Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree204Likes

எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies


Discussions on "எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies" in "Nature Cure" forum.


 1. #31
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies  வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் தெரியுமா..?


  வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு

  வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை

  வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு.


  அந்த வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்களைத்தான் இப்போது

  பார்க்க இருக்கிறோம்..


  # வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து

  சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை

  குறையும்.


  # வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண தாதுவிருத்தி

  உண்டாகும்.


  # வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய்

  விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு,

  இல்லனா... பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி

  வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள்

  காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி

  சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை

  மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும்.

  இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம்,

  ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.


  # நறுக்கிய வெள்ளை வெங்காயத்தை நீ ங்கள் படுக்கும் படுக்கையை

  சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும்

  காற்று சுத்தமானதாக இருக்கும்.


  # வாய் அகன்ற பாத்திரம் ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம் செய்து

  வைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு

  அரை கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோ ஆமணக்கு

  என்ணெய் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும்.

  வெங்காயத்தை மட்டும் இடித்து சாறு எடுத்து மற்ற பொருட்களோடு

  கலந்து அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக எரிக்க வேண்டும்.


  சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி சூடு

  ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி

  வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம், வயிற்றுவலி,

  புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாயு தொடர்பான பிணிகள்

  தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை,

  மாலை,கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும்.
  Sponsored Links
  jv_66, chan, naliniselva and 1 others like this.
 2. #32
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies  மெலிந்த உடல் பருக்க..!

  1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

  2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

  3. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

  4. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

  5. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

  6. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

  7. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.


  jv_66, chan and RekhaMani like this.
 3. #33
  vennilad's Avatar
  vennilad is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  Chennai
  Posts
  258

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

  Thanks Malbha for d nice remedies.

  malbha likes this.

 4. #34
  saviselva's Avatar
  saviselva is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  coimbatore
  Posts
  319

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

  its very use full malbha if you give pdf means very use full

  malbha likes this.

 5. #35
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies
  கரும்புள்ளிகள் மறைய சில டிப்ஸ்!!!

  கற்றாழை

  கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

  வேப்பிலை

  வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

  கடலை மாவு

  கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

  சந்தனம்

  சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

  பட்டை

  பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

  பாதாம்

  பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

  டூத் பேஸ்ட்

  கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென்மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டனால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவ தோடு, சருமத்துளைகளும் மூடிக் கொள்ளும்.

  ஆலிவ் ஆயில்

  5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.
  Last edited by malbha; 10th Feb 2015 at 10:20 PM.
  jv_66 likes this.
 6. #36
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies  நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்

  ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு,

  அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி

  பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும்.

  பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து,

  பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை

  தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை.

  இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு

  கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு

  போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காய்ச்சணும்னு இல்ல.

  பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு,

  ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க.

  நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்

  நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி

  குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட்

  பண்ண வேண்டாமே.  jv_66 and shrimathivenkat like this.
 7. #37
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

  super tips.thanks for sharing.

  malbha likes this.

 8. #38
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies  எளிய வீட்டு மருந்துகள்

  *ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு

  கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.


  *உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில்

  போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து

  வந்தால் போதும்.


  *அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி

  வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.


  *பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு

  சரியாகும்.


  *சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம்

  குறையும்.


  *மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை

  கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம்

  கிடைக்கும்.


  *துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி

  மூளை பலம் பெறும்.


  *மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி

  சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.


  *வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து

  வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி

  நீங்கும்.


  *பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று

  முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய்

  துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.


  *வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல

  வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால்

  வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.


  *உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன்

  சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.


  *வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும்

  காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச்

  சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.


  *அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர்

  மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.


  *அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி

  மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு

  ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.  jv_66 likes this.
 9. #39
  malbha is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  TORONTO
  Posts
  17,991
  Blog Entries
  2

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies  பெண்கள் வயதாவதை தடுத்து இளமையாக்கும் சஞ்சீவினி


  பெண்கள் இளமையாக தோன்ற பல வகையான வழிகள் உள்ளன.


  மிகுந்த செலவு செய்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள

  வேண்டிய அவசியமில்லை. முக அழகும், உடல் அழகும் ஒப்பனைகள்

  மூலம் பெற்றுவிட முடியாது. அதற்க்கு நம் அன்றாடம் உபயோகிக்கும்

  உணவுப்பொருட்கள் மூலமே அடையலாம். சில பெண்களை

  கண்கூடாக பார்த்து 10,15 வயது இளைமயாக எவ்வாறு

  தோன்றுகிறார்கள் என்று அதிசயப்பட்டிருக்கலாம். இந்த அற்புத

  நிவாரணியை வழங்கிய பெண்மணி சொல்கிறார் அவருடைய பார்வை

  -3ல் இருந்து -1ஆக குறைந்து, சருமம் மிருதுவாகவும், உடல் கட்டாகவும்,

  தன்னுடைய முடி அடர்த்தியாக விட்டதாகவும், முடி உதிர்தல் முற்றிலும்

  நின்று விட்டதாக சொல்கிறார்.


  அந்த அதிசய, அற்புத மருந்து செய்ய என்ன தேவை என்று பார்ப்போம்:


  100 மில்லி பிளாக்ஸ்சீட் எண்ணை (Flax Seed Oul)

  2 நடுத்தர எலுமிச்சை பழம்

  1 பெரிய பூண்டு

  0.5 கிலோ தேன்


  சுத்தம் செய்த பூண்டு, 1 எலுமிச்சை தோலுடன் முழுதாகவும், ஒரு

  எலுமிச்சை பழத்தின் ஜூஸும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்

  கொள்ளவும். இத்துடன் தேன் சேர்த்து கலக்கி, மேலாக பிளாக்ஸ் சீட்

  எண்ணையை ஊற்றி நன்றாக கிளறவும். ஒரு கண்ணாடி ஜாடியில்

  இட்டு கெட்டியாக மூடி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு

  டேபிள்ஸபூன் சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடவும்.


  இந்த மருந்து எவ்வாறு உடலை இளமையாக்குகின்றது ?

  பிளாக்ஸ்சீட் எண்ணை இயற்கையான தாவர ஹார்மோன்களை

  கொண்டது. இதில் லினொலிக் (ஒமேகா 3), ஓலிக் ஆசிட் (ஒமேகா 9),

  பால்மிட்டிக் கொழுப்பு எண்ணை ஆகியவற்றைக் கொண்டது. இதில்

  பாதிக்கும் மேலாக அடங்கியுள்ள கொழுப்பு ஆல்பாலினொலிக்

  ஆசிட்டை (ஒமேகா 3) கொண்டது. இது மீனில் காணப்படும் ஒமேகா

  3யைவிட இரண்டுமடங்கு கூடுதலாகாகவும், தாவரவகைகளில்

  ஒமேகா அதிகமாகவும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதும் இந்த

  பிளாக்ஸ்சீட் எண்ணை. இவை எலுமிச்சையுடன் சேரும்பொழுது

  ஈரலையும், பித்தநாளங்களையும் சுத்தமாக்குகின்றது. நம்முடைய ஈரல்

  இளமையை காக்க முக்கிய பங்காற்றுகின்றது.


  எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு அற்புத

  ஆன்ட்ஆக்ஸிடன்ட்டாக செயலாற்றுகின்றது. அத்துடன் பூண்டுடன்

  சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்தநாளங்களை

  சுத்தமாக்குகின்றது. தேன் உடலுக்கு ஊட்டமளித்து,

  உடலின் உறுப்புகளை சுத்தமாக்கி இளமையாக்குகின்றது. 10. #40
  preetlove is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  India
  Posts
  19

  Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

  green tea is very effective way to reduce your body weight. And you can also eat green and healthy veggies to see best results.

  malbha likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter