ற்றுச்சூழலை பாதுகாக்கும் செடி கொடிகளில் சில மூலிகைகளாகவும் பயன்படுகிறது. இவற்றில் குப்பைமேனி, அவுரி, மற்றும் நஞ்சறுப்பான் போன்ற மூலிகைச் செடிகள், பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.
குப்பைமேனி: குழந்தைகளுக்கு, ஏற்படும், தோல் நோய்கள் மற்றும் நலங்குதல் போன்ற பிரச்னைகளுக்கு குப்பைமேனி இலையை பொடியாக்கி குளிக்க பயன்படுத்தலாம். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கு ஏற்படும் தோல் நோய்களுக்கும் இவை மருந்தாக பயன்படுகிறது. இலையை உப்புடன் சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளுக்கு தேய்த்து காய்ந்த பின்னர் குளித்து வர விரைவில் குணமடையும்.
இதன் இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, புண், நஞ்சுக்கடி உள்ளிட்டவைகளின் மேல் பற்றாகப் பூசினால், கிருமிகள் நீங்கிவிடும். மேலும், நீண்ட காலம் உடல் நல குறைபாட்டினால் படுக்கையில் இருப்பவர்களுக்கு புண்கள் ஏற்பட்டுவிடும். அதற்கும் இந்த இலையை பொடி செய்து, அப்புண்களின் மீது தூவி துணியால் கட்டி வர, புண்களிலுள்ள புழுக்கள் இறந்துவிடும். தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடி மருந்தாக இந்த குப்பைமேனி பயன்படுகிறது.
அவுரி: சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் மூலிகைகளுள் முக்கியமான ஒன்று அவுரி. இதற்கு நீலி என்ற பெயரும் உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும், இயற்கையான நீல வண்ணமே, 20ம் நூற்றாண்டு வரையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. பின்னர், செயற்கை வண்ண மயக்கத்தால், இச்செடிகளின் பயன்பாடு சரிந்தது. நரம்புச் சிலந்திக்கு குறிப்பான மருந்துகள் கிடைப்பது அரிது. அதனுள் நீலியும் ஒன்று.
அவுரியின் வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மற்றும் மிளகு உள்ளிட்டவைகளை சம அளவு கொண்டு, அரைத்து சிறிதளவு நாள்தோறும், காலை மாலை என இரண்டு வேளையும் உண்டு வர நரம்பு சிலந்தி குணமாகும். இம்மருந்து உட்கொள்ளும் சமயத்தில், உப்பில்லாத தயிர் சாதம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மூன்று அல்லது ஐந்து நாட்கள் இதனை பின்பற்ற வேண்டும். நரம்பு சிலந்தி உள்ள இடங்களில், இந்த கலவையை வைத்து கட்டியும் பயன்பெறலாம்.
நஞ்சறுப்பான்: இதற்கென, நஞ்சு முறித்தான், கொண்டைசாணி, கொடிப்பாலை என்ற பெயர்களும் உண்டு. இவை ஒரு பூண்டு வகையை சார்ந்தது. பாம்புக்கடியால் ஏற்படும் நஞ்சு, இடுமருந்து, வெள்ளை, எட்டி உள்ளிட்ட விஷங்களை உண்பதால் உண்டாகும் நஞ்சுகளையும், நஞ்சறுப்பான் கலந்த குடிநீரைக்கொண்டு நிவர்த்தி செய்யலாம்.

Similar Threads: