Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 1 Post By umasaravanan
  • 1 Post By umasaravanan
  • 1 Post By umasaravanan
  • 1 Post By umasaravanan
  • 1 Post By umasaravanan
  • 1 Post By jv_66

Breast Feeding & it's benefits-பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - ச


Discussions on "Breast Feeding & it's benefits-பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - ச" in "Newborn and Infants" forum.


  1. #1
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Breast Feeding & it's benefits-பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - ச

    தாய் கடவுளைவிட மேலானவர் என்ற கன்னட கவிஞர் தினகர்தேசாயின் அற்புத வரிகள் தாய் பாலின் மேன்மையை எடுத்து காட்டுகிறது. தாய்பால் என்பது குழந்தைக்கு ஆகாரம் மட்டுமில்லாமல் மனிதன் வாழ்வதற்கு தேவையான மூல திரவமாகவும் உள்ளது.



    ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியம் என்பதை உலகநாடுகள் ஏற்றுகொண்டுள்ளது. தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எந்த உணவையும் ஏற்க முடியாது என்பதையும் ஒப்புகொள்ள வேண்டும்.




    ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியத்தை காப்பாற்றும் தாய்ப்பாலை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டியது தாயின் கடமையாகும். அந்த கடமையை செய்ய தவறினால், பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை மரணத்திற்கு இரையாக்க வேண்டிய துன்பநிலை ஏற்படும் அல்லது குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அதை தாக்கும் நோய்களை தாங்கிகொள்ள முடியாத நிலை ஏற்படும்.


    சில குழந்தைகள் போதிய வளர்ச்சி இல்லாமல் வாழும் நிலையும் ஏற்படும். சில குழந்தைகள் மூளைவளர்ச்சி குன்றியும், உடல் ஊனத்துடனும் மாற வேண்டிய அவலமும் ஏற்படும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகவுள்ளது. தாயும், சேயும் நாணயத்தின் இரு பக்கங்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய்மையின் ஒரு மறுக்க முடியாத அடையாளமாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட த&

    தாய் தனது குழந்தைக்கு பிறந்த 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே குழந்தையின் ரத்தநாளங்கள், மூளை, எலும்பு, கண், செவி, நாக்கு ஆகியவை சீராக இயங்கும்.



    மேலும் 2 வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், அனைத்து ஆற்றல்கள் பெற்று வளரும் என்பது மருத்துவ ஆராய்ச்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அதை அரசாங்கமும் விழிப்புணர்வு பிரசாரமாக செய்து வருகிறது.



    அதே சமயத்தில் எதிர்பாராத சூழ்நிலையில் தாயின் உடல் நிலை பாதிக்கப்பட்டோ அல்லது மகப்பேறு காலம் அல்லது எதிர்பாராத சூழ்நிலையில் தாய் இறந்துவிடும் பட்சத்தில், பரிதவிக்கும் குழந்தைக்கு சத்தான உணவு தாய்ப்பால் மாதிரியில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதை கருத்தில் கொண்டு மாற்று பால் ஏற்பாடு செய்வதும் அவசியம்.

    jv_66 likes this.

  3. #3
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட த&

    தாய்ப்பாலில் உள்ள புரோத சத்து மற்றும் அனுகூலங்கள்:

    * குழந்தை பெற்று ஒருவாரம் தாயிடம் சுரக்கும் பால் மஞ்சள் வண்ணத்தில் திடமாக இருக்கும். இது ஒருவாரம் கழித்து சுரக்கும் பாலை காட்டிலும் அதிக புரத சக்தி கொண்டதாகவுள்ளது. அப்பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும், பலமும் கிடைக்கும்.


    பொதுவாக குழந்தை பிறந்ததும் பல நோய்கள் அதை தாக்கும். அந்த சமயத்தில் மஞ்சள் நிறத்தில் சுரக்கும் தாய்ப்பால் மட்டுமே அதை தடுக்கும் சக்தியை பெற்றுள்ளது. மஞ்சள் நிறத்தில் சுரக்கும் பாலை 'ஏ' புரோட்டின் சக்தி கொண்ட பால் என்று மருத்துவ உலகம் அங்கிகரித்துள்ளது. இது எய்ட்ஸ் உள்பட பல கொடிய நோய்களை தடுக்கும் சக்தியை கொண்டுள்ளது.


    * தாய்ப்பால் முழுமையான மற்றும் குழந்தைக்கு தேவையான ஆகாராமாகவுள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை அதன் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கிறது. கடவுள் கொடுத்த கிருபையால் தாய்ப்பால் கிடைக்கிறது. அதை உற்பத்தி செய்ய பாத்திரங்ளோ அல்லது எரிபொருளோ தேவையில்லை.


    * தாய்பாலுக்கு இணையாக மற்ற குழந்தை உணவுகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது.


    * குழந்தைக்கு தினமும் தவறாமல் தேவைப்படும்போது பால் கொடுக்கும் பெண்களுக்கு குறைந்த காலத்தில் மீண்டும் கர்ப்பமாவது வாய்ப்பு குறையும். குழந்தை பிறந்து சில மாதங்களில் தாய்ப்பால் நிறுத்தினால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


    * தாய்ப்பால் கொடுப்பதின் மூலம் தாயின் கர்ப்பபை சீரான வளர்ச்சி பெறுவதுடன், உடலில் நல்ல சதை பிடிப்பு உள்பட பலம் கூடும். எலும்பு பாதிப்பு தடுப்பதுடன், ரத்தபோக்கு போன்ற உயிரை பறிக்கும் ஆபத்தில் இருந்தும் தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


    * மகப்பேறு காலத்தில் தவறாமல் தாய்ப்பால் கொடுக்கும்படி மூத்தவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தை பெற்றதும் எவ்வளவு விரைவாக பால் கொடுக்க முடியுமோ அதை செய்ய அறிவுறுத்த வேண்டும்.


    * குழந்தை பிறந்ததும் தாயும், சேயும் பிரியாமல் ஒரே படுக்கையில் இருக்க வேண்டும். முடிந்தவரை தாயின் அரவணைப்பில் இருந்தால் மிகவும் நல்லது.


    * குழந்தை அழுதவுடன் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


    * ஒவ்வொரு தாயும் தான் அணியும் உடை மட்டுமில்லாமல் குழந்தைக்கு அணியும் உடையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    jv_66 likes this.

  4. #4
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட த&

    தாய்ப்பாலின் அவசியம் குறித்து மருத்துவர்கள் பல வழிகளில் ஆலோசனை வழங்கி வந்தாலும், நாகரீகம், உடல் அழகு பறிபோய் விடும் என்ற சொத்தையான காரணம்கூறி பல பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை சமீப காலமாக தவிர்த்து வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.


    குறிப்பாக வேலை செய்யும் பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் தங்களின் உடல்கட்டு பாழாகிவிடும் என்ற தப்பான எண்ணம் உள்ளது.



    அதன் காரணமாக பல பெண்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு ஆகாரம் தேடும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். அதன் பலனே பீடிங் பாட்டில்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் ஆகாரம், அதற்கு தொடர்பான பீடிங் பாட்டில்கள், அதன் நிப்பல் ஆகியவை குழந்தையின் உடல் நலத்திற்கு ஏற்றவகையில் இல்லை. குழந்தை பெறும் தாயிக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் பீடிங் பாட்டில் மூலம் மாற்று ஆகாரம் கொடுப்பதற்கான முயற்சி அவசியமாகும்.



    ஆனால் தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக செய்ய வேண்டிய பிரசாரத்தை காட்டிலும், தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கும் உணவுகள் குறித்து மீடியாக்கள் மூலம் செய்யப்படும் பிரசாரம் அதிகமாகவுள்ளது.


    அந்த விளம்பரங்கள் தாய்ப்பாலை காட்டிலும், மாற்று ஆகாரம் மிகவும் மேலானது என்ற தப்பான எண்ணத்தை பெண்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுகிறது. இன்றைய சிறுவர்கள் நாட்டின் எதிர்கால மன்னர்கள் என்பது மட்டுமில்லாமல் அவர்கள் தாய்-தந்தையரின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் உள்ளனர். அதனால் குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.




    அதே சமயத்தில் குழந்தைகளின் மாற்று உணவு அவசியம் என்ற நிலையில், அந்த உணவுகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், உணவு தயாரிப்பதற்கான விதிமுறைகள் என்ன? அத்தகைய உணவுகள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் உத்தரவாதம் கொடுக்கப்படுகிறதா?, அதன் தரம் மற்றும் குணம் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்பட பலவற்றை தீர்மானிக்க வசதியாக கடந்த 1992ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுகள் (தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனை கட்டுப்படுத்தல்) என்ற புதிய சட்டம் கொண்டுவர தீர்மானித்து நடைமுறைபடுத்தி வருகிறது.

    தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுகள் (தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனை கட்டுப்படுத்தல்) புதிய சட்டம்-1992

    jv_66 likes this.

  5. #5
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட த&

    1. எந்த தனிநபரும் தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுகள் தொடர்பாக சில தடைகள்:



    * தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகள் உணவு, பீடிங் பாட்டில்கள் மற்றும் ஆகாரங்கள் தயாரிப்பு, விற்பனை, வினியோகம் தொடர்பாக எந்தவித விளம்பரமும் செய்வது அல்லது அத்தகைய விளம்பரங்களில் யாரும் பங்கேற்ககூடாது.



    * தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் உணவுகளை தாய்ப்பாலுக்கு இணையானது, அதைவிட மேலானது என்பது போன்ற பிரசாரம் செய்யக்கூடாது. அதுபோன்ற பிரசாரம் மூலம் மக்களை நம்பவைக்கும் முயற்சி மேற்கொள்ளக்கூடாது.



    * தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுதானிய விற்பனை செய்வது தொடர்பாக அரசு நிர்ணயம் செய்துள்ள விதிமுறைகள் படி தான் செயல்பட வேண்டும்.



    * தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுதானிய விற்பனை செய்வது தொடர்பாக கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்களை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக தனியார் கம்பெனிகள் சந்தித்து பேசக்கூடாது. மேலும் தாய்ப்பாலுக்கு இணையான பொருட்கள் என்று தயாரிக்கப்படும் பொருட்களை காட்டி நம்பும் வகையில் விளம்பரம் செய்யக்கூடாது.



    * தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தை உணவு, பீடிங் பாட்டில் மற்றும் உணவுதானிய விற்பனை செய்வது தொடர்பாக கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்களை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக தனியார் கம்பெனிகள் தகவல் பரிமாற்றம் செய்வது, தயாரித்துள்ள பொருட்களை இலவசமாக வழங்குவது என்ற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.



    மேலே குறிப்பிட்டுள்ள 5 நிபந்தனைகள் சட்டத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்படுகிறது.


    அதை மீறி யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கும் பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    jv_66 likes this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட த&

    Thanks for sharing these.

    umasaravanan likes this.
    Jayanthy





  7. #7
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: பாலுக்கு மாற்றாக குழந்தை உணவுகள் - சட்ட த&

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks for sharing these.
    Thank you Aunty..............


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter