Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree3Likes
 • 2 Post By chan
 • 1 Post By ahilanlaks

இந்த சம்மருக்காவது எங்களை விளையாட விடுங&


Discussions on "இந்த சம்மருக்காவது எங்களை விளையாட விடுங&" in "Parenting" forum.


 1. #1
  chan's Avatar
  chan is online now Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  15,896

  இந்த சம்மருக்காவது எங்களை விளையாட விடுங&

  இந்த சம்மருக்காவது எங்களை விளையாட விடுங்க ப்ளீஸ்..


  அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு,

  "ஹேய்ய்ய்ய்.... எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுப்போச்சு"னு சத்தம்போட்டுகிட்டே வீட்டுக்கு ஓடிவந்து, ரெண்டு கையையும் விரிச்சு சந்தோஷமாக சுத்தினேன். கையில இருந்த நோட் புக் தவறி கீழே விழுந்துடுச்சு. எடுக்கலாம்னு குனிஞ்சா... சம்மர் கிளாஸ் விளம்பர நோட்டீஸ் ஒண்ணு கிடந்தது. அதில அபாகஸ், டிராயிங்க், சிம்பிள் சயின்ஸ், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், அப்பறம் ஸ்போக்கன் இங்கிலீஸ் or ஹிந்தி or ஜெர்மனி or பிரெஞ்ச் or, or, or-'னு டோரா பயணம்போல போய்கிட்டே இருந்துச்சு. பார்த்ததுமே புரிஞ்சுப் போச்சு... ஆஹா, நம்ம சம்மர் லீவுல சம்மட்டி அடிக்க ரெடியாயிட்டாங்கனு.

  ஏன் பேரண்ட்ஸ்... நாங்க நாளு நாள் சந்தோஷமா இருந்தா உங்களுக்குப் பொறுக்காதா? அதான் வருஷம் முழுக்க படி, படின்னு போட்டு சாகடிக்கிறீங்கல்ல... அதிகாலையில அடிச்சு எழுப்பிவிட்டு, தூக்கக் கலக்கத்துல பூரியை வாய்க்குள்ளத் திணிச்சு, ஸ்கூல் வேனுக்குள்ள திணிச்சு அனுப்பி எங்களை எவ்வளவு டார்ச்சர் பண்றீங்க... அப்ஃகோர்ஸ், எங்களைப் படிக்க வைக்கிறதுக்காக நீங்க கஷ்டப்படுறீங்கதான், நாங்க இல்லேன்னு சொல்லலை. ஆனா, எங்க எதிர்கால நன்மைக்காகன்னு சொல்லி நீங்க பண்ற அட்டகாசத்துல எங்களோட நிகழ்காலம் ஒண்ணுமில்லாமப் போகுது. அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. சம்மர் லீவு எதுக்காக விடுறது... விளையாட.  ஆனால், நீங்க எங்களை விளையாட விடுறீங்களா? அந்தக் கோச்சிங், இந்த ட்ரெயினிங்னு எதையாவது ஒண்ணுல சேர்த்து விட்டுடுறீங்க. எப்பவும் ஏதாவது ஒண்ணை கத்துக்கிட்டே இருக்கிறது எவ்வளவு கொடுமை தெரியுமா? போன வருஷம் ஹாலிடேவுக்கும் இப்படித்தான் ஒரு சம்மர் கேம்ப்பில் சேர்த்து விட்டீங்க. அங்கே எனக்கு டிராயிங் சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா அதை நான் பிராக்டீஸ் பண்றதுக்குள்ள கேம்ப் முடிஞ்சிடுச்சு. ’வீட்டுல வரைஞ்சி பழகு’ன்னு சொன்னீங்க. நானும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்பைடர் மேனை வரைஞ்சேன். அதைப் பார்த்து திட்டிட்டு லீடர்ஸ் படங்களை வரையச் சொன்னீங்க. எனக்கு வரையவே பிடிக்காம வரைஞ்சேன். அதைப் பார்த்துட்டு, ’3,000 ரூபாய் கட்டி கேம்ப்க்கு அனுப்புனதே வேஸ்ட்’னு சொன்னீங்க. நானா உங்களை கேம்ப் கேட்டேன்?


  அப்புறம் ஸ்போக்கன் இங்கிலீஸ் கோர்ஸ் சேர்த்தீங்க. இப்பவே வேகமா இங்கிலீஷ் கத்துக்கிட்டு நான் என்னப் பண்ணப் போறேன்? அதுக்குப் பதிலா என்னை கொஞ்ச நேரம் விளையாட விடலாம்ல..? எனக்கு ரூம்குள்ளேயே இருக்கிறது ரொம்ப போர் அடிக்குது. ஜாலியா, கத்திக்கிட்டே விளையாடணும்னு ஆசையா இருக்கு. என் கிளாஸ்ல இருக்கிற பூரணி சொன்னா... அவ, கிராமத்தில் இருக்கிற தாத்தா வீட்டுக்குப் போகப் போறாளாம். அங்கே மரங்கள் இருக்குமாம். அதில ஏறி மாம்பழம் பறிப்பாளாம். அப்புறம் அந்த ஊர்ல திருவிழா வருமாம். ஜாலியா இருக்குமாம். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆகாஷ், இந்த ஊர்லேயேதான் இருக்கப் போறானாம்.

  ஆனா, அவங்க அம்மாவும் அப்பாவும் புது ஷெட்யூல் போட்டிருக்காங்களாம். ஏதோ ஸ்பெஷல் ஈவெண்ட் நடக்குதாம். பஞ்சாபி டிரெஸ் ஃபெஸ்டிவல் ஒருநாள், ஊர்ச் சந்தைன்னு கிராமத்து விளையாட்டு நிகழ்ச்சி ஒருநாள், கடற்கரையில் கதை சொல்றதுக்கு ஒருநாள், பக்கத்து கோயிலில் கூழ் ஊத்துற நிகழ்ச்சிக்கு ஒருநாள்னு விதவிதமான இடங்களுக்கு போகப் போறாங்களாம். நீங்களும் இப்படி எங்களை அழைச்சுக்கிட்டுப் போகலாமே... இந்த சம்மருக்காவது எங்களை ஜாலியா இருக்க விடலாமே... ப்ளீஸ் பேரண்ட்ஸ்!

  இப்படிக்கு
  சம்மரை ஜாலியாக கொண்டாட விரும்பும் ஒரு சுட்டிப் பாப்பா


  Similar Threads:

  Sponsored Links
  RathideviDeva and ahilanlaks like this.

 2. #2
  ahilanlaks's Avatar
  ahilanlaks is offline Ruler's of Penmai
  Real Name
  Athilakshmi Ahilan ( Bhuvana )
  Gender
  Female
  Join Date
  Mar 2015
  Location
  Chennai
  Posts
  11,692

  Re: இந்த சம்மருக்காவது எங்களை விளையாட விடு

  Chutty pappa romba correct. Enga ponnuku summer class summer camp na enna ne theriyathu. Naanga next week ooruku kelamburom Ava anga nalla enjoy pannuva

  chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->