Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Feb 2018! | All Issues

User Tag List

Like Tree73Likes

நீர் மருத்துவம் - Water Therapy


Discussions on "நீர் மருத்துவம் - Water Therapy" in "Nature Cure" forum.


 1. #31
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,585

  Re: நீர் மருத்துவம் - Water Therapy

  எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

  எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீரின் தன்மைக்கும் அளிக்க வேண்டும். நீரை கொதி நிலைக்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.

  நீரின்றி அமையாதது உலகு மட்டுமல்ல, உடலும்தான். தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரக இயல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தரும் ஆலோசனைகள்:

  நமது உடல் 70 சதவீதம் நீராலானது.

  உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும்.

  உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக் கும். ரத்த ஓட்டம் சரி யாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
  குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

  சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகி அறுவைசிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும்கூட, மீண்டும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படியென்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும்.
  அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். இது உடல்நலனை பாதிக்கும்.

  கால் வீக்கம், இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகச் செயல் இழப்பு பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகமாக நீர் அருந்தக் கூடாது.

  இப்படிப்பட்டவர்களின் உடலில் அதீதமான நீர் சேர்வது ஆபத்தில் முடியும்.

  மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் (Thirst Center) உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. 3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது.

  அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர் களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். ரத்த அழுத்தம் குறையும்.
  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails நீர் மருத்துவம் - Water Therapy-waterintake_2348810f.jpg  
  Last edited by chan; 1st Apr 2015 at 04:48 PM.

 2. #32
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,585

  Re: நீர் மருத்துவம் - Water Therapy

  தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?
  மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.


  வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.

  மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.

  'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர்,


  இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது'' என்றார் டாக்டர் எழிலன்.

  நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூர்த்தியிடம் கேட்டோம்... 'வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.

  வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

  கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை

  இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.  மினரல் வாட்டர் என்றால் என்ன?

  காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் 'சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு தான். மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்' என்றார்.

  'தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல' என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.

  மேலும் அவர் கூறுகையில் 'தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

  நீரைக் குடிக்கும் முறை

  மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.

  நீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக இருந்துவந்ததுதான். அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.

  தண்ணீர் சில மருத்துவப் பலன்கள்

  மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

  சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.

  பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.

  ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.

  நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும்.

  கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.

  வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

  காய்ச்சிய தண்ணீர்  தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார் டாக்டர் எழிலன்


  Last edited by chan; 9th Apr 2015 at 05:00 PM.
  Dangu likes this.

 3. #33
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,585

  Re: நீர் மருத்துவம் - Water Therapy

  நீரின்றி அமையாது உடல்...
  ராஜ்குமார்
  பொது மருத்துவர்


  உணவு, உடை, உறைவிடம் இல்லாவிட்டாலும் உயிர் வாழ முடியும். ஆனால், நீர் இல்லாமல் ஒரு சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஒருநாள் தண்ணீர் குடிக்காவிட்டால்கூட, உடல் சோர்ந்துபோகும். ஏனெனில், நமது உடல் 60 சதவிகிதம் திரவத்தால் ஆனது. உடல் முழுவதும் இருக்கும், உட்புற மற்றும் வெளிப்புற செல்கள் திரவத்தால் சூழப்பட்டிருக்கும். இந்தத் திரவம், வற்றாமல் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க தண்ணீர் அவசியம்.

  செல்களின் கவசம்:
  தண்ணீரின் அளவு உடலில் குறைந்தால், செல்களில் உள்ள ஈரப்பதத்தை உடல் எடுத்துக்கொள்ளும். பிறகு, நீர் பற்றாக்குறையால் சரும வறட்சி, உள்ளுறுப்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து, ஊட்டச்சத்துக்களை உடலில் உள்ள செல்களுக்குத் தந்து, அதன் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தத் தண்ணீர் உதவுகிறது.

  சிறந்த நச்சு நீக்கி:வியர்வை, மலம், சிறுநீர் வழியாக உடல் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்குத் தண்ணீர் மிகவும் அவசியம். சாப்பிட்ட உணவைச் செரித்து, ஊட்டச்சத்துக்களைக் கிரகித்து, கழிவுகளை வெளியேற்றும் பணியை கல்லீரல், சிறுநீரகம் செய்கின்றன. உணவை நகர்த்திச் செல்லவும், உணவை செரிக்கவும் வைக்கும் செயல்முறைக்குத் தண்ணீர் அவசியம். போதுமான அளவு நீர் அருந்தாவிடில், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீர்க்கடுப்பு, அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்னைகள் உண்டாகலாம்.

  சமநிலைக்கு: மாறுகின்ற வானிலைக்கு ஏற்ப, உடலின் வெப்பம் மாறுபடும். உடலின் அதிகப்படியான வெப்பத்தை வியர்வை மூலம் உடல் தணித்து, குளிர்ச்சித் தன்மையை தக்க வைத்துக்கொள்கிறது. அதிகப்படியான வியர்வை வெளியேறும்போது நீர் வறட்சி (Dehydration) ஏற்படும். இதனால், உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படும். எனவே, உடலின் தண்ணீரைக் கவனிப்பது அவசியம்.

  சரும பொலிவுக்கு:சருமம் சுவாசிக்கத் தண்ணீர் அவசியம். ஏ.சி அறையிலேயே இருப்பவர்களுக்குத் தாகம் எடுக்காததால், சிலர் நீர் அருந்தாமலே இருப்பார்கள். இதனால், சருமம் களையிழந்து, உதடு வறண்டு போகும். இது, உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்பதற்கான அறிகுறி.

  சிறுநீரகத்தின் காவலன்:உடலில் போதுமான தண்ணீர் இல்லாவிடில், சிறுநீரகங்கள் பெரிதும் பாதிக்கப்படும். உடலின் நச்சுக்களை நீக்க வழியில்லாதபோது, சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். ரத்தத்தைச் சீராக்கி, அனைத்து உறுப்புகளுக்கும் செலுத்தத் தண்ணீர் அவசியம்.

  சுகாதாரமான தண்ணீர்:
  உணவகங்கள், வெளியிடங்களில் வாங்கிப் பருகும் நீர் சுத்தமானதாக இல்லாமல் போனால், கிருமிகள் வழியாக டைபாய்டு, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.


  வாட்டர் பாட்டில் ப்ளீஸ்

  கையில் எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளலாம். இது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் இருப்பது நலம். சிறுநீர் மஞ்சளாகவோ, அடர் மஞ்சளாகவோ இருந்தால், உடலில் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரோடு அந்த நாளைத் தொடங்குங்கள். தண்ணீரை ஒரே நேரத்தில் மடமடவென்று குடிக்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் குடிப்பதே சரி.

  எது நல்ல தண்ணீர்?
  பாட்டில் தண்ணீர் மற்றும் கேன் தண்ணீர் ஆகியவற்றில் சத்துக்கள் நீக்கப்பட்டு, செயற்கைச் சத்துக்கள் கலந்து விற்கப்படுவதால், எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என உறுதியாகச் சொல்ல முடியாது. நம் நிலத்தடி நீரே குடிக்க உகந்தது. நிலத்தடி நீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டி பிறகு, குடிப்பது பாதுகாப்பானது.

  தண்ணீர் தேவை?
  ஒரு நாளைக்கு 8-10 டம்ளர்கள் நீர் அவசியம். குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வோர், உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்பவர்கள், வெயிலில் அலைபவர்கள் இன்னும் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். தண்ணீராக மட்டுமின்றி, நீர் நிறைந்த காய்கறி, பழங்களின் மூலமாகவும் நீரின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

  Last edited by chan; 4th May 2015 at 11:23 AM.
  Dangu likes this.

 4. #34
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  Re: நீர் மருத்துவம் - Water Therapy

  Sincerely appreciate your efforts in sharing with us such useful information.

  chan likes this.

 5. #35
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,585

  Re: நீர் மருத்துவம் - Water Therapy

  நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கக்கூடாது: - ஏன் தெரியுமா

  இஸ்லாம் மதமும், இந்து மதமும் நின்று கொண்டே தண்ணீர் குடிக்க கூடாது என்று வலியுறுத்துகிறது. ஆனால் இஸ்லாமியர்கள் இந்த முறையை ஒரு மதச்சம்பிரதயமாக தவறாமல் பின்பற்றி வருகிறார்கள்.

  �� நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

  �� சிறுநீரக பாதிப்பு!

  தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

  �� ஆர்த்ரிடிஸ்!

  சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

  �� நரம்புகள் டென்சன் ஆகும்!

  பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

  �� குறிப்பு!

  உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்

  ✔️ காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.

  ✔️ இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.

  ✔️ முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்

  Last edited by chan; 20th Jun 2015 at 07:53 PM.
  Dangu likes this.

 6. #36
  vasanthi is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  417

  Re: நீர் மருத்துவம் - Water Therapy

  useful info

  vasanthi mct


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter