Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By Subhasreemurali

Medicinal benefits of Jasmine - மல்லிகை மருந்து


Discussions on "Medicinal benefits of Jasmine - மல்லிகை மருந்து" in "Nature Cure" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Medicinal benefits of Jasmine - மல்லிகை மருந்து

    மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன் படுத்தப்பட்டுள்ளது.
    அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்

    வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவ ர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

    இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை கா கிதம் போல ஆனதும், அவற்றை பொ டியாக அரைத்து பொடி செய்து வைத் துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரககற்கள் தானாகவே கரைந்து போகும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச்சக்தி உயரும் .

    இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நல பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்து விட்டால் தலைவலி காணாமல் போகும்.

    மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது. எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தா லும், மல்லிகைப் பூவை அரைத்துப்பூசினால் வீக்கம் குறையும்

    மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இது போன்ற பல மகத்துவங்களைக்கொண்டுள்ளது மல்லிகைபூ.

    நன்றி: தினமணி




    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and saidevi like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Medicinal benefits of Jasmine - மல்லிகை மருந்து

    இவ்வளவு மருத்துவப் பயன்களா மல்லியில் ? பகிர்வுக்கு மிக்க நன்றி சுபா .

    Jayanthy





  3. #3
    rajisugu's Avatar
    rajisugu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    2,418

    Re: Medicinal benefits of Jasmine - மல்லிகை மருந்து

    Thank a lot for sharing this useful info subha.


  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Medicinal benefits of Jasmine - மல்லிகை மருந்து

    Thank u for sharing this useful information.


  5. #5
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Medicinal benefits of Jasmine - மல்லிகை மருந்து

    Your effort to share this information here is appreciated


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter