Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree80Likes

Daily Interesting News! -2


Discussions on "Daily Interesting News! -2" in "News & Politics" forum.


  1. #901
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    87,398

    Re: Daily Interesting News! -2

    பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் நான் இல்லை' –கெஜ்ரிவால்

    பஞ்சாப் மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக, தான் நிற்கவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் வேட்பாளராகக் கருதி வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், பஞ்சாப் மாநில முதலமைச்சர் வேட்பாளராக டெல்லி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே அம்மாநில முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாகவும், தான் பஞ்சாப் மாநில முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.


    Sponsored Links

  2. #902
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    87,398

    Re: Daily Interesting News! -2

    பஞ்சாப் முதல்வர் மீது செருப்பு வீச்சு !

    பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டம், லாம்பியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது, இளைஞர் ஒருவர் திடீரென தனது காலணியை எடுத்து வீசி உள்ளார். இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த முதல்வர் பாதல், அங்கிருந்து வெளியேறினார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது, ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு, இளைஞர் ஒருவர், தனது ஷூவைக் கழற்றி பாதலை நோக்கி வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




  3. #903
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    லால்லு பிரசாத் யாதவுக்கு மாதம் ரூ.10,000 பென்சன்: பீகார் அரசு உத்தரவு

    பீகார் மாநில அரசு சார்பில் மறைந்த மாபெரும் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பெயரில் 2015-ம் ஆண்டு பென்சன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தியாகிகள், சிறை சென்றவர்களுக்கு மாதம் தோறும் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த திட்டத்தின் கீழ் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லால்லு பிரசாத் யாதவுக்கு பென்சன் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லால்லு பிரசாத் யாதவ் 1974-ம் ஆண்டு மிசா சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி 6 மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்காக அவருக்கு பென்சன் வழங்க மாநில உள்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    இந்த திட்டத்தில் 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.5,000 பென்சனும், 6 மாதத்துக்கு மேல் சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 பென்சனும் வழங்கப்படுகிறது.

    லால்லு பிரசாத் யாதவ் 6 மாதத்துக்கு மேல் சிறை சென்றதால் அவருக்கு மாதம் ரூ.10,000 பென்சன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


  4. #904
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி மதுரையில் 4-வது நாளாக மாணவர்கள் - பொதுமக்கள் பேரணி


    மதுரை:

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரையில் 4-வது நாளாக இன்று மாணவர்கள், பொதுமக்களின் பேரணி நடந்தது.

    தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். இவ்விளையாட்டைகாண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எராளமானோர்கூட ஆர்வமாக வருவதுண்டு.

    இந்நிலையில் இவ்விளையாட்டுக்கு கடந்த 2 வருடமாக தடை இருப்பதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடு வளர்ப்போர், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டாவது நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவ- மாணவிகள் பொதுமக்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மதுரை, சென்னை ஆகிய பகுதிகளில் மாணவர்கள் கொந்தளித்துள்ளனர்.

    மதுரையில் கடந்த 3 நாட்களாக பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல் போன்ற போராட்டங்களை நடத்தினர். நேற்று சட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு கல்லூரி மாணவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமுக்கம் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பனகல்பார்க் வழியாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே வந்ததும் குப்பலாக தடுப்புகளை தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற கொண்டிருந்த போலீசார் மாணவர்களை தடுத்தனர்.

    இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு கலெக்டரை சந்தித்து பேசிய பின்னர் கலைந்து சென்றனர்.

    இதேபோல் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் உள்பட 60 கிராமங்களில் கடையடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று 4-வது நாளாக மாணவர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்திற்கு பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்ததை தொடர்ந்து இன்று காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த பேரணியில் ஈடுபட்டனர். தமுக்கம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி காந்திமியூசியம், சட்டக்கல்லூரி வழியாக ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு சென்றது பேரணியில் கலந்து கொண்ட பல மாணவ- மாணவிகள் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு சென்றனர். அப்போது “தடைசெய் தடைசெய் பீட்டா அமைப்பை தடைசெய்” “மத்திய மாநில அரசுகளே ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடு” என்று கோ‌ஷமிட்டுக் கொணடு சென்றனர்.

    இப்பேரணியையொட்டி தமுக்கம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


  5. #905
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    சமத்துவ பொங்கலுக்கு அனுமதி மறுப்பு: கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இந்த ஆண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு சரபோஜி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் சரபோஜி கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை சேர்ந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி விடுதி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாட அனுமதிக்ககோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் குருமூர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் அவர்கள் விடுதிகளில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.


  6. #906
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    ஓட்டல்களில் சேவை கட்டணம் செலுத்த தேவை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

    மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள், உணவு பண்டங்கள் மீதும், குளிர்பானங்கள் மீதும் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் மற்றும் மதிப்பு கூட்டு வரி வசூலிக்கின்றன. இவையெல்லாம் நேர்மையற்ற செயல்.

    உணவு பண்டங்கள் மீது சேவை கட்டணம் வசூலிப்பதற்கு சட்ட அங்கீகாரம் எதுவும் இல்லை. இது ஒரு நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கை என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

    எனவே, வாடிக்கையாளர்கள் யாரும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பில் தொகையில் சேவை கட்டணத்தை குறிப்பிடுவதற்கு பதிலாக, உணவு பண்டங்களின் பட்டியலிலேயே (மெனு கார்டு) சேவை கட்டணம் உள்ளிட்ட மொத்த விலை விவரத்தையும் குறிப்பிட வேண்டும் அல்லது அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    இதன்மூலம், அந்த குறிப்பிட்ட உணவு பண்டத்தை சாப்பிடலாமா, வேண்டாமா என்று வாடிக்கையாளர்களே தீர்மானிக்க முடியும். இதுபோன்று முன்கூட்டியே எதுவும் தெரிவிக்காமல் சேவை கட்டணம் வசூலித்தால், அதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

    ஒருவேளை, சேவை கட்டணம் செலுத்தினாலும், அது ஏழை சர்வருக்கு செல்கிறதா அல்லது ஓட்டல் உரிமையாளரின் பாக்கெட்டுக்கு செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

    எனக்கு தெரிந்தவரை, அனைத்து செலவுகளையும் மதிப்பிட்டுத்தான், உணவு பண்டங்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, சேவை கட்டணம் என்ற பெயரில் தனியாக வசூலிக்க வேண்டிய அவசியமே இல்லை.

    இந்த விதிமுறையை மீறி சேவை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டத்தில் வழி இல்லை. எனவே, புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில் அதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைப்பதற்கும் அதில் ஒரு உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அம்மசோதா, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று கருதுகிறோம்.

    அந்த மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்திடமும் கருத்து கேட்டுள்ளோம்.

    இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.


  7. #907
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    தலைமை செயலாளர் வீட்டில் சோதனை: அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் இல்லை? - முத்தரசன் கேள்வி

    திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்து கொண்டும் இறந்துள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

    பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழக அரசு வறட்சி குறித்து ஆய்வு நடத்த குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதையும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, நிலவரியை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். இதை இந்திய கம்யூனிஸ்டு வரவேற்கிறது.

    ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. பயிர்க்கடன்கள் மத்திய கால கடனாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும் விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும்.

    கர்நாடகாவுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரண தொகையை வழங்கிவிட்டது. தமிழக அரசும் அதற்கான முயற்சிகளில் வேகம் காட்ட வேண்டும். வார்தா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித நிவாரண தொகையையும் வழங்கவில்லை.

    தமிழகத்தில் உயிரிழந்த விவசாயிகளில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு மட்டும் நிவாரணம் அறிவித்து அதிர்ச்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இல்லை.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவர வேண்டும். தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கைப்பற்றிய டைரியில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை. தமிழக அரசை மத்திய அரசு தனது கைப்பாவையாக மாற்ற எடுத்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


  8. #908
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    ஹஜ் புனித பயணம் செல்ல 1.70 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி: 29 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரிப்பு

    இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது.

    இந்த குழுவானது ஆண்டு தோறும் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை சவுதி அரேபிய அரசுடன் கலந்து ஆலோசித்து வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல இந்த ஆண்டு 1.70 லட்சம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்க ஹஜ் கமிட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1.36 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சிறுபான்மை நலத் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் அந்நாட்டு மந்திரி முகமது சலேஹ் பின் தஹெர் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    நக்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பில் சவுதி அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

    ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கடந்த ஜனவரி 2-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கான கடைசி நாள் ஜனவரி 24-ம் தேதி ஆகும்.


  9. #909
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

    வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் அகண்ட தமிழ் உலகம் என்ற 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆற்காட்டிலிருந்து திண்டிவனம் வரையிலும், திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான மாநில சாலை தேசிய சாலையாக்கப்படும். வேலூர் மாநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த பணிகள் நடைபெறும் போது வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும். வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடப்பவர்கள் வாகன விபத்தில் அடிப்பட்டு இறக்கின்றனர். எனவே அந்தபகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவாக நடைபெறும்.

    தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தி.மு.க. மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மட்டும் அல்லாமல் மீனவர் பிரச்சினை, இலங்கை அகதிகள் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் எல்லாம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியினர் செய்த பிரச்சினைகள் தான். தற்போது போராட்டம் நடத்தும் தி.மு.க. போன்ற கட்சிகள் கடந்த 5 மாதங்களாக ஏன் போராட்டம் நடத்தவில்லை. அப்போது அவர்கள் எங்கே போனார்கள்.

    ஆனால் தற்போது பா.ஜனதா அரசு மீது பழி போடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதா இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டின் வருங்காலம் மாணவர்கள். அவர்களின் உணர்வு பூர்வமான போராட்டத்தை மதிக்கிறோம். இவர்கள் இதுபோன்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்த கூடாது என்பதற்காகவே பா.ஜனதா கட்சி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கைகளை எடுத்தது.

    கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு அனுமதியும் வாங்கியது. இதையடுத்து நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தயவு செய்து மாணவர்கள் அரசியல் சூழ்ச்சியில் விழுந்து விடக்கூடாது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசை குறை கூறுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை. குற்றம் சாட்டுபவர்களே குற்றவாளிகள். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து விவசாய துறை மந்திரியிடம் பேசினேன். அவர் மாநில அரசு இதுவரை அறிக்கை தரவில்லை என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூறினார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி, கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் தசரதன், செயலாளர் எஸ்.எல்.பாபு, பொருளாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் தரிசனம் செய்து சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.


  10. #910
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    7,184

    Re: Daily Interesting News! -2

    கவர்னர் உரை இல்லாமலேயே புதுவை சட்டமன்றம் 24-ந்தேதி கூடுகிறது




    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது.

    புதுவை மாநில முதல்- அமைச்சராக நாராயணசாமி ஜூன் மாதம் 6-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து புதுவை சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 9-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் மீண்டும் வருகிற 24-ந் தேதி சட்ட மன்றம் கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுவை சட்டமன்றம் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சட்டப்பேரவையின் மைய மண்டபத்தில் கூடுகிறது என்று கூறியுள்ளார்.

    வழக்கமாக புதுவை சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டம் கவர்னரின் உரையுடனே தொடங்கும். ஆனால், தற்போது புதுவை அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த மோதல் காரணமாக கவர்னரின் உரை இல்லாமலேயே சட்டமன்றம் கூட்டப்படுகிறது. அதோடு 2 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.

    முதல் நாளான 24-ந் தேதி மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி பருவ மழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் காரைக்காலுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்க வலியுறுத்தி விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் கவர்னர்- அமைச்சர் இடையேயான அதிகார மோதலால் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து பிரச்சனை எழுப்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter