Benefits and Power of Breast Milk - தாய்ப்பாலின் சக்தி
Discuss here on Benefits and Power of Breast Milk - தாய்ப்பாலின் சக்தி within the New Born Baby forums, part of the Parenting forum; தாய்ப்பாலின் சக்தி தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட ...
-
2nd Jan 2012, 12:56 PM #1
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,773
- Blog Entries
- 16
Benefits and Power of Breast Milk - தாய்ப்பாலின் சக்தி
தாய்ப்பாலின் சக்தி
தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்*ப்பால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர், நீரிழிவு நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது.
தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது.
மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூலை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.Last edited by Parasakthi; 2nd Jan 2012 at 12:59 PM.
-
2nd Jan 2012, 12:57 PM #2
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,773
- Blog Entries
- 16
Re: தாய்ப்பாலின் சக்தி
தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.
சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!
தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!
அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!
எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!
பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.Last edited by Parasakthi; 2nd Jan 2012 at 01:00 PM.
-
5th Jan 2012, 07:45 AM #3
Re: தாய்ப்பாலின் சக்தி
Nice & essential Sharing for every mother. Thanks for sharing Shakthi.
With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
25th Jan 2012, 05:43 PM #4
Re: தாய்ப்பாலின் சக்தி
தாய்ப்பால்… தாய்க்குப் புதிய நன்மை!

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.
அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
26th Jan 2012, 07:38 PM #5
Re: தாய்ப்பாலின் சக்தி
தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் தவிர்க்கலாம்
இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல வகையான புற்றுநோயில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 முதல் 35 சதவீதமாக உள்ளது என, 2011ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று சொல்கிறது.
முன்பெல்லாம், 50 முதல் 70 வயது நிறைந்த பெண்களுக்கே, இவ்வகை புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது, 30 முதல் 50 வயதுள்ள பெண்களைக் கூட, இந்நோய் தாக்குகிறது. கடந்த 2005ம் ஆண்டு வரை, கர்ப்பப் பை வாய் புற்றுநோய் தான், தமிழக பெண்களிடையே அதிகம் காணப்பட்டது. சமீபத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 30 வயதுள்ள பெண்கள் அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
மார்பகப் புற்றுநோயின் தன்மைகள்
*மார்பகத்தில், வலி இல்லாத கட்டி உருவாகி, நாளடைவில் பெரிதாவது.
*சில நாட்களுக்குப் பின், அக்குளில் வீக்கம் தென்படும்.
*முலைக் காம்பு, உள்வாங்கிக் கொள்ளும்.
* காம்பிலிருந்து ரத்தம் வெளியேறும்.
மார்பில் தோன்றும் அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய் தானா?
* இல்லை. பெரும்பாலானவை சாதா கட்டிகளாகவே இருக்கும். பயப்படாமலும், தயங்காமலும் டாக்டரிடம் பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும். அது புற்றுநோய் தான் என, நாமாகவே முடிவு செய்து, பயப்படுவது வீண். 15 முதல் 20 சதவீதம் வரையிலான கட்டிகளே, புற்றுக் கட்டிகளாக உருவாகின்றன.
மார்பகப் புற்றுநோய்க்கும், தாய்ப்பால் கொடுப்பதற்கும் தொடர்பு உள்ளதா?
*தாய்ப்பால் கொடுக்கும்போது, பெண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு அடைகிறது. இந்த மாறுபாடு, மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.மார்பகப் புற்றுநோய் கண்டறிவதில், குடும்ப வரலாறு எந்த வகையில் முக்கியத்துவம் பெறும்.
* பரம்பரையாக இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படுவோர் எண்ணிக்கை, 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. பரம்பரையாக குடும்பத்தினர் பாதிக்கப்படுவது தெரிந்தால், அவர்களின் சந்ததியினரிடம், பி.ஆர்.சி.ஏ., 1 மற்றும் பி.ஆர்.சி.ஏ., 2 ஆகிய மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டால், நோயைக் கண்டறியலாம். இந்த மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 70 முதல் 80 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
நோயின் பல நிலைகளில், எந்த வகையான சிகிச்சைகள் உள்ளன?
* அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி உட்பட பல சிகிச்சைகள் உள்ளன.
இச்சிகிச்சைகளின் பக்க விளைவுகள் என்ன?
* பசியின்மை, வாந்தி ஏற்படுதல், சோர்வு ஏற்படுதல், வாய் உலர்தல், காலத்திற்கு முன்னதாகவே மாதவிடாய் நின்று போதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைதல். நோய் அறிகுறியோ, மார்பகத்தில் சிறிய மாறுபாடு தென்பட்டாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது அவசியம். சாதா கட்டிகளைக் கூட, புற்றுநோய்க் கட்டியாக கற்பனை செய்து கொண்டு, கலக்கம் அடையக் கூடாது.With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
27th Jan 2012, 09:01 AM #6
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,773
- Blog Entries
- 16
Re: தாய்ப்பாலின் சக்தி
hi sumathi ka,
thanks for adding more info on this topic
-
27th Jan 2012, 09:48 AM #7
Re: தாய்ப்பாலின் சக்தி
hi sakthi, sumathi,
nalla padhivugalma...ovvoru ammavum therinjukka vendiya visayangal.....ubayogamaana thagavalgal.....
Similar Threads
-
எந்திரன்... சன் டிவியின் பொங்கல் ஸ்பெஷலாக
By Nishahameetha in forum Media TalkReplies: 0Last Post: 11th Jan 2012, 05:31 PM -
மர உச்சியில் சிங்கம்! எப்படித்தான் போனது
By sumathisrini in forum Interesting FactsReplies: 0Last Post: 12th Dec 2011, 11:20 AM -
ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என
By Nishahameetha in forum ScienceReplies: 2Last Post: 21st Nov 2011, 02:15 PM -
சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்&
By sujithaprethi in forum Temples, Gods & GoddessReplies: 2Last Post: 24th Aug 2011, 10:13 AM -
சிவி (CV - Curriculum Vitae) -யை எப்போதெல்லாம் பயன்படுத்தலாī
By silentsounds in forum Miscellaneous JobsReplies: 0Last Post: 23rd May 2011, 10:48 PM


4Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks