Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
 • 4 Post By chan
 • 1 Post By sumitra
 • 1 Post By jv_66
 • 1 Post By chan
 • 1 Post By chan

When can a child sleep alone?-அம்மா, அப்பா,நடுவில் குழந்தை


Discussions on "When can a child sleep alone?-அம்மா, அப்பா,நடுவில் குழந்தை" in "Parenting" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  When can a child sleep alone?-அம்மா, அப்பா,நடுவில் குழந்தை

  அம்மா... அப்பா... நடுவில் குழந்தை...
  தேவை, எச்சரிக்கை !


  தாயின் இறகுச் சூட்டில் இதம் பெறும் குஞ்சுப் பறவை போல, பெற்றோருடன் தங்களை இறுக்கிக் கொண்டு தூங்கும் குழந்தைகள் நிறைய. தாய்ப்பாலுக்காகவும் அரவணைப்புக்காகவும் அழும் பிஞ்சு சிசு முதல், 'பெட் டைம் ஸ்டோரீஸ்' கேட்டபடி அம்மா மீதோ... அப்பா மீதோ கால் போட்டால்தான் தூக்கமே வரும் என அடம் பிடிக்கும் சற்றே வளர்ந்த பிள்ளைகள் வரை... பெற்றோருடன் பெட்ரூமில் குழந்தைகளின் ஆக்கிரமிப்பு எப்போதும் உண்டு.
  ஆனால், இப்படி பெற்றோருடன் உறங்கும் குழந்தைகளின் உடல், மனநலம் குறித்த அக்கறையில் இன்னொரு அதிர்ச்சிகரமான பக்கமும் இருக்கிறது என்றால், அலறத்தானே வேண்டியிருக்கும்!

  முதலில் உடல் நலம் பற்றிப் பார்ப்போம். பிறந்தது முதல் ஒன்று அல்லது ஒன்றரை வயது வரை குழந்தைகளின் மத்தியில் நிகழும் காரணம் அறியப்படாத மரணங்களை 'சிட்ஸ்' (SIDS- Sudden infant death syndrome) என்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச அளவில் நான்கு வயது வரை சவாலாக இருப்பதும் இந்த விடை தெரியாத சிசு மரணங்கள்தான். மேற்படி அசம்பாவிதங்களைத் தவிர்க்க, அவ்வப்போது காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லி வருகிறது குழந்தை மருத்துவ வல்லுநர்கள் குழு. அப்படியான காரணங்களில் லேட்டஸ்டாக, குழந்தைகளுடன் ஒரே படுக்கையில் உறங்கும் பெற்றோர்களை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டியிருக்கிறது அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் சங்கம்.

  பெற்றோர்க்கு அதிர்ச்சியளிக்கும் இந்தச் செய்தியை... திருச்சியைச் சேர்ந்த குழந்தை மருத்துவ நிபுணரான சுரேஷ் செல்லையா ஆமோதிக்கிறார்.

  படுத்துக் கொண்டே பால் புகட்டாதீர்கள்!
  ''முதலாவது, ஒபிஸிட்டி எனப்படும் மிகை பருமன் நோய்க்கு ஆளாகியுள்ள பெற்றோர் மத்தியில் உறங்கும் குழந்தை, நிதர்சனத்தில் நெருக்கடியை உணர்கிறது. நள்ளிரவில் பாலுக்கு அழுமே என அருகிலேயே குழந்தையைத் தூங்க வைக்கும் தாய்மார்கள், அசதியில் பெரும்பாலும் படுத்துக்கொண்டே பால் புகட்டுவது குழந்தை யின் மூச்சுக்கு எமனாகிறது. அதேபோல பால் உறிஞ்சும் இடைவெளிகளில் குழந்தை அதிக அளவில் காற்றை விழுங்கியிருக்கும். புகை அல்லது மது பழக்கமுடைய அப்பாக்களுடன் குழந்தைகள் உறங்குவதிலும் ஆபத்து இருக்கிறது. இப்படிப் பல பிரச்னைகள், பெற்றோர் ஒரே படுக்கையைக் குழந்தையுடன் பகிர்ந்து கொள்வதால் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வு, ஒரே அறை, ஆனால் அருகிலேயே வேறு படுக்கை என்பதுதான்'' என்ற சுரேஷ் செல்லையாவிடம், உலகளவில் 'சிட்ஸ்' மரணங்களின் பாதிப்பில் முன்னணியில் இருக்கும் பிற காரணிகளையும் கேட்டோம்.
  ''மிகவும் இளவயது தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறப்பவர்கள், அடுத்தடுத்த பிரசவங்களுக்கு இடையே போதுமான இடைவெளி இல்லாது பிறந்தவர்கள், பிறவியிலேயே இதயம், நுரையீரல் என பாதிப்புகளோடு இருப்பவர்கள்...'' என்று சுட்டிக்காட்டினார் சுரேஷ் செல்லையா.

  நாக்கில் தேன் தடவாதீர்கள்!
  இவற்றுடன், சிசு வளர்ப்பில் இளம் தாய்மார்கள் தரப்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னும் சில முக்கியக் கூறுகளைக் குறிப்பிடுகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் வீணா.

  ''காதில், மூக்கில் எண்ணெய் விடுவது, சளியை நீக்க வாய் வைத்து உறிஞ்சுவது கூடவே கூடாது. தொப்புள் கொடி புண்ணைக் குணப்படுத்த டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தை முகத்தில் பவுடரை பஃப் மூலம் அடிப்பது, மூச்சைப் பாதிக்கும். சகல தரப்பினரும் பல காரணங் களுக்காக குழந்தையின் நாக்கில் தேன் தடவுகிறார்கள். இது தவறு. ஒன்றரை வயது வரை தேன் தவிர்க்கப்பட்டாக வேண்டும்'’ என்று கண்டிக்கிறார் வீணா.

  அப்பா... அம்மா... தப்பா?
  'சிட்ஸ்' மரணங்கள் தொடர்பான இந்த எச்சரிக்கைக் குறிப்புகள் சின்னக் குழந்தைகளின் உடல் நலம் தொடர்பானவை. அடுத்து வருவது... சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கான மனநலம் தொடர்பானது. இரண்டிலும் பெற்றோருடனான படுக்கை மற்றும் உறக்கத்தில் விபரீதங்கள் புதைந்திருந்தாலும், சற்றே வளர்ந்த குழந்தைகளை அணுகுவது... கொஞ்சம் சிக்கலானதுதான். அப்படி என்ன பிரச்னை இது என்கிறீர்களா? குழந்தை உறங்கிவிட்டான் என்ற அலட்சியத்தில் கணவன் - மனைவியாக நெருக்கத்திலிருக்கும் அப்பா, அம்மாவை எசகுபிசகாகப் பார்க்க நேரிடும் குழந்தைகளின் மனநலம் கேள்விக் குறியாவதுதான் இங்கே பிரச்னை.
  ''அப்படிப் பார்க்க நேரிடும் குழந்தையின் வயது, வளரும் சூழல், பக்குவம் இவற்றைப் பொறுத்து அதன் மன பாதிப்புகள் நிகழ்காலத்தில் துவங்கி எதிர்கால குடும்ப வாழ்க்கை வரை பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது'' என்கிறார் ஆம்பூரைச் சேர்ந்த 'ஃபேமிலி தெரபிஸ்ட்’ சிவக்குமார். அப்படியான அசாதாரண சூழ்நிலை நிகழ்ந்து விட்டால், பொறுப்பான பெற்றோர் செய்ய வேண்டியது குறித்தும் விளக்குகிறார்.  பதிலில் எச்சரிக்கை தேவை!

  ''பெரும்பாலான விவரமறியாக் குழந்தைகள் நேரடியாகப் பெற்றோரிடமே கேள்வி கேட்பார்கள். மாறாக... திடீரென விலகுவது, வெறுப்பது, சரியாகப் பேசாதது என குழந்தைகள் இருப்பின், பரிவாகப் பேச்சுக் கொடுப்பதன் மூலமாக அவர்களின் மன பாதிப்பை அறிய முடியும். இரண்டு வகையான உரையாடலின்போதும் குழந்தைகள் தரப்பிலிருந்து எழுப்பப்படும் விபரீதமான கேள்விகளுக்கு பெற்றோர் எச்சரிக்கையாக பதில் சொல்ல வேண்டும். அப்படியான பதிலில் முழு உண்மையும் கூடாது; முழு பொய்யும் கூடாது. குழந்தையின் வயது, பக்குவம் இவற்றைப் பொறுத்து பதிலைத் தீர்மானிக்கவேண்டும்.

  அரசல்புரசலாக புரிய வையுங்கள்!
  கணவன், மனைவி உறவில் பொதிந்திருக்கும் அந்யோன்யத்தை குழந்தை வளர்ப்பின் ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுவது நல்லது. அதாவது, 'உன் மீது நாங்கள் கொண்டிருக்கும் பிரியம் போலவே எங்களுக்குள்ளும் பிரியம் உண்டு’ என்று உணர்த்துவது. குழந்தை அருகிலிருக்க, பெற்றோர் தமக்குள் அன்பைப் பரிமாறிக்கொள்வது, லேசாக அணைப்பது போன்ற நெருக்கத்தை உணர்த்தும் சந்தர்ப்பங்களாலும் உணர்த்தலாம். இப்படியாக அம்மா - அப்பா இடையே உணரப்படும் புரிதலும் புனிதமும், குழந்தை அவர்களை மேலும் நேசிக்கத் தூண்டும். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களை எசகுபிசகாக பார்க்க நேரிட்டாலும், அவர்களுக்குள் வளர்ந்திருக்கும் புரிதல், குழந்தைகளின் ஆழ்மனதில் பாதிப்பாகத் தங்காது விலகிவிடும்.

  வேறு ஜோடிகள் எவர் அருகிலாவது தூக்கத்தைக் கழிக்கும் சந்தர்ப்பம் நேரிட்டாலும் அதே பக்குவம் குழந்தையிடம் இருக்கும். ஏனெனில் படுக்கையறை அந்தரங்கங்களை குழந்தைகள் கண்ணுறும் வாய்ப்பு பொறுப்பான தாய், தந்தையரைவிட... அக்கறையற்ற உறவினர், விருந்தினர் ஜோடிகளாலேயே பெருமளவில் நிகழ்கிறது. எனவே, இந்த வாய்ப்புகளை வளரும் குழந்தைகளிடம் இருந்து எப்படித் தவிர்க்கச் செய்வது, ஒருவேளை பார்க்க நேரிடும் குழந்தையின் பாதிப்புகளை எப்படி சரி செய்வது என்பதான பரிதவிப்புகளைவிட... அதற்கான பக்குவத்தை உணர்த்துவதே நடைமுறையில் செல்லுபடியாகும்.

  பிற ஜோடிகளுடன் உறங்க வைக்காதீர்கள்!
  குழந்தையின் வயதைப் பொறுத்தவரை டீன் ஏஜுக்கு முந்தையவர்கள் எனில், இரவில் எதேச்சையாக கண்ணில் கடந்தவை காலையில் அவர்களுக்கு மறந்து போயிருக்கும். அதேபோல டீன் ஏஜ் வயது குழந்தைகளுக்கு அரசல் புரசலாக விஷயங்கள் தெரியும் என்பதால் அவர்கள் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் கடந்து போவார்கள். ஆனால், இரண்டும் கெட்டானாக அப்போதுதான் டீன் ஏஜில் கால் வைத்திருப்பவர்கள் ஆர்வக்கோளாறில் அலைக்கழிவார்கள். இவர்களுக்கு மட்டுமே மேலதிக கவனிப்பு தேவைப்படும்.

  இவற்றோடு படுக்கை அறையின் வெளிச்சம், சப்தங்கள், உடைகள் என அனைத்திலும் கவனம் அவசியம். இந்தக் கவனம் பெற்றோர் தவிர்த்த மற்றோரிடம் எதிர்பார்க்க முடியாது என்பதால், பிற ஜோடிகளுடன் குழந்தையை உறங்க அனுமதிப்பது நல்லதல்ல. ஆக, குழந்தையின் பார்வையில் சம்பவம், அது ஏற்படுத்திய தாக்கம், குழந்தையின் வயது மற்றும் பக்குவம் இவற்றைப் பொறுத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தங்கள் கை விட்டு சூழல் நழுவுவதாகத் தெரிந்தால்... மனநல ஆலோசகர் கவுன்சிலிங் அவசியம்''

  - தெளிவாக விளக்கினார் சிவக்குமார்.
  படுக்கைகள் பிரியட்டும் !


  Similar Threads:

  Sponsored Links
  Last edited by chan; 18th Sep 2015 at 08:02 PM.

 2. #2
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  re: When can a child sleep alone?-அம்மா, அப்பா,நடுவில் குழந்தை

  Really very important instructions to be followed without fail! thank you!

  chan likes this.

 3. #3
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  re: When can a child sleep alone?-அம்மா, அப்பா,நடுவில் குழந்தை

  Thanks for the important suggestions to be followed by parents.

  chan likes this.
  Jayanthy

 4. #4
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  When should a child begin sleeping Alone? - குழந்தைகள் தனியாகத் தூங்க சரியான

  குழந்தைகள் தனியாகத் தூங்க சரியான வயது


  ‘என் மகளுக்கு 16 வயதாகிவிட்டது. மாடர்னாக உடை அணிகிறாள். பொது அறிவு விஷயங்களில் தேறியிருக்கிறாள். விஞ்ஞானம், இலக்கியம் எல்லாம் பேசுகிறாள். ஆனால் தனியாக அவளுக்கான படுக்கை அறையில் படுப்பதில்லை. குழந்தைபோல் எங்களுடனே இரவிலும் ஒட்டிக்கொள்கிறாள்’ என்று குறைபடும் தாய்மார்கள் ஏராளம்.

  தாயின் வயிற்றில் இருந்து இந்த உலகுக்கு அறிமுகமாகும் குழந்தை, தாயின் அருகாமைக்குத்தான் ஏங்கும். தாய் தன் அருகில் இருப்பதை அங்கு இங்கு திரும்பிப் பார்க்க முடியாவிட்டாலும் வாசனை மூலமும், தொடுதல் மூலமும் தாயை உணர்ந்துகொள்கிறது. தாயின் அரவணைப்புக்குள் நிம்மதியாக தூங்கவும் விரும்புகிறது. அம்மா அருகில் இல்லை என்பதை உணர்ந்தவுடன் அழத் தொடங்கிவிடுகிறது. தொடுதலோ, வாசனையோ, அரவணைப்போ கிடைத்த பிறகே அமைதியாகிறது.

  தாய்மையின் கதகதப்பில் தூங்கவிரும்பும் குழந்தைகள் 15, 16 வயதிலும் அதையே தொடர விரும்பும்போது தான் பிரச்சினையாகிறது. சிறுவர், சிறுமியர் பெற்றோரோடு தூங்குவதை தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் ‘வளர்ந்த பிள்ளைகள்’ எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம் வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள். சில குழந்தைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கிவிடும்.

  ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருக்கும். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கை தான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது. சிறிய குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது.

  பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள். சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை.

  அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்...இதோ வரேண்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.

  குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

  இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா–பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது. ஆனால் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

  இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன. இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும்.

  இப்படிச் செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும். நாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

  அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு. 7–8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும்.

  அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது. இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம்.

  இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள். சிறுவர், சிறுமியர்களை தனியாக படுக்கவைக்க பக்குவப்படுத்துவது நல்லது. அந்த தனிமை அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும்.

  jv_66 likes this.

 5. #5
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,546

  Re: When should a child begin sleeping Alone? - குழந்தைகள் தனியாகத் தூங்க சரியா

  Very useful article Lakshmi, thanks much for sharing.
 6. #6
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயது

  குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயது

  சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது.


  நாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் 'நெருக்கத்தைக்'கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.

  7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.

  இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

  சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை 'இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்' என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.  jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter