Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree24Likes

VRI Corner


Discussions on "VRI Corner" in "Other Countries" forum.


  1. #521
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    83,225

    Re: VRI Corner

    Indian-origin woman in UK has 4 kids after 17 miscarriages


    Lytina Kaur with her four daughters. (Photo courtesy: facebook.com)

    An Indian-origin woman in the UK who suffered 17 miscarriages and was told she may never be able to have babies is now the proud mother of four daughters.

    At the age of just 18, Lytina Kaur, who was diagnosed with acute myeloid leukaemia, an aggressive cancer of the white blood cells, was given the heartbreaking news that she may never be able to have children.

    Lytina who is now 32 was told she may never be able to give birth after she relapsed and had a bone marrow transplant.

    "I was still quite young when I was told I couldn't have children. I didn't think about it too much at the time and thought I'd worry about it when I crossed the bridge. However, when I got married at 23, it was heart-breaking," she told 'Nottingham Post'.

    After her wedding in 2007, Lytina, who is from the East Midlands region of England, decided to try and have a family of her own.

    But before becoming a mother-of-four Lytina had several miscarriages, the first of which happened in 2010 after she conceived twins.

    Between 2010 and 2012, she suffered as many as nine miscarriages before undergoing one free cycle of IVF on the UK's state-funded National Health Service (NHS) a year later, which was unsuccessful.

    Between 2013 and 2015, a hospital in India made six attempts to implant her embryo into a surrogate - but each ended in miscarriage and the couple gave up.

    However, she eventually became pregnant and gave birth to her first daughter Kiran in September 2015. The other three followed within months of that.

    In November 2015, twin babies Kajal and Kavita were born in India after the hospital had transferred the last four embryos to a surrogate as a goodwill gesture. And in June 2016, Lytina gave birth to Kiyara at Queen's Medical Centre in Nottingham.

    "In the end, we were really lucky...I love spending time with my kids and I need to make the most because they'll be in school in a few years' time," said the mother of four.

    She said she goes through a box of 82 nappies every five to six days - and that she has also stopped counting the amount of baby formula and food she uses.


    Sponsored Links

  2. #522
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    83,225

    Re: VRI Corner

    மல்லையா பதிலளிக்க 3 வாரம் கெடு - உச்சநீதிமன்றம்

    வங்கிகளிடம் பெற்ற ரூ.9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் விஜய்மல்லையா வெளிநாடு சென்றது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையா, அவரது வாரிசுகளுக்கு 40 மில்லியன் டாலர் பரிமாற்றம் செய்ததாக வங்கிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து மூன்று வாரத்தில் பதிலளிக்க, மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை எஸ்.பி.ஐ தலைமையில் 17 வங்கிகள் தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




  3. #523
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    4,983

    Re: VRI Corner

    6500 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு ரூ.80 ஆயிரம் டிப்ஸ் வழங்கிய இங்கிலாந்து தொழில் அதிபர்

    இங்கிலாந்தில் உள்ள அயர்லாந்தில் போர்டாடவுன் என்ற இடத்தில் தி இந்தியன் ட்ரீ என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை இந்தியர் நடத்தி வருகிறார்.


    அங்கு தொழில் அதிபர் ஒருவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அடிக்கடி உணவு சாப்பிட வருகிறார். அங்கு சமையல் கலைஞர் பாபு என்பவர் சமைக்கும் உணவு வகைகளை விரும்பி ருசித்து சாப்பிடுகிறார். அதன் மூலம் அவரது ரசிகராகவே அவர் ஆகிவிட்டார்.


    சாப்பிட்ட பின் திரும்பும் போது சமையல் கலைஞர் பாபுவை அழைத்து பாராட்டி விட்டு செல்வார். இந்த நிலையில் சமீபத்தில் அந்த ஓட்டலில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேருடன் வந்து உணவு சாப்பிட்டார்.


    தான் சாப்பிட்டதற்கான பில் தொகையாக ரூ.6500 (79.5 பவுண்டு) செலுத்தினார். அதன் பின்னர் வழக்கம் போல் சமையல் கலைஞர் பாபுவை அழைத்து உணவு சுவையாக இருந்ததாக கூறி பாராட்டினார்.
    பிறகு யாரும் எதிர்பார்க்காத அளவில் பாபுவுக்கு ரூ.80 ஆயிரம் (1000 பவுண்டு) டிப்ஸ் ஆக வழங்கி அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.


    சுவையான உணவு வழங்கிய பாபுவுக்கு நன்றி தெரிவித்ததுடன் இது மிகவும் சிறிய தொகைதான் என்று கூறிவிட்டு சென்றார்.


  4. #524
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    4,983

    Re: VRI Corner

    தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்

    பிரதமர் மோடி பொங்கல் வாழ்தை தமிழில் கூறியது ஒருபக்கம் இருக்க, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயுவும், தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'கனட வாழ் தமிழர்களால், கனடா வலுவும், வளமும் அடைந்துள்ளது. அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துகள்' எனக்கூறியுள்ளார்.


  5. #525
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    83,225

    Re: VRI Corner

    லண்டனில் இந்திய வம்சாவளிப் பெண் பிணமாக சூட்கேசில் கண்டெடுப்பு




    இந்திய வம்சாவளிப் பெண்ணாகிய கிரண் தாவுதியா (46) இங்கிலாந்து நாட்டின் கிழக்கு மிட்லாண்ட்ஸ் பிராந்திய பகுதியில் உள்ள பிரபல கால்சென்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இரண்டு குழந்தைகளின் தாயாகிய இவர் கடந்த செவ்வாய்க்கிழமை சூட்கேஸ் ஒன்றினுள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் பிரிட்டன் போலீசார் கிரணின் கொலை தொடர்பாக அவரின் முன்னாள் கணவர் அஸ்வின் தாவுதியாவைக் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளார்.

    கடந்த 17 வருடங்களாக எங்களது நிறுவனத்தில் வேலை செய்துவந்த கிரணின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக போலீசாரின் விசாரணைக்கு எங்களால் முடிந்த ஒத்துழைப்பை தருவோம் என கிரண் வேலைசெய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வேலை முடிந்து எனது சகோதரி இன்னும் வீடு திரும்பவில்லை என நேற்று காலை 9.3௦ மணியளவில் கிரணின் சகோதரி ஜாஸ்பிர் கவுர் போலீசில் புகார் செய்தார். ஜாஸ்பிரின் புகாரைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் சூட்கேசில் பிணமாக அடைத்து வைக்கப்பட்ட கிரண் கண்டெடுக்கப்பட்டார்.


  6. #526
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    4,983

    Re: VRI Corner

    டொனால்டு ட்ரம்ப் உரை அமெரிக்கவாழ் இந்தியர்களை பாதிக்குமா..?


    அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூரில் சிறுபொறியாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், சென்னை தொடங்கி இன்று மாநிலம் முழுவதும், 'தமிழன்டா' என்ற உணர்வுப்பூர்வமான அறவழிப்போராட்டமாக காட்டுத்தீயாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஏன் கோடிக்கணக்கான தமிழர்கள் என்று சொல்லலாம்...'ஜல்லிக்கட்டு' என்ற ஒற்றை வார்த்தையை தமிழகம் முழுவதும் எதிரொலித்தவண்ணம் உள்ளனர்.


    இதுவரை எந்தவொரு அசம்பாவிதமோ, திருட்டு போன்ற சம்பவங்களோ இல்லாமல், 'அனைவருமே தலைவர்கள், இது நமது போராட்டம்' என்ற மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய அக்கறையுடன் சாரைசாரையாகக் குழுமி, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுஒருபுறமிருக்க, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

    பதவியேற்ற உடன் அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்பதை நேரடியாகக் குறிப்பிடும் வகையில் உறுதிபடப் பேசியுள்ளார், டிரம்ப்-ன் பேச்சை உற்றுநோக்கும்போது, இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக, மத்திய அரசையோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள மாநில அரசையோ நம்பாமல், அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டில் இந்தியர்களின் உரிமைக்காக போராட வேண்டிய அடுத்த தருணம் உருவாகலாம் என்று எண்ணம் எழுகிறது.

    45-வது அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்-ன் உரை விவரம்:


    "அமெரிக்க மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைப்பேன். அமெரிக்காவின் நலனே எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். அமெரிக்கர்கள் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; நீங்கள் மீண்டும் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டீர்கள். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன். அமெரிக்காதான் எனது முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணம் உங்களுடையது. இது உங்களுக்கானது. இங்கு கூடியுள்ள அனைவருக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்கர்களுக்குமானது இந்த தருணம்.


    வாஷிங்டனில் மக்களுக்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்படும். அமெரிக்க மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது, அதனை மீட்டு செயல்படுத்துவேன்- இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன் ஆட்சி நடைபெறும்.

    வர்த்தகம், வரி விதிப்பு, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் போன்ற அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களின் நலன்களுக்கானதாகவே அமையும். உங்களுக்காக என் உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஒருபோதும் அமெரிக்க மக்களை கைவிட மாட்டேன்" என்று உணர்வுப்பூர்வமான உரையை நிகழ்த்தியுள்ளார். மக்களுக்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசியல்வாதிகளைப் பற்றி ஒருபோதும் நாம் பேசுவதில்லை என்றும், அதிபர் தேர்தலில் வெற்றுப் பேச்சு முடிவுக்கு வந்துள்ளது என்றும் டிரம்ப் பேசியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதே, ஹெச்1- பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றும், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு அயல்பணி வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போது, அமெரிக்காவின் 45-வது அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அவரது பேச்சில், அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.


    டிரம்ப் பதவியேற்றதும் ஆற்றிய உரையை, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவில் இருந்து, அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வரும் இந்தியர்கள் கவனத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். தங்களின் எதிர்காலத்திற்கு ஏதாவது பங்கம் விளைவிக்கும் வகையில், டிரம்ப் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்துவிடுவாரோ என்ற அச்சம், அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் இப்போதே தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது.


    எது எப்படியானாலும், ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கி இரவு பகலாக போராடும் தமிழக இளைஞர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முன்வர மாட்டார்களா? ஒரு மாநிலப் பிரச்னைக்கே, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள், இந்தியா என்று வந்து விட்டால், தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, இந்தியர்களுக்காக, இந்தியர்கள் என்ற உணர்வுடன் போராடவும் தயங்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.


  7. #527
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    83,225

    Re: VRI Corner

    அமெரிக்காவில் பீட்டாவின் தலைமையகம் முற்றுகை!

    தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தும் போராட்டம் உலகத் தமிழர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களால் பீட்டா தலைமையகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் அமைந்திருக்கும் பீட்டாவின் தலைமையகத்தை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் முற்றுகையிடுள்ளனர். அந்த அலுவலகம் முன்பு குவிந்த அமெரிக்காவின் பதினாறு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் கறுப்புக்கொடி காட்டி, பீட்டாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter