கோடையில் தாய் சேய் நலன்

குழந்தைகளுக்கு கை, கால், தலை என மொத்த உடலையும் போர்த்தி ஆடைகள் அணிவிக்க வேண்டாம். செயற்கை இழை மற்றும் கம்பளியால் ஆன ஆடைகள் வேண்டவே வேண்டாம். இதனால் குழந்தையின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உறிஞ்சப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் மீண்டும் சருமத்திலேயே தங்கி வியர்க்குரு பிரச்னை வரலாம்.


போதிய காற்றோட்டம் இல்லாததால் எந்த நேரமும் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். எனவே, வியர்வையை உறிஞ்சக்கூடிய, தளர்வான பருத்தியால் ஆன ஆடைகளையே அணிவிக்க வேண்டும்.


ரப்பர் ஷீட் மேல் குழந்தையைப் படுக்க வைத்தால், ஷீட் மீது ஒரு துணியை விரித்து அதன் மீது குழந்தையைப் படுக்க வைப்பது அவசியம்.


வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், காலை ஒன்பது மணி முதல் மாலை மூன்று மணி வரை குழந்தையை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டாம். காலை ஆறு மணிக்கு அடிக்கும் வெயில்தான் பிறந்த குழந்தைக்கு ஏற்றது. அந்த நேரத்தில் குழந்தையை வெளியில் கொண்டு வந்தால், குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்-டி சத்து கிடைக்கும்.


பிரசவம் ஆன பெண்கள் கண்டிப்பாக நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிறுநீர் நன்றாகப் பிரியும்; தொற்றுநோய்களும் ஏற்படாது. ஜூஸ், வடித்த கஞ்சி போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணிப் பழம், இளநீர், கிர்ணிப்பழம், வெள்ளரிக்காய் போன்ற சூடு தணிக்கும் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களை நன்றாக கழுவியபின் சாப்பிடலாம். அதேநேரம் அளவாகச் சாப்பிட வேண்டும். கூழ், மோர் போன்ற இயற்கை பானங்களும் நலம் பயக்கும்

source vikatan

Similar Threads: