Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree72Likes

Important aspects of parenting - குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க 


Discussions on "Important aspects of parenting - குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க " in "Newborn and Infants" forum.


  1. #1
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Important aspects of parenting - குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க 

    குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...
    இன்றைய பதிவில் பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்...

    குழந்தையின் வளர்ச்சி :


    பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது.பிறந்த குழந்தையானது...


    முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்

    2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்
    3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.
    5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
    6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். மா, பா போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
    7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.
    8-வது மாதத்தில் : தவழும்.
    9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் மாமா, பாபா போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் டாட்டா சொல்லும்.
    10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.
    12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும் அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
    13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.
    24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.
    36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.

    • கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி மற்றும் டி அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றைபாலூட்டும் தாய்மார்கள்உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.
    • பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.
    • ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.


    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and sumitra like this.

  2. #2
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்&

    பிறந்த குழந்தைக்கான உணவு





    • பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிரசவித்தவுடன் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்புடன் இருக்கும். இதைச் சீம்பால் என்பார்கள். இதில் பல ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மைகளும் இருப்பதால் இதைத் தவறாமல் குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
    • பிறந்த குழந்தையைத் தொட்டிலில் போடாமல் தாய் தன் அரவணைப்பில், படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலிலோ தூளியிலோ போடும் பழக்கம் நல்லது அல்ல.
    • குழந்தை பிறந்ததும், சர்க்கரை, தேன் ஆகியவை கலந்த நீர், வெண்ணெய் போன்றஎதுவும் வேண்டாம். வெயில் காலத்தில் மட்டும் கொதித்து ஆறிய சுத்தமான நீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைசுமார் 15 மி.லி கொடுக்கலாம். வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மருந்துகளை, தேவைப்பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனையுடன் கொடுக்கலாம்.
    • தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் பசும்பாலில் இரண்டு பங்கும் தண்ணீரில் ஒரு பங்கும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறவைத்த பிறகு சிறிதளவு சர்க்கரையை சுவைக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
    • குழந்தைக்குப் பால் ஊட்டி முடித்தவுடன் படுக்கையில் போட்டால், பாலைக் கக்கிவிடும். பால் ஊட்டியவுடன் குழந்தையைத் தோளில், அதன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் விடும். ஏப்பம் விட்ட பிறகு படுக்கையில் விட்டால் பாலைக் கக்காது.

    பாலுடன் சேர்ந்த பிறஉணவுகள் :


    தாய்ப்பாலை சாதாரணமாக ஒன்பது மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்து வருவது நல்லது.


    • ஆறாவது மாதத்தில், தாய்ப்பாலுடன், சிறிதளவு கோதுமை மற்றும் அரிசி, பருப்பு, கலந்த காரம் இல்லாமல் தயாரித்த உணவை ஊட்டலாம். மேலும் மசிந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
    • ஒன்பதாவது மாதத்தில் மேற்கூறியவற்றுடன் வேகவைத்த முட்டையின் மஞ்சள்கரு, கனிந்த வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
    • பத்தாவது மாதத்தில், இட்லி, தோசை, போன்றவற்யும் ஊட்டலாம்.
    • பதினொன்றாவது மாதத்தில், வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவையும் கொடுக்கலாம்.
    • பன்னிரண்டாவது மாதத்திலிருந்து பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.
    • அரிசி, கோதுமை, கேழ்வரகு, பொட்டுக் கடலை போன்ற உணவுகளை சர்க்கரையைக் கலந்து கொதிக்க வைத்துக் கஞ்சியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
    • புதுவகை உணவைக் கொடுக்கும் போது பழக்கமான உணவைக் கொடுப்பது போல ஒட்டு மொத்தமாக அதிகம் கொடுக்கக் கூடாது. எந்தப் புதுவகை உணவையும் தினமும் ஒருமுறைசிறிதளவு கொடுத்துப் பழக்கிய பிறகே, அந்த உணவின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.



    Last edited by sumathisrini; 17th Jun 2013 at 11:55 AM. Reason: External link removed
    jv_66, sumitra and nivan like this.

  3. #3
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்&

    குழந்தையும் கை மருத்துவமும் :






    • பிறந்த குழந்தைகளுக்கு எரி சாராயத்தில் (ஸ்பிரிட்) நனைத்த பஞ்சால் தொப்புளை லேசாகத் தொட்டு சுத்தம் செய்யலாம். தொப்புளிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
    • பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பெரும்பாலான குழந்தைகளின் கண்களும் உடலும் லேசான மஞ்சள் நிறமாக மாறலாம். குழந்தை பிறந்த பிறகு அதனுடையகல்லீரலின் செயல் திறன் முழுமை பெற10 – 15 நாட்கள் ஆகும் என்பதால், மஞ்சள் நிறமாற்றம் குழந்தையின் உடலில் ஏற்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகும் உடல் மஞ்சள் நிறமாக இருந்தால் அது “மஞ்சள் காமாலை” நோயாக இருக்கலாம்.
    • பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும்.இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
    • சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மலம் கழிக்கும். அதனால் பிரச்சனை இல்லை. வயிறு உப்புதல் இல்லாமலும் குழந்தை நன்கு உணவு உண்டும் சுறுசுறுப்புடனும் இருந்தால் மலம் கழித்தலில் ஒரு கோளாறும் இல்லை. குழந்தையின் உடல் எடை வயதுக்கேற்றஅளவு இருக்க வேண்டும். மேலும் தண்ணீர், பழரசம் இவற்றைக் கொடுத்தாலே யாதொரு தடங்கலுமின்றி குழந்தை சுலபமாக மலம் கழிக்கும்.
    • குழந்தைக்கு பேதி ஏற்பட்டால் பயந்து கொண்டு தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. முதலுதவியாக சர்க்கரை – உப்புச் கரைசல் நீரை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லியும் ஒவ்வொரு முறைபேதி ஆனதற்கு பிறகு சுமார் 100 மில்லியும் கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை உப்புக் கரைசலை கீழ்க்காணும்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்.
    • கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கைப்பிடி சர்க்கரை, மூன்று சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு, இளநீர் 100 மில்லிஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பேதி நிற்கும் வரை உபயோகிக்க வேண்டும்.
    • இத்தகைய கரைசல் மாவு, மருந்துக் கடைகளில் எலக்ட்ரால் மற்றும் எலக்ட்ரோபயான்என்ற பெயர்களில் கிடைக்கின்றன.
    • பேதியாகும் போது குழந்தையின் உச்சிக் குழி அமுங்கி இருத்தல், குழந்தை உணவு உண்ணாதிருத்தல், கண் சொருகிவிடுதல், வலிப்பு, அதிக ஜுரம், மூச்சு வேகமாக விடுதல், வயிறு உப்புதல் ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    குழந்தைகளுக்கான சுகாதாரம் :




    • கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
    • புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
    • குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.
    • குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.
    • குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
    • குழந்தையின் கை நகங்களை வெட்டிவிட வேண்டும். அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
    • குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.

    நன்றி : மருத்துவர் திரு .ஸ்டீபன் அவர்கள்..


    Last edited by sumathisrini; 17th Jun 2013 at 11:56 AM. Reason: External link removed
    jv_66 and sumitra like this.

  4. #4
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

    உங்கள் குழந்தையின் செயல்பாடுகள் மீதான உங்களின் அணுகுமுறை தொடர்பாக ஆராயவேண்டிய விஷயங்களையும் அதற்க்கு தேனையான அம்சங்களைப் பற்றியும் அலசுவோம்.பொதுவாகவே அனைத்துப் பெற்றோர்களும்விரும்புவது தங்கள் குழந்தைகள் தலைசிறந்த மேதைகளாக தரணியில் வலம்வர வேண்டுமெனவே ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வழைமுறைகள் சரிவரத் தெரிவதில்லை.இதற்க்கான ஒரு பத்து கேள்விகள் கீழே முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து எத்தனை விஷயங்களில் சரி தவறு என்று கணக்கிட்டு உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.பதிவின் இறுதியில் தேவையான அம்சங்கள் பற்றி காண்போம்.


    • பிஸ்கட்டுகள் நிறைந்த ஒரு டப்பாவை உங்களின் இரண்டு வயது குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அந்த செயலை கண்டித்து, குழந்தையிடமிருந்து டப்பாவை பிடுங்கி விடுவீர்களா?
    • உங்கள் குழந்தை சகதியில் விளையாடிக் கொண்டிருந்தால், சத்தம்போட்டு, குழந்தையை சுத்தப்படுத்தி, வீட்டிற்குள், சுத்தமான பொம்மைகள் நிறைந்துள்ள இடத்தில் விடுவீர்களா?
    • நீங்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருக்கையில், உங்கள் குழந்தை சில காலி அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுக்கும் சத்தம் கேட்டு நீங்கள் அங்கு சென்று பார்க்கையில், மேலும் ஒரு அட்டைப் பெட்டிக்காக உயரமான அலமாரியில் உங்கள் குழந்தை ஏறிக்கொண்டுள்ளது. இதனால் கோபம் கொண்டு குழந்தையை கடிந்துகொண்டு, அந்த இடத்திலிருந்து குழந்தையை அப்புறப்படுத்தி, தொலைக்காட்சியை இயக்கி அதன் முன்பாக குழந்தையை அமர வைப்பீர்களா?
    • உங்களின் குழந்தை தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து, கார்டூன் சேனல்களையோ அல்லது வர்த்தக விளம்பரங்களையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தால், உங்கள் குழந்தையைப் பார்த்து, சமர்த்து என்று சொல்வீர்களா?
    • ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கையிலேயே, வேறொரு நாற்காலியை இழுக்கும்போதோ, தொலைக்காட்சி சேனலை மாற்றும்போதோ அல்லது இடத்தை விட்டு இறங்கி வேறு எதையாவது தேடி அலைந்து திரியும்போதோ, நீங்கள் பொறுமையை இழந்து, குழந்தையை அதட்டி அதன் பழைய இடத்திலேயே அமர வைப்பவரா?
    • உங்களின் உதட்டு சாய பாட்டிலைப்பார்த்து, அதை எடுத்து தனது உடலில் சாயம் பூசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் நீங்கள் பொறுமையை இழக்கிறீர்களா?
    • உங்களின் பத்து வயது பிள்ளையானது, பல வண்ணங்களில் ஒரு கோணல்மானலான படத்தை வரைந்து வந்து உங்களிடம் காட்டினால், நீங்கள் அதை சில நொடிகள் கடமைக்காக பார்த்துவிட்டு, சூப்பர் என்று சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் வேலையில் ஆழ்ந்து விடுவீர்களா?
    • உங்கள் குழந்தை வரைந்ததை என்ன என்று கேட்டு, அதற்கு ஏதேனும் ஒரு மிருகத்தையோ, பறவையையோ அல்லது பொருளையோ உங்கள் குழந்தை சொன்னால், அதைக்கேட்டு ஏளனமாக சிரித்து, குழந்தை சொன்னதை மறுப்பீர்களா?
    • உங்கள் 6 வயது பெண் குழந்தை, தனது அண்ணனின் துப்பாக்கி பொம்மை அல்லது கட்டுமான அமைப்பை எடுத்து விளையாடினால், நீங்கள் அவளிடம் இது பெண்களுக்கானதல்ல, எனவே உனக்கான பொம்மையை எடுத்து விளையாடு என்று சொல்பவரா?
    • உங்கள் பனிரெண்டு வயது குழந்தை உங்களிடம் வந்து, தான் ஒரு விஞ்ஞானியாக போகிறேன் அல்லது தத்துவ ஞானி ஆகப் போகிறேன் என்று சொன்னால், அது மிகவும் கஷ்டம் அல்லது முடியாத காரியம் என்று சொல்பவரா நீங்கள்?
      மேற்கண்ட பத்து கேள்விகளுக்கு உங்களின் பதில் இல்லை என்று இருந்தால், நீங்கள் ஒரு சிறந்த பெற்றோர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உங்கள் குழந்தைகளை மேதைகளாக வளர்க்கும் செயல்பாட்டில், நீங்கள் முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

      அதேசமயம், ஏழு முதல் ஒன்பது வரை உங்களின் பதில்கள் இல்லை என்று இருந்தால், குழந்தைகளை மேதைகளாக வளர்க்கும் செயல்பாட்டின் வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, உங்களின் இதர பலவீன பகுதிகளை சரிசெய்து கொள்ளுங்கள்.

      மேற்கண்ட கேள்விகளுக்கு ஆறு மற்றும் அதற்கும் குறைவாக உங்களின் பதில் இல்லைஎன்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேதமை வளர்ச்சியை நீங்கள் தடுக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்களின் மனநிலை மற்றும் குழந்தைவளர்ப்புத்தன்மையை நீங்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

      ஏனெனில் உங்களின் குழந்தை தற்போது வெற்றிகரமான வாழ்க்கை என்னும் மாபெரும் கடலின் கரையில் நின்று கொண்டுள்ளது. அந்தக் கடலை கடப்பதற்கு உங்களின் குழந்தைக்கு அடியிற்கண்ட மூன்று விதமான விஷயங்கள் கட்டாயம் தேவை.

      1. படைப்புத் திறன் Creative Skills

      2. கற்பனைத்திறன் Imagination Skills

      3. அவர்களுக்கான சுதந்திரம் - Independence

      ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.அவற்றைப் பற்றி விரிவாக அலசுவோம்.



    jv_66 and sumitra like this.

  5. #5
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

    என்ன நண்பர்களே சுயபரிசோதனை முடித்துவிட்டீர்களா..?. நமது குழந்தைகளை வெற்றிகரமான மேதைகளாக உருவாக்குவதில் படைப்புத்திறன்,கற்பனைத்திறன்,அவர்களுக்கான சுதந்திரம் ஆகியவையே மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.ஒரு மேதை என்பவர் வெறுமனே விஷயங்களை எளிதாக புரிந்து கொள்பவர் அல்ல.அவர் தனக்கான தனித்தன்மையை இந்த சமூகம் மற்றும் இந்த உலகிலிருந்து பெறுகிறார். எனவே, ஒரு குழந்தையின் படைப்புத்திறன் பெரியளவில் எழுச்சிப் பெறுவதற்கு, படைப்பாக்க ஆர்வம், கற்பனை மற்றும் சுதந்திரம் ஆகியவை அதற்கு கட்டாயம் தேவை.

    படைப்புத்திறன் - Creative Skills.

    படைப்புத்திறனுக்கான அடிப்படை தன்மையாக படைப்பாக்க ஆர்வம் திகழ்கிறது. படைப்புத்திறனை உங்கள் குழந்தையினுள் உருவாக்க, பலவித விஷயங்களைப் பற்றிகேள்விக் கேட்கும் பழக்கத்தை தூண்டுங்கள்.குழந்தையானது, புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதன்மூலம் அக்குழந்தைக்கு புதிய எண்ணங்கள் பிறக்கும்.
    ஒரு குழந்தை கேள்வி கேட்கும்போது, உங்களின் முழு கவனத்தையும் அதன்பால் செலுத்தவும். ஏனெனில் இதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு பொதுவாக கற்றுத் தரப்படுகிறது. நாமும் அதைத்தான் அவர்களிடம் சொல்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மை உதாசீனப்படுத்திய பெரியவர்களை நாம் விரும்பியிருக்கிறோமா? அல்லது மனதுக்குள் மதித்திருக்கிறோமா? எனவேதான், குழந்தைக்கான முக்கியத்துவத்தை நாம் நிச்சயம் வழங்கியாக வேண்டும்.மேலும் உங்கள் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, கண்ணால் காணும் காட்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கலாம். (அந்த மனிதர் ஏன் செடிக்கு நீர் ஊற்றுகிறார், நின்று கொண்டிருந்த கார் எவ்வாறு ஓடியது, ஏன் கடை வைத்திருக்கிறார்கள்)

    இதன்மூலம் சிந்தனைத்திறன் மேம்படும். ஏன், எதற்கு என்று யோசிப்பார்கள். அதற்கு விடைகாண முயல்வார்கள்.

    கற்பனைத்திறன் - Imagination Skills

    பள்ளியில் ஒரு குழந்தைக்கு, வரலாறு, புவியியல், சமூகவியல், அறிவியல், கணிதம் போன்ற பல பாடங்களைப் பற்றிய அம்சங்கள் பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கற்பனைத்திறன் சேர்வது மிகவும் முக்கியம். கற்பனையற்ற அம்சங்கள் என்பவை பசுமையில்லாத தாவரங்களைப் போன்றவை. எனவே, பாடத்திட்டத்தில், ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் என்ற அம்சம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனினில், படைப்புத்திறனின் உயிநாடியாகஇந்த ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் திகழ்கிறது. உதாரணமாக, ஒரு விஞ்ஞானி ஒரு விஷயத்தை முதலில் கற்பனை செய்து, பின்னர் அதை நிஜமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அது தோல்வியடையும்போது, மீண்டும் வேறொரு கற்பனையை மேற்கொண்டு, தனது முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த செயல்முறைதான் அனைத்து வகை துறைகளிலும் இருக்கிறது.

    உங்கள் குழந்தையின் கற்பனை சமயத்தில் அபத்தமாகவும், தவறாகவும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்காக அவர்களைத் திட்டுவது அதைவிட அபத்தமானது. ஏனெனில், இதன்மூலம் கற்பனை செய்யவே பிற்காலத்தில் குழந்தை பயப்படும். ஏனெனில் இதுபோன்ற கற்பனைகள்தான் வருங்காலத்தில் செம்மையான சிந்தனைகளாக மாறும்.

    அவர்களுக்கான சுதந்திரம் - Independence

    ஒரு மேதைக்கு, சுதந்திரம் என்பது ஜீவ நீரைப் போன்றது. அந்த சுதந்திரத்திற்கு தடை ஏற்பட்டால், ஒரு இளம் மேதை தன்னை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாக்கிக் கொள்வதில் பலவிதமான சிக்கல்களை ஏற்படும். ஒரு வளரும் மேதைக்கு பெரியளவிலான புறக்கணிப்பு ஏற்படக்கூடாது. அப்போதுதான், அந்த மேதை இன்னும் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். ஒரு இளம் மேதையின் சுதந்திரமானது, பெற்றோர் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில்தான் அடங்கியுள்ளது.

    பழைய நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அதுதான் உலக நியதி. எனவே, உங்கள் குழந்தை அந்த விதிகளை மீறினால், நீங்கள் அதிர்ச்சியடையாமல், ஆச்சர்யமடைந்து, உங்களின் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும்.

    வறுமை என்பது ஒரு சிறு தடைதான். அதை மீறி சாதனை புரிந்தவர்கள் எத்தனையோ பேர். முறையான ஆதரவு, உற்சாகமளித்தல், திறமையை கண்டுகொண்டு உதவுதல், சுதந்திரம் அளித்தல், சோதனைகள் வந்தாலும் குழந்தையின் பக்கமே இருத்தல் போன்ற பலவித உதவிகள் கிடைக்காமல் காணாமல் போகும் மேதைகள்தான் அதிகம்!எனவே, அவர்களுள் ஒருவராக, உங்களின் குழந்தையும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    Last edited by sumathisrini; 17th Jun 2013 at 11:51 AM. Reason: External link removed
    jv_66 and sumitra like this.

  6. #6
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

    பொதுவாக குழந்தைகளுக்கு ஆசிரியரை பிடிக்கவில்லையென்றால் கூட அவர்கள் நடத்தும் பாடங்கள் பிடிக்காது, படிக்கப் பிடிக்காது என்பதை ஆசிரியர்கள் உணர்வதில்லை. அதனால் மாணவர்களுக்குப் பிடித்தது போல நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை.ஆசிரியர் பாடம் நடத்தும்விதம் பிடிக்க வில்லையென்றாலோ அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை என்றாலோ கூட ஆசிரியரை பிடிக்காது. இதன் காரணம் ஆசிரியர் நமது பிள்ளைகளை அடிப்பதினால் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதில் யார் செய்தது சரி அல்லது தவறு என்று பார்ப்பதை விட ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்றும் அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் பார்ப்போம்.


    ஒருவரை அடிப்பது என்பது யார் செய்தாலுமே தவறுதான். மிருகங்களுக்குத்தான் அடித்து பயிற்சி கொடுப்பார்கள். ஆனால் இன்று மிருகங்களை அடிப்பதையே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியிருந்தும் அடிக்கும் பழக்கம் மட்டும் இன்னும் முழுதாக நம்மிடமிருந்து நீங்கவில்லை. பெற்றோர் , ஆசிரியர் அல்லது சகமாணவன் என யாரோ ஒருவர் யாராவது ஒருவரை அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் இன்னும். என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் நம் அடிமனதின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனம் நீங்காமல் இருக்கிறதோ ? என்று தோன்றுகிறது.


    ‘என் பிள்ளை மேல கையை வைச்சது யாரு ? இப்பவே அந்த டீச்சர் இங்க வரணும்’ என்று பள்ளி வாசலில் நின்று கத்துகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். ‘எங்களாலதான அவன அடக்க முடியல . நீங்களாவது நாலு அடி வைச்சாவது அவன நல்லபடியா கொண்டு வந்தா சரிதான்’ என்று சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.இதில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, அடிப்பதால் யாரும் திருந்தியது கிடையாது. கத்துவதாலும் யாரும் திருந்துவது கிடையாது. இப்படி எல்லாம் செய்வதால் ஆசிரியர்கள் மேலுள்ள மரியாதை மேலும் குறைந்து குழந்தைகள் இன்னும் அலட்சியமாக மாற ஆரம்பிக்கிறார்கள்.எனவே, ஆசிரியர்கள் பற்றிய குழந்தைகளின் கருத்துகள் என்ன என்பதை அவ்வப்போது மனம் விட்டு பேசுங்கள். ஆசிரியர்களைப்பற்றி குறை சொன்னால் கண்டிக்காமல் அதை நேர்மறையாக புரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.உதாரணத்திற்கு ஆசிரியர் என்னை பாரட்டவில்லை. எப்போதும் குறைதான் சொல்கிறார் என்றால், பாராட்டுகிறவர்கள் நம்மை அதே நிலையில் வைத்திருப்பவர்கள் விமர்சிப்பவர்களே நம்மை மேம்படுத்துபவர்கள் என்பதை விளக்கமாக சொல்லிக்கொடுங்கள்.‘நீ நல்லா படிக்கிறேன்னு சொன்னா, சரி நாம தான் நல்லா படிக்கிறோமேன்னு நீ அலட்சியமா இருந்துடக்கூடாதுன்னுதான் நீ இன்னும் படிக்கணும்னு உன்னோட வாத்தியார் சொல்றாங்க’ என்பதினை புரிய வையுங்கள்.

    ஆசிரியர்களை மதிக்கும் பழக்கம், மாணவர் களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று பெரும்பாலான ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையும் கூட.போதாக்குறைக்கு சினிமாவில் ஆசிரியரை நக்கல் அடிப்பது என்று ஸ்பெசல் கிளாஸ் வேறு நடத்துகிறார்கள்.இதனை தவிர்க்க உங்கள் குழந்தைகளிடம், ’இந்த உலகத்தில் வெற்றி பெற்ற யாவரும் ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலால் வென்றவர்கள்தான்’ என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.ஆசிரியர் நமக்கே தெரியாமல் நம்மை மேம்படுத்துபவர் என்பதை எடுத்துச்சொல்லி வகுப்புக்கு வராத ஆசிரியராக இருந்தால்கூட அவர்களிடமும் மதிப்போடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்துங்கள்.

    மேலும் குறைந்த மதிப்பெண் எடுக்கிற மாணவர்களை விட கற்றுக்கொள்ளும் ஆர்வமே இல்லாத மாணவனைத்தான் ஆசிரியர்களுக்கு பிடிப்ப தில்லை. எனவே உங்கள் குழந்தைகள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் ஆசிரியர்களை பயந்து விலகாமல் சந்தேகம் கேட்கவும் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டும்படியும் கேட்கச் சொல்லுங்கள்.எவ்வளவுதான் நன்றாக படிக்கிற பையனாக இருந்தாலும் வகுப்பில் அருகில் உள்ள மாணவனிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் ஆசிரியர்களுக்கு பிடிப்பதில்லை. உங்கள் குழந்தைக்கு அந்தப்பழக்கம் இருந்தால் உங்கள் குழந்தையை மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்களையும் அழைத்து இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள ஊக்குவியுங்கள்.வகுப்பறையில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகளை பெற்றோர்களே கற்றுக் கொடுத்துவிட்டால் இது போன்ற அசம்பாவித சம்பவங்களுக்கு வாய்ப்பேயில்லை.ஆசிரியரை நேசிக்க வைப்பது குழந்தைகளை மேதைகளாக்க விரும்பும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது.ஏனெனில் ஆசிரியரை பிடித்தால்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும்.

    jv_66 and sumitra like this.

  7. #7
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்ĩ

    இன்றுள்ள அவசர சூழ்நிலையில் ஒரு கைக்குழந்தை அழுதால், பசியாகதான் இருக்கும் அவர்களுக்கு பாலூட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கணிப்பு. ஆனால் குழந்தை அழுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    முதலில் குழந்தையின் பசி :


    • பிறந்த முதல் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொருமுறையும் தாய்பால் குடித்த பின்னர் மூன்று மணி நேரத்திற்குப் பின்புதான் பசி ஏற்படும். இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தை அழத் தொடங்கினால் நிச்சயம் அது பசியினால் ஏற்பட்டிருக்காது. வேறு காரணம் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
    • முதலில் குடித்த பால் போதுமானதா? என்பது தாய்க்கே தெரியும். அவ்வாறு எப்பொழுதும் போல் குழந்தை பால் குடித்திருந்தால் வேறு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும்.
    • பால் குடித்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து குழந்தை அழுதால் மட்டுமே குழந்தைக்கு மீண்டும் பால் கொடுத்துப் பார்ப்பதில் தவறொன்று மில்லை.
    • புட்டிப்பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் முதலில் எப்பொழுதும் குடிக்கும் அளவு பால் குடித்திருகிறதா என்பதைக் கவனிக்கவும். அப்படியிருந்தால் அழுகைக்குப் பசி காரணமாக இருக்க முடியாது.

    குழந்தையின் வயிற்று வலி :


    • திடீரெனக் குழந்தை அழுவதற்கு வயிற்று வலி ஒரு காரணம். பாலுடன் சர்க்கரையோ, காபியோ இதர பானங்களோ சேர்த்துக் கொடுத்தாலும் வயிறு வலி ஏற்படும்.
    • வயிறு உப்பியும், தட்டினால் கிண் என்று சத்தம் கேட்டும், அடிக்கடி காற்று வெளிப்பட்டுக் கொண்டும் இருந்தால் ஜீரணம் சரியில்லை எனலாம்.
    • அடுத்து கொடுக்க வேண்டிய ஒருவேளை பாலைக் கொடுக்காமல் விட்டு விடவும். குடலுக்கு ஓய்வு தேவை. தண்ணீர் எந்த நேரமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கவும். காற்று வெளிப்பட வலி குறையும். குழந்தையும் அயர்ந்து தூங்கிவிடும்
    • குழந்தைக்கு திடீரென காய்ச்சலோ, தலை வலியோ, தடுமனோ, நெஞ்சு சளியோ இருக்கக்கூடும். அதனால் குழந்தை நலிவுற்று, தூக்கம் கெட்டு, எந்த நேரமும் அழவும் கூடும். குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்பதை முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
    • முகம் சோர்வுற்று, மூக்கிலிருந்து தண்ணீர் வடியவும் உடல் லேசான சூட்டுடனும் இருக்கும். தும்மலும், இருமலும் ஆரம்பிக்கக்கூடும் அல்லது குழந்தைக்கு அஜீரணத்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.


    தவழும் வயதில் குழந்தை கை சூப்புவது :

    • தாயிடம் பால் குடிக்கும் காலங்களில் அல்லது புட்டியில் பால் அருந்தும் காலங்களில் ஆசை தீர குழந்தை சுவைத்துக் கொண்டிருக்கப் போதிய அவசரம் கிடைக்காமல் போய்விடுவதுதான் கை சூப்புவதற்குக் காரண மாகக் கருதப்படுகிறது.தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளை விட புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளிடையே தான் இப்பழக்கம் அதிக மாகக் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்குப் பால் முடிந்ததும் தாயார் புட்டியைக் குழந்தையிடமிருந்து எடுத்து விடுதலால் அதற்குப் போதிய பால் கிடைத்திருந்தாலும் சுவைக்கு மின்பம் பூர்த்தியடையவில்லை. ஆகவே குழந்தை பால் குடித்து முடிந்ததும் தன் கட்டை விரலைச் சூப்பத் தொடங்கிவிடும். ஆகவே குழந்தை கட்டைவிரலைச் சூப்புவது பாலுக்காக அல்ல; தனக்குள்ள சுவைக்குமின்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆகும்.
    • சிறிது நேரம் மட்டுமே கை சூப்பினால் அதைப் பற்றிக் கவலையில்லை. சில குழந்தைகள் பசி வந்ததும் பாலுக்காக அந்த நேரம் மட்டுமே அவசரம் அவசரமாகக் கை சூப்பக்கூடும். இதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. 3 அல்லது 4 மாதத்தில் பல் முளைக்கும் பொழுது ஏற்படும் உறுத்தலால் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும். இதுவும் நின்று விடுமாதலால் இதைப்பற்றியும் கவலையில்லை.
    • பெரிய குழந்தைகள் கை சூப்புவது சுவைக்குமின்பத்திற்காக அல்ல. இவ்வயதில் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் கோபம், மகிழ்ச்சி, அவசரம், பரபரப்பு, கவலை, பயம், திகில் போன்றஉணர்ச்சிகளை மறக்கக் குழந்தை கை சூப்பக் கூடும். தூக்கத்திற்காகவும் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும்.

    கை சூப்புவதால் ஏற்படும் கெடுதல்கள்:

    • கை சூப்பும் குழந்தை சுவைக்குமின்பத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்திவிடுவதால் அதற்கு வெளி உலக இன்பங்கள் அனுபவங்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன. மன வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது.
    • எந்த நேரமும் குழந்தை கை சூப்பிக் கொண்டிருந்தால் அதனால் அழுக்கும் கிருமிகளும் வாய்க்குள் புகுந்து வாய்ப்புண்ணையும். இரைப்பையில் புண்ணும் ஏற்பட்டு, பசியின்மையும், வாய் துர்நாற்றமும் ஏற்பட்டு குழந்தை மெலிந்துவிடக் கூடும். மேலும் கை சூப்புவதால் பற்கள் வரிசை மாறிவிடும். குழந்தை வாய் வழியே மூச்சுவிட ஆரம்பித்து அதனால் பல கஷ்டங்கள் உண்டாகலாம்.


    குழந்தைகளுக்கு ஏற்படும் களைப்பு :


    • குழந்தையை ஆள் மாறி மாறித் தூக்கிக் கொண்டு கொஞ்சுவதும், எந்த நேரமும் அதனுடன் விளையாடுவதும், அதனைத் திரும்பத் திரும்ப சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பதும், அதனைச் சதா ஆட்டிக் கொண்டிருப்பதும் குழந்தையின் உடம்பிலும் மனதிலும் களைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
    • குழந்தையை எந்த நேரமும் தொட்டிலும் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாலும் களைப்பு ஏற்படுவதுடன் மூளைக்கலக்கமும் ஏற்பட்டுவிடும்.
    • குழந்தையைக் காற்றோட்டமான நிசப்தமான இடத்தில் கீழே படுக்க வைக்கவும். தன் இஷ்டத்திற்கு விளையாடவோ வேடிக்கை பார்க்கவோ தூங்கவோ விட்டுவிடவும்.

    குழந்தை திடுக்கென்று அதிருதல் :


    • குழந்தையை மெதுவாகத் தொட்டாலும், ஏதாவது பட்டாலும், ஒரு சிறிய சப்தம் கேட்டாலும், திடுக்கென்று எழுந்திடும். தூக்கத்திலும் காரணமின்றி திடுக்கிட்டு அடிக்கடி விழித்துக் கொள்ளும்; அழவும் தொடங்கிவிடும். இவ்வாறான சிசுக்களில் சில, திடுக்கிட்டதும் மலம், சிறுநீர் சிறிதளவு கழித்து விடவும் கூடும்.
    • தாயின் வயிற்றுக்குள் எவ்வித அதிர்ச்சிக்கும் காரணமில்லாமல் நிம்மதியுடன் வளர்ந்து வந்த சிசுவின் நரம்புகள் வெளி உலக அதிர்ச்சிகளுக்குத் தக்கபடி பக்குவமடையாமல் இருப்பதே காரணமாக இருக்கக்கூடும். நாளடைவில் வெளிச் சப்தங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் குழந்தையின் நரம்புகள் தாமே பக்குவப்படுத்திக் கொள்வதால் நாளாக நாளாக அதிர்ச்சி குறைந்துவிடுகிறது.



    sumathisrini, jv_66 and sumitra like this.

  8. #8
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

    ஆறு வயது முதன் முதலில் வெளி உலகம்


    • ஆறு வயதிற்குப் பின்னர்தான் குழந்தைகள் பெற்றோரை எந்த நேரமும் தேடிக் கொண்டிராமல் சுதந்திரமாக வாழ ஆரம்பிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது அவர்களின் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
    • பெற்றோர்களின் நடை, உடை, பாவனைகள் அப்படியே தாங்களும் செய்துகொள்ள விரும்பிய குழந்தைகள் இப்பொழுது அவற்றில் தங்களுக்குப் பிடித்தமானவைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடவும்செய்கின்றன.உதாரணமாக பிறர் தங்களை நெருங்கி வந்து முத்தம் கொடுத்தால் அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.
    • இந்த வயதில் புத்தகம் படித்தல், வரைதல், கணக்குப் போடுதல், பாட்டுப்பாடுதல், மெஷின்களை கழற்றி மாட்டுதல், இயற்கை வள ஆராய்ச்சி போன்றவற்றில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.
    • பெற்றோரோ, மற்றோரோ அவர்களை ஒரு பொம்மை போல் வைத்துக் கொண்டு கொஞ்சுவதை அவர்கள் விரும்புவதில்லை. தாங்களும் தன்மதிப்புடன் வாழும் இளைஞர்கள் என்பதை உணருகிறார்கள். மற்றவர்களும், தங்களை அவ்வாறே நடத்த வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.
    • 3-5 வயதுக் குழந்தைகள் எதைக் கற்றுக் கொடுத்தாலும் அதைத் தவறின்றி சரிவரச் செய்ய மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். உதாரணமாக பல் தேய்க்க, குளிக்க உடை போட்டுக் கொள்ள, உட்கார்ந்து அமைதியுடன் சாப்பிடுவதில், தலைவாரிக் கொள்வதில், கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். ஆறு வயதில் மேற்கூறியவற்றை சரியாக செய்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள். பெற்றோர் என்ன சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள்.
    • இதைக் கண்டு சகிக்காமல் பெற்றோர் குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, இதைச் செய் இப்படிச் செய் என்று அதிகாரமாகப் பேசுவதோ கூடாது. குழந்தை தவறு செய்தால் அதனிடம் சாதாரணமாகப் பேசுவதுபோல் இவ்வாறு நீ செய்வது சரியில்லை என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு சென்றுவிட வேண்டும். அத்துடன் குழந்தையிடம் சிறிது கண்டிப்புடனும் நடந்து அவனைத் திருத்திவிட வேண்டும். சரிவர செய்துவிட்டால் குழந்தையைப் பாராட்டி ஒரு சிறு பரிசும்கூட அளிக்கலாம். நாளடைவில் குழந்தை தன் தவறுகளைப் புரிந்து கொண்டு தானே நிறுத்திவிடுவான்.


    ஏழு வயது முதல் பன்னிரண்டு வயது வரை..


    • ஏழு வயதிற்கு மேல் கற்பனையில் ரயில் ஓட்டுவதும், வீடு கட்டுவதும், பறக்க விடுவதும், கால்பந்து, ஹாக்கி, சடுகுடு, கிரிக்கெட், கோலி விளையாட்டு, கோலாட்டம், கும்மியாட்டம், பரத நாட்டியம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். கேரம், செஸ், சீட்டாட்டம் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டக் கூடும். விதிகளைத் தெரிந்து கொண்டால் அவற்றை மிகவும் கண்டிப் புடனும் கடைப்பிடிப்பார்கள்.
    • இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உடைகளை புத்தகங்களை இதர சாமான்களைப் பத்திரமாகவும், சுத்தமாகவும், அடுக்கியும் வைத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள். ஒரு நாள் சுத்தமாக வைத்துக் கொண்டாலும் மறுநாளே அவற்றைக் கலைத்தும் திரும்பவும் சாமான்களை இங்குமங்காக போட்டு விடக் கூடும். தங்கள் பொருட்களை நன்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்துகொண்டு தான் இருக்கும்.
    • சினிமாவிலோ, தொலைக் காட்சியிலோ, கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். ( இன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது )கொலை செய்வது, துன்புறுத்துவது, திருடுவது போன்ற கொடூரக்காட்சிகள் குழந்தைகளின் மனதைக் கெடுத்து விடக் கூடும். குழந்தைகளுக்கென்று அறிவையும், ஆற்றலையும் வளர்க்கக்கூடிய சினிமாக்களோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ அதிகம் கிடையாது. விரும்பத்தகாத பல காட்சி களையும் குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களையறியாமல் அவர்களின் காட்சிகளையும் கூட குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களின் மனம் உள்ளூர கலக்கமடையச் செய்துவிடுகிறது.
    • 12 வயது வரை அவர்கள் பேச்சுப்போட்டி, படம் வரைதல் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, தையல், எம்பிராய்டரி, ஸ்டாம்ப் சேர்ப்பது நாணயங்கள் கற்கள் சேர்ப்பது போன்றவற்றைத் தங்கள் பொழுதுபோக்காக விரும்பக்கூடும்.
    • குறிப்பிட்ட நேரங்களில் சிறுவர்களுக்கென்று வரும் காட்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் குழந்தைகள் பார்ப்பது என்று முறைப்படுத்திக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மணிக்கணக்கில் தொலைக்காட்சியின் முன் உட்காருவதை நீங்களும் குழந்தையும் நிறுத்த வேண்டும்.
    • நல்ல கருத்துள்ள புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது நன்மை தரும்.குழந்தைக்கு நிறைய புத்தகங்களை இந்த வயதில் படிக்க வேண்டு மென்ற ஆர்வத்தை ஊட்டுங்கள். பெரியோர்கள், தலைவர்கள், வீரர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் செய்த சேவைகளையும் நிறைய படிக்கச் செய்யவும்.
    • சிறு குழந்தைகள் எந்தப் பொருளைக் கண்டாலும் அது தன்னுடையது இல்லை என்றாலும் தானே வேகமாகச் சென்று எடுத்துக் கொள்வார்கள். இது திருட்டாகாது. உண்மையில் எது தங்களுக்குச் சொந்தம், எது மற்றவர்களுக்குச் சொந்தம் என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்து கொள்ள இயலாது. அவர்களை திட்டியோ அவர்களிடமிருந்து பொருட்களைப் பறித்தோ மனதைக் களங்கப்படுத்தக் கூடாது.. நீ சமத்துப்பிள்ளை அவர் பொம்மையை நீயே கொடுத்துவிடுவாய் என்று சொல்லி அவளையும் இணங்க வைத்து பொம்மையையும் அவளே விரும்பிக் கொடுத்துவிடச் செய்யவும்.
    • ஒரு குழந்தை திருடியது பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ தெரிந்துவிட்டால் அவன் மேல் மிகுந்த கோபம் கொள்கின்றனர். உடன் அக்குழந்தை மேல் பாய்ந்து அவனிடமிருந்து பொருளை மீட்கவும் அவனை அவமானப்படுத்தவும் முனைந்து விடுகின்றனர்.
    • குழந்தை திருடிவிட்டால் அந்தப் பொருளைத் தானே சென்று திருப்பிக் கொடுத்துவிட்டு வரச் செய்யுங்கள். குழந்தையை அவமானப்பபடுத்துவதைக் கூடுமானவரை தடுத்து விடுங்கள். குழந்தை தானாகவே தன் தவற்றைஉணர்ந்து திருத்திக் கொள்ள வகை செய்யுங்கள்.



    jv_66, sumitra and nivan like this.

  9. #9
    dvanitha's Avatar
    dvanitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Muscat
    Posts
    219

    Re: குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

    hi sudha,

    excellent work.... very useful tips....

    my daughter is 4 yrs old... as u said, she needs independence.... From food to dress she wants to select on her own. Daily she will select dress, shoe, clip, food for lunch box etc for her school. but sometimes i think this good or bad for her... bcoz as she started choosing on her own, if she dint get what she wants, she starts crying and wont touch what is given to her. i dont know how to change this..

    Also pls give me tips for making her to share her things with others... this is the main problem i'm facing with her. since she is only child and we are far away from our family members and relatives, she got this habit..

    sudhavaidhi and sumitra like this.
    - Vanitha

  10. #10
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

    Quote Originally Posted by dvanitha View Post
    hi sudha,

    excellent work.... very useful tips....

    my daughter is 4 yrs old... as u said, she needs independence.... From food to dress she wants to select on her own. Daily she will select dress, shoe, clip, food for lunch box etc for her school. but sometimes i think this good or bad for her... bcoz as she started choosing on her own, if she dint get what she wants, she starts crying and wont touch what is given to her. i dont know how to change this..

    Also pls give me tips for making her to share her things with others... this is the main problem i'm facing with her. since she is only child and we are far away from our family members and relatives, she got this habit..
    I will try to post dVanitha........thanks

    sumitra likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter