Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree480Likes

Parenting Tips - Jeyanthi


Discussions on "Parenting Tips - Jeyanthi" in "Parenting" forum.


  1. #161
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Parenting Tips - Jeyanthi

    very useful tips jeya akka.....@jv_66 ..நிறைய இருக்கே ...நான் புக் மார்க் பண்ணி வச்சிருக்கேன் கா ....எல்லாஹயும் படிக்கிறேன் நன்றி ....


    Sponsored Links
    jv_66 likes this.


    நளினி



  2. #162
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Parenting Tips - Jeyanthi

    நல்ல யோசனைகள்.. நன்றி அக்கா...

    jv_66 likes this.

  3. #163
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by naliniselva View Post
    very useful tips jeya akka.....@jv_66 ..நிறைய இருக்கே ...நான் புக் மார்க் பண்ணி வச்சிருக்கேன் கா ....எல்லாஹயும் படிக்கிறேன் நன்றி ....
    தேங்க்ஸ் & வெல்கம் நளினி . சரிமா . படிச்சு பாரு , உனக்கு டைம் கிடைக்கும்போது....சிலது உபயோகமாவும் இருக்கலாம் .

    Jayanthy





  4. #164
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by gloria View Post
    நல்ல யோசனைகள்.. நன்றி அக்கா...
    வெல்கம் க்ளோரியா .

    gloria likes this.
    Jayanthy





  5. #165
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளுக்கு 3 வயதிலிருந்தே அவ்வப்போது இதைச் சொல்லி வளர்க்கவும் .

    தெருவிலோ அல்லது வேறு எந்த பொது இடங்களிலோ ரூபாய் நோட்டு அல்லது காசுகள் கிடந்தாலும் , அதைத் தனக்காக தான் எடுத்து வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் , யாருடையது என்று தெரியாத பட்சத்தில் , அதை எடுத்து எதாவது கோவில் உண்டியலில் போட்டு விடுமாறும் வலியுறுத்த வேண்டும் .

    மிகவும் சிறிய வயதாயிருப்பின் , நீங்கள் அவர்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று , அவர்களின் கையாலேயே அந்தப் பணத்தை உண்டியலில் போடச் செய்யவும் .

    அதாவது , அந்தப் பணம் நமக்குச் சொந்தமில்லை , வேறு யாரோ சம்பாதித்த பணம் என்பதை வயதுக்கேற்றவாறு சொல்லித் தரவும் . இதை அவ்வபோது வயது ஏற ஏறவும் வலியுறுத்தவும் .

    அவர்கள் இப்படி செய்ய நேரும்போது , தவறாமல் பாராட்டவும் .

    இவ்வாறு சொல்லித் தருவதால் , பிற்காலத்தில் மற்றவரின் எந்த ஒரு பொருளுக்கோ அல்லது சொத்துக்கோ , அவர்கள் ஆசைப்படாத மக்களாக வளருவர் .

    தான் உழைத்து சம்பாதிப்பது மட்டுமே தனக்கு உரியது என்ற எண்ணம் உருவாகும் .

    பெரியவர்களாகிய நீங்களும் இதையே கடைபிடித்தால்தான் , குழந்தைகளும் பின்பற்றுவர் .


    sumathisrini likes this.
    Jayanthy





  6. #166
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    பள்ளிக்குக் குழந்தைகளை (எந்த வயதினரும் ) ஸ்கூல் பஸ் அல்லது வேனில் அனுப்பும் பெற்றோர் கவனத்திற்கு .

    சமீபத்தில் பெங்களூரில், பிரபல பள்ளியில் படிக்கும் ஒரு u.k.g. குழந்தையை வீட்டுவாசலில் வந்து நின்ற பள்ளி வேனில் ஏற்ற பெற்றோர் வந்தபோது, வழக்கமாக வரும் பள்ளி வேன் வராமல் , மற்றொரு சாதாரண வேன் வந்ததை கவனித்து விவரம் கேட்டுள்ளனர் .

    அதற்கு அந்த டிரைவர் , வழக்கமான வேன் ரிப்பேர் ஆகி விட்டதால் , பள்ளியில் இதை அனுப்பி உள்ளதாக சொல்லி இருக்கிறான் .

    நல்லவேளையாக , அக்குழந்தையின் தந்தை , உடனே பள்ளிக்கு போன் செய்து கேட்டபோது , அதற்கு அவர்கள், அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை , தாங்கள் வேறு எந்த வேனையும் அனுப்பவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள் .

    இதை கவனித்துவிட்ட அந்த வேன் டிரைவர் மற்றும் சில ஆட்கள் உடனே அங்கிருந்து மாயமாய் மறைந்துவிட்டனர் .

    இந்தத் தகவலால் கவலையுற்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் , பள்ளி நிர்வாகம் உடனே ஒரு மெயில் அனுப்பியுள்ளனர் .

    தங்கள் பள்ளி பஸ் அல்லது வேன் எதுவும் ரிப்பேர் ஆகிவிட்டாலும் , மாற்று வண்டியாக தங்களுடைய பள்ளியின் வேறு வண்டி மட்டுமே வரும் என்றும் , சாதாரண வண்டிகள் எதையும் அனுப்பமாட்டோம் எனவும் , கண்டிப்பாக இது சம்பந்தமாக பெற்றோர்களுக்கு sms அனுப்பிவிடுவோம் , அதை கவனித்து செயல்படவும் என்று அறிவுறுத்தியுள்ளது .

    இதனால் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியது , டிரைவர் கூறுவதை மட்டுமே நம்பி உங்கள் குழந்தைகளை பாதுகாப்பில்லாமல் அனுப்பிவிடவேண்டாம் .


    sumathisrini likes this.
    Jayanthy





  7. #167
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளுக்கு 7 வயதிலிருந்தே இதைக் கற்றுத்தர வேண்டும் .

    விடுமுறை நாட்களில் மற்ற உறவினர் வீடுகளில் சென்று தங்கும்போதோ , அல்லது வேறு எந்த ஒரு சந்தர்ப்பத்தில் நம் வீட்டைத் தவிர வேறு எந்த ஒரு வீட்டிலும் சாப்பிட நேர்ந்தால் , இலையில் போட்டதை குழந்தைகளுக்குப் பிடிக்காத பதார்த்தமாக இருந்தால் , ஒருபோதும் அந்த வீட்டினரின் முன் முகத்தை சுளிக்கக் கூடாது என்றும் , "இது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது " என்றும் வெறுப்போடு சொல்லவும் கூடாது என்றும் சொல்லித்தர வேண்டும் .

    அதைவிட , அவர்கள் அதை இலையில் போடுமுன்னரே "இது என்ன " என்று கேட்டு , தனக்குப் பிடிக்காததாக இருந்தால் அதை மறுத்துவிடுமாறும் சொல்லிவிடச் சொல்லவும் . அவர்கள் காரணம் கேட்டால், அது தனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்று தன்மையாகக் கூறுமாறும் சொல்லவும் .

    ஒருவேளை இலையில் போட்டுவிட்டால் , சாப்பிடப் பிடிக்காவிட்டால் அதை சாப்பிடாமல் விட்டுவிடுமாறும் , அதைப் பற்றி வெறுப்பாக எதையும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லித் தரவும் .

    தங்கள் சொந்த வீட்டில் மட்டுமே குரலை உயர்த்தி , தனக்குப் பிடிக்காதவற்றை பெற்றோரிடம் சொல்லலாம் , மற்றவர்கள் வீட்டில் சொன்னால் , அதை அவர்கள் தவறாக எண்ணி , மனக்கஷ்டம் அடைந்து , அந்தக் குழந்தையை மதிக்காமலும் போகலாம் . இந்த மதிக்காமல் போவதைப் பற்றி குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம் . வெறுமே அவர்கள் மனக்கஷ்டம் அடைவார்கள் என்று மட்டுமே சொல்லவும் .

    இதனால் , குழந்தைகளுக்கு , எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் , மற்றவர் மனதை நோகச் செய்யக்கூடாது என்றும் புரியவரும் .


    sumathisrini likes this.
    Jayanthy





  8. #168
    tejus is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jun 2015
    Location
    Chandigarh
    Posts
    19

    Re: Parenting Tips - Jeyanthi

    good thread jayanthi. keep posting ur valuable parenting tips.




    sumathisrini and jv_66 like this.

  9. #169
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    Quote Originally Posted by tejus View Post
    good thread jayanthi. keep posting ur valuable parenting tips.



    Thanks and welcome @tejus

    Sure...will be posting then and there.

    Jayanthy





  10. #170
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Parenting Tips - Jeyanthi

    குழந்தைகளின் சமூகச் சிந்தனை வளர


    குழந்தைகளின் மிகச் சிறிய வயதிலிருந்தே , அவர்களை நாம் தெருவில் அழைத்துச் செல்லும்போது, நடக்கும் வழியில், பாதையை தடுக்கும் வழியில் ஏதேனும் கல் (ஓரளவு பெரியது ), கட்டை அல்லது வாழைப்பழத் தோல் போன்றவை (இவை மட்டுமே ) இருந்தால் , அதை எடுத்து தெருவில் உள்ள குப்பைத்தொட்டியிலோ அல்லது தெரு நடுவில் இருந்து பாதை ஓரமாக , யாரும் அதன் மீது காலை வைத்து விடாதவாறு , ஓரமாக எடுத்துப் போட பழக்கப் படுத்தவும் .

    ஒவ்வொரு முறையும் நீங்கள் இதைச் செய்யும்போது , அதைப் பார்த்து அவர்களும் செய்யத் தொடங்குவார்கள் .

    கூடவே , நீங்கள் எதற்காக அதைச் செய்கிறீர்கள் என்பதையும் விளக்கிச் சொன்னால் , குழந்தைகளின் சமூகச் சிந்தனை வளரும் .

    அதே சமயம் , தெருவில் கிடக்கும் விளையாட்டுப் பொருளோ அல்லது வேறு ஏதும் டப்பா போன்றவைகளை தொடவும் கூடாது என்றும் விளக்கிச் சொல்லவும் . இந்தக் காலத்தில் இதெல்லாம் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தலாம் .


    Jayanthy





loading...

LinkBacks (?)

  1. 5th Dec 2012, 05:49 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter