Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

குழந்தை வளர்ப்பு முதல் மாதம்


Discussions on "குழந்தை வளர்ப்பு முதல் மாதம்" in "Newborn and Infants" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    குழந்தை வளர்ப்பு முதல் மாதம்

    தாய் தினமும் சத்துள்ள உணவுகளையே உட்கொள்ளவேண்டும்.தினமும் இரும்புச்சத்து கல்சியம் மற்றும் விட்டமின் c வில்லைகளை உட்கொள்ளவேண்டும்.

    குழந்தையின் முகத்துக்கு அருகில் பெற்றோர் முகத்தை கொண்டு செல்லும் போது அது பெற்றோரை அடையாளம் காண முடிவதை உணர முடியும்.இதனால் அதன் புத்தி கூர்மையும் வளர்ச்சி அடைகிறது.

    குழந்தையின் கேட்கும் திறன் விருத்தி அடைவதால் தாலாட்டு பாடமுடியும்.இனிமையான ஒலி எழுப்பும் கிலுகிலுக்கி போன்றவற்றால் குழந்தைகள் சந்தோஷப்படும்.

    தாய்ப்பாலில் இல்லாத சத்து

    தாய்ப்பாலில் வைட்டமின் டி இல்லை. எனவே குழந்தை பிறந்தவுடனே அதற்கு வைட்டமின் டி சொட்டு மருந்து அவசியம் கொடுக்க வேண்டும். அதே போல் தாயும் வைட்டமின் டி டேபிலேட்ஸ் எடுத்து கொள்ள வேண்டும்

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: குழந்தை வளர்ப்பு முதல் மாதம்

    தாய்ப்பால் சில குறிப்புகள்

    பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

    பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

    பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.





  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: குழந்தை வளர்ப்பு முதல் மாதம்

    தாய்ப்பால் அதிகமாக சுரக்க

    பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர்; அருந்தி விட்டு கொடுக்க வேண்டும்.

    இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்

    வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

    மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.
    அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter