Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By narayani80

natural remedies for breathing problem and cold..


Discussions on "natural remedies for breathing problem and cold.." in "Nature Cure" forum.


  1. #1
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    natural remedies for breathing problem and cold..

    இரவில் ஏற்படும் மூக்கடைப்பிற்கான சில எளிய வைத்தியங்கள்!!!
    மூக்கடைப்பானது நாசிக் குழி வீக்கமடைந்து, சளி அதிகம் சேரும் போது, மூக்கில் அடைப்பு ஏற்படும். இறுதியில் சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் முகத்தில் சளி அதிகம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு இரவு நேரத்திலும், மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் போதும் ஏற்படும்.
    இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும். அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம்.
    பூண்டு :-
    ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
    ஆப்பிள் சீடர் வினிகர் :-
    ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை என சில நாட்கள் பின்பற்றி வர வேண்டும்.
    யூகலிப்டஸ் ஆயில்:-
    கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமெனில் இந்த ஆயிலை தலையணையில் சிறிது தெளித்துக் கொள்வதும் நல்ல நிவாரணத்தைத் தரும்.
    வெதுவெதுப்பான தண்ணீர் :-
    வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியை நன்கு பிழிந்து, முகத்தின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    மூலிகை டீ :-
    சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    மிளகு :-
    சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரக்கூடும். இருப்பினும் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தால், சளி வெளியேறி, மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and spv like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: natural remedies for breathing problem and cold..

    Very useful tips Narayani. thankyou

    Jayanthy





  3. #3
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: natural remedies for breathing problem and cold..

    Sincerely appreciate your efforts in sharing with us such useful information.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter