க ஆயுர்வேத மருந்தாகிய வரணாதி கஷாயத்தைக் காலை மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து சுமார் 48 நாட்கள் சாப்பிடவும்.


    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #10
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Grandma's Home Remedies - பாட்டி வைத்தியம்

    வெற்றிலை

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர்தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

    வயிற்றுவலி:
    இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

    தலைவலி:
    வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

    தேள் விஷம்:
    இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

    சர்க்கரை வியாதி:
    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

    அல்சர்:
    அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்


    vijivedachalam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter