Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

உங்கள் குழந்தையின் வயதை சொல்லுங்கள்... வள&


Discussions on "உங்கள் குழந்தையின் வயதை சொல்லுங்கள்... வள&" in "Parenting" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உங்கள் குழந்தையின் வயதை சொல்லுங்கள்... வள&

    உங்கள் குழந்தையின் வயதை சொல்லுங்கள்... வளர்ச்சியை சொல்கிறோம்!


    குழந்தை வளர்ச்சியில் ஒன்று முதல் 10 வயது வரைக்கும் உள்ள பருவம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சி படிப்படியாக எப்படி இருக்கும் என்பதை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ரா. ராதிகா.


    1 வயது
    ஒரு வயது முடியும் தருவாயில் இருக்கும் குழந்தைகள் அம்மா, அப்பாவை தவிர பிறரை பார்த்தால் தூக்கக் குறைவாலோ அல்லது பயம் காரணமாகவோ அழுவார்கள். ம்மா, ப்பா, த்தா என ஓரிரண்டு வார்த்தைகளை பேச ஆரம்பிப்பார்கள். பெற்றோர் சொல்வதை புரிந்து கொள்வார்கள். தவழ்ந்து செல்வார்கள். சில குழந்தைகள் நடக்கவும் செய்யும்.


    2 வயது

    தாய்ப்பால் தவிர பிற உணவுகளைச் சாப்பிடத் துவங்கும் வயது. இதரக் குழந்தைகளையும் அடையாளம் கண்டு கொள்வார்கள். சக குழந்தைகளை பார்த்துச் சிரிப்பது, விளையாட, பிறர் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். டாய்லெட் வருகிறது என்று சொல்லத்தெரியாது. 50 வார்த்தைகள் வரை பேசுவார்கள். எல்லாவற்றையும் புதிதாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முயல்வார்கள். புத்தகங்களை பிரித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள். வீட்டைச் சுற்றி வருவார்கள். படிகளில் இறங்கவோ, ஏறவோ முயற்சிப்பார்கள்.

    3 வயது

    பிறரை பார்த்தால் புன்னகைப்பார்கள். அழுவது குறையும். சரளமாக, வார்த்தைகளைக் கோர்வையாகப் பேச ஆரம்பிப்பார்கள். பந்தை பிடித்து விளையாடுவது, பொம்மையை வைத்து சோறூட்டுவது, நிஜ மனிதர்களாக அவற்றை பாவித்து பேசுவது எல்லாம் நடக்கும். அவர்கள் எந்த கை பழக்கமுள்ளவர்கள் என்பதை நமக்கு உணர்த்தும் காலமிது. இடதோ அல்லது வலதோ எதுவாக இருந்தாலும் அதை அங்கீகரித்துக் கொள்ளுங்கள். சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் காலமிது. சில குழந்தைகள் அடம்பிடிப்பார்கள்.

    4 வயது

    எழுத்துக்களை அதிக அளவில் கற்றுக் கொள்ளும் காலமிது. பெற்றோரை விட மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர் கண்காணிப்பு இல்லாத நேரங்களில் தவறுதலாக கீழே விழுந்து காயம் ஏற்படுத்திக் கொள்வார்கள்.

    5 வயது

    பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் அல்லது பள்ளியில் சக நண்பர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள். பிற குழந்தைகள் அணிந்து கொள்ளும் உடை, சாக்லேட், விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஊடகங்களில் வரும் விளம்பரங்களையும் கவனிக்கத் தொடங்குவார்கள். பாடப்புத்தகங்களை சரளமாகப் படிப்பார்கள்.

    6 வயது

    உடல் ரீதியாக வளர்ச்சியடைவார்கள். சக குழந்தைகளிடம் ஆண், பெண் என்ற வித்தியாசத்தை



    காண்பார்கள். நண்பர்கள், விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் சக குழந்தைகளுடன் தங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்வார்கள்.


    7 வயது

    பாலின ரீதியாக தங்களை அடையாளம் காண்பார்கள். இந்த வயதில் சில குழந்தைகள் ஆசிரியர் மீது மிகவும் 'அட்டாச்' ஆக இருப்பார்கள். சில குழந்தைகள், பெற்றோரில் அம்மா அல்லது அப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.

    8 வயது

    இந்த வயதில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அப்பா, அம்மா சொல்வதுதான் சரி என்பது குழந்தைகளுக்கு புரிய ஆரம்பிக்கும் வயது இதுதான். சில நேரங்களில் மட்டும் அடம்பிடிப்பார்கள்.
    9 வயது
    உடல் ரீதியாக பெரும் மாற்றங்கள் ஏற்படும். இளம் பருவத்துக்கும், குழந்தைப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவம் என்பதால், ஒரு சில குழந்தைகள் மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடும்.

    10 வயது

    பெரிய மனிதர்கள் போல பேசுவார்கள். சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெற்றோர்களிடம் அதிகம் கேள்விகள் கேட்பார்கள். உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்.


    Sponsored Links
    Last edited by chan; 7th Jun 2016 at 08:17 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter