Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 4 Post By chan
  • 1 Post By shrimathivenkat
  • 2 Post By RathideviDeva
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks

கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மாத&


Discussions on "கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மாத&" in "Parenting" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மாத&

    கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மாத்தி யோசி' டெக்னிக் இப்படிதான்!



    " நாம செய்யாதன்னா அதைதான் செய்வாங்க* . இதை செய்ன்னு சொன்னா செய்யமாட்டாங்க*. இதே வேலையா போச்சு..." ன்னு அலுத்துக்குற மம்மி டாடீஸ்... இதோ இனிமே மாத்தி யோச்சிச்சு குழந்தைகளை டீல் பண்ற* டெக்னிக் வந்தாச்சு...!

    சூழ்நிலை 1

    ரெண்டு குழந்தைங்க இருந்தா வீடே ஹரி படம் மாதிரி சண்டை, அடிதடி எல்லாம் நடக்கும்.
    இப்போ அப்படி ரெண்டு குழந்தைங்க கார்ல போகும் போது சண்டை போட்டால்...?

    சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :

    " என்னங்க இவனுங்க ரெண்டு பேரும் ஜாக்கிச்சான் மருமகனுங்க மாதிரி சண்டைப் போட்டுட்டே இருக்கானுங்க . ஒரு ஓரமா வண்டிய நிறுத்துங்க. இவனுங்கள இறக்கி விட்டுட்டு நாம போவோம்."


    மாத்தி யோசிக்கும் மம்மி டாடி :


    " பசங்களா... கார ஓரமா அப்பாவ நிறுத்தச் சொல்லுறேன். நீங்க எப்போ அமைதியா ஒத்துமையா இருக்கீங்களோ... அப்போ நாம கிளம்பலாம்."

    இதை ஊர் போற வரைக்கும் சொல்லிட்டே இருக்காதீங்க. பசங்க, காமெடி பண்றோம்ன்னு நினைச்சுப்பாங்க. ஒரு தடவை மட்டும் முயற்சி பண்ணிப் பாருங்க . அடுத்த டோல்கேட் வரும்போது 'வானத்தைபோல' பிரதர்ஸ் மாதிரி மாறிடுவாங்க .


    சூழ்நிலை 2

    குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கும் போது...


    சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி

    :
    " உனக்கு கணக்கு வராதா.... இல்ல தெரியாம கேக்குறேன், உனக்கு கணக்கு வராதா... ? நானெல்லாம் அந்த காலத்துல டியூஷன் இல்லாம 100 க்கு 100 வாங்குவேன் .உனக்கு என்ன குறை ?"


    மாத்தி யோசிக்கும் மம்மி டாடி :

    " நீ மத்த எல்லாசப்ஜெக்ட்லயும் நல்ல மார்க் வாங்குற . கணக்குலேயும் நீ முயற்சி பண்ணா வாங்க முடியும். உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு ? என்ன பண்ணா உன்னால நல்ல மார்க் வாங்க முடியும்ன்னு சொல்லும்மா ...!"

    இப்படி கேளுங்க .


    சூழ்நிலை 3

    குழந்தை சாப்பிடும் போது கீழே போடும், சில நேரத்துல நம்மக்கு வெச்ச குழம்பையும் கொட்டும்.


    சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :

    " கொட்டிட்டியா... ? கொஞ்சம் நேரம் நான் உக்காந்தா உனக்கு பொறுக்காதே . உங்க அப்பா மாதிரியே எனக்கு ஏதாவது வேலை வைக்கணும் . உனக்கு சிந்துன்னு பேர் வெச்சேன். சதா சிந்திட்டே இருக்க. போ... துணி எடுத்துட்டு வா . என்ன பண்ணுறது எல்லாம் என் தலை எழுத்து ...!"

    மாத்தி யோசிக்கும் மம்மி டாடி :

    " ஆஹா .. சரி பரவாயில்ல...உன் மேல ஒண்ணும் எதுவும் கொட்டிடலேயே...? அம்மாக்கு கொஞ்சம் அந்த துணி எடுத்துட்டு வர்றியா... நான் துடைச்சிடுறேன்...!"


    - இப்படி சொல்லுங்க எந்த குழந்தையா இருந்தாலும் அடுத்த தடவ சிந்தாம இருக்கணும்னு நினைக்கும்.


    சூழ்நிலை 4

    குழந்தைங்க, பெத்தவங்கள எதிர்த்து பேசும் போது...

    சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :

    "என்ன தைரியம் இருந்தா என்ன எதிர்த்து பேசுவ...?" - இப்படி சொல்லி அடிக்க கையை ஓங்குவது.

    " அய்யயோ... என்ன எதிர்த்து பேசிட்டான்" னு ஊரையே கூப்பிடறது.

    "என்ன எதிர்த்து பேசிட்டல்ல... இனிமே என்கூட பேசாத...!" - இப்படி சொல்லுறது எல்லாமே தப்பு .


    மாத்தி யோசிக்கும் மம்மி டாடி :

    " நீ என்கிட்ட என்ன சொன்னாலும் அது சரியான விஷயமா இருந்தா மம்மி செய்வேன் . அதுவும் என்கிட்ட அமைதியா ஆசையா சொன்னா மட்டும்தான் .சத்தம் போட்டு , மிரட்டி பேசுனா எதையும் செய்யமாட்டேன்..."

    இதை நீங்க குழந்தைங்ககிட்ட சொல்லும் போது சமுதாயத்துல குரலை உயர்த்தி பேசக்கூடாதுன்னு உணருவான் .


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 10th Jun 2016 at 06:04 PM.

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மா

    ட்ரை பண்ணலாம் ஆனா நமக்கு மேலே யோசிப்பாங்க.

    chan likes this.

  3. #3
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மா

    Super...Idhula ellaame naan nadandhukkura vidham thaan saadharana amma dialogues la paarthen

    chan and gkarti like this.

  4. #4
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,098

    Re: கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மா

    Mathi Yosi Concept Super ah irukke..

    chan likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மா

    Very good sharing ji

    chan likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter