Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree357Likes

Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#


Discussions on "Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#" in "Parenting" forum.


 1. #21
  rosei's Avatar
  rosei is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Nederland
  Posts
  6,453

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by jv_66 View Post
  நல்லா இருக்கிறேன் ரோசி @rosei . ரொம்பவே நன்றி இத்தனை அரிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதுக்கு .

  என்ன அருமையா வளர்க்கறீங்க பிள்ளைங்களை !!

  ஓஹோ ...நிறம் உங்க பிள்ளைங்களுக்கு பிரச்சினை ஆகலையா ....நல்லது .

  மொழியை , உங்க கணவர் மிகத் திறமையா கையாண்டு இருக்காரே ...நானும் இதே போலத்தான் , வடஇந்தியாவில் இருக்க நேரிட்டபோது , என் குட்டி மகன் ஹிந்தி பேச தடுமாறியபோது , நான் அவனுடன் ஹிந்தியில் மட்டுமே பேசி , அது ஓரளவு பிடிபட்டதும் அடுத்து ஆங்கிலத்திலேயே பேசி , அதன் பிறகு இப்போ வரை தமிழ் மட்டுமே .  ஆனந்தக்கண்ணீரால் பெருமிதம் அடைகிறது மனம் . எங்கள் வீடும் எப்போதும் இதே போலத்தான் . வெளிநாட்டில் நீங்கள் இப்படி , நமது கலாச்சாரம் , பாரம்பரியங்களை விடாமல் , உங்கள் குழந்தைகளையும் பின்பற்ற வைப்பதை கேட்க மிக மிக சந்தோஷம் .

  அங்கே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றணுமா ரோசி ?

  அட ....மற்ற பசங்களையும் உங்களைப் போலவே பின்பற்ற வைக்கிறாங்களே !!

  ரொம்பவே அருமையா ஃப்ரெண்ட்லியா வளர்க்கறீங்க நீங்க ரெண்டு பேருமே
  நானும் நன்றாகவே இருக்கிறேன் ஜெயந்தி...

  ஆமாம். நான் எப்போதுமே தமிழன் என்று சொல்வதிலோ அந்த முறைகளைப் பின்பற்றுவதிலோ கொஞ்சமும் தயங்குவதில்லை..

  பொதுவாகவே இங்கு பொட்டு வைப்பதற்கே தயங்குவார்கள் ...கேள்வி கேட்டு பதில் சொல்ல வேண்டுமே என்று ...

  ஹா..ஹா...என் பிள்ளைகளின் பள்ளியில் அதற்குப் பதில் சொல்லிச் சொல்லியே எனக்கு இன்னும் ஓயவில்லை ..

  ஒவ்வொரு பெண் பிள்ளைகளுக்கும் அதில் ஒரு ஆசை. என் குங்குமத்தை தொட்டுத் தொட்டு பார்ப்பார்கள் .

  நாங்கள் பொதுவாக் மதியம் சோறு கறிகள் அதுவும் குத்தரிசி தான் சாப்பிடுவோம்..ஆனால் ஊரில் மாதிரி நிறையச் சாப்பிட மாட்டோம் அளவு குறைவு அதுவே பழகிப் போச்சு ..

  அதுவும் எப்போதும் கையால் பிசைந்துதான் உண்பார்கள்..

  ஹா..ஹா...மூத்த மகனின் நண்பர்களுக்கு நம் சாப்பாட்டில் ரொம்பவும் ஆசை.. ..

  வந்தால் தாங்களும் கையால் சாப்பிடுவோம் என்று சொல்லிச் சாப்பிடுவார்கள்..

  இராணுவத்தில் ...கட்டாயம் ...நோர்வே என்று நினைக்கிறன் ஜெயந்தி...

  இங்கு அப்படி இல்லை..


  நம்மால் முடிந்ததைச் செய்வோம் பிறகு அவர்கள் பொறுப்பு இல்லையா..பிறகு நாம் இருந்து கவலைப் படக் கூடாது...

  உண்மையில் என்னைவிட என் கணவர் தான் மிகவும் கவனம்.. என்னையும் சேர்த்து ...

  அவர் சொல்வதை நான் செய்து ..."எங்க அம்மா ரொம்பவும் ஸ்ரிக்ட் ஆபிசர்..'' என்று எனக்குப் பெயர்

  Sponsored Links
  With love,
  Rosei.  Stories of Rosei!

  Downlord My Stories Here! (eBOOKS )

  Viemen's drawings.
  Suriyan's drawings.

  Use your smile to change this world, don't let this world change your smile ! 2. #22
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by sumathisrini View Post
  Interesting thread Jayanthy... thanks friends for sharing your experience.

  Thanks sumathi . Yeah...we must thank these people for their wonderful shares. will be very useful for many moms.

  Jayanthy

 3. #23
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,520

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  டியர் Jv

  வளைகுடா நாடுகளின் வாழ்க்கை என்பது
  சுருங்க சொன்னால் வெளிநாட்டு வாழ்கை இந்திய உணர்வுடன்
  அல்லது வெளிநாட்டில் இந்தியா.

  ஒரு சில வளைகுடா நாடுகளில் சில கட்டுபாடுகள் இருக்கலாம்.நாம் எந்த நாடு சென்றாலும் முதலில் அறிய வேண்டியது அந்த நாட்டு சட்டங்கள்,விதிமுறைகள் ,அதை நெறி தவறாமல் கடைபிடித்தால் சிறப்பாக வாழலாம்.

  இங்கு u A E இல் எந்த கட்டுபாடும் இல்லை .இங்கு வாழ்வது .தமிழர்கள் இந்திய வெளி மாநிலத்தில் வாழ்வது போன்ற உணர்வை தரும்.எங்கு திரும்பினாலும் பல இந்தியரை பார்க்கலாம்.

  உடைகள் நம் இந்திய பாரம்பரிய அனைத்து உடைகளும் அணிந்து கொள்ளலாம்.எந்த உடையும் ஆபாசம் இல்லாமல் அணிந்து கொள்ளலாம்.
  படிப்பு:இங்கு பல நாட்டினர் இருப்பதால் ,அந்த அந்த நாட்டினர் அவர்களின் கல்வி முறையை படிக்கிறார்கள்.இந்தியர்கள் இந்தியர்களால் நடத்தப்படும் cBSC or DPS பள்ளிகளில் படிக்கிறார்கள்.சில பெற்றோர்கள் பட்டபடிப்பு ஐரோப்பிய,அமெரிக்கா போன்ற நாடுகளில் படிக்க வைப்பதற்காக O லெவல்
  பிரிட்டிஷ், அமெரிக்கன் பாட திட்டத்தில் படிக்க வைக்கிறார்கள்.

  இங்கு பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் இந்தியாவில் கல்லூரி படிப்பை படிக்க வருகிறார்கள் .சில பெற்றோர்கள் 10 வகுப்பு முடித்தவுடன் +2 படிக்க இந்தியாவிற்கு அனுப்பு விடுகிறார்கள்.

  இங்கு இருக்கும் மாணவர்கள் சாட் எக்ஸாம் எழுதி NRI கோட்டவில் இந்தியாவில் உள்ள முதல் நிலை கல்லூரிகளில் படிக்க வருகிறார்கள்.
  இங்கு பொது இடங்களில் பேசப்படும் மொழி பரவலாக ஹிந்தி ,இங்கிலீஷ் இரண்டும் தெரியவில்லை என்றால் .மலையாளம் ,தமிழ் இது தெரிந்தால் சமாளித்து கொள்ளலாம். இங்கிலீஷ் தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை .

  இங்கு பரவலாக ஹிந்தி இந்தியர் ,,பாகிஸ்தானி,ஆப்கானிஸ்தானி,பங்களாதேஷ்,நேபாளி பேசுகிறார்கள்.பல அரபுகளும் ஹிந்தி அறிந்து உள்ளார்கள்.

  இங்கு இந்திய குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் இந்தியாவில் வாழும் குழந்தைகளை விட நன்றாக பேசுவார்கள்.இங்கு ஆர்வம் உள்ள தமிழ் குழந்தைகள் ஹிந்தியும் பேச கற்று கொள்கிறார்கள்.

  உணவு இங்கு அனைவரும் அவர்கள் பாரம்பரிய உணவை தயாரித்து சாப்பிட்டுகிறார்கள்.இந்தியர்கள் இந்திய உணவை உண்கிறார்கள்.இங்கு எங்கு திரும்பினாலும் இந்திய உணவங்களை காணலாம்.தமிழ்நாட்டின் அனைத்து பிரபல உணவங்கள் இங்கு உள்ளது.அது போல் இந்திய அனைத்து மாநிலத்தின் சிறந்த உணவங்கள் இங்கு உள்ளது.

  இங்கு விருப்பம் உள்ள குழந்தைகள் கற்று கொள்ள பரதநாட்டியம்,சுலோக வகுப்புகள்,மற்றும் இந்திய பாரம்பரிய நடன வகுப்புகள் நடத்தப்படுகிறது.

  பொது இடங்களில் அரபு மொழி பேச வேண்டிய கட்டாயம் இல்லாததால்,பரவலாக ஆங்கிலம் ,ஹிந்தி பேச படுகிறது.இங்கு இந்தியர்கள்
  பிஸினெஸ்மேன் ஆக,உயர்நிலை அதிகாரியாகவும்,கடைநிலை ஊழியராகவும்
  பிரகாசிகிறார்கள்.

  இங்கு பரவலாக தமிழ்,மலையாளிகள் சேல்ஸ்மேன் ஆக இருப்பதால் நாம் எங்கு சென்றாலும் தமிழில் பேசலாம்.இது நமக்கு பல விதங்களில் அனுகுளமாக இருக்கும்.வெளிநாட்டில்நம் நாட்டு மக்களை சந்தித்த சந்தோஷத்தில் அவர்கள் நமக்கு நன்றாக சர்வீஸ் செய்வார்கள்.

  இங்குஎல்லாம் flat சிஸ்டம் தான் ஒவ்வொரு பில்டிங் ground floor இல் ஏதாவது கடைகள் இருக்கும் .அதில் காய்கறிகள் ,மளிகை கடை மலையாளிகள் நடத்துகிறார்கள்.அவர்கள் எல்லோருக்கும் தமிழ் நன்றாக தெரியும்.நமக்கு எது வேண்டும் என்றாலும் தமிழில் போன் செய்து சொன்னால் வீட்டுக்கு உடனே எடுத்து கொண்டு வந்து தருவார்கள்.நாம் போய் வாங்க வேண்டிய சிரமம் கூட இல்லை அமெரிகாவில் இருந்து என் தங்கை இங்கு. கடந்த முறை வந்த போது பார்த்து அசந்து விட்டால்.உனக்கு எல்லாமே கிடைக்கிறது.இந்தியா மாதிரி இருக்கிறது.இந்த நாடு எவ்வளவு ரிச் ஆக பிரமிப்பாக இருக்கிறது. அமெரிக்கா இது மாதிரி எல்லாம் இல்லை .இங்கு எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே பணக்காரத்தனம் தெரிகிறது என்று.

  ஆம் இது முற்றிலும் உண்மை வளைகுடா நாடுகளிலே u A E ஒரு வித்தியாசமான நாடு ,இங்கு அதிகமான கட்டுபாடுகள் இல்லை.இதனாலே மற்ற வளைகுடா நாடுகளால் சில சமயம் கண்டனத்திற்கு உள்ளாவது உண்டு.
  இங்கு எதுவும் விளைவது இல்லை ,உற்பத்தி ஆவதும் இல்லை ,ஆனால் உலகில் உள்ள அத்தனை சிறந்த பொருள்களும் இங்கு கிடைக்கும்.நம் வேலை ஒரு ஆப்பிள் வாங்க வேண்டும் என்றால் கூட எந்த நாட்டு ஆப்பிள் வாங்குவது என்று தீர்மானிப்பது மட்டும் தான்.

  அபுதாபி ,துபாய் இல் வாழ்கை இந்தியர்க்கு பாதுகாப்பானது,சொந்த நாட்டில் இருக்கும் உணர்வை தரும்.ஆனால் இங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகம் 2 பெட்ரூம் வீடு எடுக்க வேண்டும் என்றால் இந்திய ரூபாயில் ஒன்னே கால் லட்சத்தில் இருந்து ஒன்றை லட்சம் வரை ஆகும்.இங்கு நல்ல பதவியில்
  இருப்பவர்கள் மற்றும் தனி வீட்டில் இருக்க முடியும்.சிங்கள் பெட்ரூம் எடுக்க கூட ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்.அதனால் சிலர் குடும்பத்தை இந்தியாவில் விட்டு விட்டு இங்கு வேலை செய்கிறார்கள்.வருமானம் குறைவாக இருப்பவர்கள் குடும்பத்தோடு இருக்க நின்னைதால் சிலர் ஷேரிங் என்ற அமைப்பில் இருக்கிறார்கள். ஷேரிங் என்றால் முதலில் 2 or 3 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் இல் இருப்பவர்கள் உடன் ஒரு பெட்ரூம்,டாய்லெட் தனியாகவும் ,,kitchen பொது use ஆக இருக்கும்.சிலர் இந்தியாவில் பங்களாவில் வசித்து இருக்கலாம்,இங்கு வந்து இந்த மாதிரி ஷேரிங் சூழலில் இருப்பது சில காலம் சிரமமாக இருக்கலாம்.

  வீட்டை அடுத்து ஸ்கூல் பீஸ் மிகவும் அதிகம் lkg படிக்க இந்தியன் ஸ்கூல் இல் குறைத்த அளவு 2 லட்சம் அதிக பட்சம் நாலு லட்சம் ரூபாய் ஆகிறது.
  பிரிட்டிஷ்,அமெரிக்க ஸ்கூல் கட்டணம் L k g குறைத்த பட்சம் 6 லட்சம் ரூபாய் அதிக பட்சம் பத்து இலட்சம் ரூபாய் ஆகிறது.

  அதிக கட்டணம் ஒரு புறம் இந்திய பெற்றோர்களுக்கு அதிக டென்சன் வரவைப்பது ஸ்கூல் அட்மிச்சன் ,இங்கு இந்திய ஸ்கூல் இல் இடம் கிடைப்பது மிகவும் கடினம்,நமக்கு சாய்ஸ் இருக்காது ஏதாவது ஸ்கூல் இல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.இப்போது சில பெற்றோர்கள் மனதை மாற்றி கொண்டு பிரிட்டிஷ்,அமெரிக்கன் ஸ்கூல் இல் போடுகிறார்கள்.அந்த அளவிற்கு இங்கு சீட் கிடைப்பது கடினம்.இந்தியர்கள் அதிகம் இருப்பதால் சீட் கிடைப்பது அரிது.

  மற்றும் குழந்தைகள் ஸ்கூல் காலை 6.15 or 6.30 சென்று விட வேண்டும்.இது கொஞ்சம் சிரமம் தூங்கி கொண்டு இருக்கும் குழந்தைகளை எழுப்பி அனுப்புவது கொஞ்சம் சிரமம் .இங்கு 12 th வரை அரபு ஒரு பாடமாக படிக்க வேண்டும்,அது நம் மார்க் லிஸ்ட் இல் வராது. சர்டிபிக்டே மட்டும் தருவார்கள் .

  என்னை பொறுத்த வரை இங்கு இந்திய குழந்தைகள் இந்தியராக வாழ்கிறார்கள் ,வளருகிறார்கள்.அதற்கு வீட்டில் நாம் தாய்மொழி யில் பேசுவது,டிவி இல் அனைத்து இந்திய சேனல் வரும்,அதை பார்ப்பது,இங்கு இந்திய திரைப்படங்கள் அனைத்தும் இந்தியாவில் ரீலீஸ் ஆவதற்க்கு முன் இங்கு ஆகிவிடும்.திரைப்படங்கள் மூலம்.மற்றும் இங்கு உள்ளவர்கள் இந்தியாவிற்கு அடிக்கடி சென்று வருவது.சென்று வர 3.30 மணி நேரம் ஆகும்.இங்கு ஜூலை,ஆகஸ்ட் கோடை விடுமுறை எல்லோரும் குழந்தைகளை அழைத்து கொண்டு இந்தியா சென்று விடுவார்கள்.மற்றும் டிசம்பர் மாதம் ஒரு 15 நாள் விடுமுறை,மார்ச் மாதம் ஒரு 15 நாள் விடுமுறை கிடைக்கும் அதிலும் இந்தியா வருபவர்கள் உண்டு.

  அதனால் குழந்தைகளுக்கு இந்தியா மிகவும் பழகிய இடமாக ஆகி விடுகிறது.சிறு குழந்தைகளாக இருக்கும்போது போது சில குழந்தைகள் இந்தியா சுத்தமாக இல்லை என்று கலாட்டா செய்வது உண்டு.பின் அவர்களுக்கு இது தான் நாம் நாடு என்று உணர்ந்து விடுவதால் அமைதி ஆகிவிடுவது உண்டு.

  மற்றும் இங்கு குடிஉரிமை கிடையாது.திரும்பஇந்தியதான் செல்ல வேண்டும் என குழந்தைகளுக்கு தெரியும்.சிலர் படித்து முடித்த பின் இங்கு மறுபடியும் வேலைக்கு வருவது உண்டு.சிலர் குடிஉரிமை உள்ள வேறு வெளி நாட்டுக்கு செல்வதும் உண்டு.

  இங்கு பெண் குழந்தை என்றால் திருமணம் வரை இங்கு பெற்றோர்கள் உடன் இருக்கலாம்.ஆண் குழந்தை என்றால் 18 வயது வரை இங்கு இருக்கலாம்.பின் பெற்றோர்கள் உடன் இருக்க முடியாது .இங்கு இருக்க வேண்டும் என்றால் இங்கு உள்ள கல்லூரிகளில் ஸ்டுடென்ட் விசாவில் தங்கி படிக்கலாம்.அதனால் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை கல்லூரி படிப்பிற்கு இந்திய or வெளி நாடு அனுப்பிவிடுகிர்கள்

  Accent இங்கு ஒரு பிரச்சனை இல்லை.இங்கு பல நாட்டு மக்கள் இருப்பதால் அதை யாரும் பெரிதாக நினைப்பது இல்லை.நம் இந்தியர்கள் தான் ஆங்கிலத்தை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆங்கிலம் அறிந்தவன் தான் அறிவாளி என்று.ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பாருங்கள் ஆங்கிலத்தை வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும்.

  நிறம் ஒன்றும் பிரச்சனை இல்லை.இங்கு நிறத்தை பற்றி ஒருவரும் கவலை பட தேவை இல்லை.நம் தமிழ் மக்களுக்கு ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை என்று தெரியவில்லை.அழகு என்பது நிறத்தில் இல்லை.

  நாம் கொஞ்சம் ஸ்டைல் ஆக ஆடை அணிந்து ,அதற்கு ஏற்றவாறு அணிகலன் அணிந்து,ஹேர்ஸ்டைல் நம் முகத்திற்கு தகுந்தவாறு ,நாம் போடும் உடைக்கு தகுந்தவாறு நம்மை அலங்கரித்து கொண்டு விட்டால்,தன்னால் பெர்சனாலிட்டி வந்து விடும்.மிகவும் முக்கியம் எந்த உடை நம் உடல் அமைப்பிற்கு பொருந்துகிறதோ அதை அணியவேண்டும்.மற்றவர்களை பார்த்து காப்பி அடிக்க கூடாது.

  இங்கு இருக்கும் குழந்தைகள் நன்றாக பேசுவார்கள்,சில சமயம் நம் காதுக்கு ரத்தம் வரும் அளவிற்கு பேசுறாங்க.நாம என்ன கம்மியாவா பேசுறோம்.இந்தியர்களை பேச வேண்டாம் என்றால் அவர்களுக்கு தலையே வெடித்து விடும்.

  எனக்கு தமிழ் லேடீஸ் பற்றி தெரியாது நான் திருமணம் ஆன உடன் மும்பை சென்று விட்டேன்.அங்கு பல மாநில மக்கள் உடன் பழக்கம்.நான் எளிதில் அனைவரிடம் பழகிவிடுவேன்.அதே போல் நான் இருக்கும் இடத்திற்கேற்ப என்னை நடை,உடை பாவனைகளால் எளிதில் மாற்றி கொள்வேன்.நான் ,என் கணவர் எப்போதும் யாரிடம் சண்டை போடமாட்டோம்,எல்லாரிடமும் மிகவும் இனிமையாக நாகரிகமாக,பழகும் தன்மை உடையவர்கள்.அதனால் எங்களுக்கு பரந்த நட்பு வட்டம்.

  நான் எங்கு சென்றாலும் என்னை பிஸியாக வைத்து கொள்வேன்.இங்கு அபுதாபியில் கடந்த 10 வருடங்களாக இருக்கிறேன்.இங்கு சில தமிழ் லேடீஸ் சில சமயம் சொல்வது உண்டு போர் அடிக்கிறது என்று.இங்குகுழந்தைகள் ,கணவர் ஸ்கூல்,ஆபீஸ் சென்ற பின் லேடீஸ் காலை மீண்டும் எட்டு மணிக்கு தூங்கி மீண்டும் காலை 11 மணிக்கு எழுதிருப்பர்கள்.

  நான் அப்படி செய்ய மாட்டேன் இங்குகுழந்தை ,கணவர் ஸ்கூல்,ஆபீஸ் சென்ற பின் ஜிம் சென்று விடுவேன்.அங்கு காலையில் மற்ற இந்திய லேடீஸ் வருவார்கள்,தமிழ் லேடீஸ் அவ்வளவாக வருவது இல்லை.அங்கு எனக்கு உடற்பயிற்சி முடிந்து விடும்,நாலு லேடீஸ் உடன் அரட்டை அடித்த திருப்தி கிடைக்கும் .1௦.30 am or 11 am வருவேன்.வந்த உடன் வந்து உள்ள missed கால் எல்லாம் பதில் அளித்து கொண்டு (இங்கு லோக்கல் கால் ப்ரீ அதனால் நாங்கள் போனில் ஒரே அரட்டை அடிப்போம் மணிகணக்கில் ,காலை நேரத்தில் மட்டும்)லேப்டாப் ஆன் செய்து எல்லா வேலை செய்வேன் ,மெயில் செக் செய்வது,ஏதாவது டவுன்லோட் செய்வது,பெண்மைக்கு போஸ்ட் செய்வது உட்பட (போனில் பேசி கொண்டு செய்வதால் தான் நான் டைப் செய்யும் வேலைக்கு வருவதில்லை,) ஒரே நேரத்தில் பல விண்டோஸ் ஓபன் செய்து வைத்து கொண்டு multiடாஸ்க் செய்வேன்.இடையில் மதியம் சமையல் வேறு சென்று செய்வேன்.பின் கம்ப்யூட்டர்யை ஆப் செய்து விடுவேன்.

  அடுத்து 1.30pm பிறகு அனேக ஸ்கூல் பஸ் வர ஆரம்பித்து விடும்.நாங்கள் எல்லாம் குழந்தைகளை அழைத்து வருவது அவர்களை கவனிப்பது,மற்ற வீட்டு வேலை செய்வது என்று மீண்டும் பிஸி.பின் நாலுpm டு 5 pm மணி வரை கொஞ்சம் ரெஸ்ட்.மீண்டும் 5 மணிக்கு எழுந்து வீட்டை சுத்தம் செய்வது டீ வைத்து குடித்து கொண்டு மீண்டும் ஒரு அரை மணி நேரம் லேப்டாப்இல் மல்டிடாஸ்க் செய்வது .பின் 6.30 மணி அளவில் மீண்டும் சமைக்க சென்று விடுவேன்.என் கணவர் வந்த பின் சாப்பிட்டு விட்டு சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு,மற்ற வேலை செய்து விட்டு 10 மணிக்கு தூங்க சென்று விடுவோம்.எங்களுக்கு வெள்ளி,சனி இங்கு விடுமுறை.இங்கு எல்லா வேலையும் நாங்கள் தான் செய்ய வேண்டும்.எல்லோரும் தினமும் இந்தியா போல் தினம் மூன்று முறை சமைப்போம்.இங்கு லேடீஸ் அவ்வளவாக வேலைக்கு செல்வது இல்லை.

  இங்கு தமிழ் நாட்டில் இருந்து நேராக இங்கு வந்த லேடீஸ் சிலர் ,அவ்வளவாக மற்ற மாநிலத்தவருடன் பழக தயக்கம் காட்டுகிறார்கள்.எல்லோர் உடன் தயக்கம் இன்றி நன்றாக பழகினால்,எந்த இடத்தில இருந்தாலும் சந்தோசமாக இருக்கலாம்.

  நான் நாம் நாட்டு மக்களிடம் மட்டும் இன்றி,வெளிநாட்டு மக்கள் கூட பழகுவேன்.நம் உள் உணர்வு சொல்லும் யாரை எங்கே நிறுத்தி வைக்க வேண்டும் என்று.எனக்கு ஆபத்து இல்லதவர்கள் என்று தோன்றும் யாரை பார்த்தாலும் ஒரு ஸ்மைல் பண்ணி வைப்பது .பேச விரும்பும் உள்ளவர்கள் நன்றாக பேசுவார்கள்.

  இப்படி நாம் இருக்கும் இடத்தில நமக்கு என்று ஒரு நட்பு வட்டம் அமைத்து கொண்டு ஒருவற்கு ஒருவர் உதவி கொண்டு ,விட்டு கொடுத்து வாழ்ந்தால் எங்கும் மன நிறை உடன் வாழலாம்.நம்மை பார்த்து தான் நம் குழந்தை வளருகிறது.நாம் முசுடா இருந்தால் நம் குழந்தை சிரித்த முகத்துடன் ஆகவா
  இருக்கும்.

  நம் மக்கள் நம் குழந்தை சிறு குழந்தையாக இருக்கும் போது பேச ஆரம்பித்தால் அடக்கி விடுவது.பின் அவர்கள் பெரியவர்கள் ஆன பின் வட மாநிலத்தவர்களை விட திறமை இருந்தும் பேசும் ஆற்றல் குறைவால் தலைமை பதவி அடைய முடிவது இல்லை.வாய் உள்ள பிள்ளை தான் பிழைக்கும்.பேச விடுங்கள் முதலில் .தவறு இருந்தால் நாம் சொல்லி திருத்துவோம்.

  சிலர் குழந்தைகளை நடனம்,பாட்டு,ஓவியம் என்று பல வகுப்புகளில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா அல்லது இல்லையா என்று கேட்காமல்
  போடுகிறார்கள்.ஆர்வம் உள்ள குழந்தைகள் விரும்பினால் மட்டும் போடுங்கள்,வற்புறுத்தி போடுவதால் இதனால் அவர்கள் எதிர்கால வாழ்கைக்கு பிரோஜனம்.ஒன்றும் இல்லை.

  அதற்கு பதிலாக ஒரு டென்னிஸ் ,ஸ்விம்மிங் போன்ற ஏதாவது ஸ்போர்ட்ஸ் இல் போட்டால் உடல்நலத்திற்கு நல்லது.மற்றும் Toastmasters போன்ற பெர்ச்னலிட்டி டவல்ப்மென்ட் ப்ரோக்ராம் இல் போட்டால் அவர்களுக்கு எதிர்கால வாழ்கைக்கு use ஆக இருக்கும்.

  நான் இங்கு என் வாழ்க்கை முறையை முழுவதும் சொல்லி விட்டேன்.

  என்னை பொருத்தது UAE என்பது இன்னும் ஒரு ஒரு இந்தியா.

  ஆர்வம் உள்ள அனைவரும் ,அமைதியான வாழ்கை முறையில் வாழ விருப்பம் உள்ளவர்கள் அபுதாபிக்கும்,பரபரப்பாக ,கேளிக்கை கொண்டாடம் என வாழ நினைப்பவர்கள் துபாய்கும் சந்தோசமாக வரலாம்.நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்பது நிச்சயம் .

  இங்கு இந்தியர்கள் நன்றாக சந்தோசமாக இருக்கிறார்கள்.நான் எங்கு இருந்தாலும் குறை கண்டுபிடித்து கொண்டு புலம்பி கொண்டு தான் இருப்பேன் என்று நின்னைபவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

  நீங்கள் நினைக்கலாம் உங்களுக்கு பிரச்சனை இருக்காது அதனால் இப்படி பேசுகிறிர்கள் என்று. பிரச்சனைகள் இல்லாதவர் என்று ஒருவரும் உலகத்தில் இல்லை .நான் என் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடக்கி போவது இல்லை.

  பிரச்சனைகள் அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருந்து விட்டு போகட்டும் ,காச,பணமா,அதுவும் இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடுவது உண்டு.அது சில சமயம் படு பயங்கரமாக தலை தூக்க முயற்சிக்க முயலும் போது.நான் என்னை தனிமையில் விடுவது இல்லை.உடனே போன் எடுத்து யாரிடம் அரட்டையில் உட்காந்து விடுவேன். பிரச்சனைகள்
  தன்னாலே வலு இழந்து விடும்.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

  அதே போல் நான் யாரிடம் பழகினாலும் அவர்கள் சொந்த வாழ்வைஅறிந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டேன்.கேட்கவும் மாட்டேன்.என் கருத்தை அவர்கள் மீது திணிக்க மாட்டேன்.அவர்களுக்கு பிடிக்காத விசயங்களை பற்றி அவர்கள் முன் பேச மாட்டேன்.அவர்களுக்கு ஆர்வம் உள்ள விசயம் பற்றி மட்டும் தான் அவர்களிடம் பேசுவேன்.ஒருவரிடம் பழகும் போதே தெரிந்து விடும் அவர்கள் taste என்ன என்று.அதற்கு ஏற்றவாறு நான் அனுசரித்து கொள்வேன்.ஒருவரை பற்றியும் மற்றவரிடம் குறை சொல்ல மாட்டேன்.ரகசியம் காப்பேன்.இந்த

  பழகத்தினால் எனக்கு எளிதில் friends கிடைத்து விடுவார்கள்.அடிப்படையாக நான் யாரிடமும் மிகவும் ஒட்டியும் உறவாட மாட்டேன் ,வெட்டியும் விடமாட்டேன்.

  என் கணவர் கூட சில சமயம் கேலி உங்கள் வீட்டில் வெஸ்டேர்ன் கலாசாரத்தில் வளர்த்து உள்ளார்கள் என்று.

  எந்த இடத்தில வாழ்தாலும் அந்த இடத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றி கொண்டு நம் தனி தன்மை யை இழக்காமல் வாழலாம்.வெளியில் அந்த நாட்டுக்கு ஏற்றவாறு ,வீட்டில் இந்தியர்களாக வாழுவோம்.

  வெளிநாட்டில் வாழும் இந்திய குழந்தைகள் எல்லாம் கட்டுபாட்டு உடன் வழக்கப்படுகிறார்கள்.

  இந்தியாவில் உள்ள குழந்தைகள் மாதிரி இவர்களுக்கு சூது வாது தெரியாது .உண்மையை சொல்ல போனால் இந்தியாவில் உள்ள குழந்தைகளை பார்த்து இவர்கள் சிறிது பயந்து தான் விடுகிறர்கள்.

  நம்ம இந்திய குழந்தைகள் தப்பு எல்லாம் செய்ய மாட்டார்கள்.அந்த அளவுக்கு இவங்களுக்கு சாமத்தியம் பத்தாது.அதனால் பெற்றோர்களே பயபட வேண்டாம்.இந்திய வம்சாவழிகள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்.

  Last edited by chan; 29th Sep 2015 at 05:40 PM.

 4. #24
  vaideesh is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  usa
  Posts
  1,227

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  hi
  thanks for starting the thread and also answering to our thread.It was really interesting to throw our mind and opinion here.thanks once again


 5. #25
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,375
  Blog Entries
  19

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  லக்ஷ்மி @chan

  அப்பா.... ஒரு நாவல் படித்த மாதிரி எழுதிவிட்டீர்கள்.
  எனக்கு ஒரே ஒரு கேள்விதான். டைப் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள்? எப்பவும் நீங்க கேக்கற கேள்வியை நான் கேட்டுட்டேன்....

  - Chitra

 6. #26
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,375
  Blog Entries
  19

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by jv_66 View Post
  ரொம்ப தேங்க்ஸ் சித்ரா @kasri66

  ஆமாம் , நீங்க இருக்கற நாட்டுல நிறமெல்லாம் பிரச்சினை இல்லை .

  ஓஹோ , accent மொதல்ல கஷ்டமா இருந்ததா ...சரி .

  பரவால்லையே ..உடைகள் விஷயத்தில் உங்க பெண்கள் சண்டை போடாம நீங்க சொல்றதை கேட்டிருக்காங்களே ....இது பல பெற்றோருக்கும் பொறாமையை உண்டாகும் விஷயமாக இருக்கலாம் .

  ஹ ...ஹ...ஹா ...உங்க சின்னப் பொண்ணு செய்யறதை கேட்க

  ரொம்ப ரொம்ப அருமையா வளர்க்கறீங்க உங்க பெண்களை .

  வீட்லயும் வெளிலையும் எப்படி நடந்துக்கணும்னு நல்ல வித்தியாசத்தை உணர்ந்து நடந்துக்கறாங்க .

  நட்புக்கள் விஷயத்தில் எதாவது சொல்ல வேண்டியிருந்தா , அதைப் பற்றியும் சொல்லுங்க . உபயோகமா இருக்கும் .

  விருந்தினர்கிட்ட நடந்துக்கற முறை - ரொம்பவே அருமையான நடத்தை ...ஆமாம் ...நீங்க சொல்றது சரி . பெரியவர்கள்தானே இதெல்லாம் முறையா சொல்லித் தரணும்.

  அந்த நாடுகள்ல ராணுவத்திலேயும் சேரணும் இல்லையா , அது ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களுக்குமா ?

  கண்டிப்பா இது சுயபுராணம் இல்ல சித்ரா .

  எல்லாரும் தங்களோட அனுபவங்களைச் சொல்லும்போது , parenting பற்றியெல்லாம் சொல்லும்போது , எத்தனை பெற்றோருக்கு , அதுவும் புதுப் பெற்றோருக்கு இதெல்லாம் ஒரு சிறந்த டிப்ஸ் தெரியுமா !! அவங்கெல்லாம் நிறைய கத்துப்பாங்க இதுலேர்ந்தெல்லாம் .

  அதனாலதான் இந்த மாதிரி டிஸ்கஷன் thread ஆரம்பிச்சு எல்லாரையும் பேச வைக்கிறது . ஏதோ , மத்தவங்களுக்கு நம்மால ஆன சின்ன உதவி .
  இங்கே ராணுவம் கட்டாயம் அது ஆண்களுக்கு மட்டுமே... பெண்கள் விரும்பினால் சேரலாம் தடையில்லை...

  லக்ஷ்மி விவரமா எழுதினது போல நான் எழுதலை. ஆனா அவர்கள் சொன்னதில் நிறைய விஷயங்கள் இந்த ஊருக்கும் பொருந்தும். இங்கே ஒரு advantage என்னவென்றால் சூப்பரா ரெண்டு university இருக்கு. நிறைய நம் நாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். PR citizenshipக்கு இப்போதான் நிறைய கண்டிப்பு காட்டுகிறார்கள். Expensive country என்றாலும் வசதிகளை அனுபவிக்கலாம். பவர் கட், கொசுத்தொல்லை, தண்ணீர் கஷ்டம் இல்லாத தமிழ்நாடாத்தான் நான் பார்க்கிறேன். ஒரே ஒரு குறை, உறவினர்களை ரொம்ப மிஸ் பண்றேன். போன், viber, whatsapp அந்த குறையை போக்குகிறது.


  ஆனால் இது போல் பழகிவிட்டால் அடுத்த gen திரும்ப இந்தியா வர விரும்புவார்களா சந்தேகம்தான்.

  - Chitra

 7. #27
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Nice thread@jv_66.

  என் பெற்றோர் இந்தியாவில் பிறந்து சிறு வயதிலேயே இங்கே புலம் பெயர்ந்தவர்கள். ஆகவே அவர்களும் சரி, அவர்களின் பிள்ளைகளான நாங்களும் சரி, இன்னும் இந்தியர்களாகவே இருக்கிறோம். தமிழ் பள்ளிகளில் படித்தோம். நடை உடை பாவனை என்று காலத்திற்கு ஏற்ப மாறி
  விட்டாலும், இந்தியர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.  ஆனால் எங்களின் பிள்ளைகள் இந்த நாட்டின் மொழியான மலாய் மொழியில் தான் படித்தார்கள். மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் தான் புலமை உடையவர்களாக இருக்கிறார்கள். மூவரும் மலாய் மொழியில் தான் பேசிக் கொள்வார்கள்.


  ஆனால் வீட்டில் அதுவும் என்னுடன் பேசும்போது தமிழில் தான் பேசவேண்டும் என்பது எங்கள் வீட்டின் எழுதப்படாத சட்டம். மூவருமே தமிழில் சரளமாக பேசுவார்கள். கடினமான வார்த்தைகள் தெரியவில்லை என்றால் இதை என்னவென்று சொல்வது என்று கேட்பார்கள். படிக்க எழுத தெரியாவிட்டாலும், சரளமாக பேசவும், நாம் பேசுவதை புரிந்து கொள்வார்கள். மகாபாரதம், கம்பராமாயணம் எல்லாம் ஆங்கிலத்தில் படித்திருக்கிறார்கள். மூவருக்குமே தமிழ் பாடல்கள் என்றால் கொள்ளை விருப்பம். பாடலை எழுதியது யார், மியூசிக் டைரக்டர் யார் என்ற விவரம் கைநுனியில் வைத்திருப்பார்கள்.


  உணவு விசயத்தில் கொஞ்சம் கஷ்டம் தான். சாம்பார் ரசம் போன்ற உணவுகள் சாப்பிடுவார்கள் என்றாலும் பாஸ்ட் பூட் யுகத்தில் அவர்களும் ஒரு அங்கத்தினர்தான். அதை மாற்றுவது மிகவும் கடினம்.
  ஆனால் வீட்டில் சமைப்பதை குறை சொல்லாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.


  சிறு வயதில் கோவில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட வருவார்கள். டீன் ஏஜ் பருவம் வந்தவுடன் இது போன்று கூட வருவது குறைந்து இப்போது நின்று விட்டது. அடிக்கடி பார்க்கும் நபர்களை தவிர, உறவினர்கள் என்று வந்தால், ஒரு ஹாய் போட்டுவிட்டு ரூமில் அடைந்து விடுவார்கள். எல்லோரிடமும் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.


  எனக்கு மூவருமே ஆண்களாக பிறந்து விட்டார்கள். உடை விசயத்தில் அட்வைஸ் எல்லாம் தேவையில்லையே. ஒரு ஜீன்ஸ் ஒரு டீ ஷர்ட் அவ்ளோ தான். என் பெற்றோர் , மாமனார் வகையிலும் சரி, கருப்பு உடை உபயோகப் படுத்த மாட்டோம். ஆனால் இன்றைய இளைஞர்களின் தேர்வு முதலில் கருப்பு நிறமாகத்தான் இருக்கிறது. நானும் என் கணவரும் அந்த நிறத்தை உபயோகப் படுத்துவதில்லை.


  படிக்கும் பள்ளிகளிலோ, இல்லை மற்றவர்களிடம் இருந்தோ, இனம், நிறம் போன்ற தொல்லைகள் இதுவரைக்கும் நடந்ததில்லை. எல்லோரும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம். பல இன மக்களின் ஒற்றுமைக்கு பேர் போன நாடு இது.


  Last edited by kkmathy; 29th Sep 2015 at 07:34 PM.

 8. #28
  RathideviDeva is online now Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,091
  Blog Entries
  11

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by kasri66 View Post
  லக்ஷ்மி @chan

  அப்பா.... ஒரு நாவல் படித்த மாதிரி எழுதிவிட்டீர்கள்.
  எனக்கு ஒரே ஒரு கேள்விதான். டைப் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள்? எப்பவும் நீங்க கேக்கற கேள்வியை நான் கேட்டுட்டேன்....
  சித்ரா சிஸ்,லக்ஷ்மி சிஸ் எழுதனத படுச்சதுக்கே எனக்கு நாக்கு தள்ளி சோடா குடிக்கிற நிலைக்கு போயிட்டேன். அப்ப எழுதுன அவங்க நிலைமை?????

  ஓரடியா டைப் செஞ்சனால அனேகமா மாவு கட்டு போட்ற நிலைக்கு போய்ருப்பாங்க . அவங்க கதை படிக்க படிக்க, மின்னல் மாதிரி ஓடி ஓடி வேலை செய்ற காட்சி தான் படமா ஓடினது, என் மனசுல.


 9. #29
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,364

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Hi Jeyanthi
  Thanks for tagging me. it is a nice thread to know the plus and minus of living abroad,

  All the friends have explained everything in detail.

  Iam living in a gulf country . I came here when my 1st daughter was in 1st std and younger daughter was in KG-1. Since we put them in Indian school, they didnot face any colour or race discrimination.

  But language difficulty for 1 or 2 months since all the kids are from different states and some from other countries. Since English is the common language, they come over it. But like Uma told I have seen this language confusion in kids who are born and brought up here - parents speak in mother tongue, kids care or neighbours talk in english and so on. So the children dont speak up to 3-4 years and need speech therapy.

  Accent is not a problem because it is multi- culural & muti-national.

  Dress is not a problem because we wear anything which is descent.
  School uniform is Churidar with properly put duppatta . Outside also we insist to put proper dress , a strict no to above knee skirts or dress, no tight T'shirts etc. Initially my first daughter was little bit upset, but when we explained she understood. Now when-ever buying a dress she herself will reject such dresses. My younger daughter prefers mostly churidars only, and she has got a set of rules like-- no sleeveless, no tight tops, no short tops , no thin material etc. Sometimes even I get irritated while buying dress for her with all those rules. They have 3-4 half saree set also & wear them for the function in India and also for the get-to-gethers here.. My first daughter also knows to wear saree by herself --she is 15+ only now. This Iam telling because I see many youngsters telling proudly that they dont know to tie a saree. Purdha is not a compulsory in qatar.

  Food habits-- They eat anything and everything we give. But I made it a point to eat only rice for lunch, because I have seen many children ( Even my nephews and nieces) who used to eat chappathis because of health conscience by the parents, think that rice is bad for health and eating rice is below their dignity. When they come to India they make such a fuss to eat rice in relatives house or in functions.. So we explained that both rice and chapathi has the same caloric value and how it is related to the climatic conditions of north and south. So they understood and take south Indian dishes like idly, dosa for breakfast and rice with sambar, poricha kuzhambu for lunch.

  Regarding the transport they are more sophisticated with cars for anywhere and everywhere. Here in Qatar no public transport like bus or trains available. So we are used to cars only and go in cars even to a short distance.So when we come to India , I used to take them by autos and our famous Chennai buses. I used to take them by bus from Chennai to Cuddalore just to make them experience it. Of-course now because of time constraint, We travel by cars most of the time.

  The 3 problems which we face is....
  1..Here everywhere it is air-conditioned-- houses, shops , any public place. No mosquitoes or flies anywhere. So when they go to India they used to grumble before. But we told them that any gulf is not a permanent place for us , Whenever they tell us to 'Go back" we have to pack. So now they understand and live with it.

  2. Here the children are under our wings not exposed to outside world, outside betrayals or competitions. Everything is smooth and spoon-fed for them at home or schools . They cannot go to shop or movies or any public places or even to their friends house alone by themselves. They should be dropped and picked up by the parents only. So all the parents feel that they cannot manage themselves like the children in India. Like lakshmi told they are innocent in such things and find difficult to cope with their counter-parts when they join +1 or college in India.

  3. Since most of us stay in flats, the children are confined to the 4 walls of the house. They cannot play freely in the street or outside the house. Only we have to take them to park or beaches in the weekend only. There also they can play with themselves only, since there are multi-national children.So they are forced to be glued to TV and internet.

  Prema Barani

 10. #30
  repplyuma's Avatar
  repplyuma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Canada
  Posts
  5,986

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  ஆமா அக்கா முதலில் இவளோ கஷ்டங்கள் இருக்கும் என்று நினைக்கல ..ஒரு ஒரு கட்டம் வரும் போது தான் புரிகிறது ..எனக்கு உதவிக்கு என்று யாரும் வர முடியாத சூழ்நிலை .ஆனா இங்கே நண்பர்களுக்குள் பேசி ஒருத்தர் ஒருத்தருக்கு ஆலோசனை சொல்லி பகிர்ந்து கொள்வோம் .

  சம்மர் டைம் தான் நண்பர்களை பார்க்க முடியும் ..அதனால் ஜூலை ஆகஸ்ட் பக்கத்தில் பார்க் இல்லை மற்ற இடங்களுக்கு போகும் போது தகவல் சொல்லிவிட்டு போவோம் முடிந்தவர்கள் வந்து சேர்த்து கொள்வாங்க ..அவங்கலால் முடிந்த சாப்பாடு எடுத்து வருவாங்க ஷேர் பண்ணி சாப்பிட்டுக்குவோம் ..பசங்களுக்கும் விளையாட பழக வாய்ப்பு .பெரிவாங்க பசங்க விளையாடறதா கவனிச்சிட்டு பேசிட்டு இருப்போம் ..எல்லோராலும் வர முடியாது வசதி படரவங்க வருவாங்க ..

  இங்கே ராணுவத்தில் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்று எல்லாம் இல்லை அக்கா ..

  முதலில் நம் உணவு குடுத்தேன் சாப்பிடவில்லை ..இட்லி , கலந்த சாதம் , முட்டை சாதம் , சப்பாத்தி இப்படி தான் கொடுப்பேன் ..அது அப்படியே திரும்ப வரும் ..பிறகு kinderGarten வரை egg சண்ட்விச், waffel , pizza , இது மாட்டும் தான் சாப்பிடுவேன் ..அது அவனுக்கு உடம்பிற்கு சேராது அடிகடி மலசிக்கல் , வயிற்று வலி போன்ற பிரச்சனை வரும் ..குளிர் பிரதேசம் என்பதால் தண்ணீரும் குடிக்க மாட்டாங்க ..

  அவனுக்கு உடல் உபாதை வரும் போது , ஒழுங்க சாபிடாமா , தண்ணீர் குடிக்காததால் தான் இப்படி என்று சொல்லி , அவனுக்கு புரிய வைத்து கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேன் ..ஆனா இதெல்லாம் நான் வேலையை விட்டதும் தான் செய்ய முடிந்தது ..

  இப்போ பரவா இல்லை ..மினி இட்லி , கலந்த சாதம், சப்பாத்தி குருமா , bread pizza என்று எடுத்து போவாங்க ..பெரியவன் புரிந்து கொண்டான் சின்னவன் கூட இன்னும் போராட்டம் தான் ...ஓரளவு வளர வளர அவங்களுக்கு புரியுது ..

  கடையில் வாங்கி கொடுப்பது பதபடுத்த பட்டது அதிகம் சாப்பிட கூடாது ..அம்மா செய்யறது காலையில் எழுந்து கஷ்ட பட்டு செய்றேன் வீணாக்க கூடாது ...என்ன செய்து தரேன் அது உடம்பிற்கு என்ன வகையில் நல்லது என்று விளக்கி ...கொஞ்சம் செண்டிமெண்ட் பேசி கெஞ்சி அவனே சரி உனக்காக சாப்பிடறேன் என்று வழிக்கு வருவான் ..
  Quote Originally Posted by jv_66 View Post
  தேங்க்ஸ் உமா @repplyuma

  ஒ ...உங்க பசங்களுக்கு அந்த நிறப் பிரச்சினை இருந்ததா ?...பரவால்ல, அங்க உள்ள டீச்சர்ஸ் இதை சரியா கையாளறாங்களே ....நீங்களும் அருமையா சமாளிக்க சொல்லிக்கொடுத்து இருக்கீங்க .

  ஆமாம் . நீங்க சொல்ற மாதிரி நிறைய குழந்தைகளுக்கு பேச ஆரம்பிக்கும்போது இரண்டு மூணு பாஷைன்னா நிறையவே தடுமாறுவாங்க .

  அதுக்கு நீங்க செய்த முறை ரொம்பச் சரி .

  உணவு விஷயத்துல என்ன செய்வீங்க ? நம்ம ஊர் உணவுகளை லஞ்சுக்கு கொடுப்பீங்களா இல்ல , அந்த ஊர் உணவுகளா ? அதை அவங்க பிரெண்ட்ஸ் எப்படி வரவேற்பாங்க அல்லது கிண்டல் ஏதும் செய்வாங்களா ?

  அந்த ஊர்ல ராணுவத்துல கொஞ்ச காலம் சேவை செய்யணுமா?

  பரவால்லையே , சைட் பை சைட்ல தமிழ் கூட படிக்க கத்துக் கொடுத்துட்டீங்களே ....நல்ல ஐடியா .

  ஒ ...நீங்களும் நம்ம ஊர் போலவே வீட்டுச் சூழலை வைப்பீங்களா ...சூப்பர் .

  ஹய்யோ பாவம் , ஊர்ல வந்து பழகினவுடன் , திரும்ப கிளம்ப வேண்டி வந்துடுமா ...

  ரொம்ப ரொம்ப அருமையா வளர்க்கறீங்க உங்க குழந்தைகளை . நிறைய நிறைய டிப்ஸ் எல்லாம் கொடுத்து இருக்கீங்க .


  - உமா உதய்

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter