Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine August! | All Issues

User Tag List

Like Tree25Likes

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணி&#


Discussions on "அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணி&#" in "Other Countries" forum.


  1. #241
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    9,467

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    டிரம்ப் அறக்கட்டளையை கலைக்கப் போவதாக அமெரிக்காவின் வருங்கால அதிபர் அறிவிப்பு

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.

    பெரும் கோடீஸ்வரரான இவர் ‘டொனால்ட் ஜே. டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

    உள்நாட்டு வருவாய் சட்டத்தை மீறிய வகையிலும், வரிஏய்ப்பு செய்யும் நோக்கத்திலும் சில முறைகேடுகளில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டதாக ‘கெய்டு ஸ்டார்’ என்ற இணையதளம் ஆதாரத்துடன் தகவல்களை வெளியிட்டது.

    புளோரிடா மாநில அட்டார்னி ஜெனரல் பாம் பான்ட்டி என்பவருடன் தொடர்புடைய ஒரு குழுவுக்கு இந்த அறக்கட்டளை நன்கொடைகள் தந்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்தப் புகார்கள் தொடர்பாக நியூயார்க் அட்டார்னி ஜெனரலின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தனது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளையை கலைத்து விடப்போவதாக அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.



    நாட்டின் அதிபராக பதவி ஏற்கும்போது, இது தொடர்பாக எந்தவொரு கருத்து மோதலும் ஏற்பட்டுவிடக்கூடாது என கருதி இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அறக்கட்டளையை கலைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனது வக்கீலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


    Sponsored Links

  2. #242
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    91,451

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    Trump accuses CNN of using his 'worst' photo

    US President-elect Donald Trump on Tuesday complained that a prominent television channel used his "worst" picture ever as the cover art for a new book about the 2016 Presidential election.

    "CNN just released a book called 'Unprecedented' which explore the 2016 race & victory. Hope it does well but used worst cover photo of me," he tweeted.

    The book "Unprecedented", which was released in December, was written during the election and is a chronicle of the President-elect's surprising win.

    Written by a CNN writer, the news channel describes the book as a deeply reported account on the fight for the presidency between Trump -- "a blustery billionaire and reality TV star with no military or government experience, no respect for the rules of politics and no fear of offending people" -- and former Secretary of State Hillary Clinton, The People's magazine reported.

    There are actually two versions of the book's cover -- an "Inaugural edition" featuring a stern-looking Trump and another version that contains a collage of different photos from the election, including a large picture of Trump speaking at a podium. It's unclear which cover photo the 70-year-old President-elect was referencing as being "the worst".

    This isn't the first time the President-elect has criticised the media for using "bad" photos of him.

    In November, Politico reported that during an off- the-record meeting with members of the media, Trump complained to NBC News President Deborah Turness that the network wouldn't run a "nice" picture of him and instead chose one that made him look like he had a double-chin.


  3. #243
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    91,451

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    உளவுத்துறை அறிக்கையை ஏற்றுக்கொண்ட ட்ராம்ப்

    நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக்கட்சி ஆட்சியைபிடித்தது. இந்நிலையில் ட்ரம்ப் கட்சிக்கு ஆத்ரவாக, அமெரிக்க வாக்குப் பதிவு எந்திரத்தில் ரஷ்யா மோசடி செய்தது என எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது.

    இதனை டிரம்ப் உறுதியாக மறுத்தார். இந்நிலையில் அமெரிக்க உளவுத்துறை அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீட்டை உறுதிசெய்து அறிக்கை வெளியிட்டது. இந்த உளவுத்துறை அறிக்கையை அதிபர் டிரம்ப் உண்மை என்று ஏற்றுக்கொண்டுள்ளார்.


  4. #244
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    91,451

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    U.S. companies have new business risk - being labeled 'anti-American' by Trump


    File Photo: T-shirts made in the USA are for sale at the Walmart Supercenter in Bentonville, Arkansas June 5, 2014.

    Some U.S. companies are reviewing potential mergers while others are rethinking job cuts or looking at their manufacturing operations in China for fear of being cast as "anti-American" by President-elect Donald Trump, according to Wall Street bankers, company executives and crisis management consultants.

    Having seen some of America's largest companies, including General Motors Co (GM.N), Lockheed Martin Corp (LMT.N) and United Technologies Corp (UTX.N), bluntly and publicly rebuked by Trump on Twitter, many others are worried they may be his next target - especially if they have significant overseas manufacturing, have had U.S. job cuts or price increases for consumers.

    "Any business that leaves our country for another country, fires its employees, builds a new factory or plant in the other country, and then thinks it will sell its product back into the U.S. without retribution or consequence is WRONG!" Trump, who assumes office on Jan. 20, tweeted in December.

    Trump campaigned on an "America First" anti-globalization platform that promised the return of thousands of U.S. manufacturing jobs to economically depressed areas.


  5. #245
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    9,467

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    உலகை அதிர வைக்கும் ட்ரம்ப் ரிப்போர்ட்

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப்பின் அந்தரங்க தகவல்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக, BuzzFeed நிறுவனம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத இந்த ஆவணங்கள் இப்போது உலக வைரலில் இருக்கிறது. 2013ல் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் ட்ரம்ப் செய்த சில விஷயங்களை ரஷ்யா பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.


    'FAKE NEWS' என ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ஒபாமா, தன் இறுதி உரையை நிகழ்த்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.


  6. #246
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    9,467

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கண&

    காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை! ஜல்லிக்கட்டுக்காக பிரதமருக்கு சசிகலா கடிதம்

    ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.


    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர கோரி துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவேவை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.


    இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், இந்த வார இறுதியில் பொங்கல் நடக்க உள்ளதால் அவசரச் சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், காளைகளை காட்சிப் பட்டியலிலிருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழக பாரம்பரிய கலாசாரத்தை காக்க ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


  7. #247
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    91,451

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    டொனால்ட் டிரம்பின் முதல் பேட்டி.!

    அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் தடவையாக ஊடகங்கள் முன் தோன்றி இன்று பேட்டி அளித்தார். டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்டு இருந்த பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கு இந்தப் பேட்டியில் பதில் அளித்தார்.அதிலும் முக்கியமாக தனக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவ்வாறு கூறப்படும் அனைத்து செய்திகளும் வெறும் வதந்தி என்றும் கூறினார்.
    மேலும் ரஷ்ய அதிபர் புடின், என்னை பாராட்டினால், அதை நான் மிகப்பெரிய சொத்தாக கருதுவேன் என்றார். சில நாட்களுக்கு முன் டிரம்ப் வெற்றி பெற்றதில் ரஷ்யாவிற்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  8. #248
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    91,451

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    President-elect Donald Trump speaks during a news conference in the lobby of Trump Tower in Manhattan, New York City, January 11, 2017.




  9. #249
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    9,467

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    மெக்சிகோவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி: டிரம்ப் எச்சரிக்கை

    ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் பல்வேறு மாடல்களில் விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது. தற்போது BMW 3 Series ரக கார்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளை சீனாவில் இயங்கி வருகிறது.

    அமெரிக்காவை ஒட்டியுள்ள மெக்சிகோ நாட்டில் புதிய தொழிற்சாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சான் லூயிஸ் போட்டோசி நகரில் அமைந்துவரும் இந்த தொழிற்சாலையில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் கார் தயாரிப்பு தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் பிரபல நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோவில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. கார்களுக்கு 35 சதவீத எல்லை வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    அவரது இந்த பேட்டி ஜெர்மனி நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.


  10. #250
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    9,467

    Re: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணĬ

    பாலியல் அத்துமீறல் - தவறான விமர்சனம் : டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு




    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை ஓரினச் சேர்க்கைப் பிரியர் என அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் கூறிவந்தார்.

    டொனால்ட் டிரம்ப் ஒரு சரியான பெண்பித்தர் என ஹிலாரி குற்றம்சாட்டி வந்தார். இவை ஊடகங்களுக்கு பெருந்தீனியாக அமைந்தன. குறிப்பாக, டிரம்ப் மீது கடந்த ஆண்டில் பத்துக்கும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    அவர் மீது பாலியல் குற்றம்சாட்டியவர்களில் ஒருவரான சம்மர் ஸெர்வோஸ் என்பவர், வேலை கேட்டு சென்ற தன்னை டிரம்ப் பலவந்தமாக கட்டியணைத்து முத்தமிட்டதாகவும், மார்பகங்களை பிடித்து, கட்டிலில் தள்ளி கற்பழிக்க முயன்றதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்த டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் அந்தப் பெண்ணை தகாத முறையில் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் கருத்தால் தனது கவுரவமும், நன்மதிப்பும் வெகுவாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சம்மர் ஸெர்வோஸ், டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தன்மீது கூறிய குற்றச்சாட்டுக்கு டிரம்ப் வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என நேற்று அவர் தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த வழக்கு தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter