Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree11Likes

அன்பின் வழி திறக்கும் - Parenting through love


Discussions on "அன்பின் வழி திறக்கும் - Parenting through love" in "Parenting" forum.


  1. #1
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    அன்பின் வழி திறக்கும் - Parenting through love

    பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உருவாகும் சிக்கல்கள் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை நான் யார்என்னும் அடையாளச் சிக்கல்தான். நான் யார் என்பதை சாதி, மதம், நாடு, மொழி, ஆகிய இவற்றைக் கொண்டுதான் நாம் நிர்ணயிக்கிறோம். நம்முடைய அடையாளம் நமக்கு வெளியில் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

    நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நமக்கு வெளியில் உள்ளவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, மரபு என்ற பெயரில் தொடர்ந்து நடந்துகொண்டுவரும் ஓட்டம்தான் இதை நிர்ணயிக்கிறது. இந்த ஓட்டத்தைப் பொறுத்தவரையில் தன்னுடைய தொடர்ச்சி மட்டும்தான் இதற்கு முக்கியம். யாரையும் இது கணக்கில் கொள்வதில்லை.

    பெற்றோர்களும் இந்த ஓட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். இது பெற்றோர்களின் வழியாகத்தான் செயல்படுகிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பிரச்சினை வராதவரை, இந்த அடையாளம் பற்றிய கேள்வியே எழுவதில்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் வரும்போதுதான் இந்தப் பிரச்சினை தலையெடுக்கிறது.

    நீ என் மகனே/மகளே அல்ல என்ற ரீதியில் பேச்சு எழுகிறது. மகன் அல்லது மகள் என்னும் அடையாளத்தை, உரிமையை நிராகரித்துவிடுவோம் என்று பயமுறுத்தும் அளவுக்குப் பெற்றோர் போய்விடுகிறார்கள். சொத்து கிடையாது என்று சொல்லப்படுகிறது.

    இந்த அச்சுறுத்தலும் அச்சமும் ஏன் ஏற்படுகின்றன? நம் அடையாளம் என்ன என்பது நமக்குத் தெரியாது. குடும்பம், சாதி, நாடு போன்றவற்றின் அடிப்படையில்தான் நாம் நம் அடையாளத்தை வைத்திருக்கிறோம்.

    முன்னோர், வாரிசு என்று தொடரும் இந்த ஓட்டம் நம் தனித்துவத்தை அங்கீகரிப்பதில்லை. ஏனெனில், தனித்துவம் இந்த ஓட்டத்தின் கண்மூடித்தனத்தை மறுக்கிறது. நம் அடையாளம் என்ன என்பதை நாம் அறியும்வரை, நாம் எல்லோரும் இந்த ஓட்டத்தின் கைதிகள்தான். நம் உண்மையான சுய அடையாளத்தை நாம் அறிந்துகொள்ளத் தொடங்கினால்தான் இந்த ஓட்டம் இல்லாது போகும்.

    பெற்றோருக்கு நாம் மகன் அல்லது மகள். கூடப் பிறந்தவர்களுக்கு சகோதரன் அல்லது சகோதரி. மணம் செய்துகொண்டவருக்குக் கணவன் அல்லது மனைவி. குழந்தைகளுக்குத் தந்தை அல்லது தாய். நமக்கு நாம் யார்? எனக்கு நான் யார்? இந்தக் கேள்விக்கு விடை காணும்போதுதான் மரபின் ஆட்சியிலிருந்து நாம் விடுபட வழி பிறக்கும்.

    இந்தக் கேள்விக்கு சொல்லளவில், இதுதான் என்று எந்த பதிலும் கிடையாது. ஆனால் இந்தக் கேள்வியை நாம் கேட்கும்போதுதான், நமக்குள் புதியதொரு சுயநிர்ணயம் பிறக்கும். அதன்பின் வாழ்க்கை வேறு ஒரு புதிய வெளிச்சத்தில், புதிய கோணத்தில் நடக்கத் தொடங்கும். அப்போதுதான் அன்பின் வழி திறக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66, sumitra, gkarti and 1 others like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: அன்பின் வழி திறக்கும்

    Very interesting discussion! Thank you !

    jayakalaiselvi likes this.

  3. #3
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: அன்பின் வழி திறக்கும்

    Quote Originally Posted by sumitra View Post
    Very interesting discussion! Thank you !
    Pleasure is always mine sis....

    sumitra likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: அன்பின் வழி திறக்கும்

    Interesting Jaya.Thank U.

    jayakalaiselvi likes this.

  5. #5
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,084

    Re: அன்பின் வழி திறக்கும்

    Nice Sharing da Jaya!

    jayakalaiselvi likes this.

  6. #6
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: அன்பின் வழி திறக்கும்

    Quote Originally Posted by saidevi View Post
    Interesting Jaya.Thank U.
    Welcome dear......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #7
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: அன்பின் வழி திறக்கும்

    Quote Originally Posted by gkarti View Post
    Nice Sharing da Jaya!
    Pleasure is always mine sis.......

    gkarti likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  8. #8
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: அன்பின் வழி திறக்கும்

    அருமையான பகிர்வு ஜெயா.

    jayakalaiselvi likes this.

  9. #9
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: அன்பின் வழி திறக்கும்

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    அருமையான பகிர்வு ஜெயா.
    Mikka nandri sis........

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: அன்பின் வழி திறக்கும் - Parenting through love

    அருமையான பகிர்வு .

    jayakalaiselvi likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter