Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By shansun70

உணவுகள்! - Food


Discussions on "உணவுகள்! - Food" in "Nature Cure" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  உணவுகள்! - Food

  இரத்த குழாயில் உள்ள கொழுப்பை குறைக்கும் உணவுகள்!
  தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
  இதனால் ஒருவரின் வாழ்நாள் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால் முக்கியமாக இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாக உள்ளது.
  இத்தகைய உணவுகள் இரத்த குழாயில் உள்ள கொழுப்பை குறைத்து இதயத்திற்கு வலுவூட்டுகின்றன.
  நெல்லிக்காய்
  தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
  நாட்டு நெல்லி, மலை நெல்லி என்று சொல்லக்கூடிய, அளவில் உள்ள பெரிய நெல்லிக்காய்தான் வைத்தியத்திற்கானது. பொதுவாக, நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாப்பதுடன் கொழுப்பைக் கரைக்கும். அந்த வகையில் கல்லீரல்கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரிசெய்யக்கூடியது
  இஞ்சியை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். இஞ்சியை துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்து வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், ஜீரணக்கோளாறு, சளி பிரச்னை உள்ளிட்ட உடல்கோளாறுகள் சரியாகும். முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில்வரும்.
  பூண்டு
  பூண்டும் ரத்த அழுத்தத்தை சரிபண்ணக்கூடியது. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,
  ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலு கிடைக்கும்
  உலர் திராட்சை
  இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். இப்படி செய்தால் உடனடியாக இதய படபடப்பு
  அடங்குவதோடு காலப்போக்கில் இதயம் பலப்படும்
  அத்திப் பழத்தின் மகத்துவங்கள்

  இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் முக்கியமான ஒன்று அத்திப் பழம்.
  அத்திப் பழம் அடிமரத்திலேயே கொத்து கொத்தாக காய்க்கும், இப்பழத்தை அப்படியே சாப்பிட முடியாது.
  பூச்சிகள் இருப்பதால் பதப்படுத்தி சாப்பிட வேண்டும், இதில் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை பெருமளவில் அடங்கியிருக்கின்றன.
  மற்ற பழங்களைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. மேலும் இதில் அதிக இரும்புச் சத்தும் உள்ளது.
  அத்திப் பழத்தின் மகத்துவங்கள்
  தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிப்பதுடன் உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
  மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
  பற்களின் ஈறுகள் சீழ்பிடித்தலோ அல்லது வலித்தாலோ இப்பழத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
  இதன் இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
  மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டுவலிகள் குணப்படும்.
  சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்தி பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
  அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட மூலநோயைக் குணப்படுத்தலாம்

  Similar Threads:

  Sponsored Links
  sumitra likes this.

 2. #2
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: உணவுகள்!

  thank you for sharing very useful information!


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter