Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree60Likes

நமது மூலிகைகள்- Herbs for cure


Discussions on "நமது மூலிகைகள்- Herbs for cure" in "Nature Cure" forum.


  1. #21
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆரோக்கியப்பச்சா





    மூலிகையன் பெயர் : ஆரோக்கியப்பச்சா.

    தாவரவியல் பெயர் TRICHOPUS ZEYLANICUS.

    தாவரக்குடும்பம் : TRICHOPODACEAE.

    பயன் தரும் பாகங்கள் : இலை மற்றும் பழம்..

    வளரியல்பு : ஆரோக்கியப்பச்சா ஒரு சிறு மூலிகைச் செடி. இதில் இரு வகை மட்டும் உள்ளது. இலைங்கையில் இதற்கு வேறு பெயரில் அழைப்பர். இதன் இலை 20 செ.மீ. நீள்ளது.இதன் இலைகள் மனிதனின் இதைய வடிவில் அமைந்திருக்கும். இலைகள் இடத்திற்குத் தக்கவாறு மாறுபடும். இது மணற்பாங்கான இடத்தில், ஆற்றுப்படுகைகளில் நிழலில் வனங்களில் நன்கு வளரக்கூடிய மூலிகைச் செடி. வருடம் முழுதும் பூக்கள் இருக்கும். பழங்கள் விடும். அதிகம் பழுத்தால் தண்ணீரில் மிதந்து செல்லும். பூக்கள் கரு நீலத்தில் தென்படும். இலங்கையில் வெண்மையாக இருக்கும். இதன் தாயகம் இந்தியா. ஆரோக்கியப்பச்சா மலேசியா, சங்கப்பூர், இலங்கை தாய்லேண்டு மற்றும் தென் இந்தியாவில் தென் மேற்கு மலைத் தொடரில் கேரளாவில் அகஸ்தியர் மலையில் காணி என்ற மலைவாழ் மக்களால் தொன்று தொட்டு மூலிக்கையாகப் பயன் படுத்தி வருகின்றனர். விஞ்ஞானிகள் 1987 ல் தான் அது பற்றி ஆய்வு செய்துள்ளனர் அந்த மலைவாழ் மக்கள் அந்த மூலிகையை ஆரோக்கியப்பச்சா என்று குறிப்பிட்டனர். அதற்குப் பொருள் சக்தியைக்கொடுப்பது என்று சொன்னார்கள். இது இனவிருத்தி செய்ய விதை மூலமும், பக்கக்கிழங்குகள் மூலமும் செய்யப்படுகிறது. வியாபார ரீதியாக கிழங்குகள் மூலமாதத்தான் செய்கிறார்கள். திசு வளர்ப்பு முறையிலும் முயற்சி செய்துள்ளனர்.

    ஆரோக்கியப்பச்சாவின் மருத்துவ குணங்கள்
    ஆரோக்கியப்பச்சா ஒரு வித சக்தியைக் கொடுக்கிறது. மனிதர்களின் எடையைக் குறைக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். இது ஈரல் சம்பந்தமான வியாதியைக் குப்படுத்தும்.
    இது வயிற்றில் ஏப்படும் குடல் புண்ணைக் குணமாக்கும். காணி மலைவாழ் மக்கள் ஆரோக்கியப்பச்சாவின் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் கூட மலையினுள் செல்வர், அப்போது அவர்களுக்கு பசி ஏற்படாது நல்ல சக்தியுடன் செயல்படுவர். மேலும் ஆண் பெண் உரவில் அதிக சக்தியைத் தூண்டுவதாகச் சொலிகிறார்கள். இவர்கள் கூற்றை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் சுண்டெலிகளுக்குக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் உண்மை என்று தெறிந்தனர்..



    Sponsored Links
    malbha likes this.

  2. #22
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆற்றுத்தும்மட்டி.



    1. மூலிகையின் பெயர் :-ஆற்றுத்தும்மட்டி.

    2. தாவரப்பெயர் :- CITRULLUS COLOCYNTHES.

    3. தாவரக்குடும்பம் :- CUCURBTACEAE.

    4. வகைகள் :- பெரிய தும்மட்டி, சிறு தும்மட்டி என இரு
    வகைப்படும்.

    5வேறு பெயர்கள் -: கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி
    'Bitter Apple' என்றும் சொல்வர்.

    6. பயன்தரும் பாகங்கள்- இலை, காய், வேர் ஆகியவை
    மருத்துவப் பயனுடையவை.

    7. வளரியல்பு :- ஆற்றுத்தும்மட்டியின் தாயகம்மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. 1887 ல் துருக்கி,Nubia and Jrieste ல் இதைக்கண்டு பிடித்தார்கள்.ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம்காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்டஇலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிலம் இருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

    8. மருத்துவப்பயன்கள் :- சமூலம் நுண்புழு கொல்லும். நஞ்சு முறிக்கும். காய் சிறு நீர், மலம் பெருக்கும். புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடஙுகளில் காயைநறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.

    பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய் புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக உலர்த்திப் பொடித்து சமனெடை கலந்து அரைத் தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ளஅனைத்து நஞ்சுகளும் முறியும்.

    தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்துவிலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

    பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய் பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய், வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சலவணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம், திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம், சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சன்ன லவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப் போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத் தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும் 2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு) 4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள் ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு, இடுப்புவலி, வாயு, ருதுச்சூலை முதலியவை தீரும்.

    துமட்டிக்காய், எலுமிச்சம்பழம், வெள்ளை வெங்காயம், நொச்சி, இஞ்சி இவற்றின் சாறுவகைக்கு 1 லிட்டர் கலந்து சிறு தீயில் காய்ச்சி 1 லிட்டராக வற்றி வரும் போது இறக்கி ஆறவைத்துக் கல்வத்திலிட்டு ரசம் லிங்கம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம், வெங்காயம், கடுகு, மஞ்சள், வெந்தயம், மிளகு, காந்தம், நேர்வாளம் வகைக்கு 10 கிராம் பொடித்துச் சேர்த்து மெழுகுப் பதமாய் அரைத்து தூதுளங்காய் அளவாக வெல்லத்தில் பொதித்து10 நாள்கள் காலையில் மட்டும் கொடுத்து வர வயிற்று நோய்கள் குன்மம், வாயு தீரும்.


    malbha likes this.

  3. #23
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    ஆவாரை.




    1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.

    2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.

    3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.

    4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.

    5. வளரியல்பு -: ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி, மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர். வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும். ஆவரஞ்செடி பயிரிட முதலில் நிலத்தை நன்றாக உழுது உரமிட்டு நீள் பாத்திகள் அமைக்க வேண்டும். ஆவாரை விதைகளை நேரடி விதைப் பெனில் 15 கிலோவும், நாற்றங்கால் என்றால் 7.5 கிலோவும் தேவைப்படும். 45 நாட்கள் வயதுடைய நாற்றை நீள் பாத்திகளில் 1.5 அடிக்கு 1.5 அடி இடைவெளியில் நட வேண்டும். பயிர் தண்ணீருக்குப் பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாயச்ச வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். ஒரு வருடத்தில் 2000 கிலோ இலைகள், 250 கிலோ பூக்கள், மற்றும் 500 கிலோ காய்கள் கிடைக்கும். பதப் படுத்த நிழலில் 5 நாட்கள் உலரவைக்க வேண்டும் இலைப்புள்ளி, இலைச்சுருட்டு நோய்கள் வராமல் இருக்க மருந்துக் கொல்லியைப் பயன் படுத்த வேண்டும். செலவு ஒரு வருடத்திற்கு ரூபாய் 12,000 வரவு ஒருவருடத்திற்கு 60,000 ஆக வருமானம் ரூ.48,000 இவை தோராயமானவை.

    6. மருத்துவப் பயன்கள் -: ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மை யுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

    இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மர்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.

    சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
    ரெல்லா மொழிக்கு மெருவகற்று - மெல்லவச
    மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
    யாவாரை மூலியது.

    ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

    முறை -: அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

    பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக் கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

    ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

    ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

    20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.


    malbha likes this.

  4. #24
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure


    இன்சுலின் செடி.


    1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

    2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

    3) PLANT FAMILY: Costaceae

    4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்

    5) பயன் தரும் பாகம் -: இலை.

    6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதை நான் வீட்டிலும், வரகம்பாடி தோட்டத்திலும் வளர்க்கிறேன். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும். ஆரம்பத்தில் இதன் நாற்றை கேரளாவிலிருந்து திரு.வின்சென்ட் அவர்கள் ஒரு நாற்று ரூ.50-00 என்று வாங்கி வந்து நாற்றுக்கள் உற்பத்தி செய்கிறார். தற்போதும் அவரிடம் நாற்றுக்கள் உள்ளன.

    அவரது போன்- 9894066303 0422-2566303.


    5) மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
    தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.

    பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

    பார்க்க
    www.sidhaeureka.blogspot.com


    malbha likes this.

  5. #25
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    இரணகள்ளி.



    மூலிகையின் பெயர் –: இரணகள்ளி.

    தாவாரப்பெயர் –: EUPHORBIA.

    தாவரக்குடும்பம் :– EUPHORBIACEAE.

    பயன்தரும் பாகங்கள் –: பால் மற்றும் இலை.

    வளரியல்பு –: கள்ளி இனங்ளில் 2008 வகைகள் உள்ளன.. கால்நடைகள் சாதாரணமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதில்லை. கள்ளிகள் பலவிதமான தோற்றங்கள், சிறு செடிமுதல் மரம் வரை வளரக்கூடியவை. பல வண்ண மலர்களுடன் காணப்படும். அழகுக்காக எல்லா நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் தோற்றம் சங்க காலத்திலும், ஜீலிசீசர் காலத்திலும் இருந்துள்ளது. அதனால் காலம் நிர்ணியிக்க முடியவில்லை.

    கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும். இரணகள்ளி இலை மூலமும், விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

    மருத்துவப்பயன்கள் –: இரணகள்ளி- பொதுவாக நீர் மலம் போக்கும், வாந்தி உண்டாக்கும், தடிப்புணாட்டாக்கும் செய்கையுடையது. கள்ளி இனங்களான கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக் கள்ளி என்ற கள்ளியின்னங்களுக்கு என்ன செய்கை உண்டோ, அதே செய்கை இதற்கும் உண்டு. ஆனால் இந்த ரணக்கள்ளி செடியில் பால் இராது.

    இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

    இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

    இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் பேரில் இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

    மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் கபவாத சம்பந்தமான நோய்கள் சன்னி ரோகம், நரம்புச் சிலந்தி, நளிர் வாத நோய்கள் ஆகியவை குணமாகும்.

    இரணக் கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.

    இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும். அறுவை சிகிச்சை செய்து தான் தீரவேண்டும் என்ற நோய்களும் மேல் கண்ட முறையால் அறுவை சிகிச்சையின்றி குணமாக்கிக் கொள்ளலாம். பத்தியம்; சுட்ட புளி, வறுத்த உப்பு சேர்த்துக் கொண்டு இதர பொருட்களை நீக்கி இச்சா பத்தியமாக இருப்பது அவசியம்.

    இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு 500 மில்லி, தேங்காய் எண்ணை 400 மில்லி, அதனுடன் கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், நீரடிமுத்து 20 கிராம், கார்போக அரிசி 30 கிராம், கப்பு மஞ்சள் 40 கிராம், கசகசா 5 கிராம், சேர்த்து இடித்து யாவும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவர குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் யாவும் போகும்.

    கிட்னியல் கல் உள்ளவர்கள் இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை அறிய, சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் குணமாவது கண்கூடத் தெறியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.


    malbha likes this.

  6. #26
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure



    இலந்தை.

    1. மூலிகையின் பெயர் :-
    இலந்தை.

    2. தாவரப்பெயர் :- ZIZYPHUS JUJUBA.

    3. தாவரக்குடும்பம் :- RHAMANACEAE.

    4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பட்டை. வேர்பட்டை பழம்ஆகியவை

    5. வளரியல்பு :- இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை,Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப் படவில்லை. இதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.

    மருத்துவப்பயன்கள் :- இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

    இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

    இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

    இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

    துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.


    malbha likes this.

  7. #27
    saramya's Avatar
    saramya is offline Friends's of Penmai
    Real Name
    Ramya Saravanan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Bangalore
    Posts
    217

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    Thanks for sharing

    Dangu likes this.
    Ramya

  8. #28
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure


    பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!

    இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில் இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன.

    அது போக, மருத்துவத்திற்குத் தேவையான பல மூலிகைகளைத் தேடித்தேடி வாங்கிட்டு வந்து வளர்த்திருக்கிறார் சொக்கலிங்கம். விஷத்திலேயே கொடிய விஷமான எட்டி, ஒத்தத் தலைவலியைக் குணப்படுத்தும் காஞ்சொறி, ஆஸ்துமாவை அழிக்கும் ஆஸ்துமா கொடி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சர்க்கரைக் கொல்லி, இன்சுலின் செடிகளும் இங்கே இருக்கிறது. இந்த இன்சுலின் நாற்றுகளை நிறைய பண்ணைகளில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு செடியை வாங்கிக் கொண்டு வந்து அது வளர்ந்ததும் தண்டை ஒடித்து வைத்தாலே போதும், தன்னால் வளர்ந்துவிடும்.

    அதேமாதிரி .. பிரம்பு, கருப்பு வெத்திலை, கருநெல்லி, கருநொச்சி, ரசவாதத்திற்குப் பயன்படும் செங்குமரி, வெள்ளை நாவல், திருவோடு மரம், பேய்கரும்பு, வல்லாரை, ஓரிதழ் தாமரை, முடக்காத்தான், ரணகள்ளி, நீர் நொச்சி, நீர் பிரம்மி, நீல மிளகாய், தவசி, முருங்கை, மான் செவி, கேசவர்த்தினி, கரிசலாங்கன்னி, தண்ணீர் விட்டான் கிழங்கு, ஆகாயகருடன், மதனகாமப்பூ, ஈஸ்வர மூலிகை என்று வகை வகையான அறிய மூலிகைகளையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்க்கிறேன் என்றார்.

    கனகாம்பரத்தில் பச்சை கலரில் பூ வரும் செடி, இரண்டு வகை வல்லாரை, இரண்டு வகை மருதாணி, மூன்று வகை பொன்னாங்கன்னி, ஐந்து வகை வில்வம், ஐந்து வகை பிரண்டை, மூன்று வகை நாரத்தை, ஐந்து வகை எலுமிச்சை என்று ஒரே செடியில் இருக்கும் பல வகைகளும் இங்கே இருக்கிறது. இருமல் உள்ளிட்ட நிறைய நோய்களை குணப்படுத்தும் சித்தரத்தை மட்டுமே தனியாக அரை ஏக்கரில் இருக்கிறது.

    மொத்தமாக பார்த்தால்.. ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கே இருக்கு. இந்த மூலிகைகளை வைத்து ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், தோல் நோய் என்று ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் எல்லா நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்த முடியும். இங்கிருக்கும் எந்தச்செடிக்கும் எந்த ஊட்டமும் கொடுப்பதில்லை. தன்னாலேயே வளர்கிறது. மூலிகையயோட குணமே அதுதான். காட்டில் உரம் போட்டா வளர்க்கிறார்கள் என்றார் சொக்கலிங்கம்.

    பாம்பும் கீரியும் சண்டை போடும் போது, கீரி ஒரு இலையைச் சாப்பிடும். அதற்குப் பேர் கீரி புரண்டான் செடி, அது வேற ஒன்றும் கிடையாது. நம்ம காலடியில் கிடக்கும் சாதாரண சுண்ணாம்புக் கீரைதான். பொதுவாக, நாம செம்பருத்தி என்று சொல்லும் செடி அது கிடையாது. அதை செம்பரத்தைப்பூ என்று சொல்லணும். செம்பருத்தி என்பது நாட்டுப் பருத்தியில் சிவப்பு கலரில் பூக்கும் ஒரு ரகம் என்றபடியே அந்தச் செடியைக் காண்பித்தார் சொக்கலிங்கம். எளிய மருத்துவக் குறிப்பு ஒன்றையும் சொன்னார்.

    பல் சொத்தை, பல்லில் புழு என்று பல்டாக்டரிம் போய் ஐநூறு, ஆயிரம் என்று செலவழிப்பாங்க. அதற்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கிட்டு, நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால் எல்லாம் சரியாயிடும்.

    நிறைவாக, என்னோட மூலிகைத் தோட்டத்தை பார்க்கணும் என்று ஆசைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.

    தொடர்புக்கு,
    சொக்கலிங்கம், செல்போன் : 94439 19801
    .



  9. #29
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure

    மூலிகையின் பெயர் -: இலுப்பை.

    2. வேறு பெயர்கள் -: இருப்பை,குலிகம், மதூகம், வெண்ணை மரம், ஒமை முதலியன.

    3. தாவரப்பெயர் -: BASSIS LONGIFOLIA.


    4. தாவரக்குடும்பம் -: SAPOTACEAE.

    5. பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை முதலியன.

    6. .வளரியல்பு -: இலுப்பை மரவகையைச் சேர்ந்தமரம். இது வண்டல் மண்,
    மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. இது சுமார் 60 அடி உயரம் வரை கூட வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும். நீளம் 13 – 20 செ.மீ. இருக்கும், அகலம் 2.5 – 3.5 செ.மீ. இருக்கும். இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில் களில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் பூக்கள் 2.5 – 5 செ.மீ. நீளமுடையது. பூக்கள் இனிக்கும். இதன் விதைகள் 2.5 – 5 செ.மீ. நீளமிருக்கும். இந்த மரத்தை ஆங்கிலத்தில் HONEY TREE & BUTTER TREE என்று சொல்வார்கள். டிசம்ர் ஜனவரி மாதத்தில் இலைகள்உதிர்ந்து விடும். இலுப்பை ஜனவரி,பிப்ரவரி, மார்ச்சு மாத த்தில் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல் மே ஜூனில் பழங்கள் விடும். ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்தில் 20 – 200 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதையை செக்கில் போட்டு ஆட்டினால் 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். தேங்காய்எண்ணெக்கும், நெய்யுக்கு பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணையைப் பயன் படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 – 2.5 செ.மீ. ஆழத்தில் நடுவார்கள், ஈரம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்க வேண்டும். பின் 15 நாட்களில் முளைக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் வேண்டிய இடங்களில் நடலாம்.

    7. மருத்துவப் பயன்கள் :- இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் பசியுண்டாக்கும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் காமம் பெருக்கும் தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும் நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் மிகுக்கும். இதன் பட்டை காயம், தோல் நோயைக் குணமாக்கும், பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும். இது தலைவலியைப் போக்கும். நீரிழிவைக் குணமாக்கும்.

    ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்கள்.

    ஒரு தாலாட்டுப் பாட்டு
    ‘பச்சை இலுப்பை வெட்டி
    பவளக்கால் தொட்டி கட்டி
    பவளக்கால் தொட்டியிலே
    பாலகனே நீயுறங்கு…’
    இது போல் செய்தால் தாயிக்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பது நம்பிக்கை.

    செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.

    பூவை அரைத்து வீக்கங்களின் மீது பற்றிட வீக்கங்கள் குறையும்.

    இலுப்பை பிண்ணாக்கைப் பொடித்து மூக்கிலிட தும்மல் ஏற்படும். தலைவலி குறையும்.

    இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப் பால் சுரப்பு மிகும்.

    இலுப்பைப் பூ 50 கிராம் அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் காச்சி வடிகட்டிக் காலை மட்டும் ஓரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மதுமேகம், நீரிழிவு குணமாகும்.

    10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும் காச்சல் தாகம் குறையும்.

    மரப் பட்டை 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டுக் கால்லிட்டராக்க் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வர மது மேகம் தீரும். மேக வாயுவைக் கண்டிக்கும், நீரிழிவும் குணமாகும்.

    பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து உடம்பில் தடவி வைத்திருந்து குழிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

    இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுசெய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

    10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டரைத்து50 மி.லி நீரில் கலக்குத் தற்கொல்க்காக நஞ்சு உண்டவர்களுக்குக் கொடுக்க வாந்தியாகி நச்சுப் பொருள் வெளியாகும்.

    பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரசம் பட்டை சமனளவு கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்குக் காணும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றிக்குத் தடவ ஆறும்.

    பிண்ணாக்கை அரைத்துக் குழப்பி அனலில் வைத்து கழியாகக் கிளறி இளஞ்சூட்டில் கட்டி வர விதை வீக்கம் 4,5 தடவைகளில் தீரும்.

    கப்பல் கட்டவும், இரயில் தண்டவாள ரீப்பர் கட்டை செய்யவும், தேர் செய்யவும் மற்றும் விறகாவும் மரம் பயன் படுகிறது.


  10. #30
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: நமது மூலிகைகள்- Herbs for cure


    இலைக்கள்ளி.


    மூலிகையின் பெயர் :- இலைக்கள்ளி.

    தாவரப்பெயர் :- EUPHORBIBA LIGULARIA.

    தாவரக்குடும்பம் :- EUPHORBIACEAE.

    பயன்தரும் பாகங்கள் :- இலை, பால், வேர் மற்றும் பழம் முதலியன.

    வளரியல்பு :- இலைக்கள்ளி கள்ளி வகைகளின் ஒரு வகை. இது எல்லாவித மண் வளங்களிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இது நேராக வளரக்கூடியது. சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்ட டி உயரம் வளரக் கூடியது. இது ஒரு சிறு மர வகை இனம். இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல் காது போல் பச்சையாக இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்கள் விடும். ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். இதை உயிர் வேலிகள் அமைக்கப் பயன் படுத்துவார்கள். இதன் பால் பட்டால் புண்ணாகிவிடும். கால் நடைகள் இதன் இலையைத் தின்னாது. இந்தியாவிலும் மலேசியாவிலும் அதிகமாகக் காணப்படும். தென் இந்தியாவில் அதிகம் பயன் படுத்துகறார்கள். நேபால், சியாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை விதை மூலம் இன விருத்தி செய்வதை விட கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.

    மருத்துவப் பயன்கள் :- இலைக்கள்ளிக்கு மற்ற கள்ளிக்குள்ள குணங்கள் யாவும் இதற்கும் உண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. இதனால் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன் படுகிறது. மற்றும் ஆஸ்த்துமா, இருமல், காதுவலி, பூச்சிக் கொல்லி, மூலம், மூட்டுவலி, காச்சல், இரத்தசோகை, குடல் புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

    இலைக்கள்ளி வேருடன் வெங்காயம் வைத்து அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல் புழு கழியும்.

    இலைக்கள்ளி சாற்றுடன் இஞ்சி சார் கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்த பின் இரக்கி ஆரவைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும்.

    இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன் படுத்துவார்கள்.

    நன்றி SUMAYHA :- சொன்னவை--

    1. இலைச் சாற்றை அல்லது பாலைப் பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

    2. இலையை வாட்டிச் சாறு பிழிந்து இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

    3. இலைச்சாறு அல்லது பாலை வேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மேற்ப்பூச்சாகத் தேய்த்துவர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை குணமாகும்.

    4. இலையை வாட்டிப் பிழிந்து 7, 8 துளிச் சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.


    5. வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்று வேளையும் கொடுத்துவர ஈளை, இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

    6. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவரக் கக்குவான், சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலை ஆகியவை தீரும்.

    7. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளிப்படும்.

    8. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம் இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள் உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம் வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும். இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாத புண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள் ஆகியவை தீரும்.

    9. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச் சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.

    பின் குறிப்பு- இந்த மருத்துவத்தைப் பயன் படுத்தும் முன்பு சித்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுப் பயன்படுத்தவும். தன்னிச்சையாக செயல் பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.-குப்புசாமி.க.பொ.

    Last edited by Dangu; 23rd Mar 2015 at 03:44 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter