அஜீரணத்தை போக்க இயற்கை வழிகள்ஆரோக்கியம் ஆரம்பம் ஆகும் இடம் வயிறு. வயிறு நன்றாக இயங்கினால் மட்டுமே ஆரோக்கியம் மேம்பட முடியும். வயிற்றுக் கோளாறுகள் தீர, ஜீரணசக்தி சீராக இருக்க, பல மருந்துகள் உள்ளன, இருப்பினும் இயற்கை வழியில் அதனைப் பெறுவதே சிறந்த வழியாகும், வயிறு இயல்பாக இயங்க இதோ சில எளிய வழிகள்,


 1. அதிகமாக உண்ணுவது, அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் இவற்றை தவிர்க்க வேண்டும்.
 2. ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.
 3. இஞ்சி ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித்துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும்.
 4. இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.
 5. ஜீரகம் (ஒரு தேக்கரண்டி) கலந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம்.
 6. ஓமத் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.
 7. பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி. நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.
 8. சில ஆயுர்வேத குறிப்புகள் – கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த ஜலமும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்கின்றன.
 9. பப்பாளி ஜீரணத்திற்கு உதவும். மேல் நாட்டில் மாமிச உணவு சமைக்கும் போது பப்பாளிப் பழ துண்டுகளுடன் சமைப்பது வழக்கம்.
 10. ஒரு பெரியகரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.
 11. புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம்.
 12. இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது.
 13. கறிவேப்பிலை சாறும் (எலுமிச்சை சாற்றுடன் கலந்து) ஜீரணத்திற்கு உதவும்.
 14. கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.
 15. திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் – இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.


Similar Threads: