Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Benefits of Betel leaves - வெற்றிலையின் பயன்கள்


Discussions on "Benefits of Betel leaves - வெற்றிலையின் பயன்கள்" in "Nature Cure" forum.


 1. #1
  tnkesaven is offline Yuva's of Penmai
  Gender
  Male
  Join Date
  Jun 2012
  Location
  puducherry
  Posts
  7,956

  Benefits of Betel leaves - வெற்றிலையின் பயன்கள்

  நாம் மெல்லும் ஸ்வீட் பீடாக்கள் வெற்றிலை, சீவல், ஏலக்காய், கிராம்பு, பதப்படுத்தப்பட்ட தேங்காய்த் துருவல், உலர் பழங்கள் மற்றும் தேன் ஆகியவை கொண்டு தயாரிக்கபடுகிறது.
  இதில் உடலுக்கு தீங்கு தரும் எந்தவகை பொருட்களும் இல்லை

  நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு, நமது உடலிலேயே தேவையான அமிலம் சுரக்கிறது.

  ஆனால், பீடா நமது உணவு செரிமானத்துக்கு இடையூறுதான். பீடா,

  பாக்கு போன்றவற்றை உண்ணும்போது, செரிமானத்துக்கான அமில உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது.

  இவற்றைத் தொடர்ந்து மெல்லும்போதும், வாய்க்குள் வைத்துச் சுவைக்கும்போதும் வாயின் உட்புறச் செல்கள் பாதிப்படைகின்றன.

  இது வாய்ப்புற்று நோய் வர முக்கிய காரணம்.

  பாக்கு, புகையிலை முதல் நிலை 'கேசினோஜென்களில் ஒன்று.

  இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.


  பீடா மெல்வதைக் கைவிடுதல் மட்டுமே புற்று நோயிலிருந்து தப்பிக்க ஒரே வழி'

  பாக்கு கலக்காத வெற்றிலை உடலுக்கு நன்மை பயக்கும்.
  வயிறு உப்புசம், வாதம், பித்தம், கபம் எனப்படும் முப்பிணியைக்

  குணமாக்கும்.


  வெற்றிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாறு எப்பேர்ப்பட்ட

  நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையு
  ம்.

  நாள் பட்ட நுரையீரல் நோய்களுக்கும் தீர்வாகும். வெற்றிலையை

  உணவுக்குப் பின்பு உண்டால் செரிமானம் ஆகும்.  வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு

  செரிமானத்துக்கும்

  சளி, கபம் போன்றவற்றுக்கும், விஷ முறிவுக்கும் அருமருந்து  குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலை சாறு மற்றும்

  சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன்

  மூலம் குணமாக்கலாம்

  courtesy;''doctor vikatan''.


  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: வெற்றிலையின் பயன்கள்

  வெற்றிலை

  நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.

  கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

  வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

  வெற்றிலையை உபயோகிக்கும் முறை:

  வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

  வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

  தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

  வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

  நுரையீரல் பலப்பட:

  வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

  வயிற்றுவலி நீங்க:

  2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

  சர்க்கரையின் அளவு கட்டுப்பட:

  வெற்றிலை – 4

  வேப்பிலை – ஒரு கைப்பிடி

  அருகம் புல் – ஒரு கைப்பிடி

  சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

  விஷக்கடி குணமாக:

  உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

  இருமல் குறைய:

  வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

  அஜீரணக் கோளாறு அகல:

  வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

  தோல் வியாதிக்கு:

  100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

  தலைவலி நீங்க:

  வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

  தீப்புண் ஆற:

  தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

  பிற உபயோகங்கள்:

  வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

  தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

  புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.


  Last edited by datchu; 6th Oct 2013 at 09:12 PM.

  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter