User Tag List

Like Tree357Likes

Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#


Discussions on "Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&#" in "Parenting" forum.


 1. #41
  kasri66's Avatar
  kasri66 is online now Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,416
  Blog Entries
  19

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by chan View Post
  சித்ரா இதை நேற்று காலை டைப் செய்தேன் 3 மணி நேரம் டைப் செய்தேன்.என்னால் மிகவும் விரைவாக டைப் செய்ய முடியாது. காலை நேரத்தில் தொடர்ந்து போன் வரும்.நான் Software Developer ஆக வேலை பார்த்தேன் ,இப்போது வேலை பார்க்கவில்லை .அதனால் எனக்கு மணிகணக்கில் கம்ப்யூட்டர் இல் வேலை செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.ஆனால் தமிழில் டைப் செய்வது சிறிது சிரமமாக உள்ளது.அடிப்படையாக எனக்கு டைப் செய்வது பிடிக்காது
  அதில் எழுத்து பிழை,வார்த்தை பிழை இருந்ததா என்று கூட பார்க்கவில்லை.நான் இங்கு எங்கள் வாழ்க்கை முறை அனைத்தும் எழுதி விட்டேன்.

  எதற்கு எழுதினேன் என்றால்.சிலர் இங்கு வந்து இந்தியாவை நினைத்து ஏங்குவது உண்டு.எப்படி இருக்கும் இடத்தில நம்மை சிறப்பாக இருத்தி கொள்ளலாம் என்று சில இந்த thread க்கு தேவை இல்லாத பல விசயங்களையும் எழுதினேன்.ஏன் என்றால் என்னிடம் நிறைய தமிழ் friend எப்பிடி நீங்க எப்பவும் போர் ஆக உள்ளது என்று சொல்லுவது இல்லை .அதற்காக தான் எழுதினேன் என் நேரத்தை நான் எப்படி செலவு செய்கிறேன் எழுதினேன்.

  மற்றும் புதிதாக வளைகுடா நாட்டுக்கு வர நின்னைப்பவர்கள் சிறிது தயங்குவது உண்டு.எப்படி இருக்குமோ என்று.என் கணவருக்கு என் திருமணத்திற்கு பின் நிறைய வளைகுடா நாட்டு வேலை கிடைத்தது.நான் தான் பயந்து கொண்டு அனுமதிக்கவில்லை.என் கணவர் வேலை செய்த கம்பெனியில் இருந்து கண்டிப்பாக இரண்டு வருடம் கத்தார் செல்ல வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

  நான் இங்கு வருவதற்கு முன் இரண்டு வருடம் கத்தாரில் இருந்தேன்.அப்போது தெரிந்தது நாம் பயந்த அளவு இல்லை என்று.பிரேமா அவர்கள் சொன்னது போல் ,அங்கு பெண்கள் நடந்து போக முடியாது குறு குறு என்று பார்ப்பார்கள்.அங்கு சுதந்திரமும் இல்லை ,கட்டுபாடும் இல்லை.ஆனால் uAE நல்ல ஊர் இங்கு மற்ற வளைகுடா நாட்டுகளில் இல்லாத சுதந்திரம் இங்கு இருக்கும்.மஸ்கட்,பகரைன் கூட ஓகே
  Thanks Lakshmi @chan for the detailed reply.

  நீங்க தேவையில்லாததை எல்லாம் சொல்லலை. நிறைய பேருக்கு use ஆகும் விஷயம்தான். புதுசா கல்யாணம் ஆகி வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும் பெண்களுக்கு இந்த பயம் இருக்குமே, அது தெளியும்.


  எனக்கு உங்களைப் போல நிறைய friends எல்லாம் இல்லை. ஆனாலும் எந்த ஊருக்கு போனாலும் எனக்கு நேரம் பத்தாது. அப்படி என்னை engage பண்ணி வைச்சுப்பேன். மதியம் தூங்கமாட்டேன். இப்போதான் தூங்கலைன்னா கொஞ்சம் health problems வருதுங்கரதால கட்டாயம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். எந்த ஊருக்கு போனாலும் நாம நாமாதான் இருப்போம் இல்லையா?


  நானும் உங்களைப் போல வெளிநாடு செல்ல பயந்தவள்தான் . இண்டியா வில் இருக்கும்போது நிறைய மாறலையா, அதுபோல் என்று நினைத்துதான் என்னை இங்கே கூட்டி வந்தார் என் கணவர். முதலில் கொஞ்சம் கஷ்டப் பட்டோம், காரணம், இங்கே உள்ள வாழ்க்கை முறை பற்றி சொல்ல யாரும் இல்லை. விழுந்து எழு ந்திருந்து கற்றுக்கொண்டோம். முதலில் மாத சாமான்கள் வாங்குவதில் பிரச்சனை இருந்தது. அப்புறம் Home டெலிவரி ஏற்பாடு செய்துகொண்டோம். பிள்ளைகள் ஸ்கூல் க்கு ஸ்கூல் பஸ் வந்துவிடும். பிறகு இங்கே fees அதிகம் என்பதால் அவர்களை பப்ளிக் transport use பண்ண கத்துக்கொடுத்துவிட்டோம்.


  இங்கே டைம் ஒரு மணி நேரம் Beijing டைம் க்கு மேட்ச் ஆவது போல மாற்றி வைத்துள்ளார்கள் என்பதால் காலை 7.30 மணிக்கு ஸ்கூல் கிளம்பனும் என்றால் அது 6.30 மணி போல் தான். முதலில் அது அட்ஜஸ்ட் செய்ய பிள்ளைகளுக்கு கஷ்டமாய் இருந்தது. இப்போ பழகி விட்டது.


  ஊரில் இருந்தால் public transport use பண்ணவே சான்ஸ் இருந்திருக்காது, இப்போ அவர்களுக்கு அதுதான் ரொம்ப convenient ஆ இருக்கு. இது இங்கே உள்ள ஒரு attraction . வெளியில் போய் விளையாடுவது என்ற concept India விலேயே இப்போ இருக்கறதில்லை, except for those who stay in Gated colonies ன்னு நினைக்கிறேன்.

  இங்கே ஒரு விஷயம் நினைவுக்கு வருது.. சில நாள் முன்னாள் whatsapp ல் ஒரு மாடர்ன் பாரதியை படித்தேன். அதை தருகிறேன் பாருங்களேன். இப்போ இது எல்லா நாட்டுக்கும் பொருந்தி வர மாதிரிதான் இருக்கு.

  கலிகால பாரதி:
  ஓரமா விளையாடு பாப்பா
  நீ ஒண்டியா விளையாடனும் பாப்பா
  வீட்டுக்குள்ள விளையாடனும் பாப்பா-
  நீ வெளியவே வர கூடாது பாப்பா,

  காலை எழுந்தவுடன் ஸ்கூலு -
  பின்பு
  கண்ணை கட்டும் கம்ப்யூட்டர் கிளாசு,
  மாலை முழுவதும் டியுசன் என்று - நீ
  வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா,

  எல்லா விளையாட்டும்
  விளையாடனும் பாப்பா
  அதை மொபைல்ல மட்டும்
  விளையாடனும் பாப்பா..

  பணத்தை மட்டும் சம்பாரிக்கனும்
  பாப்பா - அதை
  நீ மட்டும் வச்சுக்கனும் பாப்பா..

  அன்பு எல்லாம் எதுக்குடி பாப்பா- நீ

  ஆதாயம் வருதானு பாருடி பாப்பா!


  மற்றபடி நம் நாட்டு உடையை இங்கே தாராளமாக அணியலாம். Tropical country என்பதாலும், நமக்கு இந்தியாவில் இருப்பது போல் உணர்வுதான்.


  Sponsored Links
  Last edited by kasri66; 30th Sep 2015 at 05:44 PM.
  - Chitra

 2. #42
  sujivsp's Avatar
  sujivsp is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  SujaGomathy
  Gender
  Female
  Join Date
  Nov 2013
  Location
  Chicago
  Posts
  5,432
  Blog Entries
  4

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by jv_66 View Post
  Thanks suji @sujivsp

  In another few years, you may also come and share your experiences regarding these.
  அதுக்கு இன்னும் கடவுள் மனசு வைக்கலியே ஆன்டி

  jv_66, premabarani and gkarti like this.

 3. #43
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  ராணுவப்பயிற்சி என்பது இல்லை ஜெய்@jv_66.

  National Service Training என்று ஒன்று உண்டு. 11-ம் வகுப்பு பரிட்சை முடித்த மாணவர்களில் கால்வாசி பேரை செலக்ட் பண்ணி, 10 வாரங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். உடற்பயிற்சி, motivation talk, இதுபோன்று நடக்கும். ஓரிரு தடவைகள் துப்பாக்கி பயிற்சியும் உண்டாம்.

  இரண்டாவது மகன் செலக்ட் ஆனார். ரொம்பவும் ஜாலியாக இருந்ததாம். மற்ற இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.


 4. #44
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  நீங்கள் சொன்னதில் ஒன்றும் தவறில்லை லட்சுமி@chan.

  உங்களின் அனுபவம், செயல்முறை எல்லாம் மற்றவர்களுக்கு நிச்சயம் பயன்படும். புதிதாக வந்தவர்களும் இனிமேல் வரப் போகிறவர்கள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன் தரும். நானே நிறைய தெரிந்து கொண்டேனே அந்த ஊரைப்பற்றி.


 5. #45
  kkmathy's Avatar
  kkmathy is offline Minister's of Penmai
  Real Name
  komathy
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  Malaysia
  Posts
  3,189

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  கலிகால பாரதி பாடல் சூப்பரா இருக்கு சித்ரா@kasri66.
  இன்றைய குழந்தைகளின் அவல நிலை இதுதான்.


 6. #46
  repplyuma's Avatar
  repplyuma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Canada
  Posts
  6,149

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  நீங்கள் சொல்வதும் சரி தான் அக்கா ..வாரம் ஒரு நாள் பாஸ்தா கொடுப்பேன் ..pizza , burger வெளியே போனா வாங்கி கொடுப்போம் ..

  pizza , burger , பாஸ்டா தவிர இந்த ஊர் சாப்பிடு வேற எதுவும் அவர்களுக்கு பிடிக்காது அக்கா ..


  சில சமயம் ரெடி to குக் pizza வாங்கி செய்து கொடுப்பேன் ..

  Quote Originally Posted by jv_66 View Post
  ஓஹோ அப்படியா உமா ...

  ஆமா , குளிர் பிரதேசத்தினால இந்த மாதிரி நிறைய ப்ராப்ளம்ஸ் கண்டிப்பா இருக்கும் .

  பரவால்ல ரொம்பவே நல்லா சமாளிச்சு வளர்க்கறீங்க .  இதுதான் சரி . கொஞ்சம் பெரிசா ஆகிட்டாங்கன்னா , தானே புரிஞ்சுப்பாங்க .நீங்களும்தான் நல்லாவே சொல்றீங்களே ..தவிர அண்ணனைப் பார்த்தும் மாறிடுவான் .

  அதே சமயம் ரொம்பவும் நம்ம சாப்பாடுன்னு போட்டு கம்பெல் பண்ணிடாதீங்க ....சில சமயம் வெறுப்பு வந்திடப் போகுது . ஒரு சில நாள் மட்டும் அந்த ஊர் சாப்பாடும் கொடுத்து விட்டுடுங்க .


  - உமா உதய்

 7. #47
  stulip0110's Avatar
  stulip0110 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Swapna
  Gender
  Female
  Join Date
  Nov 2014
  Location
  Chicago
  Posts
  3,160
  Blog Entries
  54

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by jv_66 View Post
  தேங்க்ஸ் ஸ்வப்னா @stulip0110

  ஒ ...உங்க பெண்ணுக்கு மொழிப் பிரச்சினை ஏதும் இல்லையா ....நல்லது .

  அட ....ரொம்ப நல்லா சொல்லிவிட்டு இருக்கீங்களே , நிறம் மற்றும் ஸ்கின் வகைப் பற்றி . அப்புறம் நல்ல தைரியமா சொல்ல ஆரம்பிச்சுட்டாளே உங்க குட்டிப்பொண்ணு

  இது ஒரு நல்ல டிப்ஸ் .

  ஒ ...உங்க வீட்லயும் தமிழ்தான் பிரதானமா ....டிவி பிரச்னையும் இல்லையா ...சூப்பர் .

  எத்தனை நல்லப் பழக்கங்கள் தானாவே வந்துடுது இல்லையா அங்கெல்லாம் வளருவதில் .

  உணவு விஷயத்தில் எப்படிப்பா அங்கே ? என்ன உணவைக் கையில் கொடுத்து விடுவீங்க ? அதுக்கு பிள்ளைங்க மத்தியில் என்ன ரியாக்ஷன் ?

  ரொம்ப அருமையா வளர்க்கறீங்க உங்க பெண்ணை ...நிறைய டிப்ஸ் கூட கொடுத்து இருக்கீங்க .
  நாம் சொல்லி கொடுக்கும் படி தான் பிள்ளைகள் வரும் ஜெயந்தி அக்கா . முதலில் அவளும் பேச்சு கேட்ட போது அழவே செய்தாள் . அவளிடம் நான் ஒருபோதும் எதற்கும் அழகூடாது என சொல்லுவேன் . அதே போல அழுதும் எதும் சாதிக்க முடியாது என்னிடமும் என் கணவரிடமும் . என் பெற்றோர் என்னை அப்படி வளர்க அதன் படியே நானும் இருக்கிறேன் . எங்கள் வீட்டில் அழுது காரியம் சாதிக்க இயலாது அதுவே இப்போது என் வீட்டிலும் பின் பற்றுகிறேன். ஒவ்வொரு முறை அழும் போதும் சோகமாய் முறை இடும் போதும் பொறுமை மாறாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அவளுக்கு தைரியம் கொடுக்க இப்போது அவள் தைரியமாக பதில் சொல்கிறாள் . ஆறு வயதில் அவளின் வாழ்வு பல விஷயங்கள் கடந்து வரும்படி இருப்பதாக படும் எனக்கு . முற்றிலும் மாறு பட்ட இடத்தில் வேறு வாழ்வு கொண்ட மக்களுடன் பிள்ளைகள் பெரிதளவில் தங்களை அந்த இடத்தில தக்க வைத்து கொள்கிறார்கள் என தோன்றும் பல நேரங்களில் எனக்கு .  உணவு விஷயத்தில் நான் கொஞ்சம் நல்ல பழக்கம் சொல்லி தராமல் கெடுக்கிறேன் என்பது என் கணவரின் வாதம் . அது உண்மையும் கூட . கொஞ்சம் தப்பு தான் ஆனால் மாற்றி கொள்ள ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறேன் .இங்கு உள்ளவர்கள் ஒரு கிண்ணத்தில் சாப்பாடு போட்டு ஸ்பூன் கொடுத்து நீயே சாப்பிடு என சொல்லி அது ஆறி போனாலும் அந்த பிள்ளையே சாப்பிட வைக்கிறார்கள் . அப்படி சாப்பிட இல்லை என்றால் அதை மறுபடி சூடு பண்ணி சாப்பிட செய்வதாக அம்மாக்கள் பேசி கொள்ளவது கேட்டு இருக்கிறேன் அது அவங்க பழக்கம் போல ஆனால் நான் இன்னமும் வார நாட்களில் காலை மற்றும் இரவு ஊட்டி கொண்டு இருக்கிறேன் . தினமும் மாலை டிபன் அவளே சாப்பிடுவாள் பள்ளி விட்டு வந்த உடன் ஆனால் காலையில் அவள் நேரத்திற்கு வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்க முடியாது என்றும் இரவில் என் வேலை சட்டுனு முடிந்துடும் என்றும் நானே ஊட்டி கொண்டு இருக்கிறேன் . வார இறுதியில் எல்லா வேலையும் அவளே சாப்பிடுவாள் . கொஞ்சம் நேரம் எடுத்து சாப்பிட்டு முடிப்பாள் ஆனால் அவளே செய்யும் படி சொல்லுவேன் . அத்தோடு எங்கள் வீட்டில் நம் உணவு தான் எல்லா வேளையும் . பெரும்பாலும் இட்லி , தோசை ,சாதம் , சாம்பார் , குழம்பு , பொரியல் என தான் சாப்பாடு அதனால் கொஞ்சம் டைம் எடுக்கும் அவளே சாப்பிட அதனால் தான் இப்படி என காரணம் கூறி நான் கொஞ்சம் செல்லம் கொடுக்கிறேன் . மாற்றி கொள்ள வேண்டும் ....

  Swapna.

 8. #48
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by sujivsp View Post
  அதுக்கு இன்னும் கடவுள் மனசு வைக்கலியே ஆன்டி
  கூடிய விரைவில் மனசு வைப்பார் சுஜி . கவலைப்பட வேண்டாம் .

  kasri66, premabarani and sujivsp like this.
  Jayanthy

 9. #49
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by kkmathy View Post
  ராணுவப்பயிற்சி என்பது இல்லை ஜெய்@jv_66.

  National Service Training என்று ஒன்று உண்டு. 11-ம் வகுப்பு பரிட்சை முடித்த மாணவர்களில் கால்வாசி பேரை செலக்ட் பண்ணி, 10 வாரங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். உடற்பயிற்சி, motivation talk, இதுபோன்று நடக்கும். ஓரிரு தடவைகள் துப்பாக்கி பயிற்சியும் உண்டாம்.

  இரண்டாவது மகன் செலக்ட் ஆனார். ரொம்பவும் ஜாலியாக இருந்ததாம். மற்ற இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.
  ஒ அப்படியா மதி . ரொம்ப நல்லா இருந்திருக்கும் இல்லையா .

  இல்ல ...சில பேர் சிங்கப்பூரில் இருந்தவங்க ஆண் குழந்தை இருந்தா ராணுவத்தில் சேரணும்னு , கரக்டா அந்த டைம் வரை அங்கே இருந்துட்டு , அந்த வயசு வந்ததும் இந்தியா திரும்பிடுறதை கேள்விப்பட்டு இருக்கேன் . அதான் கேட்டேன் .

  kasri66, premabarani and kkmathy like this.
  Jayanthy

 10. #50
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  32,065

  Re: Challenges in Upbringing Children in the Foreign Countries -வெளிநாட்டில் குழந்தைகளை வளர்&a

  Quote Originally Posted by repplyuma View Post
  நீங்கள் சொல்வதும் சரி தான் அக்கா ..வாரம் ஒரு நாள் பாஸ்தா கொடுப்பேன் ..pizza , burger வெளியே போனா வாங்கி கொடுப்போம் ..

  pizza , burger , பாஸ்டா தவிர இந்த ஊர் சாப்பிடு வேற எதுவும் அவர்களுக்கு பிடிக்காது அக்கா ..


  சில சமயம் ரெடி to குக் pizza வாங்கி செய்து கொடுப்பேன் ..

  ஒ அப்படியா உமா ...சரி சரி .

  kasri66, repplyuma and premabarani like this.
  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter