Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By chan
  • 2 Post By jv_66
  • 1 Post By sumathisrini

How to Handle the 1st child after the birth of 2nd Child?-இரண்டாவது குழந்தை வந்தால் முதல


Discussions on "How to Handle the 1st child after the birth of 2nd Child?-இரண்டாவது குழந்தை வந்தால் முதல" in "Parenting" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to Handle the 1st child after the birth of 2nd Child?-இரண்டாவது குழந்தை வந்தால் முதல

    இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?

    முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர். இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தையின் அன்பு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    பெற்றோரின் அன்பை முழுமையாக அனுபவித்த முதல் குழந்தைக்கு
    , இதனால் ஏமாற்றம் ஏற்பட்டு அது ஏக்கமாக மாறுகிறது. பெற்றோரைப் போன்றே உறவினர்களின் அன்பும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, குழந்தையிடம் பாரபட்சம் காட்டாமல் வளர்க்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் இதோ...

    குழந்தையிடம் பாரபட்சம் காட்டாதிருக்க, பெற்றோருக்குத் தேவையான சில வழிமுறைகள்:
    முதல் குழந்தைக்கு அன்பு முழுவதையும் பொழிந்துவிட்டு இரண்டாவது குழந்தை வந்ததும் அதனை அதிகமாகப் பராமரிக்க ஆரம்பிக்கின்றனர். சிறு குழந்தை என்பதால், இரண்டாவது குழந்தையைக் கொஞ்சுகின்றனர். இதில், ஆண், பெண் வித்தியாசமில்லை.

    பெரிய குழந்தையின் ஏக்கம் இரண்டாவது குழந்தையின் மேல் கோபமாக மாறுகிறது. இதை தவிர்ப்பதற்கு இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, "நீ தனியா விளையாடுகிறாய்; பாப்பா வந்ததும் உன்னுடன் சேர்ந்து விளையாடும். நீ தான் பாப்பாவுக்கு எல்லாம் சொல்லித் தர வேண்டும்" என்று சொல்லி சொல்லி, முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றிய ஆசையை வளர்க்க வேண்டும்.


    உறவினர்கள் ஒரு குழந்தையிடம் அன்பை காட்டிச் சென்ற பின், தாயோ அல்லது தந்தையோ மற்றொரு குழந்தையிடம் அரவணைப்பைக் காட்டி "உன் சகோதரன் (சகோதரி) தானே, நீ விட்டுக் கொடுக்க வேண்டும்" என்பதை, நம் அன்பில் சிறிதும் குறையாமல் புரிய வைக்க வேண்டும்.

    கொஞ்சம் வளர்ந்த பின், சிறுவர் சிறுமியாயிருக்கும் போது பள்ளிக்கோ அல்லது பக்கத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கோ அனுப்பும் போது, சிறு குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை பெரிய குழந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    அப்போதுதான், பெரிய குழந்தைக்கு சிறு குழந்தையின் மீது, பொறுப்புடன் கூடிய அன்பு வளரும். மேலும், அன்பு, உணவு என அனைத்தையுமே இரு குழந்தைகளுக்கும் சமமாகக் கொடுக்க வேண்டும்.

    ஒரு குழந்தை படிப்பிலோ, விளையாட்டிலோ திறமையாக இருக்கலாம். குணத்திலோ மற்றவருடன் பழகும் விதத்திலோ சிறப்பாக இருக்கலாம். ஆதலால், எக்காரணத்தைக் கொண்டும், ஒரு குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தாழ்வு மனப்பான்மை உண்டாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்த விதத்திலும் தன் ஆதிக்கத்தை மற்றொன்றின் மேல் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் அமைந்தால், சகோதர, சகோதரி பாசம் என்பது ஆயுள் வரை அன்புடம் நீடிக்கும்.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 23rd Feb 2015 at 11:39 AM.
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to Handle the 1st child after the birth of 2nd Child?-இரண்டாவது குழந்தை வந்தால் முத

    Thanks Lakshmi for the very useful sharing.

    sumathisrini and chan like this.
    Jayanthy





  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: How to Handle the 1st child after the birth of 2nd Child?-இரண்டாவது குழந்தை வந்தால் முத

    Very nice advice Lakshmi, thanks.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter