Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree13Likes

How to take care of the Newborn babies?- -இளம் பெற்றோர்களே.இங்கே கவனியுங்க&#


Discussions on "How to take care of the Newborn babies?- -இளம் பெற்றோர்களே.இங்கே கவனியுங்க&#" in "Newborn and Infants" forum.


  1. #11
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    281

    Re: குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்Ĩ

    thanks for sharing Chan


    Sponsored Links

  2. #12
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,438

    Re: குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்Ĩ

    good sharing lakshmi..


  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,158

    Re: Baby care tips -குட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்து

    Very useful suggestions.


  4. #14
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    15,932

    பிறந்தவுடன் குழந்தையைப் பராமரிக்கும் ம&a

    பிறந்தவுடன் குழந்தையைப் பராமரிக்கும் முறைகள்!

    மருத்துவர். எஸ்.கனகதுர்காலட்சுமி.    பிறந்த குழந்தை வீறிட்டு அழ வேண்டும். அப்படி அழுமேயானால் அதன் நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளது என அறியலாம். பிறந்தவுடன் குழந்தை அழவே இல்லை என்றாலும் உடனே நாம் செய்ய வேண்டியது இந்த வர்மபுள்ளியை ஒரு நிமிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருங்கள். குழந்தைகள் அழ ஆரம்பிக்கும். இப்புள்ளி குழந்தையின் கை கட்டை விரல் நக ஓரம் இருக்கும். இது நுரையீரலின் 11-ஆவது புள்ளியுடன் சம்பந்தப்பட்டது.

    குழந்தைக்கு சேனை வைப்பார்கள். அது தேனாக இருக்க வேண்டும். சீனிப் பாலாக இருக்கக் கூடாது. ஏன் இதற்கு சேனை என்று பெயர் வந்தது தெரியுமா?
    கருவிலுள்ள குழந்தையே கதை கேட்டதாகச் சொல்லப்படும்போது வெளியே வந்த அந்தப் புது உயிருக்குத் தம்மைச் சுற்றிலும் எத்தனை உறவுகள் உள்ளது என அறியும்போதே அதன் மனதில் நம்பிக்கையும் உருவாகுமே. பின் ஆரோக்கியம் என்பது தொடரும் அல்லவா? அந்த நம்பிக்கையை வளர்ப்பதன் பெயர்தான் சேனை.

    பின் தாயின் பாலை அறிய வைக்கலாம். எவ்வளவுதான் நாகரிக காலத்தில் நாம் வாழ்ந்தாலும் 16-ஆவது நாளிலிருந்து 48 நாள் வரையிலும் தினமும் ஏதாவது ஒரு மூலிகையை அரை டம்ளர் வெந்நீரில் வேகவைத்து அந்தத் தண்ணீரானது ஒரு சங்கு அளவு வற்றிவிட வேண்டும். (மூலிகை என்பது நம் வீட்டைச் சுற்றியே உள்ளது) இந்தப் பழக்கம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும், உடலில் கழிவுகள் தங்காமலும் பாதுகாக்கும்.

    குழந்தையைக் குளிப்பாட்ட கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் தரமான மஞ்சள் கிழங்கு, பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், மரிக்கொழுந்து, செண்பகப்பூ, ஆவாரம் பூ, காய், நாட்டு ரோஜா இதழ் இவற்றின் கலவை நல்லது.

    தாய்ப்பால் ஒரு வருடமாவது கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்குமே நல்லது. தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க தினமும் 10 கடலைப்பருப்பு, பால் கொழுக்கட்டை, கருப்பட்டி போன்றவற்றை உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 6 மாதக் குழந்தைக்கு தோல் உளுந்து, பச்சைப்பயறு, பொரிகடலை, சிவப்பு நிற அவல் இவற்றை நன்கு வறுத்த பின்பு மாவாக்கி அதையும் சலித்துவிட்டு அந்த மாவைக் கருப்பட்டி சேர்த்து காய்ச்சிய கஞ்சியாக அடிக்கடி கொடுக்கலாம். அளவு மிகவும் முக்கியம். கீரை வேக வைத்த தண்ணீர் (அரைக்கீரை) பருப்பு வேக வைத்த தண்ணீர், சீரகம், கறிவேப்பிலை, மல்லி, புதினா ஆகியவற்றின் வேக வைத்த தண்ணீர் குழந்தைக்கு நல்லது. 1 வயது வரையிலும் எளிதில் ஜீரணமாகும் உணவைத் தேர்வு செய்யுங்கள்.

    அதேபோல் குழந்தைக்கு உணவைத் திணிப்பதைத் தவிருங்கள். கிண்ணத்தில் உணவு மிச்சமாகக் கூடாது என எண்ணும் நீங்கள் உங்கள் குழந்தையின் வயிறு என்னவாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.அதை நீங்கள் அன்பு, பாசம் என்று நினைப்பீர்களேயானால் அது உங்களின் அறியாமையே ஆகும். வருங்கால நிரந்தர நோயாளியை உருவாக்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் உணருங்கள்.

    யாரைக் கேட்டாலும் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது என்பது பெற்றோர்களின் புலம்பல். அதன் வயிறுக்குத் தேவையானபோது அது உணவைத் தேடும்.

    அதேபோலதான் படிப்பும். நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை விட்டுவிட்டு எப்படிப் படித்தால் அவர்களுக்குப் புரியும் என்ற வழியை மட்டுமே காண்பியுங்கள். கற்றுக் கொள்ளும் முயற்சியை குழந்தைகள் பார்த்துக் கொள்வார்கள். எல்லா விஷயத்திலேயும் உங்களின் தலையீடு அதிகமானால் குழந்தையின் முயற்சி தடையாகும். எல்லாம் அம்மா பார்த்துக் கொள்வாள் என்ற எண்ணம் உருவாகும்.

    உணவை உண்ணவில்லை என்பதற்காக உணவுக்கிடையே அடிக்கிறீர்களே, அது மிகவும் மடைமையான செயல். இடையில் காய்கறி சூப், வாரம் ஒரு நாள் இஞ்சிச் சாறும் தேனும். 6 மாதத்திற்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது தொடருமேயானால் வரும் காலமாவது நோயில்லாத தமிழ்நாடாக மாறும். அதில் உங்களின் பங்களிப்பு இருக்கட்டுமே.

    இப்போது கருப்பையை வெட்டி எடுப்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. கேட்டால் வயிற்றில் கட்டி அல்லது அதிகமான தீட்டு வெளியேற்றம் என்று பல காரணம். நான் ஒன்று கேட்கலாமா? வயிற்றில் கட்டி இருந்தால் வெட்டி எடுத்துவிடலாம். கண்ணில் கட்டி வந்தால் என்ன செய்யலாம்? வெட்டி எடுத்துவிடலாமா? இதுவரையிலும் கருப்பை செய்து கொண்டிருந்த வேலையை இனி யார் செய்வது?

    மாற்று முறை மருத்துவத்தில் எவ்வளவோ இருக்கிறது. கற்றுக் கொள்ளுங்கள்.    Last edited by chan; 23rd May 2016 at 08:17 PM.
    jv_66 likes this.

  5. #15
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    15,932

    பாப்பாவை பாதுகாக்க 10 கட்டளைகள்!

    பாப்பாவை பாதுகாக்க 10 கட்டளைகள்!

    தனிக்குடித்தன இளசுகள் பெற்றோர் அவதாரம் எடுக்கும் தருணம், படு அவஸ்தையானது. பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி என்ற மூத்தோர்களின் ஆலோசனைக்கு வழியின்றித் தடுமாறுவார்கள். அதிலும் வேலைக்குச் செல்லும் இளம் தாயின் நிலை இன்னும் பரிதாபம்!

    தனிக்குடித்தனத் தம்பதிகள், குழந்தை பிறந்ததும் இப்படித் தடுமாறாமல் இருக்க, பச்சிளம் குழந்தையின் படிப்படியான வளர்ச்சியையும் ஒரு வயது வரையில் அந்தப் பாப்பாவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் விளக்குகிறார், சென்னை சூர்யா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைப் பிரிவின் தலைமை மருத்துவர் தீபா ஹரிஹரன்.

    1 மாதம்:
    குழந்தையைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமாகப் போர்த்தவும் கூடாது. எடை குறைவாகப் பிறந்த குழந்தை என்றால், குளிர்காலம் இல்லை என்றாலும்கூட சாக்ஸ், கிளவுஸ் போட்டு வைப்பது நல்லது. குழந்தை பிறந்ததும், அதன் முதல் உணவு சீம்பாலாகத்தான் இருக்க வேண்டும். அதுவும், பிறந்த அரை மணி நேரத்துக்குள் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். சிஸேரியன் என்றால், தாய்க்கு மயக்கம் சிறிது தெளிந்ததும், 3 அல்லது 4 மணி நேரத்தில் கொடுக்க ஆரம்பிக்கலாம். அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது; அதனால் இரண்டு நாள் கழித்து கொடுக்கலாம் என்று சிலர் தள்ளிப்போடுவார்கள். அது தவறு. 'கொலோஸ்ட்ரம்’ எனப்படும் சீம்பாலில் தான், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான விஷயங்கள் அதிகம் இருக்கின்றன. இன்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தைக்குக்கூட, தாயிடமிருந்து பெறப்படும் சீம்பால் டியூப் வழியாகக் கொடுக்கப்படுகிறது.

    பாசப் பிணைப்பு:
    முதல் நான்கு மாதங்களுக்குள்தான் குழந்தைக்கும் தாய்க்குமான பாசப் பிணைப்பு இறுகும்.குழந்தையைக் கட்டி அணைத்து முத்தமிடுதல், மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுதல், மார்போடு அரவணைத்துப் பாலூட்டும்போது அதன் முகம் பார்த்துப் பேசுதல் போன்றவை குழந்தையுடனான பிணைப்பை அதிகரிக்கும். ஆரம்பத்தில், இந்தப் பாசப் பிணைப்பு கிடைக்கும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் 'உளவியல் ரீதியான வலிமை’ அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு வீட்டில் போதிய உதவி இருக்காது... வழிகாட்ட யாரும் இல்லாமல், ஒருவித மன அழுத்தத்தில் இருப்பார்கள். இன்னும் சில தாய்மார்கள், விளம்பரங்களில் வருவதுபோல அல்லது தான் எதிர்பார்த்ததுபோல பிள்ளை பிறக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் இருப்பார்கள். அதனால் குழந்தையிடம் கொஞ்சுவதோ, பேசுவதோ செய்யாமல், இயந்திரகதியில் குழந்தைக்குப் பால் கொடுப்பார்கள். பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தையுடன் தாய் நெருக்கமாக இருக்க வேண்டும்.

    குளியல்:
    பிறந்து, முதல் சில வாரங்களுக்குக் குளிப்பாட்டவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. இளம் சூடான நீரில் நனைத்துப் பிழிந்த துண்டால் துடைக்கலாம். குளிப்பாட்டுவதற்கு முன், மிதமான 'பேபி பாடி லோஷனை’ லேசாக உடலில் தேய்த்து, மெதுவாக மஸாஜ் செய்யலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். சூடான நீரில் குளிப்பாட்டத் தேவையில்லை. வெதுவெதுப்பான நீர் போதும். குளிப்பாட்டிய பிறகு, மிருதுவான டவலால் ஒத்தித் துடைக்கவேண்டும். கண்டிப்பாக பவுடர் போடக் கூடாது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்படலாம்.

    உடை:
    அழகை விட, குழந்தைக்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பட்டன்கள், லேஸ், ஜரிகை, ஜிகினா போன்றவை இருக்கும் உடைகளைத் தவிர்த்து விடலாம். ஏனெனில் லேஸ் போன்றவை கண்களில் குத்தலாம். ஜரிகைகள் மெல்லிய சருமத்தைக் கிழித்துவிடும். பட்டன்கள் வாய்க்குள் போக வாய்ப்பு உண்டு. குழந்தையின் உடலை உறுத்தாத, மிருதுவான, சுகமான பருத்தி ஆடைகள் சிறந்தவை. தாய்மார்களும், பச்சைக் குழந்தையைத் தூக்கிச் செல்லும்போது, ஜரிகை, ஜிகினா போன்ற வேலைப் பாடுகொண்ட புடவைகள் கட்டியிருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

    அதிகமோ குறைவோ வேண்டாம்:
    குழந்தையை எப்போதும் யாராவது தூக்கி வைத்துக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவேண்டும். இதை, 'ஓவர் ஸ்டிமுலேஷன்’ என்போம். எப்போதும் 10 பேர் மாற்றி மாற்றித் தூக்கிக் கொஞ்சுவதும், பேசுவதும் கூடாது. அதற்காக, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சாமல் தொட்டிலிலேயே போட்டு வைப்பதும் கூடாது (அண்டர் ஸ்டிமுலேஷன்). இதனால், குழந்தை சோர்ந்துவிடும்; அல்லது பிடிபடாமல் அழும். கைக்குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதற்கு, பெரும்பாலும் இதுதான் காரணம். ஜீரணப் பிரச்னை என்று நினைத்து, பல தாய்மார்கள் தங்களுடைய உணவை மாற்றுவார்கள். சிலர், மாற்றுப் பால் கொடுக்க முயற்சிப்பார்கள். அது தேவையல்ல.

    1 - 4 மாதங்கள்:
    இந்தக் காலகட்டத்தில் அநேகமாக எந்தப் பிரச்னையும் குழந்தைக்கு வராது. தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. புட்டிப்பால் போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இந்தச் சமயத்தில், குழந்தையின் பார்வைத் திறன், கேட்கும் திறன், சுற்றுச்சூழலை உன்னித்துக் கவனிக்கும் திறன் ஆகிய மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் குரல் கேட்கும் திசையில் குழந்தை திரும்புகிறதா, யாராவது அருகில் வந்து கொஞ்சிவிட்டுப் போனால் அவர்கள் போகும் திசையில் திரும்பிப் பார்க்கிறதா, சுற்றுச்சூழலைக் கவனிக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த மூன்றும் சாதாரணமாக இல்லாவிடில், மருத்துவரிடம் காண்பிக்கவேண்டும். இந்த வயதில்தான் குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும். மின்சார விளக்கு, மின் விசிறி போன்றவற்றை ரசிக்கும். கழுத்து நிற்பதும் இந்த மாதங்களில்தான். அதனால் ஜாக்கிரதையாகத் தூக்க வேண்டும்.

    6ம் மாதம்:
    ஐந்து மாதங்கள் வரையில் குழந்தையின் எல்லா வளர்ச்சிகளும் ஒழுங்காக இருந்தால், 6-ம் மாதத்தில் இருந்து, தாய்ப்பாலுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்து விடலாம். வேகவைத்து மசித்த காய்கறிகள், புழுங்கலரிசி, பொட்டுக்கடலை, ராகி சேர்த்து அரைத்த மாவில் கஞ்சி, மசித்த வாழைப்பழம் போன்றவற்றை முதலில் சிறிது சிறிதாகக் கொடுத்துப் பழக்கலாம்.
    இந்தச் சமயத்தில் குழந்தை, தானாக எழுந்து உட்கார முயற்சிக்கும். வாயில் போட்டுக்கொள்கிற மாதிரி சிறிய பொம்மைகளாக இல்லாமல், கைகளால் பிடித்து விளையாடுவது போலப் பெரிய பொம்மைகள் தரவேண்டும். கூடிய வரையில் தரையில் உறுத்தாத விரிப்பில் விடுவது நல்லது.

    7, 8ம் மாதங்கள்:
    கஞ்சி, மசித்த காய், பழம் இவற்றிலிருந்து கொஞ்சம் முன்னேறி, பருப்பு சேர்த்துப் பிசைந்த, மசித்த சாதம் கொடுக்கலாம். நாம் சாப்பிடுவது போலவே, மூன்று வேளைகள் திட உணவு கொடுக்கவேண்டும். தாய்ப் பாலையும் நிறுத்தக் கூடாது. 8-ம் மாதத்தில், முட்டி போட்டுத் தவழத் தொடங்கும். குழந்தைக்கு ஞாபக சக்தி வரும் வயது இதுதான். இந்தப் பருவத்துக்குத் தகுந்தமாதிரி அதன் விளையாட்டுகளும் இருக்கும். எதையாவது துணிக்குக் கீழ் ஒளித்து வைத்தால் கண்டுபிடிக்கும்; நன்றாக டிரெஸ் போட்டு, தலை வாரினால் வெளியே கிளம்புகிறார்கள் என்று புரிந்துகொள்ளும். அப்பா அலுவலகத்திலிருந்து வருவது... போன்ற எல்லாமே குழந்தைக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

    9, 10ம் மாதங்கள்:
    9-வது மாதத்தில் இருந்து விரல்களின் ஒருங்கிணைப்பு நன்றாக வந்துவிடும். சாப்பாட்டைத் தட்டில் போட்டு வைத்தால், மேலே கீழே சிந்தி, கைகளால் அளைந்து விளையாடும். ஆனால், சிறிய அளவேனும் வாயில் போட்டுக்கொள்ளும். அப்போதுதான், ஒரு வயதில் தானாகச் சாப்பிட ஆரம்பிக்கும்.

    வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எது கிடைத்தாலும் குழந்தை, அதை எடுத்து வாயில் போடும். குட்டையான மேஜை, டீப்பாய், ஸ்டூல் போன்றவற்றின் மேல் மறந்தும் கூட கனமான பொருள்களை வைக்கக் கூடாது. பிடித்துக்கொண்டு நிற்கும் ஆர்வத்தில், குழந்தை மேஜை விரிப்பைப் பிடித்து இழுக்கக் கூடும். அதன் மேலுள்ள பொருட்கள், குழந்தையின் மேல் விழுந்து காயப்படுத்தலாம். இந்தப் பருவத்தில், காலை, மதியம், இரவு என்பதோடு, 4-வது வேளையாக மாலையில் ஏதாவது 'ஸ்நாக்’ கொடுக்கலாம்.

    ஒரு வயதில் பேச்சு வர ஆரம்பிக்கும். திட உணவு, தாய்ப்பால் ஆகியவற்றுடன், பசும்பால் அல்லது பாகெட் பால் போன்ற வேறு பால் ஓரிரு வேளை கொடுக்கலாம். தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்க வேண்டும். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலைப் பிழிந்து எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டுப் போகலாம். ஆனால், குழந்தைக்குக் கொடுப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் வெளியே எடுத்து, சூடுபடுத்தாமல், அறை வெப்பநிலைக்கு வந்ததும் கொடுக்கலாம்.

    வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், இருமல்... மூன்றும், ஒரு வயதுக்கு மேல் அடிக்கடி வரும். இவற்றில் ஏதேனும் ஒன்று வந்த பிறகும் குழந்தை, 'ஆக்டிவ்’ ஆக இருக்கிறதென்றால், பயப்பட வேண்டாம். தானாகவே ஒன்றிரண்டு நாளில் சரியாகிவிடும். ஆனால், மேற்கூறிய 3 பிரச்னைகளில் ஏதேனும் ஒன்று இருந்து, குழந்தை சோர்ந்து போய் இருந்தாலோ, மூச்சுத்திணறல் இருந்தாலோ, மருத்துவரின் ஆலோசனையுடன் ஆன்டிபயாடிக் கொடுக்கலாம்.
    அப்புறம் என்ன? ''நான் வளர்கிறேனே மம்மி'' என்று, இதன் பின்னர் கிடுகிடுவென வளர்ந்துவிடுவார்கள் குழந்தைகள்''.

    பிறந்து 5 முதல் 10 நாள்களுக்குள் (சில சமயம், 3 நாள்களில்), பச்சிளம் சிசுவின் தொப்புள்கொடி, அதுவாகவே விழுந்துவிடும். பிடித்து இழுக்கவோ, மருந்து வைக்கவோ தேவையில்லை. தானாகவே ஆறிவிடும்.

    எல்லாக் குழந்தைகளுக்குமே பிறந்ததும் மஞ்சள்காமாலை லேசாக இருக்கும். முகம், நெஞ்சு, கண்கள் லேசாக மஞ்சளாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. அது சாதாரணமானதுதான். ஆனால், கைகள், கால்களில் மஞ்சள் பரவினால், ரத்தப் பரிசோதனை செய்து, 'நீல நிற ஒளி’யில் வைக்க வேண்டுமா என்று பார்க்கவேண்டும்.

    பிறந்த 5 நாட்களில், பிறந்தபோது இருந்த எடையை விடக் குறைந்து, மறுபடியும் 10-வது நாளில் இருந்து எடை கூடும். அதனால், கவலைப்பட வேண்டாம். குழந்தை நன்கு சிறுநீர் கழிக்க வேண்டும்.    Last edited by chan; 5th Jun 2016 at 01:33 PM.
    jv_66 likes this.

  6. #16
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    42,316

    Re: பாப்பாவை பாதுகாக்க 10 கட்டளைகள்!

    Goodoo.. ll be Useful for Young Moms..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->