Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes

Tulsi Queen of Herbs - துளசி : மூலிகைகளின் அரசி


Discussions on "Tulsi Queen of Herbs - துளசி : மூலிகைகளின் அரசி" in "Nature Cure" forum.


 1. #11
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Tulsi Queen of Herbs - துளசி : மூலிகைகளின் அரசி

  சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்கும்

  மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
  வளிமுதலா வெண்ணிய மூன்று.
  வாத, பித்த, கபம் மாறுபாடே நோய் உண்டாக காரணம் என்று திருவள்ளுவர் நமக்கு விளக்கியுள்ளார். செயல்கள், உணவு இவற்றின் அடிப்படையில் (வாதம், பித்தம், கபம்) இவைமூன்றும் நிலை பிறழ்கின்றன. சோம்பலால் வாதமும், மிதமிஞ்சிய வேலையால் பித்தமும், ஓழுங்குமுறை நழுவிய செயல்களால் கபமும் கூடுகிறது.

  இயற்கையில் விளையும் உணவுப்பொருட்களில் வாதபித்தகப தன்மைகள் இயல்பாகவே அமைந்துள்ளன. சில உணவுகளில் இவை அதிகளவில் இருப்பதால் அந்த வகை உணவுகளை உண்ணும்போது அன்றே அவற்றின் விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. உதாரணமாக உருளை, வாழை, இறைச்சி இவற்றால் வாதம் அதிகமாகிறது. கத்திரி, பப்பாளி, கோழி இறைச்சி ஆகியவற்றால் பித்தம் அதிகமாகிறது. வெங்காயம், தக்காளி, முட்டை ஆகியவற்றால் கபம் மிகுதியாகுகிறது.
  இந்த மூன்றும் தன்நிலையில் இருந்து பிறழ்வதால் நோய் உண்டாகிறது. இந்த மூன்றையும் சரியான அளவில் வைக்க சில மூலிகைகள் உதவுகின்றது. வாதத்தை சீர்செய்ய வில்வமும், பித்தத்தை சரிசெய்ய வேம்பும், கபத்தை சீராக்க துளசியும் பயன்படுகின்றன. இவற்றில் துளசி எவ்வாறு கப நோய்களுக்கு மருந்தாகிறது என்று பார்ப்போம்.

  ஐயம் வயிறுளைச்சல் அத்திசுரம் தாகமும்போம்
  பையசர மாந்தம் பறங்குங்கான் மெய்யாக
  வாயின் அரோசகம்போம் வன்காரஞ்சூடுள்ள
  தூயதுளசிதனைச் சொல்.

  ஐயம் என்றால் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று, உளைச்சல், சுரம், நீர் வேட்கை, மாந்தம், நாவின் சுவையின்மை இவை அனைத்தையும் துளசி போக்கிவிடும் என்று இப்பாடல் விளக்குகிறது.

  துளகி குணமாக்கும் நோய்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் துளசி, கபம் சம்பந்தமான நோய்களை குணமாக்குவதில் பெரும்பங்கு துளசிக்கு உண்டு.
  துளசியின் இத்தனை மருத்துவகுணங்களும் கபம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் என்று தற்போதைய ஆய்வாளர்கள் ஆய்வில் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூக்கில் நீர் வழிதல், தலைவலி, மூக்கடைப்பு, மூச்சுக்குழல் அழர்ஜி, நெஞ்சுச்சளி, மூச்சிவிட சிரமப்படுதல் போன்ற பல சுவாசம் சம்பந்தப்பட்ட கப நோய்களை துளசி குணமாக்கும் சக்தி கொண்டது.

  பத்து கிராம் அளவு துளசி இலையை எடுத்து கசக்கி சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் சளி தொல்லை எளிதில் தீர்ந்துவிடும்.

  ஐந்து கிராம் துளசி இலையை இரண்டு மிளகு சேர்த்து அரைத்து காலைமாலை வேளைகளில் வெந்நீரில் குடித்து வந்தால் காய்ச்சலுடன் கூறிய சளி குறையும்.

  சிறிது துளசி இலைகளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து அந்த சாறை சிறிது தேன் சேர்த்து உட்கொண்டால் ஆஸ்துமா, நெஞ்சுசளி, சளியுடன்கூடிய சுரம் குணமாகும்.

  தொண்டை கரகரப்பு, அடைப்பு, போன்ற நேரங்களில் சிறிது துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த பின் அந்த நீரை தொண்டையில் படும்படி கொப்பளித்தால் உடனே குணமாகும்


  Sponsored Links

 2. #12
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Tulsi Queen of Herbs - துளசி : மூலிகைகளின் அரசி

  துளசி செடியை செழிப்பாக வளர்க்க

  * முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே துளசி செடி நன்கு செழிப்புடன் வளரும். துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில்படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

  * துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருவேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.

  * துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.
  * துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு இரசாயன உரமும் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.

  * துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.

  * துளசி செடிக்கு எந்தவொரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும்.

  shrimathivenkat likes this.

 3. #13
  bhuv is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Dec 2012
  Location
  villupuram
  Posts
  331

  re: Tulsi Queen of Herbs - துளசி : மூலிகைகளின் அரசி

  very useful info

  chan likes this.

 4. #14
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: Tulsi Queen of Herbs - துளசி : மூலிகைகளின் அரசி

  நல்ல பகிர்வு.

  chan likes this.

 5. #15
  subhasankar's Avatar
  subhasankar is offline Newbie
  Gender
  Male
  Join Date
  Jun 2012
  Location
  trichy
  Posts
  81

  Re: Tulsi Queen of Herbs - துளசி : மூலிகைகளின் அரசி

  thanks for your valuable and useful information

  chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter