தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடக் கூடாது?




காரமான உணவுகள்
வெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொரு ட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்பு சத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றை கூட ஏற்பட நேரிடும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது மிக வும் சென்சிட்டிவ்வானது. ஆகவே இத்தகைய காரமான பொருட்களை அவர்களது உடல் ஏற்றுக் கொள்ளாது

சிட்ரஸ் உணவுகள்

இதுவும் ஒரு வகையான காரமான உணவுப் பொருட்கள் தான். அதிலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் அசிடிட்டி அதிகம் உள்ளது. இந்த உணவு ப் பொருட்களான அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை தாய்மார் கள் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.


பச்சை இலைக்காய்கறிகள்
பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிக ளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டை கோஸ், காலி ஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவு ப் பொருட்கள் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.


பால் பொருட்கள்
தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் தாயான வள் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும். ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடா மல் இருப்பது நல்லது.


மீன்
மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல் ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்கவேண்டு ம். ஏனெனில் இவற்றில் அதிக அளவில் மெர்குரி உள்ள து. இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர் குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி, சாலமன் மற்றும் பலமீன்களை குறைந்தளவில் சாப்பிடலாம்.


காப்ஃபைன்
காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின் றி, குழந்தைக்கு ஒருவித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்ச லை உண்டாக்கும்.


சாக்லேட்
சாக்லேட்டிலும் காப்ஃபைன் உள்ளது. இவற்றை அதிகம் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே குறைந்தளவில் சாப்பிடுவது நல்லது.


வேர்க்கடலை
தாய்ப்பால் கொடுக்கும் தாய் வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் உடலில் அலர்ஜி ஏற்படு ம் வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறுகிறது. இருப்பினும் அவை முற்றிலும் நிரூபிக்கப்படவில் லை என்றாலும் , இவற்றை சாப்பிடுவதையும் தவிர்க்கலாமே!!!

Similar Threads: