புட்டிப்பாலை குழந்தைக்கு கொடுப்பதனால் அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது.

வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதால் தனது அழகு சீர் குலைந்து விடும் என சில தாய்மார் தவறாக கருதுகின்றனர்.

ஆனால் மிகவும் தவறான கருத்து. விஞ்ஞான ரீதியான பார்த்தால் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாயின் மனநலம் பாதுகாக்கப்படுகின்றது.

தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப் புற்று நோய், மார்பகப் புற்று நோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது.

மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.

Similar Threads: