Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

படுத்துக் கொண்டே பால் கொடுக்காதீர்கள்!!


Discussions on "படுத்துக் கொண்டே பால் கொடுக்காதீர்கள்!!" in "Newborn and Infants" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  படுத்துக் கொண்டே பால் கொடுக்காதீர்கள்!!

  படுத்துக் கொண்டே பால் கொடுக்காதீர்கள் !

  'குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை, எந்தெந்த நேரத்தில், எப்படியெப்படி கொடுக்க வேண்டும்' என்பது... இன்றைய தாய்மார்களுக்குப் புதிரான விஷயம்! அதுவும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை என்றால், கேட்கவே வேண்டாம். அத்தகைய தாய்களுக்கு, அன்போடு இங்கே உதவிக்கு வருகிறார்... தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர் டாக்டர் பார்த்தசாரதி.

  ''தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப்பொருட்களும், வைட்டமின்களும் கலந்து இதமான சுவையில், மிதமான சூட்டில் கலப்படமே இல்லாத ஒரே பால்... தாய்ப்பால் மட்டும்தான். அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தத்தான் உலகம் முழுக்க ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை 'தாய்ப்பால் வாரம்' கொண்டாடப்படுகிறது!

  குழந்தை பிறந்ததும் சிலர் சர்க்கரை தண்ணீர் கொடுப்பார்கள். அது மிகவும் தவறு. ஏனெனில், தாய்ப்பாலைவிட தித்திப்பாக இருக்கும் அந்த தண்ணீரை சுவைத்துவிட்டால், பின் தாய்ப்பால் குழந்தைக்கு சுவைக்காது. எனவே, குழந்தை அழுதாலும்கூட, அம்மா கண் விழித்து தாய்ப்பால் கொடுக்கும் வரை அதற்கு வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. பொதுவாக நார்மல் டெலிவரி யாக இருந்தால், குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும். சிசேரியன் என்றால், இரண்டு முதல் நான்கு மணி நேரம் கழித்து தாய் கண்விழித்து எழுந்து உட்காரும் நிலை வந்தவுடன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும்.

  சரி, எந்த பொஸிஷனில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? பல இளம் தாய்மார்களுக்கு வருகின்ற சந்தேகம் இது. இடதுபுற மார்பில் பால் புகட்டப் போகிறீர்கள் என்றால், இடது கை முழங்கையில் குழந்தையின் தலையை வைத்து உயர்த்தி, மார்புக் காம்பை குழந்தை குடிப்பதற்கு ஏதுவாகச் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. அது நடு சாமமாக இருந்தாலும், எழுந்து உட்கார்ந்துதான் கொடுக்க வேண்டும். காரணம், குழந்தையின் தொண்டைக்கும் காதுக்கும் இடையில் 'யூஸ்டேஷன் டியூப்' (ணிustணீநீலீவீணீஸீ tuதீமீ) என்ற ஒன்று இருக்கிறது. படுத்துக் கொண்டே கொடுக்கும்போது அதில் பால் சென்று அடைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தை யால் மேற்கொண்டு பால் குடிக்க முடியாது, திடீர் திடீர் என்று அழ ஆரம்பிக்கும். பால் குடித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தை அழுவதால், பல தாய்மார்கள் குழந்தைக்கு வயிறு வலிக்கிறது என்று நினைத்து, விளம்பரங்களில் வருகிற வாட்டரை எல்லாம் கொடுப்பார்கள். சரியான பொஸிஷனில் பால் கொடுத்தால் இந்தப் பிரச்னைகள் எதுவும் இருக்காது.

  மார்புக் காம்புகளை குழந்தை சப்புவதால், தாயின் மூளையில் ரியாக்ஷன் ஏற்பட்டு, அதனால் ஹார்மோன் தூண்டப்பட்டுதான் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. எனவே தாயின் காம்புகளை, குழந்தைகள் நன்கு சப்பவிட வேண்டும். அப்படியும்கூட தாய்ப்பால் சுரக்காத நிலையில், அல்லது தரமுடியாத நிலையில் மட்டுமே மருத்துவர்கள் ஆலோசனையோடு பசும்பாலை காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதற்குப் பதிலாக பால்பவுடரோ அல்லது மற்ற பாலோ அறவே வேண்டாம்.

  குழந்தைக்கு பசிக்கிறது என்றால் தொட்டிலில் இருந்தே அழும். இல்லையென்றால், உதடுகள் துடிக்க ஆரம்பிக்கும். பக்கத்தில் இருக்கிற துணியை எடுத்து சப்ப ஆரம்பிக்கும். இதுதான் குழந்தைக்கு பசிக்கிறது என்பதற்கான அறிகுறி. மணியைப் பார்த்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வேண்டாம். 'ஐயோ, ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சே... குழந்தைக்குப் பசிக்குமே...’

  என்ற பதைபதைப்பு அவசியமில்லாதது. அப்படிக் கொடுக்கப்படும் தாய்ப்பாலால் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு எந்தவித பலனும் இல்லை. குழந்தைக்குப் பசி வந்தபின், அது அனுபவித்துக் குடிக்கும் பாலே உடலில் உணர்வு ரீதியாக கலக்கும்; பூரண சத்தும் கிடைக்கும். குழந்தைக்குப் பசிக்கும் நேரம்... பிறந்த ஒரு மாதத்தில் தாய்க்குத் தானாகவே தெரிய ஆரம்பித்துவிடும்.

  பால் குடித்தவுடன் சில குழந்தைகள் கை, கால்களை முறுக்கிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். பாலோடு குடித்த காற்றை வெளியேற்றவே அப்படிச் செய்யும் கவலை வேண்டாம்'' என்ற டாக்டர் பார்த்தசாரதியிடம்...

  ''வேலைக்குச் செல்லும் பெண்கள்... தங்கள் பாலை பாத்திரத்தில் சேமித்து வைத்து, வீட்டில்இருப்பவர்கள் மூலமாக குழந்தைகளுக்கு கொடுப் பது தற்போது அதிகரித்து வருகிறது. இது சரி தானா?'' என்கிற கேள்வியை எழுப்பினோம்.


  குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மற்றும் உணவு ஊட்டுவது தொடர்பாக கடந்த இதழில் பேசிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர் டாக்டர் பார்த்தசாரதி, வேலைக்குச் செல்லும் பெண்கள்... தங்கள் பாலை பாத்திரத்தில் சேமித்து வைத்து, வீட்டில் இருப்பவர்கள் மூலமாக குழந்தைகளுக்கு கொடுப்பது மற்றும் 'கொழுகொழு' குழந்தைகள் பற்றி இங்கே தொடர்கிறார்...

  ''வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகம் கிளம்பும்போதும், வீடு திரும்பியதும் கட்டாயம் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும். பகல் வேளைகளில் அவர்களால் பால் புகட்ட முடியாது என்பது காலத்தின் கோலம். தாயின் மூலமாகத்தான் பால் குடிக்க வேண்டும் என்றாலும், அதற்கு வாய்ப்பில்லை எனும் இதுபோன்ற சூழலில்... பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து மூடிவைத்து, கேர் டேக்கர் மூலமாக குழந்தைக்குப் புகட்டச் சொல்வதில் தவறில்லை. பாலே குடிக்காமல் இருப்பதற்கு, இது எவ்வளவோ பரவாயில்லை.

  தாய்ப்பால், நான்கில் இருந்து ஆறு மணி நேரம் வரை கெடாது. ஃப்ரிட்ஜில்கூட வைக்கத் தேவையில்லை. ஆனால், இப்படி எடுத்து வைத்த பாலை பாட்டிலில் ஊற்றிக் கொடுக்காமல், சங்கில் கொடுப்பதே சிறந்தது. தாயின் மார்புக் காம்பில் பால் குடிப்பதுபோல் கடினமாக இல்லாமல், பாட்டில் நிப்பிளில் பால் சிரமமின்றி வரும். பாட்டிலில் குடித்து சொகுசு கண்டுவிட்டால், தாயின் மார்பில் சப்பிக் குடிக்க குழந்தை சோம்பேறித்தனப்படும் என்பதாலேயே இந்த அறிவுரை.
  தாய்ப்பால் கொடுக்கும்போது சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு மோஷன் போக மாட்டார்கள். அதன் பிறகு ஒரேயடியாகப் போவார்கள். அதன் பிறகு கொளகொள என்று மோஷன் வந்தால்... கவலை வேண்டாம். பால் குடித்து கொண்டிருக்கும்போதே மோஷன் போய் விட்டாலும் கவலையில்லை. இதெல்லாம் நார்மலே.

  ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், தண்ணீர்கூட வேண்டியதில்லை. அதனால்தான் இந்த ஆறு மாதங்களை 'எக்ஸ்க்ளூஸிவ் பிரஸ்ட் ஃபீடிங்’ என்போம். அதேபோல ஊட்டச்சத்துக்காக எந்தவித மருந்தும் ஆறு மாதங்கள் வரை தரத் தேவையில்லை. அதில் உள்ள வைட்டமின்கள் எல்லாம் தாய்ப்பாலிலேயே இருக்கிறது. முதல் ஆறு மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சளி பிடிப்பது, நிமோனியா உள்ளிட்ட நோய்களுக்கு எளிதில் இலக்காவதில்லை என்று உலகளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறோம்.

  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 31st Aug 2015 at 12:44 PM.

 2. #2
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  re: படுத்துக் கொண்டே பால் கொடுக்காதீர்கள்!!

  கொழுகொழு தோற்றம்... ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல !

  ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தை தாயின் மார்புக் காம்புகளை கடிக்க ஆரம்பிக்கும். குழந்தைக்கு ஜீரண சக்தி வந்துவிட்டது, கடித்து சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டது என்பதன் அறிவிப்புதான் இது. ஆறு மாதத்தில் இருந்து திட உணவுகளை ஒவ்வொன்றாகத் தர ஆரம்பிக்க வேண்டும் (கூடவே ஒருவருடம் வரை தாய்ப்பாலும் தந்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாக வளரும்). இட்லி, இடியாப்பம், ஆப்பிள், கேரட், முட்டையின் மஞ்சள் கரு, சத்துமாவு கஞ்சி என்று தினம் ஒரு உணவை நன்கு மசித்து தர வேண்டும்.

  பாரம்பரியமாக நாம் பயன்படுத்திவரும் சத்து மாவுக் கஞ்சியானது, விளம்பரங்களில் வரும் ஊட்டச்சத்து பானங்களை எல்லாம்விட பல மடங்கு ஆரோக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 'விளம்பரங்களில் காட்டப்படும் குழந்தை உணவுகள் மற்றும் சத்து பானங்களை கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக புஷ்டியாக வளரும்' என்பது வீண் நம்பிக்கையே. நம் பாரம்பரிய உணவான சத்துமாவிலேயே ஏராளமான சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. சத்துமாவு பொடிகள் கடைகளிலும் கிடைக்கின்றன. நாமேகூட தயாரிக்கலாம். இவற்றைக் கொடுத்தாலே குழந்தைகள் திடகாத்திர மாக வளர்வார்கள்.

  திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் இட்லி, ஆப்பிள் என்று தினமும் ஒரே உணவாகக் கொடுக்க வேண்டாம். மாற்றி மாற்றி கொடுங்கள். குழந்தைக்கு அந்த உணவு பிடிக்கிறதா அல்லது ஒத்துக்கொள்கிறதா என்பதையெல்லாம் கவனிக்கவே தினம் ஒரு உணவு என்று கொடுக்க சொல்கிறேன். பொதுவாக குழந்தைக்கு என்று தனியாக நீங்கள் உணவு தயாரிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் தயாரிக்கும் உணவுகளையே நன்கு மசித்து கொடுக்கலாம்.

  பல தாய்மார்கள் தங்கள் குழந்தை சரியாகச் சாப்பிடுவதில்லை என்று குறை சொல்வார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, வயிற்றில் பூச்சி ஏதேனும் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அதற்கேற்ற மருந்து கொடுக்க வேண்டும். மற்றொன்று, குழந்தைக்கு நீங்கள் கொடுக்கிற உணவில் விருப்பம் இல்லாது இருக்கலாம். கூடவே, சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு மல்லுக்கு நின்று சாப்பாட்டைத் திணிக்காமல், சற்று நேரம் அந்தக் குழந்தையை அமைதியாகப் பார்த்துவிட்டு, குழந்தைக்காக எடுத்து வந்த உணவை நீங்கள் சாப்பிட ஆரம்பியுங்கள்.

  சிறிது நேரத்தில் தன்னால் பசி எடுத்து உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். மேலும், 'இனி அழுதால் நம் சாப்பாட்டை அம்மா சாப்பிட்டு விடுவார்' என்றும் மனதில் குறித்துக் கொள்வார்கள். குழந்தை அதிகம் சாப்பிட வேண்டும் என்று நினைக்காமல், சத்தாகச் சாப்பிடக் கொடுங்கள்'' என்ற டாக்டர் நிறைவாக சொன்னது -

  ''ஆரோக்கியம் என்பது... கொழுகொழு தோற்றத்தில் இல்லை என்பதை யும் புரிந்து கொள்ளுங்கள்!''

  krrishna likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter