Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

கற்றாழை


Discussions on "கற்றாழை" in "Nature Cure" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  கற்றாழை

  கற்றாழை
  அமுதா தாமோதரன்
  சித்த மருத்துவர்
  ன்றைய ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டில், பாதித் தொகை மருத்துவ செலவுக்கே தீர்ந்துவிடுகிறது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, நம் உடலினை உறுதி செய்துகொள்வதற்கான எளிய மருத்துவக் குறிப்புகளைக் கையில் எடுப்பதே சிறந்த வழி. அந்த வகையில் மருந்து மற்றும் மெடிக்ளைம் பாலிசியுடன் கூடுதலாக எடுக்க வேண்டியது மூலிகைகளையே. இதற்காக அமேசான் காடுகளுக்குப் பயணிக்கத் தேவை இல்லை. சில நூறுகளை மட்டும் செலவழித்தால் போதும். இதுகூட நம் உடல்நலத்துக்கான முதலீடுதான். வீட்டைச் சுற்றிலும் பால்கனியிலும் வளர்க்க சாத்தியமான எளிதல் கிடைக்கக்கூடிய மூலிகைகள் பற்றிய மினி தொடர் இது.

  பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது.

  பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும். இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்னைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்னை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்னைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும்,
  பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்தியஆய்வுகள்.

  கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும்.

  கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.
  சருமத்துக்கு...
  கற்றாழை இலையின் சதைப்பகுதியில் வைட்டமின் சி மற்றும் இ அதிக அளவில் இருப்பதால், பாதித்த சருமத்தைப் 10 மடங்கு அதிவேகமாகச் சரிசெய்து சருமத்தைக் காக்கும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, சரும சுருக்கங்கள் தவிர்க்கப்படும். கற்றாழையின் இலைகளில் ஆலு-எமோடின் (Aloe-emodin) என்ற ரசாயனம் இருப்பதால் பருக்கள், நாட்பட்ட தழும்புகள் குணமாகி, சருமம் சீராகும். குழந்தை பெற்ற தாய்மார்களின் ‘ஸ்ட்ரெச் மார்க்’ தழும்புகளையும் மறையவைக்கலாம். சருமத்தில் உள்ள கொலஜனை அதிகப்படுத்தி, மூப்படைதலைத் தாமதப்படுத்த முடியும். ஆண்கள் முகச்சவரம் செய்த பிறகு ஏற்படும் எரிச்சலை போக்கவும், கற்றாழையின் சதைப்பகுதி உதவுகிறது.

  சுத்தம் செய்யும் முறை
  கற்றாழை மேல் தோல், முட்களை கத்தியால் நீக்கி, சதைப் பகுதியை ஏழு முறை ஓடும் நீரில் (குழாய் நீரில்) அலச வேண்டும். இதைச் சருமத்திலும் பூசிக்கொள்ளலாம். சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.

  கற்றாழை ஜூஸ்
  ஒரு கற்றாழை இலையின் சதைப்பகுதியை எடுத்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். இந்த ஜூஸில் ஒரு சாத்துக்குடிப் பழத்தின் சாற்றைக் கலந்து, தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது.

  சாத்துக்குடிப் பழச்சாற்றில் வைட்டமின் சி இருப்பதால், கற்றாழையில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சி, நம் உடலில் நேரடியாக சேர்க்கும். இந்த ஜூஸை 100 மி.லி குடித்துவர, கர்ப்பப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகும். என்றென்றும் இளமைத் தோற்றத்துடன் வலம்வர, ஆயுள் ஆரோக்கியம் காக்க இந்த கற்றாழை, சாத்துக்குடி ஜூஸ் கைகொடுக்கும்.


  Sponsored Links
  Last edited by chan; 14th Jun 2015 at 02:05 PM.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter