Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
 • 4 Post By Dangu
 • 1 Post By kkmathy

மரணத்தை வெல்லும் மகா ரகசியம் - நெல்லி


Discussions on "மரணத்தை வெல்லும் மகா ரகசியம் - நெல்லி" in "Nature Cure" forum.


 1. #1
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  மரணத்தை வெல்லும் மகா ரகசியம் - நெல்லி

  மரணத்தை வெல்லும் மகா ரகசியம் - நெல்லி

  இரு வகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும். அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். எனவே நெல்லிக்காயை எந்தவிதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது என்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

  பழத்தில் உள்ள விதைகள் சத்திற்கு நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு.

  நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு அயர்ன் உள்ளதால் முடிச்சாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் கறுப்புக் கலந்த பழுப்பு நிறம்.

  புதிய மற்றும் உலர்ந்த பழங்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற திரிபலா என்னும் மும்மருந்து அடங்கிய கூட்டுப் பொருள் தயாரிப்பில் இதன் பங்கு முதன்மையானது. புதிய பழங்கள் குளிர்ச்சியையும், இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

  உயிர்ச்சத்தான வைட்டமின் சி சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றன. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப் பயனுள்ள பகுதியாகும்.

  இலைகளின் சாறு நாட்பட்ட புண்களுக்குப் பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினைத் தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மை கொண்டவை. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. பழங்கள் அதிகமாக மசி தயாரிக்கவும் தலை கழுவி நீர்மம் தயாரிக்கவும், பட்டைகளுடன் சேர்ந்து சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

  சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

  வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் சி சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. ஸ்கர்வி என்ற தோல் நோய் இச்சத்து குறைவினால் தான் ஏற்படுகிறது. இச்சத்துக் குறைவை இக்கனி ஈடு செய்கிறது. இரும்புச் சத்து மிகுந்து காணப்படுவதால், கேசப் பராமரிப்பில் சிறந்த ஊக்குவியாகவும், சாயமேற்றும் பொருளாகவும் பயன்தருகிறது.

  வற்றலுக்கு நெல்லி முள்ளி என்று பெயர்.

  நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது. மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.

  நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் சி தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.

  கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.

  நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சமஅளவு சூரணமாகச் செய்து சேர்க்க திரிபலா சூரணம் ஆகிறது. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டுச் சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.

  நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.

  கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்ண பைத்தியம், கபநோய், பீனிசம், உன்மத்தம், மலபந்தம் நீங்கும். காயின் புளிப்புச் சுவையால் வாயுவும், துவர்ப்பால் கபமும், இனிப்பால் அழகும் உண்டாகும்.

  நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

  இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.

  நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.

  உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

  உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

  புரதம் - 0.4 கி
  கொழுப்பு - 0.5 கி
  மாச்சத்து - 14 கி
  கல்சியம் - 15 மி.கி
  பொஸ்பரஸ் - 21 மி.கி
  இரும்பு - 1 மி.கி
  நியாசின் - 0,4 மி.கி
  வைட்டமின் பி1` - 28 மி.கி
  வைட்டமின் சி` - 720 மி.கி
  கரிச்சத்து
  சுண்ணாம்பு
  தாதுப் பொருட்கள்
  கலோரிகள் - 60

  ‪கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து கோன் உயர குடி உயரும் என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது.

  நெல்லி வேண்டுவோர்..அதை பயன்படுத்தும் முறை, மருத்துவப்பயன்கள், தயாரிக்கும் முறை-

  தொடர்புகொள்க - வனம் இயற்கை அங்காடி -9841499978

  இயற்கையான முறையில் தயாரான நெல்லியை உண்போம்..முழுப்பலனை அடைவோம்  Sponsored Links
  chan, kkmathy, Aarushi and 1 others like this.

 2. #2
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: மரணத்தை வெல்லும் மகா ரகசியம் - நெல்லி

  Very useful info sir.
  Nelli patri paditthirukiren.
  Ana ithile ivlo visayam irukunnu theriyathu.
  Thanks for sharing sir.

  Dangu likes this.

 3. #3
  Dangu's Avatar
  Dangu is offline Ruler's of Penmai
  Gender
  Male
  Join Date
  Oct 2014
  Location
  CHROMEPET
  Posts
  10,950

  Re: மரணத்தை வெல்லும் மகா ரகசியம் - நெல்லி

  Welcome komathy.


 4. #4
  Mals's Avatar
  Mals is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2013
  Location
  Navi Mumbai
  Posts
  5,286

  Re: மரணத்தை வெல்லும் மகா ரகசியம் - நெல்லி

  Sincerely appreciate your efforts in sharing with us such useful information.


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter