Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree204Likes

எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies


Discussions on "எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies" in "Nature Cure" forum.


  1. #41
    Nilavizhi's Avatar
    Nilavizhi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    Bangalore
    Posts
    20

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    Thanks for all tips friends


    Sponsored Links
    malbha likes this.

  2. #42
    malbha's Avatar
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    14,002
    Blog Entries
    2

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies



    குழந்தைகளுக்கு...
    குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.


    கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.


    எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.


    நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


    எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.


    * பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.


    * தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.


    * கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.


    * தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.


    * கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.


    இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.


    சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.


    வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.


    காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.


    உடல் அசதியா?

    முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.


    காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.


    பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.


    வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
    தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.


    வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.


    வயிறு இதமாக...


    புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.


    பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.


    வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.


    பெருங்காயம்


    கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.


    ஓமம்


    1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.


    கபம் நீங்க...
    வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.


    ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.


    சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.


    அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

    நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?

    ----------------------------------------

    Latest Novel Board

    எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?




  3. #43
    malbha's Avatar
    malbha is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    TORONTO
    Posts
    14,002
    Blog Entries
    2

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை.


    நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!
    மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!


    1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

    10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.


    2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.


    எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


    3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.


    4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Dont Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.


    5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!


    6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.


    ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.


    நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!


    7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.


    நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?

    ----------------------------------------

    Latest Novel Board

    எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?




  4. #44
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    சத்தம் - சித்தம்- நலம் 360


    பிறந்த கணத்தில் அழுகையுடன் ஆரம்பிக்கும் மனிதனின் பேச்சு, அடுத்த சில மாதங்களில் 'அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை என்கிற ஒலி ஊடகம், மனிதனுக்கு மட்டும் கிடைத்திருக்கும் இயற்கை வரம். அன்பை வெளிப்படுத்த, அக்கறையைக் காட்ட, காதலைச் சொல்லி நெகிழ்த்த... என அனைத்துக்குமான மொழியைப் பிரசவிக்கும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல்நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலைகொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, அது 'சங்கீத ஜாதி முல்லை...’ என சாதகம் செய்துவந்த பாடலாக, 'டார்லிங் டம்பக்கு...’ என உச்சஸ்தாயில் உற்சாகமாக வெளிப்படுகிறது.
    'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’ என்கிறது வள்ளுவம். அந்த மழலை மொழியின் அத்தனை வசீகரத்துக்கும் காரணம், அது பெண் குரல் என்பதுதான். 12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும். 13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆதிக்கம் தொடங்கி குட்டி மீசை துளிர்க்கும்போது, குரல் உடையத் தொடங்கி வலுப்பெறும். அப்போதுதான் ஆணின் குரல்நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, 'ஆடம்ஸ் ஆப்பிள்’ தொண்டையில் தெரியும். பெண்களுக்கு, இந்தக் குரல்நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை. அதனால்தான் 30 வருடங்கள் கழிந்தும் 'காற்றில் எந்தன் கீதம்...’ என எஸ்.ஜானகி பாடினால், முந்தைய சிலாகிப்பு அச்சுஅசலாக அப்படியே தொற்றிக் கொள்கிறது. ஆண் 17-18 வயதை எட்டிய பிறகும் கொஞ்சம் பெண்மை கலந்த குரலில் பேசினால், அது 'பியூபர் போனியா’ எனும் கோளாறு என்கிறது நவீன மருத்துவம். குரல்நாண்களை இழுக்கும் அறுவைசிகிச்சையுடன், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஸ்பீச் தெரபியும் எடுத்துக்கொண்டால் ஆண்குரல் வந்துவிடும்.






    KOTHAISURESH

  5. #45
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    ஒவ்வொருவரின் உள்ளங்கை ரேகைகளில் தனித்துவம் இருப்பதுபோல், குரலிலும் பிரத்யேக அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் மூளைக்குள், குரலை அடையாளம் காண்பதும், தோற்றத்தை அடையாளம் காண்பதும் வெவ்வேறு துறை என சமீபத்தில்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இணையத்தில் பிரபலமான TED பேச்சுத் தொகுப்பில், அமெரிக்காவின் பிரபல நரம்பியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன் இதுகுறித்து ஆச்சர்யம் தெரிவித்திருக்கிறார். விபத்து ஒன்றில் மூளையில் அடிபட்ட நண்பர் ஒருவரைப் பார்க்க வந்த அவரது அம்மாவை, நண்பருக்கு அடையாளம் தெரியவில்லை. மிகவும் வருந்திய அவரது அம்மா வீட்டுக்குச் சென்று, மகனை தொலைபேசியில் அழைத்து, 'டேய்...’ எனச் சொல்லி முடிக்கும் முன்பே, 'அம்மா... எங்கம்மா இருக்க..? ஏன்மா நீ இன்னும் என்னைப் பார்க்க வரலை’ எனக் கதறியிருக்கிறார் அந்த மகன். இதுபோன்ற உதாரணங்களுக்குப் பிறகுதான், குரலுக்கான மூளைச் செயலகம் குறித்த புரிதல் மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. கைரேகைகள்போல குரலின் பிரத்யேக வித்தியாசம்தான், சைபர் கிரைம் கிரிமினல்களை அடையாளம் காண உதவுகிறது!
    இந்தக் குரல்வளை வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், தொற்றும் நோய்க்கூட்டம் சுளுவாக குரலை நொங்கெடுத்துவிடும். 'அட... 'காதல் பரிசு’ கமல்போல டீசன்ட்டா இருக்காரே,’ எனப் பயணத்தில் அவருக்குப் பக்கத்தில் அமரும்போது, அவர் 'வாழ்வே மாயம்’ கமல்போல வழியெல்லாம் இருமிக்கொண்டே வந்தால், ஊர் வருவதற்குள் நமக்கு நோய் வரும். தொண்டைத் தொற்றுகள் குரல்வளையைப் பாதித்து, அதன் உட்சதையை வீங்கவைத்துவிடும். உணவை விழுங்கும்போது, வலி உண்டாகும். சத்தமாகப் பேசும்போது வலி கூடும். வெந்நீரில் உப்புவிட்டு காலை, மாலை வாய் கொப்பளித்து அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்த திரிபலா பொடி போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்து இதற்குப் பரிகாரம் தேடலாம். கூடவே பாலில் மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு கலந்து சூடாகக் குடித்தால், குரல்வளை அழற்சி மறையும்.
    சிறுவயதிலேயே தொண்டையில் குடியேறும் கிருமி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus). நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது, அந்தக் கிருமிக்கூட்டம் மெதுவாக டான்சில் வீக்கம் (Tonsillitis), அடினாய்டு வீக்கம் (Adenoiditis) என உண்டாக்கி, பின்னர் மூட்டுவலியை உண்டாக்கி, மெள்ள மெள்ள ரத்தத்தில் கலந்து, இதயத்தின் வால்வுகளில் குடியேறி அதன் செயல்திறனை அழிப்பது எனப் பல பிரச்னைகளுக்குக் காரணம் ஆகின்றன. 'Licks the joint; bites the heart; kicks the brain’ என இந்த நோயின் நகர்வை நவீன மருத்துவர்கள் கவிதையாகவே கூறுவார்கள். மொத்தத்தில் இந்த நோய் குத்தாட்டம் தொடங்குவது குரல்வளையில்தான். நள்ளிரவில் ஐஸ்க்ரீம், தொண்டை, கன்னக் கதுப்புகளில் ஒட்டிக்கொள்ளும் சாக்லேட் போன்றவற்றை மென்று திரியும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதும் வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்தக் கிருமியின் அடாவடியைக் குறைக்க, கற்பூரவல்லிச் சாறும் தேனும் கலந்து சுரசம் செய்து கொடுக்கலாம். மிளகைப் பொடித்து, தேனில் குழைத்து, மிதமான வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வாக கடற்சங்கை பஸ்பம் ஆக்கி மருந்தாகக் கொடுப்பார்கள். இந்த மருந்தை 3-4 சிட்டிகை நெய்யில் கலந்து கொடுக்க, ஆரம்பகட்ட டான்சில் வீக்கத்தை அடியோடு விரட்டலாம். குழந்தைக்குக் கூடுதல் தேவையான கால்சியம் சத்தையும் சேர்த்துத் தந்து, டான்சில் வீக்கத்தையும் வீழ்த்தும் இந்தச் சங்குபஸ்பம், சிறந்த குரல்வளைக் காப்பான்.
    டான்சில் வீக்கம் வந்தால், 'அதுக்கென்ன, வெட்டி எறிஞ்சிட்டாப் போச்சு’ என்ற மனோபாவம் இப்போது கொஞ்சம் மாறிவருவது ஆறுதலான விஷயம். 'அண்ணாக்குத் தூறு’ எனச் சொல்லப்படும் டான்சில் வீக்கத்துக்கு, வெள்ளைப் பூண்டுச் சாற்றை தேன் கலந்து தொண்டையில் தெரியும் வீக்கத்தில் தடவும் முறை சித்த மருத்துவத்தில் உண்டு. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் தடவி, லேசாகச் சூடுகாட்டி, அந்தச் சூட்டுடன் துணியைப் பிழிந்து, பூண்டுச்சாறு எடுக்க வேண்டும். இதோடு, சுத்தமான தேனை பூண்டுச்சாறுடன் சமஅளவு கலந்து வைத்துக்கொள்ளவும். சுத்தமான பஞ்சில் இந்தப் பூண்டுத்தேனைத் தொட்டு டான்சில் வீக்கத்தில் மென்மையாகத் தடவிவிட, வீக்கம் மெள்ள மெள்ளக் கரையும். ஆனால் மிரண்டு நிற்கும் குழந்தையை மிரட்டிப் பிடித்து, கால்களுக்கு இடையில் இறுக்கி, அவர்களின் வாயைப் பிளந்து... என வன்முறையில் இறங்கக் கூடாது. குழந்தைகளுக்கு விஷயத்தைப் புரியவைத்து மெதுவாகத் தடவ வேண்டும். இல்லையெனில், அந்தச் சாற்றை மூன்று சொட்டுகள் விழுங்கச் செய்தால்கூட போதும்!



    KOTHAISURESH

  6. #46
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    தொடர் அஜீரணம், இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல்போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ, குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் இப்போது அதிகம். இந்த இரண்டுக்கும் எளிய மருந்து அதிமதுரம். நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அதிமதுரம் ஒவ்வொரு வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும் இருக்கவேண்டிய மருத்துவ உணவு. இந்தியாவில் மட்டும் அல்ல... சீன மருத்துவத்திலும் ஜப்பானிய கம்போ மருத்துவத்திலும் அதிமதுரம் மிகப் பிரசத்தி. அதிமதுரம் வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆற்றல்கொண்டது. வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பையும் குறைக்கக்கூடியது. மேலும், அந்த அமிலம் உண்டாக்கும் வறட்டு இருமலுக்கும், மிகச் சிறந்த கை மருந்தும்கூட. அரை டீஸ்பூன் அளவு அதிமதுரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். அல்லது அரை டம்ளர் பாலில் கலந்து காய்ச்சியும் குடிக்கலாம்.
    கல்லூரிப் போட்டிகளில் மனசுக்குப் பிடித்தவளின் கவனத்தை ஈர்க்க, 'ஆரோமலே...’ என ஏட்டிக்குப் போட்டியாக மூச்சைப் பிடித்துக் கத்திவிட்டு மறுநாள், 'மாப்ள.... காத்துதான்டா வருது...’ என்போர், ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். குரலை முறையற்றுப் பயன்படுத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல்நாண்களுக்கு ஆபத்துதான். இதுபோன்ற தொடர்ச்சியான கத்தல், கூச்சல் குரல்நாண்களில் சிறுசிறு கட்டிகளை உண்டாக்கிவிடும். உரத்தக் குரலில் விஷயத்தைச் சொல்லவேண்டிய ஆசிரியருக்கும், பாடகருக்கும், பேச்சாளருக்கும் அந்தக் கட்டிகள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. இவர்களைப் போன்ற அத்தனை பேருக்கும் முதல் மருந்து... மௌனம். மாதத்தில் இரண்டு நாட்கள் மௌன விரதம் இருந்தாலே, அந்தக் கட்டிகள் காணாமல்போய்விடும். அப்படிச் சரியாகாதபட்சத்தில் ஆடாதொடை இலையும் இரண்டு மிளகும் சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்கள், இரண்டு வேளை சாப்பிட்டால், குரல்நாண்களில் வீக்கம் குறையும். இதைத்தான் 'ஆடாதொடையினால் பாடாத நாவும் பாடும்’ என, பதார்த்தகுண சிந்தாமணி பாடல் சொல்கிறது. அந்தக் காலத்தில் அக்கரகாரமும் அதிமதுரமும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்து தரும் கண்டவிழ்தம், திடீரெனக் குரல் கம்மிப்போன பாடகர்களுக்கு 'கச்சேரி மருந்தாக’ இருந்திருக்கிறது.
    'இவர்தான் முகேஷ்..!’ என சில காலம் முன்பு வரை தியேட்டரில் தோன்றும்போதெல்லாம் இளைஞர்களிடையே ஆரவாரத்தை அள்ளினார் புகைப் புற்றுக்கு உயிரைவிட்ட முகேஷ். ஆனால், 95 சதவிகிதக் குரல்வளைப் புற்று, புகைப் பழக்கத்தால் மட்டுமே வரும் என்பதை, முகேஷக்கு விசிலடித்த அந்த இளைஞர்கள் உணர வேண்டும். உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று, '2020-ம் ஆண்டு ஏற்படும் 10 மில்லியன் மரணங்களில் 1.5 மில்லியன் மரணங்களுக்கு, புகைப் பழக்கம் உண்டாக்கும் குரல்வளை புற்றுநோய் காரணமாக இருக்கும்’ என்கிறது. இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்... 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 'புகைப் பழக்கம் தவிர்ப்போம்’ எனப் பிரசாரம் செய்ய பல கோடிகள் செலவழிக்கும் அரசாங்கம், நாடு முழுக்க சிகரெட் தயாரிக்கும் ஐந்து அல்லது ஆறு கம்பெனிகளுக்கு திண்டுக்கல் பூட்டுபோட்டால், வேலை முடிந்ததே! அதை ஏன் செய்வது இல்லை !
    10 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், 'அம்மா’ என அழைத்த மாத்திரத்திலேயே, 'ஏம்ப்பா குரல் ஒரு மாதிரி இருக்கு? சரியாத் தூங்கலையா? பனி அதிகமா... சளி பிடிச்சுருக்கா? குரங்கு குல்லா போட்டுட்டு வெளியே போக வேண்டியதுதானே தங்கம்!’ என அன்பும் ஆதரவுமாக அம்மா அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்கச் செய்யும் அளவுக்கு, இயற்கை நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை, சேதாரம் இல்லாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்


    KOTHAISURESH

  7. #47
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    முதுமையைத் தடுக்கும் பலாப்பழம்











    முதுமையைத் தடுக்கும் பலாப்பழம்

    மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறுநன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடுஇணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில்இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம்ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.

    நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம்உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட்,பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம்,புற்றுநோய் வராமல் தடுக்கும்.

    பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல்தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில்இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது.இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம்உதவுகிறது.

    அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலைகுணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்டபலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில்உள்ள விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.


    KOTHAISURESH

  8. #48
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    லர்ஜி... சமீபமாக உடல்நலம் குறித்த உரையாடலில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம்! 'எனக்குக் கத்திரிக்காய் அலர்ஜி... கருவாடு அலர்ஜி... கடலை அலர்ஜி...’ என ஆரம்பித்து, மாடிக் காற்று அலர்ஜி, பருவ மழை அலர்ஜி என ஒவ்வாமைக்கான காரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 'குழந்தைக்கு பால் அலர்ஜியாம். அதனால் நான் இப்போ தாய்ப்பால் கொடுக்கிறதே இல்லை..’ என்பது இந்தப் பட்டியலில் பதறவைக்கும் பயங்கரம். உலக அளவில் இந்த அலர்ஜி பிரச்னை குழந்தைகளை அதிகம் படுத்துவதாக, குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய தேசங்கள் புலம்புகின்றன.



    சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமைக் கசக்கல் எனத் தொடங்கி, சில நேரங்களில் தடாலடியாக உதடு, முகம் வீங்குவது, சிறுநீர் தடைபடுவது, மூச்சிரைப்பு... என நபருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவர் சாப்பிட்ட, முகர்ந்த பொருளைப் பொறுத்தும் அவதாரம் எடுக்கும் இந்த அலர்ஜி, சில நேரங்களில் Anaphylactic shock எனும் தடாலடி மரணத்தைக்கூட தரும் அபாயம் உடையது. இந்த ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்சிமா போன்ற பல நோய்களை வரவழைக்கும் வாய்ப்பும் உண்டு. ஒவ்வாமையால் வரும் தோல் நோயான ATOPIC DERMATITIS, வெளிநாட்டில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோய்க்கூட்டம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
    துடைப்பத்தை வைத்துப் பெருக்கி, தூசி தட்டிய காலத்தில் இந்த அலர்ஜி பிரச்னை அவ்வளவாக இல்லை. 'குனியாமல் நிமிராமல் வீட்டுக் குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்யலாம்’ என மோட்டார் துடைப்பத்தை வாங்கிய பின், 'எங்க மிஸ் சொன்னாங்க’ என, குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை கைகளை சானிடைசர் வைத்துக் கழுவ ஆரம்பித்த பின், சாணம் கரைத்து முற்றம் கழுவித் துடைத்ததை மறந்து, தொலைக்காட்சி சேனல் விளம்பரங்கள் பரிந்துரைத்த கலர் கலர் ரசாயனக் கலவைகளால் தரையை மெழுகத் தொடங்கிய பின், 'நாங்க உலகத் தரக்கட்டுப்பாடுகளில் ஒன்றுவிடாமல் பின்பற்றுகிறோமாக்கும்’ என உதார்விட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களால் சந்தையை நிரப்பிய பின்... 'அலர்ஜி’ அதீதப் பயம் காட்டுகிறது. ஏன்?
    'சுத்தம் சோறு போடும்’ என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு 'அதிதீவிர சுத்தம் சொறி, சிரங்கை உண்டாக்கும்’ என்பதும் உண்மையோ என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறது மேலை நாட்டு அறிவியல். செயல்திறன் முடக்கப்பட்ட கிருமிகளை தடுப்பூசிகளாக உடலுக்குள் செலுத்தி, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை எப்படி உருவாக்குகிறார்களோ, அதேபோல நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகளில் சேட்டைக்காரருக்கு எதிராக மட்டும் வேலி கட்டும் வேலையை, நம் உடல் தானாகவே செய்துவிடும். ஆனால், அது புரியாமல் நுண்ணுயிரிகளின் வாசம் படாமல், 'இன்குபேட்டர் கவனிப்பில்’ குழந்தைகளை வளர்க்கும்போது, அவர்களது நோய் எதிர்ப்பாற்றல், யார் எதிரி எனத் தெரியாமல் கன்னாபின்னாவென வாள் சுழற்றத் தொடங்குவதே அலர்ஜி பெருக்கத்துக்கான அடிப்படைக் காரணம். அதனால்தான், அமோனியாவைப் பார்த்தால் மூச்சை இறுக்கி அதனை உடம்புக்குள் நுழையாது தடுக்கவேண்டிய நோய் எதிர்ப்பாற்றல், ஆற்று மீனுக்கும், கடலை உருண்டைக்கும், காற்று, தூசிக்கும்கூட மூச்சை இறுக்கத் தொடங்குகிறது.


    KOTHAISURESH

  9. #49
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    'அது சரி... 'அதிசுத்தமாக’ இல்லாதவர்களுக்கும் அலர்ஜி வருகிறதே’ என்று கேட்கிறீர்களா? சரிவிகித உணவு சரியாகக் கிடைக்காதவருக்கும், சாப்பிடாதவருக்கும் அலர்ஜி அட்டூழியம் அதிகம். அதற்கு மிக முக்கியமான காரணம், 'எங்கள் நாட்டுக் குப்பைகள், உங்கள் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் கொட்டப்படும்’ என வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் போடும் வணிக ஒப்பந்தங்களும் ஒரு காரணம். சூழல் சிதைவைத் தரும் கண்ணாடி கம்பெனி, கார் கம்பெனி, கலர் கலரான சாயப்பூச்சைப் பயன்படுத்தும் உள்ளாடை தயாரிப்பு கம்பெனி, துருப்பிடிக்காமல் இருக்க இயந்திரங்களுக்குப் பூச்சு போடும் கம்பெனி, அணுவைப் பிளக்கும் கம்பெனி, அணுவை அளக்கும் கம்பெனி... என அத்தனை கம்பெனிகளையும், 'வேலைவாய்ப்பு வருது; அந்நிய செலாவணி வருது; அழகழகான கட்டடம் வருது’ என்று சொல்லி இங்கே செயல்பட அனுமதிப்பதும் பிரதான காரணம். விவசாய நிலங்களைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து, 'இங்கே வரி கட்டாமல் நீங்க ஆட்டம் போடுங்க. காலத்துக்கும் உங்களுக்குக் கூலிக்கு வேலை பார்க்க அழுக்கு வேட்டிப் பாமரனில் இருந்து, ஆடி கார் அறிவாளி வரை நாங்கள் தருகிறோம்’ என்று சொல்லி சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம். அவர்களும் சத்தமே இல்லாமல் நம் தாய் மண்ணில், காற்றில், நீரில் நச்சுக்களைக் கலக்க, அது அலர்ஜியை பல வடிவங்களில் பரிசளிக்கிறது.
    ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லியையும் அள்ளித் தெளித்ததில் உணவு, காய்-கனி கூட்டம் அத்தனையிலும் நச்சுத்துணுக்குகள். போதாக்குறைக்கு வாசம் தர, வேஷம் கட்ட, வணிகப் போட்டியில் பிற சின்ன வணிகர்களை நசுக்க என, ரசாயனம் கலந்த நச்சு உணவுகளை வீதிவீதியாக விற்கும் பன்னாட்டுத் துரித உணவகங்கள் வேறு. விளைவு..? அத்தனை காய்-கனிகளிலும் அலர்ஜி அளிக்கும் சாத்தான்கள்.
    சூழல் அழுத்தத்தில் கடைசிக் குரங்கில் இருந்து முதல் மனிதன் வருவதற்கு, 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆனதாம். இத்தனைக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மரபணுக்களே. ஆனால், இன்று தவளையின் மரபணுவை தக்காளியிலும், விஷம் கக்கும் நுண்ணுயிரியின் மரபணுவை கத்திரியின் மரபணுவிலும் சில ஆண்டு ஆய்விலேயே ஒட்டி வெட்டி, 'புது ஜந்து’ படைக்கிறார்கள் கலியுக பிரம்மாக்கள். 'லேசாத்தான்யா அரிக்கும்... வேற ஒண்ணும் செய்யாது’ என எதிர்ப்பு எச்சரிக்கைகளையும் மீறி, 'ஓர் உலகம்... ஒரு கம்பெனி... ஒரே விதை’ என்ற கனவுடன் உழைக்கிறார்கள். வருங்காலத்தில் மரபணு பயிர்கள் என்னவிதமான அலர்ஜியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து (இருந்தால்..?) கவனிக்க வேண்டும்.


    KOTHAISURESH

  10. #50
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: எளிய இயற்கை வைத்தியம் - Simple Natural Remedies

    இப்போதைக்கு அலர்ஜியின் பிடிகளில் இருந்து விலகி இருக்க ஒரே வழி, கொடூரத் தொழில்நுட்பத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகி, இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் முடிந்த வரை பசியாற்றிக் கொள்வதுதான். எந்தக் காரணம்கொண்டும், லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு, 'டி.வி-யில இதைக் குடினு சொல்றவுக வெள்ளையா இருக்காங்க. சூட், கோட்லாம் போட்டிருக்காங்க. அவுக சொன்னா, சரியாத்தான் இருக்கும்’ என, பழக்கம் இல்லாத புதிய கலவை உணவை உள்ளே அனுப்பாதீர்கள். ரசாயனம் செறிந்த துரித உணவுகளும், கெமிக்கல் பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் 'லைன் வீடு’ அமைத்து சந்தோஷமாகக் குடியிருக்கும் நுண்ணுயிர் கூட்டத்துக்குக் குண்டு வைக்கும். அதுவரை உடம்பின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதில், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை முகத்தின் எலும்புப் பதிவுகளில் கேம்ப் அடிக்கும்போது சைனசைடிஸ்; மூச்சுக்குழல் பாதையில் மணல் குன்றமைத்து குத்தவைக்கும்போது ஆஸ்துமா, தோலுக்கு அடியில் 'கொடி நடை’ நடத்தும்போது எக்சிமாவோ, அடோபிக் டெர்மடைடிஸோ?
    காரத்துக்கு மிளகு இருந்த வரை, இனிப்புக்குப் பனை வெல்லமும் தேனும் இருந்த வரை, புளிப்புக்கு என நம் பாரம்பரியப் பழம்புளியான குடம் புளி இருந்த வரை அலர்ஜி இருந்ததாக மருத்துவ இலக்கியச் சான்றுகள் இல்லை. 'பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என மிளகைப் பாடியது அதன் நச்சு அகற்றும் உச்சவீரியத்தால்தான். எந்த அலர்ஜியாக இருந்தாலும் நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். அலர்ஜியை தடாலடியாக ஒருசில நிமிடங்களில் நசுக்கும் ஸ்டீராய்டுகள்போல் இல்லாமல், மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. ஆனால், அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி அலர்ஜி சைனசைடிஸை அறுத்தெரிகிறது என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன அறிவியல். அருகம்புல், நச்சு நீக்கி அலர்ஜியைப் போக்கும் எளிய புல். இது, கரப்பான் எனும் எக்சிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் 'அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமான மருந்து. ATOPIC DERMATITIS எனும் அலர்ஜியில் சருமத்தின் நிறம் மிகக் கறுத்து அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து.
    அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்போ, வஞ்சிர மீன் குழம்போ ஆகாது. நார்ச்சத்தைக் நடுவில் குவித்து, விதவிதமான நிறமிச் சத்தை தோலில் சேகரித்து, சதைப்பற்றின் ஊடே சாமர்த்தியமாக பல உயிர்ச்சத்தை ஒளித்துவைத்திருக்கும் பழங்கள் அலர்ஜியில் கறுத்தத் தோலை மீட்கும் மீட்பர்கள். அதே சமயம் புளிப்பான ஆரஞ்சு, திராட்சையை தும்மல் உள்ளோர், கரப்பான் உள்ளோர் தவிர்க்கவும். நம் ஆயா அறிந்திராத சோயா, நம் பாட்டன் பார்த்திராத காளான் சில குழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடியன. அலர்ஜி உள்ளோர் இவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நலம். 'மிஸ் வேர்ல்டு’கள் மாறும்போதெல்லாம் குளிக்கும் சோப்பை மாற்றுவது உங்கள் சருமத்தின் இயல்பையும் மாற்றிவிடும்.
    இன்றைக்கு சோயா, நிலக்கடலை, மீன், பால்கூட அலர்ஜியாகப் பார்க்கப்படுவதுபோல, நாளை நாம் அருந்தும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும்கூட அலர்ஜியாகக்கூடும். அப்போது தண்ணீர் தொட்டியை கையில் வைத்துக்கொண்டும், ஆக்சிஜன் புட்டியை முதுகில் கட்டிக்கொண்டும் திரியவேண்டி இருக்கும். அந்தத் தருணங்களில் கணக்குப் பார்த்து மூச்சுவிட முடியாது; காதல் களிப்பும் செய்ய முடியாது. 'இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிர்களுக்குமானது. அவை அனைத்தையும் போற்றி மகிழவே மனிதனுக்கு ஆறாம் அறிவை இயற்கை வழங்கி இருக்கிறது’ என்ற சிந்தனையே ஒவ்வாமையை ஓரங்கட்டுவதற்கான முதல் செயல்!


    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter