எப்படிக் குளிப்பாட்ட வேண்டும்?குளிப்பாட்டும்போது குழந்தையின் மூக்கு, வாய் வழியாகத் தண்ணீர் சென்றுவிடாமல் கவனமாகக் குளிப்பாட்ட வேண்டும்.

ஆனால், சிலர் குழந்தையின் தலை, உடம்பு முழுக்க எண்ணெய் தடவி குளிப்பாட்டுவார்கள். குழந்தையின் மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் எண்ணெய் செல்லும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு, நெஞ்சில் சளிக்கட்டுதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குழந்தையைக் குளிப்பாட்டும்போது தலை, மூக்குப் பகுதிகளை நன்றாக அழுத்திப் பிடித்துவிட்டால்தான் குழந்தைக்கு நல்ல முக அமைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது. பெற்றோர்களின் மரபு வழியைப் பொருத்தே குழந்தையின் உடல் அமைப்பு இருக்கும். இதனை நாமாகப் பயிற்சிகள் செய்து மாற்ற முடியும் என்று நம்புவது ஆதாரமற்றது.


இன்னும் சிலர், குழந்தையின் நலனில் அதிகக் கவனம் செலுத்துகிறோம் என்ற பெயரில், பச்சிளம்குழந்தைகளைக் குளிப்பாட்ட பிரத்யேகமாக ஆட்களை நியமித்திருப்பார்கள். அவர்களோ, 'குழந்தைக்குச் சளி எடுக்கிறேன் எனச் சொல்லி பச்சிளம் குழந்தையின் வாயினுள் பலமாக ஊதுவார்கள். அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து சிறிது சளியும் வெளிப்படும். இது மிகவும் ஆபத்தான செயல்முறை.

எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பாகவே சிறிதளவு இருமல், தும்மல், மூக்குச் சளி இருக்கத்தான் செய்யும்; இதனால் குழந்தையின் உடலுக்கு எந்தவிதக் கேடும் இல்லை. ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகச் சளியை வெளியேத் தள்ளுவது தவறு.

மேலும், பெரியவர்களது வாயினுள் இருக்கும் லட்சக்கணக்கான கிருமிகளும் நேரடியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும் அபாயமும் இருக்கிறது. சாதாரண 'பாத் டப்களில் குழந்தையை அமரவைத்துக் குளிப்பாட்டுவதே பாதுகாப்பான முறைதான்.

Similar Threads: