Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree99Likes

Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்


Discussions on "Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்" in "Nature Cure" forum.


 1. #21
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன&am

  அழகுடன் ஆரோக்கியம் - கருஞ்சீரகம்
  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
  இயற்கை கொடுத்த மூலிகை மருந்துகளில் கருஞ்சீரகம் மிக முக்கியமானது.உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது நூற்றுக்கும் மேலான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இன்னும் கூட இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இன்னும் பலப் பல வியாதிகளுக்கு இந்த கருஞ்சீரகத்தின் துணையுடன், மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

  எகிப்து மக்களின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் அருமருந்து கருஞ்சீரகம். எகிப்தில் பிரமிடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட அரச குடும்ப "மம்மி" களுடன் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு இணையாக நிறைய மருந்துப்பொருட்களையும் சேர்த்தே பாதுகாத்திருக்கிறார்கள்... அப்படி பாதுகாக்கப்பட்டவைகளில் மிக முக்கியமான இடத்தை இந்த கருஞ்சீரகம் பிடித்திருக்கிறது..கருஞ்சீரகத்தினை பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அங்குள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்..இதன் பயன்பாடுகள் பற்றிய நீண்ட வரலாறு எகிப்தில் உண்டு. இதன் காரணமாகவே அனைவரது வீட்டு சமையலறையிலும் கருஞ்சீரகத்துக்கு ஒரு முக்கிய இடத்தை அம்மக்கள் இன்றளவும் கொடுத்து வருகிறார்கள்..
  டூடுட் அங்க் அமான் என்கிற பாரோ எகிப்து மன்னன் தன்னுடைய மரணத்திற்கு பின்னான வாழ்க்கைக்கும் அவசியம் என்று தன்னுடைய கல்லறையில் இந்த கருஞ்சீரகத்தை வைக்க சொன்னதற்கான குறிப்புகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.... எகிப்தில் கடவுளுக்கு அடுத்த நிலையில் மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த ஃபாரோஸ் மற்றும் மருத்துவர்கள் நாட்டில் நடக்கும் பெரிய விருந்துகளுக்கு பிறகு வயிற்றில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கவும், அதனை சமன்படுத்தவும் இதே கருஞ்சீரகத்தை உபயோகித்துள்ளனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும் அவர்கள் தலைவலி, பல்வலி, சளி மற்றும் தொற்றுநோய்களுக்கும் இதையே மருந்தாக கையாண்டுள்ளனர்.
  18ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த அழகியாக திகழ்ந்த அரசி ஃநெபிர்டிடி தன் அழகைப் பாதுகாக்கவும், பாரமரிக்கவும் கருஞ்சீரக எண்ணெயை உபயோகித்ததாகவும், மேலும் தன்னுடைய நகங்கள் மற்றும் முடியையும் இந்த எண்ணையைக் கொண்டே தன் வாழ்நாள் முழுவதும் பராமரித்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

  சமகாலத்தில் எல்லோரையும் மிரட்டும் வியாதியாக இருப்பது கேன்சர் அதிலும் உள்ளுறுப்புகளில் வரும் கேன்சரானது எவ்வித அறிகுறியையும் காட்டாமல் ரகசியமாய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் முடக்கும் போதுதான் தெரியவரும்.. ஆனால் அப்போது அதை குணப்படுத்த முடியாத அளவு நிலைமை கைமீறி போய் இருக்கும்.

  குறிப்பாக கணைய புற்றுநோய் (Pancreatic cancer)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்த பின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. (சர்க்கரை நோயுடன் கர்ப்ப காலங்களில் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் இந்த கான்சர் வரும் வாய்ப்பு உண்டு) . அதோடு நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த கணைய புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.
  உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் கேன்சர் செல்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன.. கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும் (natural interferon), எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது..
  மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B1, வைட்டமின்கள் B2, வைட்டமின்கள் B3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.
  அஜீரணம், இருமல், வாந்தி, வாயு, வீக்கம் போன்றவற்றை குணமாக்கும். பசியைத்தூண்டும், வயிற்றுப் போக்கை நிறுத்தும், புழுக்கொல்லியாக செயல்படும். இதயத்தில் உண்டாகும் வலியைக் குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். முகப்பரு அறவே போக்கும். கரப்பான், சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களைத் தீர்க்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் அதிகம் சுரக்க வைக்கும், பிரசவத்திற்கு பின் உண்டாகும் வலிகளைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. கீல் வாதம், தலைவலி, நாய்க்கடி, கண்வலி, கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். சிறுநீரக* கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
  சிறப்பு குறிப்பு: கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் சளி தொல்லையிலிருந்து உடனடி நிவராணம் பெறலாம்.
  பல வியாதிகளுக்கு கருஞ்சீரகம் ஒன்றே அருமருந்து. அருமருந்தான கருஞ்சீரகத்தை நாமும் நம்முடைய சமையலறையில் அமர்த்தி நோய்களின் வரவை தடுக்கலாமே.  Sponsored Links
  janu23, jv_66, thenuraj and 1 others like this.
 2. #22
  anandhi28 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2014
  Location
  abudhabi
  Posts
  260

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன

  hi malar
  thank you so much. rombave udhaviyana posts. silathu pathi erkanave therinthirunthalum suddena gnabagam varathu. neenga thoguthu koduthirukkirathu nallarukkuthu.

  malbha and Dangu like this.

 3. #23
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

 4. #24
  Malarmanjunath is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2013
  Location
  Coimbatore
  Posts
  183

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன

  Very useful message.... Thanks for Sharing......

  malbha likes this.

 5. #25
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன  விளாம்பழம் (wood apple)
  பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
  பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
  விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து


 6. #26
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன  உணவே மருந்து

  *வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.

  * பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

  * வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.

  * வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.

  * வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.

  * வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

  * வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

  * லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

  * ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

  * உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.


  Dangu likes this.
 7. #27
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன  நெல்லிக்காய் துவையல்

  250 முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.

  பலன்கள்:

  ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சகல நோய்களையும் தீர்க்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும். இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.


 8. #28
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன  முடி கொட்டுவதை நிறுத்த

  வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


 9. #29
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: Herbal Powders and it's uses-மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன  மீன் எண்ணெய் மாத்திரை...!


  உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால்

  அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மீன்

  எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது ஆனால் நிறைய

  மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப்

  பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும்

  சாப்பிடுகிறார்களே தவிர இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.


  மீன் எண்ணெய் என்றால் என்ன?

  இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு

  கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

  இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து

  எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில்

  இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

  மீன் எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன்

  எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண

  மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.


  எதற்கு சாப்பிட வேண்டும்?

  இதனை சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன்

  செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால்

  இருந்தால் அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை

  சாப்பிட்டால் இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை

  குறைத்துவிடும்.

  எண்ணெய்களை குடித்தால் குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த

  எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால் உடல் அதிக எடை போடாமல்

  பார்த்துக் கொள்ளும்.

  இந்த எண்ணெயை சாப்பிட்டால் மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில்

  இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் மூளையை நன்கு

  சுறுசுறுப்போடு எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

  இந்த எண்ணெயில் உள்ள EPA உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும்.

  மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை

  குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

  ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால் எந்த ஒரு

  சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

  இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப்

  போராடும் தன்மை கொண்டது.

  முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால்

  வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு மூளை

  வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

  மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு சருமம் நன்கு

  மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு கூந்தலும் பட்டுப் போன்று

  இருக்கும்.  Last edited by malbha; 12th Feb 2015 at 12:13 AM.
loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter