Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 2 of 2

புட்டி பால் குழந்தைக்கு கொடுக்கும் பொழு&

Discuss here on புட்டி பால் குழந்தைக்கு கொடுக்கும் பொழு& within the New Born Baby forums, part of the Parenting forum; பிறந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே..முதல் 4 -6 மாதஙகள்வரை தாய்ப்பால் தான் ஏற்றது. பிறகு மெல்ல மெல்ல புட்டிப்பாலுக்கு மாறவேண்டும். புட்டிபால் கொடுக்கும்பொழுது ...

  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,607

    புட்டி பால் குழந்தைக்கு கொடுக்கும் பொழு&



    புட்டி பால் குழந்தைக்கு கொடுக்கும் பொழு&-images.jpg

    பிறந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே..முதல் 4 -6 மாதஙகள்வரை தாய்ப்பால் தான் ஏற்றது. பிறகு மெல்ல மெல்ல புட்டிப்பாலுக்கு மாறவேண்டும்.

    புட்டிபால் கொடுக்கும்பொழுது கவனிக்கவேண்டியவைகள்:


    பல டாக்டர்களின் அறிவுரையின் படி பார்த்தால் குழந்தைகளுக்கு டின் பவுடரை விட பசும் பால் ஏற்றது என்று தான் சொல்லுறாங்க.

    சில தாய்மார்கள் பசும்பால் கொடுக்க பயப்படுவாங்க। எந்த உணவு வகைகளும் குழந்தைக்கு முதலில் கொடுக்கும் பொழுது சில குழந்தைகளுக்கு வயிற்று கோளாறுகள் ஏற்படும். பயப்பட தேவையில்லை. பழக்கப்படித்திவிட்டால் ஒன்றும்
    செய்யாது.

    பால் கொடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்:


    குழந்தையினை தாய்மார்கள் மடியின் மீது படுக்க வைத்து தலையினை சிறுது உயர்த்தி பால் கொடுக்கவும் .

    பாட்டில் நேராக சரித்து நிப்பல் முழுவதும் பால் இருந்து குழந்தை குடிப்பது போல் கொடுக்கவும்.

    சரித்து வைத்து பாலை குடித்தால் காற்று உள்ளே போய் குழந்தை மூக்கால் வாந்தி எடுக்கும் நிலை வரும். கவனம் தேவை.

    ஒரே நேரத்தில் ஒரு பாட்டில் பாலை கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். சில வினாடிகள் இடைவெளி விட்டு கொடுக்கவும்.

    பசும்பால் கொடுக்கும் முறையினை பார்ப்போம்:

    சுத்தமான பசும்பாலை (முடிந்தால் ஒரு மாட்டு பால்) மட்டுமே வாங்கவும்.அதனை நன்றாக காய்ச்சவும்.

    குழந்தைக்கு முதலில் பால் ஆரம்பிக்கும் பொழுது 1/2 கப் பாலுக்கு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொடுக்கலாம்.

    சில குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்ப்படும். அப்படியிருக்கும் பொழுது பாலுடன் 2 விரல் இடுக்கில் எடுத்த ஓமம், மிகவும் கொஞ்சமாக சுக்குத்தூள் சேர்த்து நன்றாக காய்ச்சி கொடுக்கலாம்.

    பிறகு போக போக திக்கான பாலை சர்க்கரையுடன் கலந்து கொடுக்கவும்.

    ஊட்டசத்து பானங்கள் குறைந்தது 2 வயதுக்கு மேல் தான் கொடுக்க வேண்டும்.

    ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுப்பதும் தவறு.


    பி।கு:
    மருத்துவரின் ஆலோசனையும், வீட்டின் பெரியவர்களின் ஆலோசனைக்கு பின்பே குழந்தையின் உணவுகளை கொடுக்கவும்.




    With Regards,
    Sumathi Srini

    “Nothing is impossible as impossible itself says i'm possible”

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Moderator
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Puducherry
    Posts
    2,607

    Re: புட்டி பால் குழந்தைக்கு கொடுக்கும் பொழ

    புட்டி பால் கொடுக்கும் பொழுது... பகுதி-2

    குழந்தைகளுக்கு உடல் எடைக்கு ஏற்றது போல் டாக்டர் சொல்லும் பவுடரை வாங்கி கொடுக்கவும்.
    அதில் உங்கள் குழந்தையின் வாரத்துக்கு ஏற்ப பவுடரின் அளவு தண்ணீரின் அளவு
    போட்டுயருக்கும். அதன் படி நன்றாக கொதிக்கும் நீரில் கலந்து வடிக்கட்டி பாட்டிலில் ஊற்றி கொடுக்கவும்.
    இதற்கு பால் பவுடரில் இனிப்பு சேர்த்திருப்பதால் பாலில் நாம் இனிப்பு சேர்க்க வேண்டாம்.

    பால் பாட்டிலின் சுத்தம்:

    இது மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு நம் கையில் வைத்து பால் கொடுக்கும்பொழுது கண்ணாடி பாட்டில் சிறந்தது. பிறகு அவங்களே குடிக்கும் பொழுது பிளாஸ்டிக் பாட்டில் கொடுக்கலாம்.

    ஒவ்வொரு முறை பால் குழந்தைக்கு கொடுத்தவுடனே கையோடு அலசி வைக்கவும்.

    குழந்தைகள் குடிக்கும் அளவுக்கு மட்டுமே பாலை கரைக்கவும்.

    அதிக நேரம் பால் பாட்டிலில் இருந்தால் பால் புளித்து பாட்டிலில் கிருமிகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

    சுத்தமில்லாத பாட்டில் மூலம் குழந்தக்கு பலநேய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
    குழந்தையின பாட்டில் மற்றும் குழந்தையின் கிண்ணங்களை எல்லாம் தனியாக அலசி, தனியாக காற்று போகும் டப்பாவில் காயவிட்டு வைக்கவும்.

    அலசும் பிரெஷ், ஸ்பாஜ், எல்லாமே தனியா இருக்கட்டும்। அலசும் சோப்புக்கு பதிலாக லிக்விட் ட்ராப்ஸ் பயன்படுத்தலாம். சோப்பு வாடை வராமல் அலசி பின்பு கொதிக்கும் தண்ணீரில் பாட்டில், ரப்பரை போட்டு வைக்கவும்.

    3 மாதங்களுக்கு ஒரு முறை பாட்டிலை மாற்றவும். தண்ணிருக்கு, பாலுக்கு,
    சூப்புக்கு, ஜூசுக்கு என்று தனி தனி பாட்டில் வைத்து கொடுக்கவும். ஆரோக்கியமாக குழந்தையினை வளர்ப்பது நம்முடைய கடமை அல்லவா? சின்ன சின்ன விசயங்களையும் அக்கறையுடன் செய்யவும்.
    With Regards,
    Sumathi Srini

    “Nothing is impossible as impossible itself says i'm possible”

Similar Threads

  1. Replies: 5
    Last Post: 31st Dec 2011, 09:32 PM
  2. Replies: 0
    Last Post: 26th Nov 2011, 04:21 PM
  3. Replies: 0
    Last Post: 24th Sep 2011, 11:46 AM
  4. Replies: 0
    Last Post: 3rd Sep 2011, 11:52 PM
  5. Replies: 0
    Last Post: 4th Aug 2011, 04:53 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •