Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை


Discussions on "Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை" in "Nature Cure" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை

  கற்ப மூலிகை-வேப்பிலை


  உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

  நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.

  இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

  இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

  வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

  ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

  ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

  2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது.

  1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory)

  2. வீக்க உருக்கி (anti inflammatory)

  3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic)

  4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer)

  5. மலேரியா போக்கி (Anti malarial)

  6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal)

  7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial)

  8. வைரஸ் அகற்றி (Anti viral)

  9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant)

  10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous)


  வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

  வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

  நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

  வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

  வேப்பிலையை பயன்படுத்தும் முறை

  * புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

  * வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

  * வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

  வேப்பிலையின் பொதுவான பயன்கள்

  * வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

  * சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

  * சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

  * வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

  * வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

  * வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

  வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்

  விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.
  அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

  இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

  வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்

  சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

  ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

  வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

  மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

  பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

  வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

  புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்.  Similar Threads:

  Sponsored Links

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை

  நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வேம்பு

  ஆலமரம், அரசமரம் போல பல ஆண்டுகள் வளரக்கூடியது வேப்பமரம். இது சாதாரணமாக 30 அடி முதல் 40 அடி உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். பொதுவாக வேப்ப மரத்தை பார்ப்பதாலும், அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும் மன அமைதி கிடைக்கும்.வேம்பு என்பதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்பு பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக விளங்குகிறது. வேம்பின் பூர்வீகம் இந்தியாவும் பாகிஸ்தானும் தான். பின்னர் உலகம் முழுவதும் பரவியது. வேம்பிற்கான காப்புரிமையை இந்தியா போராடி பெற்றது.

  நம் அனைவருக்குள்ளும் எப்போதும் கேன்சர் செல்கள் இருக்கின்றன. அது ஒரு அளவு தாண்டும்போது நோயாக அறியப்படுகிறது. வேம்புக்கு கேன்சர் செல்களையே அழிக்கும் சக்தி இருக்கிறது. தினமும் அதிகாலையில் ஒரு சிறிய அளவு வேப்பிலையும் அதே அளவு மஞ்சள் உருண்டையும் வெதுவெதுப்பான நீருடன் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இது நாள் முழுக்க அளவான உஷ்ணத்தையும் துடிப்பையும் உடலில் தக்க வைத்திருக்கும். இது நம் உடலைச் சுத்தம் செய்கிறது. உணவுப்பாதை முழுக்க சிறிய அளவிலான தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது.

  வேம்பு அதிகமாக எடுத்துக்கொள்வதால் எந்தக் கெடுதலும் கிடையாது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தேவையான உஷ்ணத்தையும் வேம்பு கொடுக்கும். எந்த வகையான அலர்ஜி, சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் இது அருமருந்து. ஏராளமான ஆராய்ச்சிகள் மூலம் வேம்பு ஒரு அதிசயமான மரம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் வேப்பிலையையும் மஞ்சளையும் தெய்வீகமாகக் கருதியதற்கும் அம்மனின் வெளிப்பாடாக இதைப் போற்றியதற்கும் ஆங்காங்கே வேப்ப மரத்தை கோயிலாக கும்பிட்டதற்கும் காரணம் இதன் அற்புதமான மருத்துவக் காரணங்கள்தான்.

  பயன்கள்
  * வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும். பசி உண்டாகும்.

  * வேப்பம் பூவை ஊற வைத்து அதன் சாறு குடித்தால் பித்தம் தீரும்.

  * வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்.

  * வேப்பம்பழ ஜூஸ் குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

  * வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடும்.

  * வேப்பங்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்து புரையோடிய புண்கள் மீது பூசி வர குணமாகும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

  * 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வர தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

  * வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்பம் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

  * வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், பல்பம், சாக்குகட்டிகள் சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.

  * வேப்பம் பூவை வெயிலில் காய வைத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும்.

  * வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும்.

  * வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

  * பசும்பால் 200 மி.லி. தேங்காய்ப்பால் 200 மி.லி. வேப்பம்பூ அரைத்த விழுது 50 கிராம், பனை வெல்லம் 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து அவற்றை அடுப்பில் வைத்து லேகியமாக கிளறி தினமும் சிறிதளவு சாப்பிட நல்ல பலன் தெரியும்.

  * கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும்.

  * வேப்ப மரக்காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது.

  * வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.

  * அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்னை மற்றும் மலச்சிக்கலால் அவதிபடுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  * வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்னை, புண், ஈறுகளில் ரத்தம் போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  * மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும்.

  பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது.

  * நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

  * கொஞ்சம் வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்தோடு வந்துவிடும்.

  * பெரியவர்கள் அதிகாலையில் வேப்பங் கொழுந்தை சிறிது பறித்து சாப்பிட்டு வர வயிறு சம்மந்தமான பிரச்னைகள் தீரும்.

  * வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கஷாயத்தை தினம் இருவேளை கொடுத்து வந்தால் நாள்பட்ட பேதி, சீதபேதி குணமாகும்.


  Attached Thumbnails Attached Thumbnails Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை-evening-tamil-news-paper_83301508427.jpg  

 3. #3
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை

  வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன.

  அறுசுவைகளில் ஒரு சுவை கசப்பு. ஆனாலும், நமது நாக்கு கசப்பினை எப்போதும் தவிர்க்கவே நினைக்கிறது.

  கசப்பே உருவான வேப்பிலைகளில் உள்ள மகத்துவங்களோ, அன்றாடம் அதைச் சாப்பிட வேண்டிய தேவையைக் கூறுகிறது. “வேப்பிலையைத் தின்பதா…ஐயோ ஆளை விடுங்கள்!” என்று ஓடுபவர்கள் கூட, சத்குரு கூறும் இந்த தகவல்களை படித்தால், உண்மையை விளங்கிக்கொள்வர்! நம் ஒவ்வொருவர் வயிற்றிலும் எப்போதும் வயிறு தொடர்பான தொற்று நோய் இருந்துகொண்டே இருக்கும்.

  இது நோயாக வெளிப்படாவிட்டாலும் உடலில் சக்தியை, தெம்பை குறைத்துக்கொண்டே வரும். தொற்றுநோய் வயிற்றில் இருக்கிறதென்றால், அதற்குக் காரணமான பாக்டீரியா கிருமிகளும் வயிற்றில் இருக்கும். இந்த கிருமிகளே உடலில் உள்ள சக்தியை இழுத்துக்கொண்டுவிடுகின்றன. விடியற்காலையில் சாப்பிடப்படும் வேப்பங்கொழுந்து உருண்டையும், மஞ்சள் உருண்டையும் இந்த கிருமிகளை அழித்துவிடுகின்றன.

  காலை எழுந்தவுடன் வேம்பு! நமது ஆசிரத்தில் ஒவ்வொரு நாளும் காலை ஐந்தரை மணிக்கு யோகாசனப் பயிற்சியுடன் அன்பர்கள் தங்கள் நாளைத் தொடங்குகின்றனர். யோகப் பயிற்சிக்கு முன்பாக ஒவ்வொருவரும் ஒரு சிறிய உருண்டை அரைத்த வேப்பங்கொழுந்தையும், ஒரு சிறிய உருண்டை மஞ்சளையும் சாப்பிடுகின்றனர். அதன் பிறகு யோகப் பயிற்சியை இரண்டு மணி நேரம் செய்கின்றனர்.

  இந்த உருண்டைகளால் என்ன பயன்? இவை உணவுக்குழாய் முதல் தொடங்கி வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என அனைத்தையும் சுத்தம் செய்து, உடலின் வெப்பத்தையும், சக்தியையும் சீராகவைக்கிறது. மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும்.

  உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

  நம் ஒவ்வொருவர் உடலிலும் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய திசுக்கள் இருக்கின்றன. அவை சமூகத்தில் உள்ள குற்றவாளிகளைப் போல் உடலில் ஆங்காங்கே அமைதியாக இருக்கின்றன. அவை ஒன்றிரண்டாக இருக்கும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. அவை எண்ணிக்கையில் அதிகரித்து கூட்டமாகச் சேரும்போதுதான் சமூகத்தில் நடக்கும் கலவரம் போல் புற்றுநோயாக உடலில் வெளிப்படுகின்றன.

  நம் உடலில் சாதாரணமாக உள்ள திசு, உயிர் வாழ ஏற்றுக்கொள்ளும் உணவைப் போல் புற்றுநோய் திசுக்கள் நூற்றி ஐம்பது முறை அதிகமாக உணவை ஈர்த்துக்கொள்ளும். எத்தனைதான் மருத்துவம் அளித்தாலும் அவை மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்துகொண்டே இருக்கும்.

  அப்போது இவற்றை அழிக்க என்ன வழி? உண்ணாவிரதம் இருப்பதுதான் நல்ல வழி! யோகாசன முறைப்படி வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்ல பலனளிக்கும். உணவு கிடைக்காதபோது சாதாரண திசுக்கள் கொஞ்சம்தான் களைப்படையும். ஆனால் நெடுநேரம் உணவு கிடைக்காதபோது, அதிக அளவில் உணவு தேவைப்படும் புற்றுநோய் திசுக்கள் மெதுவாக மடிந்துபோகும்.

  இந்த கருத்தைத்தான் இன்று ஜெர்மானியர்கள் கூறுகின்றனர். நம் முன்னோர்கள் யோக சாஸ்திரப்படி கூறியபோது புரியாத விஷயம், இன்று ஜெர்மானியர்கள் கூறும்போது நன்கு புலப்படுகிறது. இந்த புற்றுநோய் திசுக்கள் மிகச் சிறிய அளவில் உடலில் இருக்கும்போது அவற்றை அழிக்க விடியற்காலையில் உண்ணப்படும் வேப்ப, மஞ்சள் உருண்டைகள் மிகவும் உதவியாக உள்ளன.

  இவை இந்த திசுக்களை வளரவிடாமல் தடுத்து உடலை நல்ல நிலையில் வைக்கின்றன. ஆனால் புற்றுநோய் ஏற்பட்ட பின் சாப்பிடுவதில் பயன் இல்லை. மஞ்சளையும், வேப்ப இலைகளையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது. தனித்தனியாக அரைத்து உருண்டைகளாக விழுங்கி நீர் அருந்த வேண்டும். அதன் பின் ஒரு மணி நேரத்துக்கு எதையும் சாப்பிடக் கூடாது. வேப்பிலையின் பலன்கள் சிலருக்கு உடலில் பலவித அலர்ஜிகள் ஏற்படும். அவை தோல் வியாதி, புழுதிக்கு அலர்ஜி என பல வடிவங்களில் உள்ளன. இதை அனைத்திற்கும் எளிய நிவாரணம், வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் ஊறி குளிக்க வேண்டும்.

  அதோடு காலையில் வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து விழுங்க வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் இல்லாமல் போய்விடும். இதை ஒவ்வொருவரும் அன்றாடம் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். ஏன் வேப்பங்கொழுந்து? கொழுந்து இலைகளில்தான் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதற்கும் மீறி கசந்தால் தேனில் நனைத்து நாவில் படாமல் நேரடியாக தொண்டையில் போட்டு விழுங்கிவிடுங்கள். இதன் நன்மை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு கிடைக்கும் அதிக சக்தி, புத்துணர்ச்சி மூலம் உங்களுக்குப் புரிந்துவிடும்!

  வேப்ப இலையின் மருத்துவ குணங்களைக் கண்டு மேல்நாடுகள் வியக்கின்றன. உலகில் எந்த ஒரு தாவரத்துக்கும் இத்தனை மருத்துவ குணங்கள் இல்லை. வேப்ப இலைகளின் மருத்துவக் குணம் இப்போது உங்களுக்கும் புரிந்துவிட்டது இல்லையா? இனி தயக்கமென்ன? தினமும் காலையில் வேப்பங்கொழுந்தினை அரைத்துச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ்வோம்!  Attached Thumbnails Attached Thumbnails Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை-images.jpg  

 4. #4
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  Re: Health benefits of Neem Leaves - கற்ப மூலிகை-வேப்பிலை

  Sincerely appreciate your efforts in sharing with us such useful information.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter