Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree60Likes

நமது மூலிகைகள்- Herbs for cure


Discussions on "நமது மூலிகைகள்- Herbs for cure" in "Nature Cure" forum.


  1. #11
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    Hi Mythili
    Vow Wonderful & useful info.


    Sponsored Links
    Dangu likes this.
    Prema Barani

  2. #12
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure



    அரிவாள்மனைப் பூண்டு.



    1. மூலிகையின் பெயர் -: அரிவாள்மனைப் பூண்டு.

    2. தாவரப் பெயர் -: SIDA CAPRINIFOLOLIA.

    3. தாவரக்குடும்பம் -: MALVACEAE.

    4. வேறு பெயர்- : BALA PHANIJIVIKA.

    5. பயன்தரும் பாகங்கள் -: இலை, விதை, வேர் முதலியன.

    6. வளரியல்பு -: அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக்குறுஞ் செடியினம். மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும். குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும். இது விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

    7. மருத்துவப் பயன்கள் -: இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

    ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

    இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

    இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

    இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

    இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

    அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

    அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

    ‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
    துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
    பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
    மரிவாள் மூக்குப் பச்சிலை.’


    அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.

    அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.

    malbha likes this.

  3. #13
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    அருவதா.



    1) மூலிகையின் பெயர் -: அருவதா.

    2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS.

    3) தாவரக்குடும்பம் -: RUTACEAE.

    4) வேறு பெயர்கள் -: சதாப்பு இலை.

    5) தாவர அமைப்பு -: இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வரட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 - 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிரத்தில் இருக்கும். இலைகள் 3 - 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.

    6) பயன்படும் பாகம் -: சதாப்பு இலை மற்றும் வேர்.

    7) மருத்துவப் பயன்கள் -: இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவரத்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.

    சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய வற்றால் விளைகின்ற சுரம்,கரைபேதி, கபவனம், பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.

    இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும்,ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும், பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எறிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.

    உபயொகிக்கும் முறை -: இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 - 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம்வலி (இசிவு) இவற்றைப் போக்கும். அல்லது இதன் இலைச்சாற்றில் 10 - 15 துளி தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி ஸ்நானம் செய்விக்கச் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.

    இன்னும் இதனை இதர சரக்குகளுடன் கூட்டி சூரணமாகவும், மாத்திரை களாகவும் செய்வதுண்டு, அவற்றுள் சில முக்கிய முறைகளாவன.

    சதாப்பிலைச் சூரணம் - நிழலில் உலர்த்திச் சதாப்பு இலை,சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்ன லவங்கப்பட்டை,சதகுப்பை விசைக்குப் பலம்1 தனியா பலம் 6 இவற்றை ஒருமிக்க கல்லுரலில் போட்டு கடப்பாறையால் நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடி பிரமாணம் சமனெடை கற்கண்டு சூரணம் சேர்த்து தினம் 2 - 3 வேளை கொடுத்து வர வாயுவை கண்டிக்கும். சீதளத்தை விரைவில் அகற்றும் ஸ்தூரிகளுக்கு உண்டான உதிரச்சிக்கலையும் வயிற்றில் மரித்துப போன கருவையும் வெளியாக்கும். இன்னும் இதன் பெருமையைக் கூறமிடத்துச் சூதக சந்நி வாயுவினால் காணுகின்ற வயிற்றுவலி, இசிவு முதலிய ரோகங்களுக்கு சிறந்த அவிழ்தமாகும்.

    சதாப்பிலை மாத்திரை-:பச்சை சதாப்பு இலை விராகனெடை 8, கோரோசனை விராகனெடை 1, உரித்த வெள்ளைப் பூண்டு விராகனெடை 2, இவற்றை கல்வத்திலிட்டுக் கையோயாமல் ஒரு சாமம் அரைத்து வருக ஒரு சமயம் மெழுகு பதத்துக்குப் போதிய ஈரமில்லாவிட்டால் சிறிது தாய்ப் பால் கூட்டியரைத்து பச்சைப் பயிறு, உழுது பிரமாணம் மாத்திரைகளாகச் செய்து நிழலிறுலர்த்திச் சீசாவில் பத்திரப்படுத்துக. இதனை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2 வேளை தாய்ப் பாலில் கொடுக்க சுரம், வலி, மாந்தம்,இருமல் முதலிய பிணிகள் தீரும்.

    malbha likes this.

  4. #14
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    அழிஞ்சில்.


    1. மூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.

    2. தாவரப்பெயர் -: ALANGIUM LAMARCKII,

    3. தாவரக்குடும்பம் -: ALANGIACEAE.

    4. இன வேறுபாடு -: கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்களையுடையவை வேறுபடும்.

    5. பயன் தரும் பாகங்கள் -: வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை முதலியன.

    6. வளரியல்பு -: அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20 அடி உயரம் )நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

    7. மருத்துவப் பயன்கள் -: நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

    வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

    அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.

    சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.

    அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

    ‘ அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
    மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சூழாங்
    குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
    திட்ட மெனவறிந்து தேர். ‘


    அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும்.

    ‘ பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
    செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்க-ளெல்லாமும்
    அங்கோலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாம்
    பொங்கோல மிட்டோடிப் போம். ’


    அங்கோலம் என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவை போம்.

    அழிஞ்சில்வேர் விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள் நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு வர விரைவில் ஆறும்.

    அழிஞ்சி வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும், குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம், விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய், விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு பிடிப்புகளுக்கு நன்று.

    அழிஞ்சில் வித்து-

    ‘ நிகருமிடை மெல்லியலே யித்தரையில்
    அழிஞ்சில் வித்த தனாற் சாறுபல-மென்னவெனில்
    மறையு மஞ்சனமு மாகும் சன வசியம்
    அது செய்திடவே நன்று.’

    நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும் உலக வசியமும் உண்டாகும்.

    இந்த இனத்தில் சாதாரண அழிஞ்சலுடன் கறுப்பு அழிஞ்சில் என்கிற ஓர் இனமுண்டு. காய் இலை நரம்பு இவற்றில் கறுப்பு நிறமோடியிருக்கும். இதுவே விசேஷமானது. இதன் உபயோகத்தைப் பற்றி அனுபவ சித்தியுள்ள பெரியாரிடமிருந்து கை முறையாக நேரில் கற்றுணர வேண்டியது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள அவா இருப்பின் புலிப்பாணி முதலான மஹரிஷிகளால் கூறப்பட்டுள்ள ஜாலகாண்டங்களில் கண்டறியவும். இதன் வித்துத் தைலத்தைச் சர்ம ரோகத்திறுகும் பூச ஆறும். உள்ளுக்குக் கொடுக்க கப வாதத்தையும் குட்டத்தையும் நீக்கும்.

    malbha likes this.

  5. #15
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    அஸ்வகந்தா.



    1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.

    2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.

    3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.

    4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

    5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20

    6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

    7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெருக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.

    8) மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

    ‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
    மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
    முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
    அசுவகந் திக்கென்றறி.’


    சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

    முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

    அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

    அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.

    malbha likes this.

  6. #16
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆகாச கருடன் கிழங்கு.


    மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு.

    தாவரப்பெயர் -: CORALLO CARPUS.

    தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.

    வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன

    வகைகள் -: இதன் குடும்பத்தில் 16 வகைகள் உள்ளன.

    பயன் தரும் பாகங்கள்- இலை மற்றும் கிழங்கு முதலியன.

    வளரியல்பு -: ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும். இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.

    மருத்துவப் பயன்கள் -: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும். விடம் முறிந்து நோயாளி குணமடைவான். விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது. பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

    மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

    இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.

    இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.

    ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி, நல்லெண்ணையை விலக்க வேண்டும்.

    ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன் வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

    ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண், சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து, குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.

    ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி, அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.

    malbha likes this.

  7. #17
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆடாதோடை



    1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

    2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

    3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

    4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

    5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

    இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

    ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

    ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

    ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

    ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.

    malbha likes this.

  8. #18
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆடையொட்டி





    மூலிகையின் பெயர் :– ஆடையொட்டி.

    தாவரப்பெயர் :– TRIUMFETTA RHOMBOIDEA Jacq. Syn: Triumfetta angulate Lam.

    தாவரக்குடும்பம் :- TILIACEAE (Malvacea) இதில் 70 வகைகள் உள்ளன.

    பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பட்டை, காய் மற்றும் வேர்கள். (சமூலம்) மருத்துவ குணம் உடையவை.

    வேறு பெயர்கள் :– ஒட்டுப்புல்லு (Ottuppullu), புறாமுட்டி (Puramutti)
    Aadaiotti, Adayotti, Ataiyottippuntu,போன்றவை.

    ஆங்கிலத்தில் - Burr Bush, Diamond burrbark, Chinese Burr போன்றவை.

    சமஸ்கிரத த்தில் ‘JHINJHARITA’ என்ன்றும் இந்தியில் ‘CHITKI’ என்றும் அழைக்கிறார்கள்.

    வளரியல்பு :– ஆடையொட்டி ஒரு செடி வகையாச் சேர்ந்தது. இது எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கும். தமிழ் நாட்டில் மலை, வேலியோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இதன் தாயகம் பிறப்பிடம் தெரியவில்லை. இருந்தாலும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்வான், தென்ஆப்பிரிக்கா, கானா, .டான்சானியா, காமரூன், பிரேசில், இத்தோப்பியா, ஸ்விச்சர்லேண்ட், லிபியா, சைனா, ஜிம்பாவே, பாக்கீஸ்தான், மடகாஸ்கர், அமரிக்கா, உகாண்டா, இலங்கை போன்ற நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்தச் செடி சுமார் ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நேராகச் செல்லும் குத்துச் செடி. இதன் தண்டுகள் மெலிந்திருக்கும், லேசான சொரசொரப்பான முடியுடன் இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் நீழ்வட்டத்தில் பசுமையாக சிறு முடியுடன் இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், சில வகை வெள்ளை, ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும், ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். ஜூலை, மற்றும் ஜனவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். பூ முற்றியதும் அடிபாகத்தில் சூழ் இருக்கும், இது தன்மகரந்தச் சேர்கையால் காய் உண்டாகும். இதன் காய்கள் சிறிதாக மூன்று அரைகள் கொண்டதாக இருக்கும். இந்தக் காய்கள் உலர்ந்தால் ஆடைகள் படும் போது ஒட்டிக் கொள்ளும். இதனால் காரணப்பெயராக அமைந்தது. தமிழ் நாட்டில் தரிசு நிலங்களில் தானாக வளர்ந்தாலும் இதை வெளி நாடுகளில் நல்ல நிலத்தில் பயிராகப் பயர் செய்கிறார்கள்.(மடகாஸ்கர்) விதைமூலம் இன விருத்தி செய்யப்படுகிறது..

    மருத்துவப் பயன்கள் :– ஆடையொட்டியின் தன்மை தட்பம். பிரிவு இனிப்பைச் சேர்ந்தது. செய்கை துவர்ப்பி-லங்கோசகாரி (ASTRINGENT) உள்ளழலாற்று- அந்தர்ஸ்நிகதகாரி (DEMULCENT). இதன் இலை, பூ தொழுநோயை (Leprosy) குணப்படுத்தும், இலையின் பவுடர் இரத்த சோகையைப் (Anaemia) போக்கும். இதை கிழக்கு ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இதன் தண்டு மற்றும் புதிய இலையை அரைத்து உள் கொடுக்க வயிற்றுப் போக்கு (Diarrhoea) குணமாகிறது. வயிற்று வலியும் குணமாகிறது. இதன் அடி வேர்கள் பொடி செய்து உள் கொடுக்க குடல் அல்சர் சூடு (Hot infusion-hasten parturition) குணமடைகிறது. இதன் சமூலத்தில் பிரித்தெடுக்கப்பட்ட ஆல்கலாய்டு ஏண்டி பாக்டீரியாகப் பயன்படுகிறது. இதன் வேர் அரைத்துக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு (Dysentery) குணமாகிறது. வெளிநாடுகளில் குதிரையின் வயிற்றுக் குடலில் புண் அஜீரணம் போன்று ஏற்பட்டால் இதன் இலைகளை நன்கு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து குணம் காண்கிறார்கள். இதன் இலைச் சாற்றிலிருந்து இரசாயனத்தைப் பிறித்தெடுத்து அது TRIUMFEROL
    ( 4-HYDROXYISOXAZOLE -TRIMETHYLSILYLACETARTRAMIA LINN.) இதிலிருந்து எடுக்கப்பட்ட சத்து- TRIUMFETTA BARTRAMIA LINN-Body tempature decrease. (1963) உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இதன் இலைச்சாற்றை பவுடராகவும், வில்லைகளாகவும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.

    ஆடையொட்டியின் இலையை அரைத்து நீரில் கலக்கி சர்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க வெட்டை ரோகம் குறைந்து நன்மை ஏற்படும்.

    ஆடையொட்டியின் இலை மற்றும் காய் நீரில் அரைத்து நன்கு கலக்கி மூத்திரத் தாரையில் பீச்ச மேற்படி நீர் சம்பந்தமான ரோகங்கள் குணமாகும்.

    ஆடையொட்டி இலையையும் பட்டையையும் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுக்க அதிசாரம் அஜீரண பேதி, சீத பேதிகள் குணமாகும்.

    malbha likes this.

  9. #19
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆனைக் குன்றிமணி.




    மூலிகையன் பெயர் –: ஆனைக் குன்றிமணி.

    தாவரப்பெயர் –: ADENANTHERA PAVONINA.

    தாவரக்குடும்பம் –: FABACEAE.

    வேறு பெயர்கள் :- மஞ்சாடி மரம். பொதுவான பெயர் Red Wood. 1. Bead Tree, 2. Circassian bean seed. 3. Coral wood, 4. Crab’s eyes, 5. False sandlewood, 6. Jumbie bead.

    பயன் தரும் பாகங்கள் –: வேர், விதை மற்றும் இலை ஆகியன.

    வளரியல்பு –: ஆனைக் குன்றிமணி மரவகையைச் சேர்ந்தது. இது வளமான இடங்களில் நன்கு வளரும். மித வெப்ப நிலை தேவை. கந்தக மண் செம்மண்ணிலும் வளரும். இந்தியா, தென் கிழக்கு சைனா, தென்கிழக்கு ஆசிய நாடுகிளில் வளர்க்கப்படுகிறது. இது 20 மீட்டர் உயரம் கூட வளரக்கூடியது. இந்த மரம் கெட்டியாக இருக்கும். இது வேகமாக வளரக்கூடியது. மரம் சுற்றி மிருதுவாக இருக்கும். இலைகள் பச்சையாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கும். 10 – 40 செ.மீ .நீளமும் பக்கக் கிழையில் 2-6 சதைகள் இருக்கும். ஒவ்வொரு இலையிலும் 9-15 சதைகள் இருக்கும். பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையுடையது..2 மி.மி.நீளமும் மஞ்சள் நிரத்தில் நட்சத்திரம் போன்று உச்சியில் பூக்கும். பூனை வால் போன்றும் இருக்கும். பூ வாடும் போது ஆரஞ்சு மணம் வீசும். காய் முற்றிக் காய்ந்தால் வெடித்தி கீழே விழுந்து விடும். உள்ளிருக்கும் விதை சிவப்பு நிறத்தில் இருக்கும். அது சுமார் 8-12 கெட்டியான விதை இருக்கும். சாலை யோரங்களில் ஆழகுக்காக வளர்ப்பார்கள். தங்கம் வெள்ளி எடைபோட இந்த விதைகள் பயன் பட்டன. 4 விதை ஒரு கிராம். 4 நெல் எடை ஒரு குற்றி மணி, 2 குன்றிமணி ஒரு மஞ்சாடி. விதையின் மேற்புரம் கெட்டியாக இருப்பதால் முழைக்க ஒரு விருடம் ஆகும். அதனால் விதையை சுடுதண்ணீரில் போட வேண்டும். ஒரு நிமிடம் அல்லது கந்தக அமிலத்தில் முறைப்படி ஊர வைக்க வேண்டும். நாற்றங்காலில் விதைக்க 10 நாட்களில் முழைக்கும். அது 3 மாத த்தில் 8-15 செ.மீ.உயரம் வளரும். 3 மாத த்தில் 30 செ.மீ. வளரும். இந்தியாவில் அதிகமாக கட்டிங் மூலம் இன விருத்தி செய்கிறார்கள். ஒரு வருடம் கழித்து செடி நன்கு வளர ஆரம்பிக்கும்..
    .
    மருத்துவப் பயன்கள் –: முடக்கு வாதம்,வாத நோய்கள் மற்றும் சிறுநீரில் காணும் இரத்தம் நீங்கும். வேர் வாந்தியை உண்டாக்கும். அனைக் குன்றிமணியின் கொழுந்து இலைகளை உணவாக கீரையாகச் சாப்பிடலாம். விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதில் புரோட்டின் கொழுப்பு இருப்பதால் விரைவான சீரணசக்தியைக் கொடுக்கும். மரம் விரகுக்காகவும், பர்னீச்சர் செய்யவும், தரைக்குப் போடவும், வீடு கட்டவும் பயன் படுத்துகிறார்கள். படகுகள் கட்டவும் பயன் படுத்துகிறார்கள். அதன் சேகு சிகப்புச்சாயம், துணி உண்டாக்கவும் பயன்படுத்துகிறார்கள். சுத்தி செய்யாத விதை நச்சாகும்.

    மரப்பட்டைத் தூள் எடுத்து தண்ணீரில் கலந்து தலைவலிக்கும், வயித்துக் கடுப்பு, வயித்துப் போக்குக்குப் பயன் படுத்துவார்கள். பட்டை மற்றும் இலையில் தயார் செய்த கசாயம் மேலை கண்ட நோயிக்குப் பயன் படுத்துவார்கள். சிகப்பு விதை பொம்மைகள் செய்யவும் தங்க நகைகளில் சேர்க்கவும் பயன் படுத்துகிறார்கள்.

    malbha likes this.

  10. #20
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆரை.



    1. மூலிகையின் பெயர் :- ஆரை.

    2. தாவரப்பெயர் :- MARSILEA
    QUADRIFOLIA.

    3. தாவரக்குடும்பம் :- MARSILEAFEAE.

    4. பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.

    5. வேறு பெயர்கள் :- ஆராக்கீரை, ஆலக்கீரை என்பன. ஆங்கிலத்தில் பொதுவான பெயர் European water clover என்று சொல்வர்.

    6. வளரியல்பு :- ஆரை ஒரு நீர்தாவரம்.

    இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன் படுத்தியுள்ளார்கள்.
    மத்திய, தெற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது. பின் ஆப்கானீஸ்தான்
    இந்தியா, சைனாவுக்குப் பரவிற்று. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வட அமரிக்காவில் காணப்பட்டது. இது செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக கொண்ட மிகவும் சிறிய செடி. இது ஆற்றங்கரை, குழம், ஏரிக்கரை களிலும், மணல் பாங்கான ஈரமான இடங்களிலும் நன்கு தானே வளர்கிறது. இது தண்ணீரில் மிதக்கும், தரையிலும் வளரும். இதற்கு லேசான நிழல் தேவைப்படும். கரிமலவாயு குறைந்து எடுத்துக்கொள்ளும். வளர்ச்சி மெதுவாக இருக்கும். இதில் வேறு வகைகளும் உண்டு. இதன் இலைகள் பச்சையாக இருக்கும். இது தொடர்ச்சியாக வேர் விட்டுப் படர்ந்து வளரும். இது சுமார் ஒரு அடி நீழும். அதன் வேருடன் 2 அங்குலம் வெட்டி இன விருத்தி செய்வார்கள்.

    7. மருத்துவப்பயன்கள் :- ஆரை வெப்பம் நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது.
    பாம்புக் கடியைக் குணமாக்கும்.
    கீரையைச் சமைத்துண்ண தாய்பால் சுரப்பை நிறுத்தும்.
    கீரையைச் சமைத்துண்ண பகு மூத்திரம்போகும்.
    இதன் இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங் கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.


    malbha likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter