நெஞ்சு சளிக்கு:
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.சளி
* கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
கொள்ளு சூப்
தயாரிக்கும் முறை
கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது
இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.
* கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.