Tamil Thalattu Songs
Discuss here on Tamil Thalattu Songs within the New Born Baby forums, part of the Parenting forum; குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாழ்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் ...
-
13th Aug 2011, 06:17 AM #11
Re: Tamil Thalattu Songs
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாழ்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.
தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.
தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போஜி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.
கொவ்வை இதழ் மகளே - என் குவிந்த நவரத்தினமே கட்டிப் பசும்பொன்னே என் கண்மணியே கண் வளராய் என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.Last edited by Parasakthi; 18th Jan 2012 at 12:15 PM. Reason: External Link
Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
அன்புடன்
சுஜிதா
-
13th Aug 2011, 06:25 AM #12
Re: Tamil Thalattu Songs
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
அன்புடன்
சுஜிதா
-
13th Aug 2011, 06:28 AM #13
Re: Tamil Thalattu Songs
மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே
தைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே - கண்ணே நீ
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ
சீர் வரிசை வாங்கையிலே,
வைகாசி மாசத்திலே - கண்ணே நீ
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும் - கண்ணே
கடவுளுக்குக் கையெடடிGood friends are like stars-you don't always see them, but you know they are always there.
அன்புடன்
சுஜிதா
-
17th Sep 2011, 06:04 PM #14
Re: Tamil Thalattu Songs
anybody have audio file mp3 file?
-
17th Sep 2011, 09:15 PM #15
- Real Name
- Ilavarasi
- Gender
- Female
- Join Date
- Feb 2010
- Location
- Coimbatore
- Posts
- 814
- Blog Entries
- 1
Re: Tamil Thalattu Songs
Here is some tamil lullabies from cine songs. Hope it will be useful for all...
Aayarpadi Maligayil.mp3
Kannan Varuvan.mp3
Karpora Bommai - P.Suseela.mp3
Moondram Pirai - Kanne Kalaimaane.mp3
-
18th Sep 2011, 02:19 PM #16
Re: Tamil Thalattu Songs
cine songs allatha thalattu songs pls..
-
18th Sep 2011, 06:35 PM #17
Newbie
- Gender
- Female
- Join Date
- Sep 2011
- Location
- Chennai
- Posts
- 48
Re: Tamil Thalattu Songs
rajesh you can check here
-
19th Sep 2011, 10:50 AM #18
Re: Tamil Thalattu Songs
Thanks lot. kausalya, Ilavarasi..
-
28th Oct 2011, 10:23 AM #19
Newbie
- Gender
- Female
- Join Date
- Oct 2011
- Location
- Coimbatore
- Posts
- 15
Re: Tamil Thalattu Songs
[QUOTE=Penmai;25406]Here is some tamil lullabies from cine songs. Hope it will be useful for all...
Hi im looking for Araaro aariraro yaradichu nee azhare song in mp3 format..want to know its tune....can someone help pls...?
thanks in advance
-
18th Jan 2012, 10:31 AM #20
Re: Tamil Thalattu Songs
ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”


8Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote

Bookmarks