Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree80Likes

Daily Interesting News! -2


Discussions on "Daily Interesting News! -2" in "News & Politics" forum.


  1. #891
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    பின்வாங்க மாட்டோம்; ஜல்லிக்கட்டு நடப்பது நிச்சயம்! முதல்வர் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைக் கட்டிக் காப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி பல அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பலஅரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவது பற்றிய விளக்கத்தை தமிழக மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை என கருதுகிறன்.


    ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது. 2006-ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி நாகராஜ் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே, ராமநாதபுரம் மாவட்டத்தில் மகா கும்பாபிஷேக திருவிழாவினை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் ஒன்றை நடத்த அனுமதிக்குமாறு முனியசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஆகியவற்றுக்குத் தடைவிதித்து 29.3.2006 அன்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து, 2006 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

    இந்த அமர்வு நீதிமன்றம் 9.3.2007 அன்று பிறப்பித்த உத்தரவில் கிராமப் புற விளையாட்டின் மீது முழுமையாக தடை விதித்தது தவறு என்றும், இதனை நெறிமுறைப்படுத்தி நடத்தலாம் என்றும் ஆணையிட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து, இந்திய பிராணிகள் நல வாரியத்தால் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்புக் கால வழக்கு 9.7.2007 அன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் 27.7.2007 அன்று தடையாணை ஒன்றை பிறப்பித்தது. இந்த தடையினை நீக்கக் கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடத்திட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.


    உச்ச நீதிமன்றம் தனது 15.1.2008 நாளிட்ட ஆணையில் ஜல்லிக்கட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பிராணிகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009 என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. 25.11.2010 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையில், மாவட்ட ஆட்சியர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளைகள், இந்திய பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதே போன்று பிராணிகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை கண்காணிக்க அதன் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும், கால்நடை மருத்துவர்கள் குழு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நிகழ்வுகளில் பங்குபெறும் காளைகளை பரிசோதித்து சான்று அளிப்பதுடன், காயம்படும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றும், ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, விபத்து அல்லது காயம் அடைகின்ற ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள் சிறிய நிகழ்வுகளுக்கு 2 லட்சம் ரூபாயும், பெரிய நிகழ்வுகளுக்கு 5 லட்சம் ரூபாயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் விரிவான நெறிமுறை வழங்கப்பட்டது.

    இவ்வாணையினை எதிர்த்து பீட்டா என்ற அமைப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்தது. உச்ச நீதிமன்றம் இவ்வழக்கையும் மூலவழக்குடன் சேர்த்து விசாரிக்க ஆணையிட்டது. அவ்வப்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த சூழ்நிலையில், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.


    ஜனவரி 2012-ல் ராதாராஜன் மற்றும் பிராணிகள் நல வாரியத்தினர், காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசால் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவினை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கூடுதல் பாதுகாப்புடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. 10.1.2013-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது. உயர் நீதிமன்ற ஆணைகளுக்கு ஏற்ப 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உச்ச நீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.


    உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் 7.5.2014 அன்றைய தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலாது என்பதால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திட வேண்டுமென்று மத்திய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. 7.8.2015 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு அளித்த கோரிக்கை மனுவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்கள். 11.7.2011 நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிபடுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும் 1960-ம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

    2015-ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் ஆணையின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத் தொடரில் பேசியிருந்தனர். எனினும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், ஜெயலலிதா 22.12.2015 அன்று பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். ஜெயலலிதாவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.

    இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது. அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது. எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

    அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டபடி, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென்று ஜெயலலிதா, பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர், அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவாலும், தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த போதும், மத்திய அரசு இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அவசரச் சட்டத்தையும் கொண்டு வரவில்லை. பிரதமரை 19.12.2016 அன்று நேரில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை அளித்தேன். அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். 9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும் வகையில் 7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியுடன் நம்புகிறேன்.

    தமிழகத்தின் உரிமைகளை காத்து அவற்றை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. காவிரி நதிநீர் பிரச்னை என்றாலும், முல்லைப் பெரியாறு பிரச்னை என்றாலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றாலும், தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு அதைப் பாதுகாத்தவர் ஜெயலலிதா. அவர் வழியில் செல்லும் நானும், தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்.

    இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


    Sponsored Links

  2. #892
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.325.20 கோடி பொங்கல் போனஸ்! முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ள முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.


    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவற்றை இந்த ஆண்டும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இதன்படி, 2015-2016-ம் ஆண்டுக்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.


    ‘ஏ மற்றும் பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
    உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.


    ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.


  3. #893
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் தீபா பற்றி விசாரித்த அமித்ஷா

    முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந்தேதி காலமானார்.

    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகவும், சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். சசிகலா விரைவில் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே சசிகலா தலைமைக்கு அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தியாகராய நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு தினமும் சென்று அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

    அவர்களிடம் அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக தீபா தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் தீபா பற்றி அகில இந்திய பா.ஜனதா தலைவர் அமித்ஷா விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் தமிழகத்தின் சார்பில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து தமிழக நிர்வாகிகளுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா அப்போது தனியாக ஆலோசனை நடத்தினார்.

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து அமித்ஷா அவர்களிடம் கேட்டு அறிந்தார். அதோடு தீபா பற்றியும், அவரது வீட்டு முன்பு திரண்டு வரும் தொண்டர்கள் கூட்டம் பற்றியும் தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் அவர் கேட்டு அறிந்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தீபா ஆகியோர் குறித்தும், தி.மு.க. செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்தும் தேசிய செயற்குழுவின் போது அமித்ஷா விரிவாக கேட்டு அறிந்தார்.

    தீபாவின் வீட்டு முன்பு தொண்டர்கள் குவிந்து வருவது குறித்தும், அவருக்கு உதவி செய்பவர்கள், தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்தும் கேட்டார். அதோடு தீபாவின் பின்னணி, கடந்த கால செயல்பாடு குறித்தும் அமித்ஷா விசாரித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


  4. #894
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    பணமதிப்பு நீக்கத்தால் சென்னையில் ரியல் எஸ்டேட்டில் ரூ. 1,100 கோடி இழப்பு


    சென்னை:

    உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். பணமதிப்பு நீக்கத்தால் நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். விவசாயிகள், சிறு வணிகர்கள், ஆகியோர் இந்த பிரச்சினையால் கடும் அவதிப்பட்டனர்.

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் முடிவால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது கட்டுமான தொழில் ஆகும்.

    மும்பை, புனேயில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர்கள் இதனால் 70 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது பொருளாதாரத்தை ஆட்டம் கானும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை மிகவும் மந்தமாக காணப்பட்டது.

    சென்னையை பொறுத்தவரை ரியல் எஸ்டேட் துறையில் பணமதிப்பு நீக்கத்தால் கிட்டதட்ட ரூ. 1,100 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக கட்டுமான நிறுவன நிர்வாகி ஒருவர் கூறும் போது:-

    பணமதிப்பு நீக்கத்தால் எங்கள் நிறுவனத்தில் புதிய அடுக்குமாடி விற்பனையில் 29 சதவீதம் பாதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் 16,187 யூனிட்டுகள் விற்பனைக்காக இருந்தன. ஆனால் 10,615 யூனிட்டுகளே விற்பனையானது என்றார்.

    புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வது 18 சதவீதம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கட்டுமான தொழில் வட்டாரங்கள் தெரிவித்தன.

    8 முக்கிய நகரங்களில் வீடு விற்பனையில் 44 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடங்களை கட்டி விற்பனை செய்பவர்களுக்கு 8 நகரங்களில் ரூ 22,600 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    கட்டுமானம் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களும் பணமதிப்பு நீக்கத்தால் நசிந்துள்ளன.

    வாகனங்கள் விற்பனையும் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனை மந்தமாக உள்ளது. டிசம்பர் வரை 18.66 சதவீதம் வாகன விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்கு பணமதிப்பு நீக்கமே காரணம் என்று இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    மேலும் பணத்தட்டுபாடு காரணமாக அனைத்து வகையான வியாபாரமும் பாதிக்கப்பட்டது.


  5. #895
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    87,398

    Re: Daily Interesting News! -2

    தெறித்த குண்டு... பலியான பேருயிர்... சுட்டுக்கொல்லப்பட வேண்டிய உயிரினமா யானை?

    னித தவறுகளால் மரணிக்கும் யானைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகிறது. கிட்டதட்ட கோவையும், கிருஷ்ணகிரியும் யானை இறப்பின் அடையாளங்களாகவே மாறிப்போய்விட்டன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது கிருஷ்ணகிரியில் ஒரு பெண் யானை சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.


    கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்து இருக்கிறது உளிபண்டா கிராமம். தமிழக எல்லையில் இருக்கும் இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்றாலும் அந்த கிராம மக்களுக்கு ஆங்காங்கே ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என்று பட்டா நிலங்கள் இருக்கின்றன. அதில் விவசாயம் செய்யப்படுகிறது. யானை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் தற்காப்புக்காக பெரும்பாலான வீடுகளில் அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். அதில் ஒரு நாட்டுத்துப்பாக்கிதான் 25 வயது பெண்யானையின் உயிரை 9-ம் தேதி நள்ளிரவு காவுவாங்கியிருக்கிறது.


    உளிபண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவருக்குச் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னபையன் என்பவர் குத்தகைக்கு எடுத்து தக்காளி, அவரை பயிரிட்டுள்ளார். பயிர்களை வனவிலங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இரவு காவல் இருப்பது வழக்கம். சின்னபையன் தன் குத்தகை நிலத்திலயே சிறிய குடில் அமைத்து இரவு காவல் இருந்துவந்திருக்கிறார்.

    வழக்கம்போல 9-ம் தேதி இரவு காவலுக்கு சென்றிருக்கிறார். சின்னப்பையனுக்கு பக்கத்து நிலத்துக்காரர்களான பசவராஜ், ராமமூர்த்தி, மாதேஷ், சென்னீரப்பா ஆகியோரும் அங்கு காவலுக்கு இருந்திருக்கின்றனர்.

    இரவு 12 மணி அளவில் உளிபண்டா காட்டில் இருந்து 4 யானைகள் சின்னபையனின் விவசாய நிலத்தை நோக்கி வந்திருக்கின்றன. யானைகள் வரும் சமிஞ்கையை அறிந்த சின்னபையன் குடிசையிலிருந்து எழுந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். 4 யானைகளில் ஒரு யானை சின்னபையனின் குடிசையை நோக்கி வந்துகொண்டிருந்தது. உடனடியாக சத்தம் கொடுத்து பக்கத்து நிலத்துக்காரர்களை அழைத்திருக்கிறார் சின்னப்பையன்.

    அந்த யானை சின்னப்பையனின் குடிசையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்க, பக்கத்து நிலத்துக்காரர்களான பசவராஜ், ராமமூர்த்தி, மாதேஷ், சென்னீரப்பா ஆகிய நான்குபேரும் ஓடி வந்து பார்த்துள்ளனர். யானையைக் கண்டதும் பசவராஜ் தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் யானையின் நெற்றிப் பொட்டில் 2 முறை சுட்டிருக்கிறார். இதில் யானையின் நெற்றியில் 2 குண்டுகள் பாய்ந்து... மூளை சிதறி துடித்து இறந்திருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டதும் மற்ற யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பித்து ஓடின.


    இதுதொடர்பாக மாவட்ட வனஅலுவலர் ராஜேந்திரனிடம் பேசினோம், “தேன்கனிகோட்டை, சாணமாவு, ஜவளகிரி என பல வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளிவருகின்றன. நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில்தான் இருக்கிறோம். அதையும் மீறி இதுபோன்ற அசம்பாவிதங்களை நடத்திவிடுகிறார்கள். அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை கைப்பற்ற நாங்களும் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் வருகிறோம். ஆனால், எல்லோரும் வந்து ஒப்படைத்துவிடுவதில்லை. வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்தால் பிடித்துவிடலாம். எல்லாம் வைக்கோல்போருக்குள்ளும் வனப்பகுதிக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறார்கள். இவ்வளவுக்கும் சேதமடைந்த பயிர்களுக்கு நாங்கள் இழப்பீடு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதையெல்லாம் உணராமல் பெண் யானையை கொடூரமாக சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். சென்னீரப்பா, மாதேஷ், ராமமூர்த்தி ஆகிய மூவரை கைது செய்துள்ளோம் மற்றவர்களை தேடிவருகிறோம்," என்றார்.
    "தினமும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சலும் மிக குறைவாக இருக்கிறது. அதையும் வனவிலங்குகள் அழித்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். இரவு முழுவதும் விவசாய நிலத்தில் தங்கி, விடிந்த பின்னர் வீடு திரும்புவோம். சம்பவத்தன்று இரவு 6 காட்டு யானைகள், அறுவடைக்கு குவித்து வைத்திருந்த ராகி, பயிர்களைத் தின்றன. இதனால் யானையை துப்பாக்கியால் சுட்டோம்" என கைதானவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.


    யானைகள் வனத்தை வளப்படுத்துவதுடன், அதைப் பாதுகாக்கும் பேருயிர். வனம் செழித்தால்தான் நாம் சிக்கலின்றி வாழ முடியும். உண்மையில் யானைகள் நம்மை பாதுகாக்கின்றன. யானைகளை அழிப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு ஒப்பானது. இதை எப்போது உணரப்போகிறோம் நாம்?


  6. #896
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    87,398

    Re: Daily Interesting News! -2

    ஜல்லிக்கட்டு இளைஞர்கள்... ரேஷன் கடை ஆதார்..! -நெகிழும் தகிக்கும் சி.பி.எம் ராமகிருஷ்ணன்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. ' உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்ற காரணத்தைக் காட்டி, ஜல்லிக்கட்டை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை' எனக் கொந்தளிக்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
    சென்னை, தி.நகரில் சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்று நடந்தது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், தியாகி சங்கரய்யா உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு, கீழடி அகழ்வாராய்ச்சி, ரேசன் கடை விவகாரம் உள்பட மக்களை வாட்டும் அத்தியாவசிய பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாநிலக் குழு கூட்டம் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " மக்கள் பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எந்தவித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தும், திட்டமிட்டே பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். பண மதிப்பிழப்பு விவகாரத்தால், சிறு வணிகர்கள் முடங்கியிருக்கிறார்கள். வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்க முடிவதில்லை. ஏ.டி.எம் வாசல்களில் நாள் முழுக்கக் காத்திருந்தாலும் பணம் கிடைப்பதில்லை. உழைத்து சம்பாதிக்கும் பணத்தை எடுப்பதற்கே வழியில்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்துத் தொடர்ந்து போராடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்ததாக, தமிழ்நாட்டில் அக்டோபர் மாதமே உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதை அ.தி.மு.க அரசு தள்ளிப் போடுகிறது. இது கண்டிக்கத்தக்கது. விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.


    அடுத்ததாக, சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது அகழ்வாராய்ச்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொய்வில்லாமல் ஆய்வு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், ஆதார் அட்டையை ரேசன் கடையுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு ஆதாரை இணைக்காத மூன்றரை லட்சம் ரேசன் கார்டுகளை ரத்து செய்துவிட்டனர். 'ஆதார் அத்தியாவசியம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ரேசன் கார்டுகளை ரத்து செய்துள்ளனர். இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளோம். மேலும், காவிரி டெல்டா பகுதிகள் உள்பட மாநிலம் முழுவதும் கடும் வறட்சியால் விவசாயிகள் செத்து மடிகின்றனர். வறட்சி மாநிலம் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறார். வறட்சி குறித்து அறிவித்த திட்டங்கள் எதுவும் போதுமானதாக இல்லை.


    இறுதியாக, ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் இல்லை என கோர்ட்டுக்குச் சென்றனர். இந்தளவுக்கு ஜல்லிக்கட்டு விவகாரம் சீரியஸாக இல்லை. தமிழ்நாட்டில் பொங்கல் என்பது சாதி மதங்களைக் கடந்த பாரம்பரிய விழா. ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் மனிதர்கள்தான் காயம் அடைகிறார்கள். மாடுகள் பாதிக்கப்பட்டதாக எந்த இடத்திலும் செய்திகள் இல்லை. சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக ஐந்தாயிரம் இளைஞர்கள் ஒன்று திரண்டது மிகப் பெரிய விஷயம். மக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. அந்த இளைஞர்களை மனதார பாராட்டுகிறேன்" என்றார் நெகிழ்ச்சியோடு.


  7. #897
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    87,398

    Re: Daily Interesting News! -2

    ஜன.13ல் காயார் கிராமத்தில் பொங்கல் வைக்கிறார் விஜயகாந்த்!

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் பொங்கல் விழாவினை கொண்டாடுகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.


    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சாதி, மதம் இவற்றைப் புறம் தள்ளி அனைவரும் ஒற்றுமையைப் போற்றும் வகையில் வருடம் தோறும் எல்லாப் பண்டிகையும் கொண்டாடுவது வழக்கம். பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழா என்றாலும் அனைத்து சமுதாய மக்களோடு நாமும் சேர்ந்து கொண்டாடி வருகிறோம். மக்களிடையே பிளவு மனப்பான்மை மறந்து ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரியாக ஒன்றுபட்டு வாழும் உணர்வை ஏற்படுத்தவே இத்தகைய செயல்பாடுகளைக் கொண்டுள்ளோம்.


    தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் பண்டிகை. பொங்கல் திருநாளையும் அதே வகையில் கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் பயிர் கருகியதால் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளார்கள். வருமானத்துக்குப் போதிய வழியில்லாத காரணங்களாலும், நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏழை- எளிய மக்களுக்கு பண்டிகைகள் வருகிறது என்றாலோ, ஒரு புறத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மறுபுறத்தில் செலவுக்கு எங்கே போகிறது என்கின்ற கவலையும் ஏற்படுவது வழக்கம்.


    'இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே' என்பதை தேமுதிக தனது கொள்கை முழக்கமாக கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தேமுதிக வரும் 13-ம் தேதி மதியம் 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் எனது தலைமையில் பொங்கல் விழாவினை புத்தரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் போன்ற பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இதே போன்று அந்தந்த மாவட்டங்களில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவரும் ஏழை- எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி, சிறப்பான முறையில் பொங்கல் விழாவினை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்


  8. #898
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    87,398

    Re: Daily Interesting News! -2

    ஜல்லிக்கட்டு வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.
    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடை நீடிப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய-மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

    அதிமுக எம்.பி.,க்களும் இன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கும் சென்று முதன்மை செயலர் மிஸ்ராவிடம் மனு அளித்தனர். இதற்கிடையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    வழக்கு நிலுவையில் உள்ளதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்காக காத்திருப்பதாகவும், உத்தரவு வந்த பிறகு ஜல்லிக்கட்டு குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்துள்ளதால் சுப்ரீம் கோர்ட் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பை வெளியிட முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி வழங்குமா? என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


  9. #899
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    முன்னாள் அமைச்சர் கொலையில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்!

    புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி சிவக்குமார் கொலை வழக்கில் திருச்சியைச் சேர்ந்த 4 பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.


    புதுச்சேரி முன்னாள் அமைச்சரான வி.எம்.சி.சிவக்குமார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த பிரபு, சூரிய பிரகாஷ், கார்த்திக், சண்முகம் ஆகியோர் இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.


    இதனிடையே, கொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் மகன் வழக்கறிஞராக இருப்பதால், குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


  10. #900
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    87,398

    Re: Daily Interesting News! -2

    மணல் வாங்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய என்ன சிரமம்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

    மணல் வாங்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய என்ன சிரமம் என தமிழக பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


    மணலுக்கான விலையை ஸ்வைப்பிங் மிஷின் மூலம் பெற உத்தரவிடக்கோரி லாரி உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், பணமதிப்பிழப்பால் குவாரிகளில் ரொக்கமாக கொடுத்து மணல் வாங்க சிரமமாக இருப்பதாக புகார் கூறியிருந்தனர்.


    இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் வாங்க இணையதளத்தில் முன்பதிவு செய்யவும், பணத்தை கார்டுகள் மூலம் பெறவும் என்ன சிரமம் என தமிழக பொதுப்பணித்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இணையதள புக்கிங், ஸ்வைப் மிஷின் பயன்பாடு பற்றி 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter